முன் கதை சுருக்கம்... |
---|
Sex changes everything என்பது போல உடலுறவுக்கு பிறகு ஜெய்யும் பிரபாகரும் ஒருவர் மீது ஒருவர் காதல் பித்து பிடித்து மந்திரித்து விட்ட கோழி போல இன்பத்தில் மிதக்கிறார்கள். ஆனால் வீட்டு பெரியவர்கள் அவர்கள் இருவரும் இன்னும் பழைய பகைவர்கள் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். |
பிரபாகர் ஜெய்யின் ஆஃபீஸுக்கு வெளியே வந்து ஜெய்க்கு மொபைலில் அழைத்தபோது ஜெய் அவனது அழைப்புக்காக ஆவலோடு காத்திருந்தான். பிரபாகரை எதிரே உள்ள டீக்கடையில் நிற்க சொல்லிவிட்டு பார்க்கிங் லாட்டுக்கு சென்று வண்டியை எடுத்துக்கொண்டு பரபரப்பாக வெளியே வந்தான்.
“எப்படிடா இருக்கு புது ஆஃபீஸ், டீம் எல்லாம்?
“புதுசு இல்லை… அதனால எல்லாம் இப்போதைக்கு நல்லா தான் இருக்கும். நாள் போக போக தான் எல்லாரோட சுயரூபமும் தெரியும். அதனால பெருசா நான் இன்னும் என்னை ஃபிட் பண்ணிக்கலை… இருந்தாலும் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு எதிர்பார்ப்போம்”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
“சரி! வீட்டுக்கு போயிட்டே பேசலாம் வா.. உட்காரு”
பிரபாகர் ஜெய்யின் வண்டியில் பின்னால் ஏறி உட்கார்ந்துக்கொண்டு ஜெய்யின் இடுப்பை சுற்றி இறுக்க கட்டிக்கொண்டு அவனது தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டு வந்தான். இருவரும் வழியெங்கும் தொனதொனவென்று பேசிக்கொண்டே வந்தார்கள்.
ஜெய்! வீட்டுக்கு நாம இன்னும் எதிரிங்க… ஒன்னா போய் இறங்க முடியாது… என்னடா யாருமே சமாதான படுத்தவே மாட்டேங்குறாங்க? இதுங்க இப்படி தான்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா?” – பிரபாகர்
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“ஒருவேளை கொஞ்ச நாள் விட்டுப்பிடிக்கலாம்னு இருக்காங்க போல…”
வண்டி இவர்களது ஏரியா அருகே வந்துவிட, பிரபாகர் ஜெய்யிடம் “டேய்! நான் இங்கே இறங்கிக்குறேன். அப்படியே கொஞ்ச நேரம் சுத்திட்டு பொடி நடையா வீட்டுக்கு வந்துடுறேன்… அப்படி நிறுத்து”
“ஆர் யூ ஷ்யூர்? ஒன்னாவே வீட்டுக்கு போயிடலாம்… ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கலாம்”
“பரவாயில்லடா.. நிறுத்து”
ஜெய் சாலை ஓரமாக வண்டியை நிறுத்த, பிரபாகர் இறங்கிக்கொண்டான். ஜெய் அவன் ரியர்வியூ கண்ணாடியில் மறையும் வரை சாலையை பார்த்து ஓட்டாமல் பிரபாகரையே பார்த்துக்கொண்டு வண்டியை செலுத்தினான்.
ஜெய் வண்டியை கேட்டுக்குள்ளே நிறுத்திவிட்டு ஷூவை கழற்றியபோது “பிரபாவை காலையிலே ஆஃபீஸ்ல விட்டுட்டியா இல்லை வழியிலேயே இறக்கிவிட்டுட்டியாடா?” என்ற அம்மாவை நிமிர்ந்து பார்த்து “ஆமாம்! அவன் எனக்கு பெட்ரோல் போட்டு டிரைவர் பேட்டா குடுக்குறான் பாரு… துரையை அவன் ஆஃபிஸ் வாசல்ல போய் இறக்கிவிடுறதுக்கு… வேலைக்கு முதல் நாளாச்சேன்னு போனா போகுதுன்னு வழியிலே இறக்கிவிட்டிருக்கேன்… இதையே சாக்கா வச்சு தினமும் அவனை ஏத்திட்டு போகச்சொன்னா நான் வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்துக்குவேன்…” என்றான்.
