முன் கதை சுருக்கம்... |
---|
பிரபாகரின் ஜாதகத்தை பார்க்கும் கிராமத்து ஜோசியர் அவனுக்கு வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு மனக்கிலேசம் கொள்ளும் பிரபாகரோடு ஜெய் நிலவொளியில் நட்சத்திரங்களுக்கு அடியில், வெட்டவெளியில் கயிற்றுக்கட்டிலில் உடலுறவு கொள்கிறான். அந்த sex-ல் காமத்தை விட பிரபாகரின் மனதை குணப்படுத்தும் Therapeutic nature தான் தூக்கலாக இருந்தது. |
அதிகாலையில் சூரியனின் மெல்லிய சூடான இளம் கதிர்கள் வாசலில் படுத்திருந்த பிரபாகரின் முகத்தில் அடித்தபோது அவன் தூக்கம் கலைந்தது. கிராமம் விழித்துக்கொண்டதன் அடையாளமாக தெருவில் நடமாட்டமும், பக்கத்து வீடுகளில் வாசல் தெளிக்கும் சத்தமும் கேட்டது. பிரபாகருக்கு தூக்கம் கலைந்து போனதால் எழுந்து படுக்கையை சுருட்டிக்கொண்டு உள்ளே போக நினைத்தான். பக்கத்து கட்டிலில் ஜெய் வாயை பிளந்துக்கொண்டு குழந்தை போல தூங்கிக்கொண்டிருந்தான். பிரபாகருக்கு ஜெய்யின் உதட்டில் முத்தம் வைக்கவேண்டும் போல தோன்றினாலும், தன் ஆசையை கட்டுபடுத்திக்கொண்டு, அவன் தாடையில் செல்லமாக தட்டி, அவன் வாயை மூடினான். அவனது போர்வையை இழுத்து கழுத்து வரை மூடிவிட்டு, பின்னர் தன்னுடைய போர்வை மற்றும் தலையணையை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு வீட்டுக்குள் போனான்.
வீட்டு ஹாலில் இருந்த சேரில் படுக்கையை போட்டுவிட்டு, வாய் கொப்பளித்துவிட்டு கிச்சனுக்கு போனான். அவன் அம்மா (செல்வி) அடுப்படியில் வேலையாக இருந்தார். சமையலறைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, அது பிரபாகர் என்று தெரிந்து,
“வாடா! பல்லு விளக்கிட்டியா?”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“ம்ம்.. ஆச்சு”
“வர காஃபி போடட்டுமா இல்லை பால் காஃபி வேணுமா?”
“பிளாக் காஃபியே போதும்..”
“சரி!..” அம்மா காஃபி கலந்துக்கொண்டே “நாம இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போயிட்டு, நீ ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போறியா?”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
பதில் வரவில்லை என்றதும் திரும்பி “உனக்கு லீவ் / WFH இருக்குல்ல?”
பிரபாகர் தயங்கி தயங்கி “அம்மா! நானும் இன்னைக்கே ஜெய் கூடவே போறேனே…” என்று மெதுவாக சொன்னான்.
“ஏண்டா… நம்ம வீட்டுக்கு வரக்கூட தோணலையா உனக்கு?”
“அதுக்கில்ல… நான் திங்கட்கிழமையிலே இருந்து ஆஃபீஸ் போகனும்..”
“அப்படியா? ஒரு நாளாச்சும் வந்துட்டு போயேன்..”
“அம்மா! ஒரு விஷயம் கேட்கட்டுமா?”
அம்மா புதிராக புருவத்தை உயர்த்தி பார்த்தார்.
“அங்கே மாமா வீட்டுக்கு பக்கத்துல ஒரு விடு காலி ஆகுது… நாம அங்க குடிபோயிடலாமா?”
“என்னடா இது? புது ஆஃபீஸ்ல ஆறு மாசத்துல உன்னை ஆன்சைட் அனுப்புறதா சொன்னதால தான் உன்னை உங்க மாமா வீட்டுல தங்க வச்சோம். இப்போ முதலுக்கே மோசமாகுற மாதிரி மாமா வீட்டுக்கு அடிமையாயிட்டே…”
“இல்லம்மா… புராஜெக்டுல இப்போ இருக்குற நிலைமையிலே ஆன்சைட் அனுப்புறது சந்தேகம் தான். அது மட்டுமில்லாம எனக்கும் இப்போ எல்லாம் வீட்டை விட்டு தனியா இருக்குறது பிடிக்கலை. அதனால நானே ஆன்சைட் வேணாம்னு சொல்லிடப்போறேன்… அதனால தான் கேட்குறேன்.. அந்த வீட்டுக்கு மாறிக்கலாமா?”
