Home தொடர்கதைகள் உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை

உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை

by காதல்ரசிகன்
9 minutes read
A+A-
Reset
இந்த உயிரில் கலந்த உறவே தொடரின் 16-வது அத்தியாயம், காதல்ரசிகன்-ஆல் தொடர்கதைகள் என்ற வகையினத்தில் கீழ் 2017-01-10 02:48 அன்று எழுதப்பட்டது.

முன் கதை சுருக்கம்...
ஜெய்யின் அப்பா தனசேகர் தனக்கு ஜெய் மற்றும் பிரபாகருக்கு நடுவே இருக்கும் உடலுறவு தெரியும் என்று அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறார். ஆனால் அவர்கள் தங்களுடைய பாலீர்ப்பு குறித்து தெளிவாக இருக்கிறார்களா என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். அவர் தங்களை பிரிக்க முயற்சிப்பதாக ஜெய் அவர் மீது கோபம் கொள்கிறான்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

நீங்கள் LGBT மனிதர்களை பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் / webseries பார்ப்பீர்களா?

View Results

Loading ... Loading ...

இப்போது தனசேகர் ஜெய் மற்றும் பிரபாகரின் கண்களை பார்க்கமுடியாமல் சங்கடத்தோடு ஜன்னலுக்கு வெளியே National Highway-ல் வேகமாக போய்க்கொண்டிருந்த வாகனங்களை பார்த்தபடியே பேசினார். அவர் குரலில் ஒரு மெல்லிய பதற்றம் இருந்தது. “நம்ம சமூகத்தில தன்பால் ஈர்ப்புன்னு சொன்னா அவங்க எப்படி செக்ஸ் வச்சுக்குவாங்கன்னு மட்டும் தான் மனுஷங்களுக்கு யோசிக்க தோணும்.. மனசுங்குற ஒரு விஷயம் யார் கண்ணுக்கும் தெரியாது.. அதனால தான் செக்ஸே வச்சுக்கலைன்னாலும் தன்பால் ஈர்ப்பை யாரும் வெளியே சொல்லமுடியறது இல்லை.. இப்போ நீங்க என்னை பத்தி என்ன நினைக்கறீங்கன்னு தெரியலை… ஆனாலும் மீதியை சொல்லிடுறேன்”. தனசேகரின் குரல் தர்மசங்கடத்தில் பிசிறடித்தது.

“அடுத்த நாள் உங்க அம்மா தனக்கு தலை சுற்றலா இருக்குறதாகவும், மாதவிடாய் தள்ளிப்போனதால வயிற்று வலியா இருக்குறதாவும் சொன்னா. எனக்கு ஒரு மாதிரியா என்னவா இருக்கும்னு புரிஞ்சிருந்தாலும், பக்கத்து தெருவுல இருக்குற டாக்டரை கூட்டிட்டு வந்தோம். அவங்க அவ கர்ப்பமா இருக்குறதா சொன்னாங்க. எனக்கு பயங்கர சந்தோஷம்.. ஆனா அவனோட மூஞ்சிக்கு நேரா நிமிர்ந்து பார்த்தப்போ எனக்கு என்னவோ குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. அவனுக்கும் அப்படி தான் இருந்துச்சு போல. அவன் முகம் சந்தோஷமா தெரிஞ்சாலும் கண்ணுல ஏதோ ஒரு வலி. அன்னைக்கு சாயங்காலம் உங்க அம்மாவுக்கு மருந்து வாங்க, தெரிஞ்சவங்களோட டிவிஎஸ் வண்டியை வாங்கிக்கிட்டு டவுனுக்கு கிளம்பினேன். அவனும் கூட வர்றேன்னு சொன்னான்.