“கருமம் கருமம்.. பாவம் புள்ள… முதல் நாளாச்சேன்னு அவனை அவனோட ஆஃபீஸ்ல விட்டிருக்கலாம்… எதுக்கு தான் மனசுல இவ்வளவு வன்மம் வச்சிருக்கியோ தெரியலை… ஆனா இதெல்லாம் நல்லதுக்கில்லை… அவ்ளோ தான் சொல்லமுடியும்” என்று முனுமுனுத்தவாறே சென்ற அம்மாவை பார்த்து ஜெய்க்கு சிரிப்பு தான் வந்தது.
கிட்டத்தட்ட 1 மணி நேரம் கழித்து பிரபாகர் வீட்டுக்கு வந்தான். சோஃபாவில் உட்கார்ந்திருந்த ஜெய்யும் பிரபாகரும் “ஏன் லேட்டு? எங்கே போயிருந்தே?” என்று பார்வையாலேயே பேசிக்கொண்டது யாருக்குமே புரியாது.
“வா பிரபா.. முதல் நாள் எல்லாம் வசதியா இருந்துச்சா? புது ஆஃபீஸ் எப்படி இருக்கு?” என்று அன்போடு வரவேற்றார் ஜெய்யின் அம்மா.
“எல்லாம் அதே குப்பை தான் அத்தை… Induction day அன்னைக்கு HR-ங்க குடுக்குற presentation-ல எல்லா கம்பெனியும் சொர்க்கத்துல வேலை செய்யப்போற மாதிரி தான் fair & comfortable-ஆ இருக்கும்.. ஆனா போக போக தான் மேனேஜருங்க பவுசு பல்லிளிக்கும்.. ஆனா நான் சேர்ந்திருக்குற புராஜெக்ட்-ல Technology நல்லா இருக்கு… ஆரம்பத்துல வேலை அதிகம் இருந்தாலும் நிறைய கத்துக்கலாம்… அப்புறம் வேற கம்பெனி மாறுறதுக்கு எல்லாம் வசதியா இருக்கும்” என்று சொன்னபடியே ஷூவை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தான்.
“ஆமா.. ஆஃபீஸ்ல இருந்து எப்படி வந்தே? தினமும் இவ்வளவு நேரம் ஆகுமா?”
“இல்லைங்க அத்தை… நான் கொஞ்ச நேரம் முன்னாடியே பஸ்ல வந்து இறங்கிட்டேன். இங்கே பக்கத்துல ஜிம் எங்கே இருக்குன்னு தேடிட்டு இருந்தேன். ஒன்னு ரெண்டு இருக்கு ஆனா அவ்வளவு வசதியா இல்லை… ஒன்னு எக்யூப்மென்ட்ஸ் இல்லை… இல்லைன்னா டஞ்சன் மாதிரி இடம் அடைசலா இருக்கு… பாக்கலாம் வழியிலே வேற எதாச்சும் இருக்கான்னு… சீக்கிரம் workout-ஐ திரும்ப ஆரம்பிக்கனும்”
“இவன் கூட எங்கேயோ போயிட்டு இருக்கானே… போறான்னு தான் பேரு.. எப்போ போறான் எங்கே போறான்னு ஒன்னுமே விளங்கலை… மர்மமா இருக்கு” என்று சொன்னபடி ஜெய்யின் தலையை செல்லமாக தட்டினார்.
“அத்தை… நான் போய் மூஞ்சி கை கால் கழுவிட்டு வர்றேன்” என்று கழுவிய தண்ணீரில் நழுவிய மீனாக ஒதுங்கினான் பிரபாகர்.
