முன் கதை சுருக்கம்... |
---|
தனசேகருக்கு உண்மை தெரிந்துவிட்டதால் பிரபாகர் ஜெய்யின் அறையில் உறங்காமல் வெளியே தூங்குகிறான். தனசேகர் அவனிடம் அவர்கள் இருவரும் வயதுக்கு வந்த பெரியவர்கள் என்பதால் அவர்களுடைய வாழ்க்கை தன்னுடைய concern இல்லை என்று தெளிவுப்படுத்துகிறார். |
“என்னடா இது புது பழக்கமா…. அவ்வளவு பசியாடா?” அம்மா தோசைக்கல்லில் தோசை சுட்டுக்கொண்டிருக்க, அடுப்பு திட்டில் ஜெய் உட்கார்ந்துக்கொண்டு கல்லில் இருந்து நேரடியாக எடுத்து தோசையை சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பொதுவாக ஜெய் டைனிங் டேபிளில் தோசை, மிளகாய்பொடி, சட்னி என பக்காவாக அடுக்கப்பட்ட பிறகே சாப்பிட வருவான். ஆனால் இன்று என்றும் இல்லாத புது மாதிரியாக அம்மாவிடம் இழைந்துக்கொண்டிருந்தான்.
“ஏண்டா… காசு எதுவும் வேணுமா?” – அம்மா.
“போம்மா… இருக்குற காசையே செலவு பண்ண நேரமில்லையாம்… அப்படியே வேணும்னா பிரபாவோட Credit Card-ல தேய்ச்சுக்குறேன்…நான் அம்மா கூட அன்பா time spend பண்ணலாம்னு நினைச்சா நீ என்னம்மா பெத்த பையனை பத்தி இப்படி நினைச்சுட்டு இருக்கே…”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“எலி எதுக்கு அம்மணமா ஓடுது தெரியலை… சரி! உனக்கு என்ன தெரியனும்?”
சீ போம்மா…” ஜெய் பொய்க்கோபத்தோடு அடுப்பு திட்டில் இருந்து கீழே இறங்கினான்.
“அப்படியே பன்னீரோட குணம்… பாதி நேரம் எனக்கு பன்னீரோட பையன் பிரபாவா இல்லை நீயான்னு சந்தேகமா இருக்கும்…”
“என்னம்மா திடீர்னு குண்டு தூக்கிப்போடுறே? சினிமாவுல வர்ற மாதிரி செல்வி அத்தைக்கும் உனக்கும் ஒரே நேரத்துல பிரசவம் நடந்து குழந்தை மாறிப்போச்சா? ஆனா பிரபாகரோட பர்த்டே வேறயாச்சே… அப்படி இருக்க வாய்ப்பில்லையே?..” ஜெய் தாடையில் ஆள்காட்டி விரலை வைத்து விட்டத்தை பார்த்து யோசித்தான்…. குறும்பாக ஒற்றை கண்ணை மூடி வனஜாவை பார்த்து “அம்மா… நீ எசகு பிசகா எதுவும் பண்ணிடலையே?” என்று கேட்டான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
கையில் இருந்த தோசைக்கரண்டியால் அம்மா ஜெய்யின் கையில் பட்டென்று அடி வைத்தார்…
“பெத்த அம்மாவை பார்த்து கேட்குற கேள்வியா இது.. கருமம் கருமம்…” அதே தோசைக்கரண்டியால் தன் நெற்றியில் அடித்துக்கொண்டார்.
“Oh my mother India…. விளையாட்டுக்கு தானே… சும்மா… இதுக்கெல்லாமா feel பண்ணுவே?” ஜெய் அம்மாவின் தோளை சுற்றிக்கொண்டு, அவர் கன்னத்தில் முத்தம் வைத்து சமாதானப்படுத்தினான்.
“பொதுவா குழந்தை வயித்துல இருக்குறப்போ யாரை அதிகமா பார்த்து ரசிக்குறோமோ, யாரை பத்தி சந்தோஷமா நினைக்கொறோமோ அவங்களை மாதிரியே புள்ளை பொறக்கும்னு சொல்லுவாங்க…. அப்படி பார்த்தா நீ பன்னீர் மாமா மாதிரி இருக்குறதல ஆச்சரியமே இல்லை…”
“அப்படி என்னம்மா மாமா உன்னை impress பண்ணுனாறு?”