அம்மா அதிருப்தியில் இருக்கிறார் என்பதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது.
“என்ன பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறியா? பொட்டி படுக்கையை கட்டிக்கிட்டு வீட்டை அங்கே மாத்திட்டு வரசொல்றே… டேய்! என்ன தான் கூடப்பொறந்த சொந்தமா இருந்தாலும் ஒரு இடைவெளி விட்டு இருந்தா தான் மரியாதை… உன்னை அண்ணன் வீட்டுல விட்டது நான் பண்ணின தப்பு… அவனவன் ஆன்சைட்டுக்கு நாயா பேயா அலையுறான்… நீ என்னடான்னா சீக்கிரம் போயிட்டு, ஒரு நாலு காசு பார்த்துட்டு நாளைக்கு கல்யாணம் காட்சின்னு செட்டில் ஆகுறதை விட்டுட்டு போகமாட்டேன்னு சொல்லப்போறேங்குற…” அவர் குரல் உயர தொடங்க, பிரபாகர் பதைபதைப்புடன் அவரை “மெதுவா!” என்பது போல கையை அழுத்தினான்.
அம்மா விடவில்லை… மேலும் தொடர்ந்தார். “நீ 3-4 மாசத்துல ஆன்சைட் போயிடுவேன்னு தான் நான் உன்னை அண்ணன் வீட்டுல விட்டேன். இல்லைன்னா உன்னை அப்போவே ஏதாச்சும் மேன்ஷன்ல ரூம் பிடிச்சு விட்டுட்டு வந்திருப்பேன்… இல்லை நீ வேற ஊருக்கு போகவேண்டாம்னு இங்கேயே பிடிச்சு நிறுத்தியிருப்பேன்.. டேய்! தனம் அண்ணன் என் கூட பொறந்த அண்ணன்… உன்னை விட எனக்கு அந்த வீட்டுல அதிகம் உரிமை இருக்கு… ஆனா நீ இப்போ சம்பாதிக்கிறே.. அவங்க வீட்டுக்கு உன் சம்பளத்துல இருந்து ஒன்னும் குடுக்குறது இல்லை… நீ குடுத்தாலும் அவர் வாங்கமாட்டாருங்குறது அடுத்த விஷயம்… காசு விஷயம் எப்பவுமே பொல்லாதது… இந்த விஷயம் நாளை பின்னே ஏதாச்சும் பேச்சுவாக்குல வந்துச்சுன்னா நான் நாண்டுகிட்டு தான் சாகணும்… ஊருக்கு போனதும் மொத வேலையா பேசாம நீ ஏதாச்சும் மேன்ஷன்ல ரூம் பார்த்துட்டு அவங்க வீட்டுல இருந்து வெளியே போற வழிய பாரு”.
பிரபாகருக்கு முகம் சுருங்கியது. அங்கே கனத்த மௌனம்.
வாசலில் செருமல் சத்தம் கேட்டு திரும்ப, வாசலில் ஜெய்யின் அப்பாவான தனசேகர் நின்றுகொண்டிருந்தார்.
அவரை அப்படி எதிர்பார்க்காததால் செல்வி கொஞ்சம் தடுமாறித்தான் போனார்.. “அண்ணா! காஃபி போடட்டுமா?” என்று சுதாரித்தார்.
“ம்ம்… சக்கரை இல்லாம… எல்லாம் பிரபாகர் வந்தாப்புறம் வந்த புதுப்பழக்கம் தான்”
“சரிங்கண்ணா!”
அம்மா காஃபி கலக்கும்போது தனசேகர் “நான் வர்றப்போ என்ன சத்தமா பேசிட்டு இருந்தீங்க?”
“அண்ணா! இவனை ஒரு ரெண்டு நாள் வீட்டுக்கு வந்துட்டு போன்னு சொன்னேன். மாட்டேங்குறான்… அதான் கத்திக்கிட்டு இருந்தேன்.. நீயே கேளு அவன் கிட்டே…”
தனசேகர் செல்வியை அமைதியாக இருக்குமாறு சைகையில் அடக்கிவிட்டு, பிரபாகர் பக்கம் திரும்பி அவனை பார்த்து “பிரபா! உனக்கு என்னைக்கு ஆஃபீஸ் போகனும்?”