பிரபாகர் கண் பார்வயிலிருந்து மறைந்ததும் ஜெய் அம்மாவிடம் எகிறினான் “எங்கே போறபோக்கை பார்த்தா நான் எந்த ஜிம்முக்கு போறேனோ அங்கே அவனையும் என் வண்டியிலேயே கூட்டிட்டு போக சொல்லுவே போல… அவனை பார்த்தாலே எரியுது… கண்ணை முழிச்சா அவன் மூஞ்சியிலே தான் முழிக்க வைக்கிறீங்க… புள்ளபூச்சி மாதிரி ஆஃபீஸ் போகும்போதும் அவனை இழுத்துட்டு போகனும்… இப்போ போதாக்குறைக்கு ஜிம்முக்குமா? கடவுளே என்னை காப்பாத்து”
அம்மா “அட… இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே.. அவனை உன்னோட ஜிம்முக்கு கூட்டிட்டு போ… அப்பா கிட்டே சொல்றேன். அவரே உனக்கு உத்தரவு போடுவாரு… நான் சொன்னாக்கா நீ டிமிக்கி குடுத்துடுவே” என்று நக்கலாக சிரித்துவிட்டு போனார்.
“அம்மா! அப்படி மட்டும் எதுவும் நடந்துச்சு எல்லோரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்கமாட்டேன்” என்று ஜெய் கர்ஜிக்க, “பாக்கலாம்… வேலூரா இல்லை பாளையங்கோட்டையான்னு” என்று சொன்னபடி அம்மா உள்ளே போனார்.
ஜெய்க்கு தன்னுடைய பிளான் வேலை செய்வதை நினைத்து சந்தோஷமாக இருந்தது.
இரவு டைனிங் டேபிளில் எல்லோரும் சாப்பிடும்போது அப்பா “பிரபா! இன்னைக்கு ஆஃபீஸுக்கு சரியான நேரத்துக்கு போயிட்டியா?”
“ஜெய்க்கிட்டே நான் தான் அவனோட அவனோட ஆஃபீஸ் கிட்டேயே இறங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன்.. அவனும் இறக்கிவிட்டுட்டான். அங்கே இருந்து ஷேர் ஆட்டோ பிடிச்சு போயிட்டேன். ரொம்ப சீக்கிரமாவே போயிட்டேன்”
“அப்போ! இனிமேல் தினமும் நீ ஜெய் கூடவே போய் அவன் ஆஃபீஸ் கிட்டே இறங்கிக்கோ… வண்டியிலே பில்லியன் சீட் சும்மா தானே போயிட்டு இருக்கு.. பிரபாவை சுமந்துட்டு போனாலாச்சும் பிரயோஜனம் உண்டு”
ஜெய் அப்பாவை கடுப்போடு பார்த்தான். ஆனால் அவருடைய பேச்சுக்கு எதிர்பேச்சு பேசமுடியாத திணறுகின்ற முகபாவத்தை கொண்டுவருவது தான் ஜெய்க்கு பெரும்பாடாக இருந்தது. ஏதோ கஷ்டப்பட்டு சமாளித்துவிட்டான்.
அம்மா கூட இருந்து இன்னும் ஸ்குரூ ஏற்றினார் – “அப்படியே… அந்த ஜிம் விஷயத்தையும் பேசிடுங்க..”
அப்பா “ஹாங்! ஜெய்.. அப்படியே பிரபாவை உன்னோட ஜிம்முல சேர்த்துவிட்டுடு… Referral-ல சேர்த்தினா joining fees கிடையாது இல்லை?” பிரபாகரை பார்த்து “பிரபா! சாயங்காலம் ஜெய் கூட ஜிம்முக்கு போயிட்டு வந்துடு” என்றார்.