Random கதைகள்

வழியிலே ஒரு தோப்புல வண்டியை நிறுத்த சொன்னான். வண்டியை நிறுத்துனதும் என்னை முதுகுப்பக்கமா கட்டிப்பிடிச்சுக்கிட்டு மன்னிச்சுரு மன்னிச்சுருன்னு அழுதான். உண்மைய சொல்லனும்னா அது நான் சொல்லவேண்டியது… நான் சொல்லனும்னு நினைச்சுட்டு இருந்ததும் கூட.. ஆனா அதை கூட அவன் சொல்லக்கேட்கவும் நான் நெகிழ்ந்துப்போயிட்டேன். அப்போ தான் எங்களுக்கு எங்க உறவோட ஆழம் புரிஞ்சுது. நாங்க செக்ஸுக்காக நெருக்கமாகலை… எங்க அன்பை எப்படி வெளிக்காட்டுறதுன்னு முயற்சித்தப்போ அது செக்ஸுல முடிஞ்சிடுச்சு. வெளியே இருந்து யாராச்சும் பார்த்தா எங்களுக்கு நடந்தது incest-பயங்கரமானதாகவோ இல்லை உடம்பு திமிர்ல “அரிப்பெடுத்து அலைஞ்சதால”ன்னு தோணலாம். ஆனா எங்களுக்கு மட்டும் தான் அன்னைக்கு நடந்தது – நாம குழந்தைக்கு அன்பு மிகுதியிலே தர்ற முத்தத்துக்கு சமம்னு புரியும். அதனால அந்த ஒரு சில நிமிடங்கள் நடந்த உடலுறவுக்காக எங்க அன்பை பலிகொடுக்க கூடாதுன்னு ரெண்டு பேரும் முடிவுபண்ணினோம். இந்த நொடி வரைக்கும் அது எனக்கு தப்பா தெரியலை. ஆனா இனிமே இப்படி நடந்து எங்களோட மணவாழ்க்கை பாதிக்கப்படக்கூடாதுன்னு உறுதியெடுத்துக்கிட்டோம்.

உங்க அம்மாவை பிரசவத்துக்காக ஊர்ல விட்டுட்டு வந்தப்போ அந்த நாலு மாசமும் அவளை “அக்கா அக்கான்னு” உள்ளங்கையிலே வச்சு தாங்கினான். நீ பொறந்தப்போ அவன் ஊருக்கே விருந்து வச்சான். உடம்பு கவர்ச்சிங்குற குற்ற உணர்ச்சியை ஒதுக்கிட்டு எங்க அன்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுபோக ஆரம்பிச்சோம். நான் சொந்தமா Business ஆரம்பிக்கனும்னு யோசிச்சப்போ அவன் தான் அதோட மூளையா இருந்து என்னோட ஆசையை தன்னோட கடமையா நினைச்சு எனக்கு Business establish பண்ணி குடுத்தான். அதே மாதிரி அவனுக்கு அரசாங்க வேலையிலே சில பிரச்சனைங்க வந்தப்போ நான் எனக்கு கிடைச்ச contacts மூலமா அவனுக்கு பிரச்சனை பண்ணுனவங்களை தட்டிவச்சேன். அவனுக்கு ஒரு சின்ன பிரச்சனைன்னாலும் என்னோட presence – பொருளாவோ இல்லை நான் அனுப்புற ஆளுங்க மூலமாவோ – அங்கே எப்படியாச்சும் இருக்கும்.

அவனுக்கு ஷேர் மார்க்கெட் பத்தி நல்ல அறிவு… இன்னைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட தினமும் காலையிலே என்னை அந்த ஷேர்ஸை வாங்கு, இதை எல்லாம் தள்ளிவிடுன்னு என்னை வழிநடத்திட்டு இருக்கான். எங்களுக்குள்ளே “அது” ஒரே ஒரு தடவை தான் அது நடந்துச்சு. ஆனா அதை பிரதானமா நினைச்சு நாங்க எங்களை பிரிச்சுக்கிட்டு எங்களோட அன்பை தண்டிச்சுக்கலை. அது நடந்ததுக்கான காரணத்தை – அன்பை புரிஞ்சுக்கிட்டு அந்த அன்பை இன்னும் செழிப்பா வச்சிருக்கோம். எங்க அன்புக்கு எங்க உடம்புகளுக்கு இடையிலே இருக்குற தூரமோ இல்லை எங்க குடும்பங்களோ குறுக்கே வரலை. அது அது இருக்கவேண்டிய இடத்துல, நடக்கவேண்டிய படி நடந்துட்டு இருக்கு. வெளியிலே இருந்து பாக்குறவங்களுக்கு எங்க நட்பை / உறவை அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வச்சு “கள்ள உறவு”ன்னு கொச்சையா பேசத்தோணலாம். ஆனா எங்க அன்பு சமுதாயத்துக்கு எந்த விதத்துலயும் கெட்டதோ இல்லை எங்க குடும்பங்களுக்கு அவமானமோ கொண்டுவரலை.”