“திங்கட்கிழமை இல்லைன்னா செவ்வாய்கிழமை மாமா”
“சரி! உங்க அம்மா ஆசைபடுறா… நாம எல்லாரும் இன்னைக்கு உங்க ஊருக்கு போயிட்டு, ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் போகலாமா?”
“ஐ! ஜாலி.. சூப்பர் மாமா” என்று சொல்லி பிரபாகர் தனசேகரை கட்டிப்பிடித்துக்கொண்டான்.
தனசேகர் பிரபாகரின் நெற்றியில் உச்சிமோர்ந்து முத்தம் வைத்துவிட்டு “சரி! உன் ஃப்ரெண்டு அடிக்கிற வெயில்ல தூங்குறான் பாரு.. அவனை எழுப்பி பல்லு விளக்கிட்டு காஃபி குடிக்க வர சொல்லு… இல்லைன்னா முடிஞ்சா அப்படியே குளிச்சிட்டு வரசொல்லு.. ஏன்னா சீக்கிரம் கிளம்பினா தான் உங்க வீட்டுக்கு சீக்கிரமா போகமுடியும்… பிரச்சனை ஓய்ஞ்சுதா?”
பிரபாகர் உற்சாகத்துடன் வெளியே ஓட, செல்வி தனசேகருக்கு காஃபி டபராவை நீட்டினார்.
“செல்வி! கூடப்பொறந்த அண்ணனை பத்தி நீ என்ன நெனப்பு வச்சிருக்கேன்னு இன்னைக்கு தெரிஞ்சுது…”
“அதுக்கில்லண்ணா..” செல்வி பதறினார்.
“பரவாயில்லை… அது பொம்பள புத்தி. ஆனா எனக்கு பிரபாகர் வேற, ஜெய் வேற இல்லை.. ரெண்டு பேருமே ஒன்னு தான்.”
“அண்ணா நான் சொல்ல வந்தது…”
தனசேகர் கை மறித்தார்.
“என்னோட ஆசை ஜெய்க்கும், பிரபாகருக்கும் ஒரே மேடையிலே கல்யாணம் பண்ணி வைக்கனுங்குறது தான்… துரதிர்ஷ்டவசமா அப்படி எதுவும் நடக்கலைன்னாலும் ஒருவேளை பிரபாகர் கல்யாணம் வரைக்கும் நான் இருக்குற ஊர்ல இருந்தா, அவன் கல்யாணம் ஆகி பொண்டாட்டியோட தனிக்குடித்தனம் போற வரைக்கும் என் கூட தான் இருக்கனும்… என் மருமகன் எனக்கு இன்னொரு பையங்குற எண்ணம் தான் எனக்கு… அவனும் அப்படி தான் பாசமா இருக்கான்.. ஆனா நீ அவன் மனசுல இப்படி வேறுபாட்டை விதைக்காம இருந்தா அவன் இருப்பான்.” என்று சொல்லிவிட்டு காஃபி டபராவோடு வெளியேறினார்.
காலை சிற்றுண்டி முடித்ததும் இரண்டு குடும்பங்களின் கார்களும் அந்த அழகிய கிராமத்தை விட்டு சாலையில் புழுதி கிளப்பிக்கொண்டு விடைபெற்றது.
முதன்முறையாக ஜெய் தன்னுடைய வீட்டுக்கு வருவதில் எல்லாரையும் விட அதிக சந்தோஷம் பிரபாகருக்கு தான். “வாடா! இது தான் என்னோட ரூம்…” பிரபாகர் ஜெய்யின் கையை பிடித்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு அழைத்துச்சென்ற போது அவன் குரலில் குழந்தையின் குதூகலம். “இதெல்லாம் நான் கலெக்ட் பண்ணி வச்சிருக்குற புக்ஸ்… குட்டி லைப்ரரி! அப்புறம் இது தான் என்னோட கிளாஸிக்ஸ் டிவிடி கலெக்ஷன்…” என்று எல்லாவற்ரையும் எடுத்துக்காட்டினான். பக்கத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை என்று உறுதியானதும் ஜெய் பிரபாகரின் இடுப்பை வளைத்து அவன் உதட்டை ஆக்கிரமித்தான். பிரபாகர் சந்தோஷமாக வளைந்துகொடுத்தான்.
பிரபாகரின் அப்பா பன்னீர் “சே! இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே மச்சான்… உங்களை வரவேற்று அசத்தியிருக்கலாம்…” என்று அங்கலாய்த்துக்கொண்டார்.
