படுக்கைக்கும் practice வேணும்ல…
நரேஷ் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, அது போக்குவரத்துக்கு தொந்தரவாக இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, தலையில் இருந்து ஹெல்மெட்-ஐ கழற்றி கையில் பிடித்தபடி மறுகையால் வாசல் கதவை திறந்தான். சுதாகர் அண்ணா வீடு இன்னும் பெரிதாக மாறவில்லை. சொல்லப்போனால் குழந்தைகள் வந்த பிறகு வீட்டின் முன்னால் இருந்த செடிகள் குறைந்து தரை அதிகம் ஆகியிருக்கிறது. பசங்கள் விளையாடுவதால் கூட இருக்கலாம். நரேஷ் வீட்டு வாசலில் தன் செருப்பை கழற்றியபோது ஒரு ஜோடி ஆண் செருப்பு மட்டுமே இருப்பதை பார்த்தான். அண்ணியும் பசங்களும் வீட்டில் இல்லையா?