தனசேகருக்கு ஜெய்யின் கண்களை நேரடியாக பார்ப்பதில் ஒரு சங்கடம் இருந்தது. என்ன தான் தனது செயலை நியாயப்படுத்தினாலும், இந்த நொடியில் இருந்து மகனின் பார்வையில் தன்னை பற்றிய அபிப்பிராயம் நல்லதாகவோ இல்லை கெட்டதாகவோ – எந்த திசையிலும் போகக்கூடிய அபாயம் இருப்பதை அறிந்து தனசேகர் துணிந்து தான் தன்னுடைய கடந்த காலத்தை சொன்னார். மகனை மீட்டெடுப்பதில் தன்னை தாழ்த்திக்கொள்வது ஒரு தகப்பனாரின் கடமையாக அவர் நினைத்தார். ஜெய்யின் கையை பிடித்துக்கொண்டு

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

ஜெய்.. என்னோட Gene தானே உனக்கும்… அதனால உனக்கு பிரபா கூட physical affair-னு தெரிஞ்சதுப்போ எனக்கு அதிர்ச்சியோ கோபமோ இல்லை. Sex is simply overrated… Chastity is an issue made out of tissue.. ஆனா என்னோட கவலை எல்லாம் உங்க உறவை பத்தி உங்களுக்கு ஒரு தெளிவு இருக்காங்குறது தான். நீங்க செக்ஸூக்காக நெருக்கமானீங்களா இல்லை நெருக்கமானதால செக்ஸ் வச்சுக்க ஆரம்பிச்சீங்களான்னு உங்களுக்கு தான் தெரியும். உங்க உறவுல பிரதான தேவை என்னான்னு நீங்க தான் முடிவு பண்ணனும். ”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

பொதுவா இங்கே கதைகளில் பேச்சு அதிகமாகவும், sex action கம்மியாகவும் இருக்குன்னு நினைக்கிறீங்களா?

View Results

Loading ... Loading ...

“அப்பா… அது எனக்கு பிரபாவை ரொம்ப பிடிச்சதால தான் என்னோட personal space-ல அனுமதிச்சேன்” – ஜெய் முனகலாக பதில் சொன்னான்.

“மாமா எங்களுக்குள்ளே ‘unnatural sex’ கிடையாது.. just hugging, kissing and mutual masturbation தான்” – பிரபாகர் சங்கடத்துடன் சொன்னான்.

“பசங்களா.. எனக்கு உங்க பதில் வேணாம்.. உங்களுக்குள்ளேயே உண்மையான பதில் சொல்லிக்கோங்க..”

பிரபாகர் தனசேகரின் கண்களை நேராக பார்க்கமுடியாமலும், அதே சமயம் அவரை பார்க்காமல் அவமரியாதை செய்யாமலும் இருக்கவும் கஷ்டப்பட்டான். அது புரிந்து தனசேகர் பிரபாகரின் கையை அன்பாக எடுத்துக்கொண்டார்.

“எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும் பிரபா… ஒருவேளை உன்னோட இடத்துல வேற யாராச்சும் இருந்திருந்தா நான் இப்படி பொறுமையா யோசிப்பேனான்னு தெரியலை… என்னோட ஆசையும் நீங்க ரெண்டு பேரும் காலத்துக்கும் பிரியாம ஒன்னா இருக்குனும்னு தான் ஆசை. ஆனா அது எந்த capacity-யிலேன்னு நீங்க தான் முடிவு பண்ணனும். நீங்க Gay couple-ன்னு நம்ம சொந்தத்துல தெரிஞ்சதுக்கு அப்புறம் யாரும் உங்களையோ இல்லை நம்ம வீடுகளையோ சேர்த்துக்க மாட்டாங்க. எனக்கு அது கவலை இல்லை… உங்க அம்மாக்களுக்கு இதை புரிஞ்சுக்குற பக்குவம் இருக்கான்னு தெரியலை. உங்களால காலத்துக்கும் ஒன்னாவே, கூட சொந்தக்காரங்க யாரும் இல்லாம இருக்க முடியும்னு தோணுச்சுன்னா, தயவு செஞ்சு ரெண்டு பேரும் எங்கேயாச்சும் வெளிநாட்டுக்கு – பிரேஸில் / கனடா-ன்னு, எங்கே Gay marriages சட்டப்பூர்வமா அங்கீகரிக்கப்பட்டிருக்கோ, அதன் நாட்டுக்கு போய் தம்பதியா வாழுங்க… ஆனா அதுக்கு முன்னாடி சொந்தக்காரங்க, உங்க நண்பர்கள் இந்த சமுதாயம் எல்லாத்தையும் விட்டுட்டு போய் உங்களுக்காக நீங்க மட்டுமேன்னு தனிமையிலே இருக்க முடியுமான்னு முடிவு பண்ணிக்கோங்க… ”

“மாமா… எனக்கு ஜெய்ன்னா அவ்வளவு உயிர்… எனக்கு அவனை கவனிச்சுக்குறதுக்கு அப்புறம் தான் உலகத்துல மத்த எல்லாமே…” – பிரபாகர் உறுதியளித்தான்.

“நீ அவனை தங்கம் போல பார்த்துக்குவே.. நான் இல்லைன்னு சொல்லலை.. இப்போ உங்க ரெண்டு பேருக்கும் நல்ல Chemistry இருக்கு.. ஏன்னா இப்போதைக்கு உங்களுக்கு வேற எந்த societal pressure/அழுத்தமும் இல்லை… அதனால உங்க chemistry நல்லா போயிட்டு இருக்கு… ஆனா நீங்க தனியா வாழ ஆரம்பிச்சீங்கன்னா நிறைய pressures இருக்கும்… அதுல உங்க love/chemistry தாக்கு பிடிக்குமா? அது கடைசி வரைக்கும் இருக்குமா? இந்த ஓரினச்சேர்க்கை கல்யாணத்துல உங்க ரெண்டுபேராலேயும் குழந்தை பெத்துக்க முடியாது. எவ்வளவு நாளுக்கு தான் ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பார்த்துக்குட்டே இருப்பீங்க… சலிப்பு தட்டிடாது? கொஞ்சுறதும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் சலிப்பாயிடுமே…”

“அதனால தான் குழந்தை, அவங்களை வளர்த்து ஆளாக்கி, அதோட நண்பர்கள், அதுக்கொரு துணைன்னு காலம் முழுக்க புது மனிதர்களும், புதுப்புது கடமைகளும்னு நம்ம லைஃபுக்கும் ஒரு ஒரு குறிக்கோளும், அர்த்தமும் குடுக்க முயற்சிக்கிறோம்? உங்களால பெத்துக்கமுடியாததால ஒரு குழந்தையையாச்சும் தத்தெடுத்துக்குற அளவுக்கு உங்களுக்கு பெருந்தன்மை இருக்குமா? உங்க உறவுக்கு நடுவிலே அப்படி எதுனாச்சும் பாதிப்பு வந்துச்சுன்னா அது உங்க தத்து குழந்தையை பாதிக்காதா?”

ஜெய்யும் பிரபாகரும் மௌனமாக இருந்தார்கள். இது தான் தன்னுடைய சமயம் என்று தனசேகர் போட்டு தாக்க ஆரம்பித்தார்.

“இப்போ Gay Pride-ன்னு pose குடுக்குற எல்லோருடைய சிரிப்புக்கு பின்னாடி ஏகப்பட்ட சோகம் ஒளிஞ்சிருக்கும். அது சமுதாயத்தால வர்ற சோகம் மட்டும் இல்லை… அவங்களோட பார்ட்னர்களால கூட இருக்கலாம். அதனால Gay வாழ்க்கை Romantic Comedies-லும், Webseries-லும் காமிக்கிற மாதிரி Humour-ரான, Glamorous-ஸான விஷயம் கிடையாது. நிஜத்துல தனிமையும், இருட்டும் தான் அதிகம். இதை எல்லாம் தாங்குவீங்களா?”