ஜெய் தட்டை பார்த்தபடியே முனுமுனுப்பாக “நான் வாரத்துக்கு மூனு இல்லை நாலு நாளுக்கு தான் போவேன்.. அதுவும் எனக்கு மூடு இருந்துச்சுன்னா மட்டும்… வாரத்துக்கு ஏழு நாளும் போறதுன்னா அவரு தானா போயிக்கட்டும்… மத்தபடி நான் போற அன்னைக்கு மட்டும் உங்களுக்காக சாரை கூப்பிட்டுட்டு போறேன்” கடுகடுத்தான் ஜெய்.
“அப்பாடா.. இப்போவாச்சும் எத்தனை நாள் உண்மையா ஜிம்முக்கு போறான்னு தெரியும்… குடுக்குற subscription-க்கு ஏதாச்சும் பலன் தெரியுதா பாக்கலாம்” அப்பா சிரித்தார்.
சாப்பிட்டு முடிந்ததும் அப்பா புதிய தலைமுறை டிவியில் செய்திகள் போட்டுக்கொண்டு ஹாலில் சோஃபாவில் சரிய, அம்மா டைனிங் டேபிளை ஒழித்தார். பிரபாகர் கையில் மொபைலை எடுத்துக்கொண்டு “மாமா, அத்தை… நான் வாக்கிங் போயிட்டு வந்துடுறேன். ராத்திரியிலே சாப்பிட்டதும் 20 நிமிஷம் வாக்கிங் போறது வழக்கம். வழியிலே கடையிலே ஏதாச்சும் வாங்கனும்னா எனக்கு கால் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு வராண்டாவில் ஸ்டூலில் உட்கார்ந்து தன்னுடைய வாக்கிங் ஷூவை மாட்ட ஆரம்பித்தான்.
அம்மா பிரபாகரின் வாசற்படி அருகில் வந்து கிசுகிசுப்பாக “பிரபா! தம்மடிக்க போறியா? சும்மா சொல்லு! நான் மாமாகிட்டே சொல்லமாட்டேன்” என்றார்.
“இல்லைங்க அத்தை! நான் பக்கா Teetotaler – தண்ணி/தம்மு மட்டும் இல்லை… நான் Coke/Pepsi – மாதிரி Aerated drinks கூட குடிக்கமாட்டேன். அவ்வளவு ஏன்? நான் காபி கூட சர்க்கரை இல்லாம தான் குடிப்பேன். இங்கே நம்ம வீட்டுல நீங்க குடுக்குறதால நான் சர்க்கரை போட்ட காபி குடிக்கிறேன்” என்றான்.
“ஏண்டா இதை முன்னாடியே சொல்லக்கூடாதா! உனக்கு காஃபி சர்க்கரை போடாம குடுத்திருப்பேனே… நானும் இந்த மனுஷன் கிட்டே நமக்கு வயசாச்சு… இந்த டயாபடீஸ் எழவு எதுவும் வர்றதுக்கு முன்னாடி சக்கரையை கம்மி பண்ணுங்க! வெளியிலே கொஞ்ச நேரம் நடக்கலாம் வாங்கன்னு சொல்லி சொல்லி அலுத்துப்போயிட்டேன். சொல்பேச்சு கேட்டா தானே. சின்ன குழந்தைங்க மாதிரி இனிப்பை அள்ளி அள்ளி தின்னுறது… வீடுக்கு வந்தா டிவியை போட்டுக்கிட்டு அந்த சோஃபாவை விட்டு அசையறது இல்லை… ம்ம்..பரவாயில்லை… எனக்கு ஏத்த மாதிரி நீ இருக்கே.. நாளையிலே இருந்து நானும் உன் கூட வாக்கிங் வரலாமா? இல்லை வாக்கிங் போகும்போது உன்னோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டே போவியா? அப்புறம் நான் வேற பூஜையில் கரடி மாதிரி”
“ஏன் அத்தை நாளைக்கு… இப்போவே வாங்க.. போகலாம். ஏதாச்சும் வேலை இருந்துச்சுன்னா நான் வெயிட் பண்றேன்… அப்புறம் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிட்டே பேசுறதுக்கு தான் ஆஃபீஸ் இருக்கே… நாங்க சம்பளம் வாங்கறதே ஆஃபீஸ்ல இருந்து கடலை போடறதுக்கு தானே.. அதனால தயங்காம என் கூட வாக்கிங் வாங்க” என்றான் பிரபாகர்.