தனசேகர் “விடுங்க பன்னீர்! நமக்கு தோணாததை நம்ம பசங்க நடத்திட்டாங்களேன்னு இன்னும் அதிகமா சந்தோஷமா இருக்கு… நமக்குள்ள என்ன formality… ஒரே குடும்பம் தானே? சாயங்காலம் ஒன்னா வெளியே போனா போச்சு..”
அதேபோல மாலை இரண்டு குடும்பங்களும் வெளியே ஒன்றாக சென்றார்கள். ஆற்றின் கரையில் அணையை ஒட்டியிருந்த பூங்காவில் புல்தரையில் உருண்டபடி சத்தமாக சிரித்து குதூகலமாக அரட்டையடித்தார்கள். சுண்டல்காரனுக்கு நல்ல வியாபாரம் கொடுத்தார்கள். அனைவரும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்று இரவு உணவை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, யார் பில்லுக்கு பணம் கொடுப்பது என்று தனசேகரும் பன்னீரும் சண்டை போட்டுக்கொண்டு, கடைசியில் காசை சுண்டிப்போட்டு பூவா தலையா போட்டுப்பார்த்து தனசேகர் பணம் கொடுத்துவிட்டு நடக்க, எல்லாரும் சந்தோஷத்தோடு சிரிப்பாக வந்தார்கள். பிரபாகரின் இரண்டு பள்ளி நண்பர்களும் இவர்களோடு கலந்துக்கொள்ள, ஜெய் அவர்களுடன் எளிதாக ஒட்டிக்கொண்டான். அந்த நண்பர்கள் இவர்களோடு வீட்டுக்கு வர, நான்கு இளைஞர்களும் மொட்டை மாடியில் அரட்டை கச்சேரி போட்டு, அவர்களுக்கு அவர்களது வீடுகளில் இருந்து அழைப்பு வந்து கிளம்பும்போது மணி இரவு பத்தரையை தாண்டியிருந்தது.
ஜெய்! அடுத்த வாட்டி இங்கே வர்றப்போ எங்க வீட்டுக்கு கட்டாயம் வரணும்..” என்று உரிமையோடு சொல்லிக்கொண்டே பைக்கை உதைத்து கிளப்பியவர்களுக்கு “கட்டாயமா வர்றேன் ஜி!” என்று ஜெய்யும் பிரபாகரும் மொட்டை மாடியில் இருந்து கையசைத்து வழியனுப்பினார்கள்.
மீண்டும் இரவு, மொட்டைமாடி, தனிமை… அவர்களுக்கு அவர்களது முதலிரவு நினைவுக்கு வர, கைப்பிடி சுவற்றில் உட்கார்ந்திருந்த ஜெய் பிரபாகரை தன் கால்களுக்கிடையே இழுத்து கட்டிக்கொண்டதில் அப்படி ஒரு முரட்டு இறுக்கம். ஜெய்யின் கைகள் மட்டுமல்லாமல் அவனுடைய கால்களும் நின்றிருந்த பிரபாகரை கட்டிக்கொண்டது. பிரபாகரும் ஜெய்யை தடவி தழுவியபடி அவன் முகமெங்கும் மொச்சுமொச்சென்று முத்தம் வைத்தான். அவ்வப்போது இருவரும் மற்றவர்களது உதடுகளை கவ்வி சுவைத்தனர்.
கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
“சந்தோஷமா இருக்கியாடா?” பிரபாகர் ஜெய்யிடம் கேட்க, “உன் கூட இருக்கும்போது எங்கே இருந்தாலும் சந்தோஷமா தான் இருப்பேன்… என் செல்லம்” என்று சொல்லிவிட்டு கூடுதலாக ஒரு செல்ல உதட்டுக்கடியை பதிலோடு சேர்த்து தந்தான்.
“டேய் பசங்களா… அங்கே என்னடா பண்றீங்க? தூக்கம் வரலையா?” செல்வியில் குரல் நம் காதலர்களை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இழுத்து வந்தது.
“தோ வந்துட்டோம்மா…” கீழே இறங்கும் முன்பு பிரபாகர் கடைசி தடவையாக ஜெய்க்கு கிஸ்ஸடித்தும் மனசு நிறைவடையவே இல்லை.
அன்று இரவு பிரபாகரின் அறையில் ஜெய்க்கும் பிரபாகருக்கும் அழகான கலவி நடந்தது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 12/05/2015
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|