“அப்பா… நீங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசி எங்களை பிரிக்க நினைக்கிறீங்க…” ஜெய் பொது இடம் என்று கூட பார்க்காமல் குரலை உயர்த்த, பிரபாகர் அவன் கையை பிடித்து அமைதியாக்கினான்.

ஜெய்.. என்னோட நோக்கம் உங்களை பிரிக்கிறது இல்லை… ஆனா நல்லபடியா உங்களை காலத்துக்கும் சேர்ந்து வாழ வைக்கிறது தான். இன்னைக்கு தன்னை Homosexual-னு நினைச்சுக்குற 99% பேருக்கு தங்களை பற்றிய புரிதல் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன். இந்த உலகத்துல இருக்குற ஆம்பளைங்கள்ல மூனுல ஒரு பங்கு பேர் தங்களோட வாழ்க்கையிலே Homosexual அனுபவங்களுக்கு ஆளாகுறாங்க. அதுல இருந்து இது நான் இல்லைன்னு தெளிவா மீள்றவங்க கொஞ்சம் பேர் தான்.”

“நிறையபேர் இது தான் முதல்ல கிடைச்சுது அதனால இதையே தொடரலாம்னும், இதுல கஷ்டப்பட்டு ஒரு பொண்ணை இம்ப்ரெஸ் பண்ணி, அவளை செக்ஸுக்கு உஷார் பண்ணவேணாம்… ரொம்ப ஈஸியா கிடைக்குது… அதுவும் இல்லாம இதுல கமிட்மெண்ட்ஸ் / கர்ப்பம்ங்குறது இல்லாததால ஜாலியா இருக்குற வரைக்கும் கண்டினியூ பண்ணலாம்.. போரடிச்சுதுன்ன்னாலோ இல்லை வெரைட்டி வேணும்னாலோ அடுத்த பார்ட்னர் பார்த்துக்கலாம்… அப்படின்னு இதுல நிறைய advantages இருக்குறதா நினைச்சுக்குட்டு இதுல ஈடுபட்டு தங்களோட உண்மையான அடையாளத்தை உணராமலேயே, தங்களை கே-ன்னு கஷ்டப்படுத்திக்கிறவங்க தான் அதிகம்… இதுவும் ஒரு அனுபவம்னு கடந்து போறவங்க பெருசா கஷ்டப்படுறது இல்லை. நீங்க எந்த Category-ன்னு உங்களுக்குள்ளேயே ஒரு தெளிவுக்கு வாங்க…”

“அப்புறம் நீங்க ஆளுக்கொரு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு சமூகத்துல Straight-டாவோ இல்லை closet-ல bisexual-லாவோ வாழறதோ… இல்லை நாங்க இப்படி தான்னு தைரியமா Gays-ஆ “coming out” / வெளியே வர்றதும் உங்க இஷ்டம். நான் கேட்குறது எல்லாம் உங்களை பத்தின தெளிவை சரியா புரிஞ்சுக்கோங்கங்குறது தான். நீங்க உங்களை நீங்களே ஒரு ஆத்மபரிசோதனை செஞ்சதுக்கு அப்புறம் எடுக்குற எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுறேன்… உங்களுக்கு துணை நிற்பேன்.. இது சத்தியம்”.

தனசேகர் சொன்ன “சத்தியம்” என்ற உறுதிமொழி ஜெய்யை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. இப்போது தான் பேசுவதை கேட்கும் மனநிலையில் ஜெய் வந்திருப்பதை உணர்ந்த தனசேகர் மேலும் தொடர்ந்தார்.