“அதுவும் சரி தான்.. வீட்டுல இருந்தா மட்டும் இந்த மனுஷன் என்னை சீரியல் பாக்கவா விடுவாரு… தூங்குற வரைக்கும் டிவி அவர் கண்ட்ரோல்ல தான் இருக்கும்.. அதுக்கு பேசாம வாக்கிங்காச்சும் போகலாம்… உடம்புக்கும் நல்லது.. உனக்கும் புண்ணியமா போகட்டும்” என்று சொன்னபடி அம்மா தன்னுடைய Sandak செருப்பை மாட்டினார்.
“வீட்டுல இருக்குற எல்லாருக்கும் சொல்றேன்… இன்னைக்கு குடிச்சது தான் கடைசி சக்கரை போட்ட காஃபி… நாளையிலே இருந்து காஃபியிலே சக்கரை கிடையாது. அப்புறம் நைட் சாப்பட்டுக்கு அப்புறம் எல்லோரும் நடக்குறோம்… இன்னைக்கு நானும் பிரபாவும் இதை ஆரம்பிக்கிறோம்… நீங்க எப்போ வர்றீங்களோ வாங்க..” என்று வாசற்படியில் நின்று அறிக்கை விட்டுவிட்டு பிரபாவோடு படியிறங்கினார் அம்மா.
ஜெய்யும் அப்பாவும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஜெய்க்கு உள்ளுக்குள்ளே பெருமிதம் – நமக்கு பிடித்தவர்களுக்கு நம் குடும்பத்தில் ஒரு அங்கீகாரம் / நெருக்கம் காட்டும்போது உண்டாகும் சந்தோஷம்.
மெல்லிய தென்றல் காற்றும், கூட்டம் இல்லாத தெருவும், சாலையோர விளக்குகளும் பிரபாகருக்கும் அம்மாவுக்கும் அன்றைய நடைபயிற்சியை இனிமையாக்கியது. மெல்ல மெல்ல அவர்கள் நண்பர்களை போல எல்லா விஷயங்களும் பேச ஆரம்பித்தார்கள். பிரபாகரின் வாட்ஸப் செல்லமாக சிணுங்க, எடுத்து பார்த்தால் அது ஜெய்யின் குறுஞ்செய்தி… “சீக்கிரம் வாடா.. நீ இல்லாம போரடிக்குது”.
கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
பிரபாகரின் முகத்தில் ஒரு சந்தோஷ புன்னகை படர்ந்தது.
இரவு வீட்டு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு அரவம் அடங்கியபின் ஜெய் பிரபாகர் பக்கம் திரும்பி படுத்து அவன் கன்னத்தை தன் உள்ளங்கைகளால் ஏந்தி அரையிருட்டில் ஜன்னல் வழியே வந்த நிலா ஒளி வெளிச்சத்தில் பிரபாகரின் கண்ணை ஊடுருவி பார்த்தான். பிரபாகர் ஜெய்யின் இடுப்பை வளைத்து தன் பக்கம் நெருக்கினான்.
“என்னடா அப்படி பாக்குறே?”
“தெரியலை…”
“நான் வாக்கிங் போனப்போ ஏன் அப்படி மெசேஜ் பண்ணினே?”
“சும்மா… தோணுச்சு பண்ணினேன்”
“போன வாரம் இந்த நேரம் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தே..?”
“ம்ம்… ப்ளானெட் ரோமியோ மெசேஜுக்கு எல்லாம் ரிப்ளை பண்ணிட்டு இருந்திருப்பேன்..”
“இன்னைக்கு பண்ணலையா?”
“ம்ம்ஹும்… என்னோட account-டை Deactivate பண்ணலாம்னு இருக்கேன்” இடமும் வலதுமாக இல்லையென்று தலையாட்டினான் ஜெய்.