“இப்போ உங்க ரெண்டு பேருக்குள்ளே ஏற்பட்ட அன்பு தான் உடம்பால செக்ஸா வெளிப்பட்டுச்சுன்னா, உங்க அன்பை வெளிப்படுத்துறதுக்கு இன்னும் நிறைய வேற வழிகளும் இருக்கே? ஜெய்க்கு கை உடைஞ்சப்போ பிரபா நீ அவனை குழந்தை மாதிரி பாத்துக்கிட்டே…. பிரபாவுக்கு வேலையிலே பிரச்சனைன்னதும் ஜெய் தன்னால முடிஞ்ச உதவியை செஞ்சே… இந்த அன்பு பரிமாற்றத்துல் இருக்குற திருப்தியை விடவா செக்ஸ் பெருசு? அப்படியே நீங்க Gay Couple-ஆ வாழ ஆரம்பிச்சாலும், நாளைக்கு Career, வீட்டு பொறுப்புகள்னு போகப்போக ஒரு கட்டத்துல செக்ஸோட priority பின்னாடியே போக ஆரம்பிக்கும்… இப்போ தினமும் மணிக்கணக்கா இருக்குற sex sessions காலப்போக்குல வாரத்துக்கு / மாசத்துக்கு சில நிமிஷங்கள்-நு, அதுவும் அலுப்போடன்னு சுருங்கிப்போகும். அப்படி ஒரு நாள் வர்றதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் காலத்துக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா, இருந்து சந்தோஷமா வாழுங்க… கூடவே உங்க மனைவி குழந்தைகளையும் இந்த அன்புல சேர்த்துவிடுங்க… ஏன் நீங்க தனியா தான் உங்க அன்பை உங்களுக்குள்ளே மட்டும் பரிமாறிக்கனும்னு பிடிவாதம் பிடிக்கிறிங்க?”

“நீங்க மத்தவங்க மேலே செலுத்துற அன்பு அளவுக்கு அதிகமா போச்சுன்னா ஒரு கட்டத்துல அதுவே உங்களை பிரிச்சிடும். அதுக்கு பதிலா உங்களுக்குள்ளே பிரவாகமா ஊற்றெடுக்குற அன்பை பெத்தவங்க, மனைவி, குழந்தை, ஜெய்/பிரபான்னு ஷேர் பண்ணி பாருங்களேன்… வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். அப்படியும் உங்க ரெண்டுபேருக்குள்ளேயும் உங்கமேலே சுரக்குற அன்பை வெளிப்படுத்த கட்டிப்பிடிச்சோ இல்லை முத்தம் கொடுத்தோ… இல்லை worse come worse வீட்டுக்கு வெளியிலே sex in the closet மூலமாவோ தான் வெளியேற்றனும்னா மத்தவங்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி செஞ்சுக்கோங்களேன்… ஏன் உடம்பை வச்சு உறவுகளை define பண்ணிக்கனும்? அதுக்காக நான் promiscuity-ஐ advocate பண்றேன்னு அர்த்தம் இல்லை. கொஞ்சம் practical-ஆ யோசிக்க சொல்றேன்”

“மனுஷ வாழ்க்கையிலே நாம ஒவ்வொரு காலகட்டத்துலயும் நம்ம வாழ்க்கையிலே நுழையுறவங்க மேலே ஈடுபாடு கொள்றதோ இல்லை காதல் வயப்படுறதோ இயல்பான விஷயம் தான். ஆனா அந்த புது உறவை எவ்வளவு தூரத்துக்கு, எந்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகனும்னு முடிவு பண்றதுல தான் நம்மளோட முதிர்ச்சி தெரியும். சில உறவுகளை அப்படியே தொடந்தா நம்மளை சுற்றியிருக்குறவங்களை கஷ்டப்படுத்தும் இல்லை சங்கடப்படுத்தும்னா நாம அந்த உறவை விலக்கறதோ இல்லை இந்த உறவு எனக்கு ஸ்பெஷல் அதனால நான் விட்டுத்தரமாட்டேன்னு முடிவு பண்ணி, அந்த உறவை கொஞ்சம் மாத்தி வேற பரிமாணத்துல தொடர்றது தப்பில்லை… அதை தான் நான் பண்ணினேன்… அது எனக்கு work out ஆச்சு.. உங்களுக்கும் ஆகலாம்… So நல்லா யோசிங்க… அப்புறம் எப்படி முன்னாடி எடுத்துட்டு போறதுன்னு நீங்க எங்களுக்கு சொல்லுங்க… உங்க அம்மாக்களையும் பன்னீரையும் உங்களை புரிஞ்சிக்க வைக்க என்னால் முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன்..”

ஜெய்க்கும் பிரபாகருக்கும் தனசேகர் சொன்னதில் ஆட்சேபிக்கவோ இல்லை எதிர்க்கவோ எதுவும் இல்லை என்பதால் அமைதியாக இருந்தார்கள்.

“முதல்ல நீங்க ரெண்டு பேரும் உங்களோட sexuality-யை நல்லா deep-ஆ analyse பண்ணுங்க.. Meanwhile உங்களுக்கு பாக்குற பொண்ணுங்களை மீட் பண்ணுங்க… பேசுங்க… உங்களுக்குள்ளே ஒருவேளை அந்த பொண்ணுங்க கூட chemistry உருவாகலாம்… இவ எங்க ரெண்டு பேர் கூட காலத்துக்கும் வரக்கூடியவன்னு உங்களுக்கு தோணுனா மட்டும் தான் நாங்க கல்யாணப்பேச்சை proceed பண்ணுவோம்… உங்களுக்கு கட்டாய கல்யாணம் எல்லாம் பண்ணி வைச்சு வர்ற பொண்ணுங்களோட வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்க மாட்டோம்… திறந்த மனசோட அவங்களை சந்திச்சு பேசுங்க… அதனால நீங்க ரெண்டு பேரும் conventional marriage-க்கு ரெடின்னாலும் சரி, அப்படி இல்லாம ஒருவேளை உங்களுக்கு பொண்ணுங்க கூட கெமிஸ்டிரியே வரலை… இனிமேலும் வராதுன்னு தெளிவானதும் Gay Couple-ஆ வெளிநாட்டுக்கு போய் உங்க வாழ்க்கையை உங்க இஷ்டத்துக்கு வாழுறதுன்னாலும் சரி.. ஆனா பொண்ணுங்க கிட்டே பேசாம, பழகாம, முயற்சியே பண்ணாம இப்படி நீங்க ரெண்டு பேரும் உங்களை பத்தின தெளிவான புரிதலே இல்லாம அனாவசியமா முரண்டு பிடிக்கவேண்டிய அவசியம் இல்லையே…”

அவர் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாக ஜெய்யும் பிரபாகரும் உணர்ந்தார்கள். அதனால் அவர் சொல்வதை ஆமோதித்து தயக்கமாக தலையாட்டினார்கள்.

தனசேகர் பிரபாகரை பார்த்து “சரி! இப்போ வீட்டுக்கு வா.. நாம நாளைக்கு ஜெய்யை அழைச்சிட்டு உன்னோட மேன்ஷனுக்கு போய் உன்னோட சாமான் எல்லாம் எடுத்துக்கலாம். நாளைக்கு காலையிலே US timezone-ல எனக்கு Skype-ல Client Meeting வேற இருக்கு… போய் தூங்கி எழுந்தா தான் நாளைக்கு fresh mind-டோட present பண்ணமுடியும்” என்றார் மொபைல் கடிகாரத்தை பார்த்தபடி.

பிரபாகர் தயக்கமாக “மாமா… நான் மூனு மாசத்து வாடகை – ரூ. 24000-த்தை மேன்ஷனுக்கு அட்வான்ஸா குடுத்திருக்கேனே… திருப்பி தரமாட்டான்.. அதனால…” என்ரு இழுத்தான்.

தனசேகர் செல்லமாக பிரபாகரை பார்த்து முறைத்தார். “உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகனும்… நீ பண்ணுன தப்புக்கு தண்டனையா அந்த 24000-த்தை தண்டமா write off பண்ணிட்டதா நினைச்சுக்கோ… மத்தபடி நாளைக்கு சாயங்காலம் உன்னோட பொருட்கள் எல்லாம் ஒரு வாரம் முன்னாடி எங்கே இருந்துச்சோ அங்கேயே இருக்கனும்” என்று ‘கண்டிப்புடன்’ சொன்னபடி எழுந்து முன்னே சென்று கவுண்டரில் சாப்பிட்ட டிஃபனுக்கு பணம் கொடுத்தார்.

பின்னாலேயே ஜெய் பிரபாகரின் கையை விரித்து விரலோடு விரல்கள் கோர்த்துக்கொண்டு அமைதியாக நடக்க, ஹட்ச் நாய்க்குட்டி போல பிரபாகர் அவனை தொடர்ந்து வந்தான்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை

Leave a Comment

Free Sitemap Generator