“ஐயோ பாவம் உன்னோட ரோமியோஸ்… உன்னை ரொம்ப மிஸ் பண்ணியிருப்பாங்க… அவங்களை காயவிடாதே… அப்புறம் நாளைக்கு இளைஞர்கள் mysterious mass suicide தலைப்பு செய்தியா வரும்”
“ஹா ஹா! சிரிச்சுட்டேன்.. போதுமா?”
“இல்லைடா… நான் வந்திருக்குறது புது பழக்கம் தானே? அதனால ஏன் பழைய பழக்கத்தை விடனும்?”
“எனக்கு இப்போ தேவை கிளுகிளுப்போ / Sexting-ஓ இல்லை… Virtual friends கூட பேசிட்டு பேசிட்டு கையடிச்சிட்டு தூங்கினது போதும்.. ASL/Top or Bottom?-ங்குற conversations வேண்டாம்.. சந்தோஷமோ சங்கடமோ எப்பவும் என் கூடவே பயணிக்கிற ஒரு துணைக்கு மனசு ஏங்குது… நாலு வார்த்தை பேச ரத்தமும் சதையுமா ஒரு Real person வேணும்.. என்னை ஒரு better human-ஆ ஆக்குற நல்ல companionship வேணும்… நமக்குள்ள Sex இல்லைன்னா கூட பரவாயில்லை… நீ என் கூட இருப்பியா? இல்லை பாதியிலேயே என்னை விட்டுட்டு போயிடுவியா?”
“சீ! என்னடா பேசுற? நான் மனசுங்களோட விளையாடுறவன் இல்லை… ஏற்கனவே என் உடம்பை குறிவச்சு lifelong friendship-ன்னு பேசி பேசி ஏமாத்திட்டு, என் உடம்பை ருசிச்சுட்டு சலிச்சுப்போனதும் சக்கையா தூக்கியெறியப்பட்ட கசப்பான அனுபவம் எனக்கு இருக்கு. அதனால மனசோட பொய்யா விளையாடுறது எவ்வளவு கொடுமைன்னு எனக்கு தெரியும்… உன்னை பார்த்ததும் முதல்ல வந்தது காதலா இல்லை காமமா தெரியலை… ஆனா இப்போ நீ என்னோட உயிர். நீ இல்லாம இவ்வளவு நாள் எப்படி போச்சுன்னு ஆச்சரியமா இருக்கு.. இந்த ஃபீலிங்கும் நல்லா தான் இருக்கு… பறக்குற வரைக்கும் பறப்போம்.. ஆனா இனிமேல் என்னைக்கும் உன்னை விட்டுட்டு போகமாட்டேன்.. என்று சொல்லிவிட்டு ஜெய்யின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான் பிரபாகர்.
கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
“அதென்ன sex இல்லைன்னா கூட பரவாயில்லை? ரெண்டே session-ல நான் உனக்கு அலுத்து போயிட்டேனா?” என்று சொல்லிக்கொண்டு ஜெய்யின் வாயில் செல்லமாக அடிக்க, ஜெய் அந்த கையை பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டு இழுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு, பிரபாகரை நீண்ட பெருமூச்சோடு கட்டிக்கொண்டான். சற்று கீழிறங்கி பிரபாகரின் பரந்த செழுத்த மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு அந்த மெல்லிய உடம்பு சூட்டில் தன்னை இழந்தான். அவன் மார்புக்கு நடுவில் தன் உதட்டை குவித்து முத்தம் வைத்துவிட்டு கண்ணை மூடினான். அதற்கு மேலே இருவரிடமும் பேச்சோ இல்லை கசமுசாவே இல்லை. அந்த இறுகிய அணைப்பின் தாக்கத்தில் இருவரும் எப்போது உறங்கினார்கள் என்பது தெரியவில்லை. அன்றிரவு அவர்கள் உள்ளத்தை உடம்பின் இச்சைகளால் வெல்ல முடியவில்லை.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 22/06/2015
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|