“நான் புள்ளையாண்ட்டுட்டு இருக்கேன்னு தெரிஞ்சாப்புறம், ஆரம்பத்துல குழந்தை வயித்துல நிக்கிறவரைக்கும் அலட்டிக்கக்கூடாதுன்னு உங்க அப்பா என்னை கிராமத்துலேயே விட்டுட்டு வேலைக்கு போயிட்டாரு… வெள்ளிக்கிழமை ராத்திரி பஸ் பிடிச்சு சனிக்கிழமை வருவார்… ஞாயிற்றுக்கிழமை ராத்திரி பஸ் பிடிச்சு திங்கட்கிழமை வேலைக்கு போயிடுவாரு… ஆனா வாரத்துல அஞ்சு நாளும் என்னை பார்த்துக்கனுமே… உங்க பாட்டிக்கும் எனக்கும் பெரிய ஒட்டுதல் இல்லை… வழக்கமான மாமியார் மருமகள் இடைவெளி தான்…. அப்போ எல்லாம் உங்க பன்னீர் மாமா தான் என்னை அப்படி பார்த்துக்கிட்டார். அவர் உங்க அப்பாவோட தங்கச்சி புருஷன்ங்குறதால உறவுப்படி அவர் புருஷன் வீட்டு சொந்தம்னாலும், என்னை அக்கா அக்கான்னு தாங்குனதுல என்னோட கூடப்பொறக்காத தம்பி மாதிரி… எனக்கு சொந்தமா ஒரு தம்பி இருந்திருந்தா கூட இப்படி கவனிச்சிட்டுருப்பானான்னு சொல்லமுடியாது…”
அடுத்த தோசையை எடுத்து ஜெய்யின் தட்டில் போட்டுவிட்டு, சூடான தோசைக்கல்லில் புது தோசை ஊற்றியவாறு தொடர்ந்தார்.. “பன்னீர் என்னை பார்த்துக்கிட்டதுல கால் பங்கு கூட உங்க அப்பா என்னை கவனிச்சுக்கிட்டதுல்ல… ஆனா அவரையும் குறை சொல்லக்கூடாது… வேலை வேலைன்னு அலைஞ்சிட்டு இருந்தாரு… அதனால தான் எனக்கு உன்னோட பன்னீர் மாமா மேலே அப்படி ஒரு இஷ்டம். செல்வியும் என்னை நாத்தனார் மாதிரி குத்தம் குறை எதுவும் சொல்லாம என்னை அவ அக்கா மாதிரியே அன்பா நடத்துனா… அதனால தான் சொன்னேன் நான் பிரசவ சமயத்துல பன்னீரை ரொம்ப நினைச்சுக்கிட்டதால உனக்கு அவரோட குணம் நிறைய வந்திருக்கு போல..” அம்மாவின் கண்களில் நெகிழ்ச்சியில் சில துளிகள் திரண்டிருப்பது போல ஜெய்க்கு சந்தேகம் வந்தது.
“சாரி மதர்… அழாதே” என்று அம்மாவின் கண்ணை துடைக்க, “சீ போடா… கல்லுல இருந்து எண்ணெய் அடிச்சிருக்கும்” என்று நாசூக்காக ஆனந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்.
அப்போ பிரபாவை நம்ம கூடவே கடைசி வரைக்கும் வச்சுக்கலாமே…” சிறிய இடைவெளி விட்டு “மருமகனா…” ஜெய் அழுத்திச்சொன்னான்.
“அவன் எப்பவுமே என் மருமகன் தான்…. அவனை மாதிரி தங்கமான புள்ள கூட இருக்குன்னா எனக்கு என்ன கசக்கவா போகுது? ஆனா அவனோட அப்பா அம்மாவுக்கும் அவனை பத்தின கனவுங்க நிறையா இருக்கும் இல்லை… அதுவும் ஒத்தைப்பையன் வேற.. அவனோட குழந்தையை கொஞ்சனும்.. செல்வி ஒரு மாமியாரா அவன் பொண்டாட்டியோட சண்டை போடனும்… இந்த மாதிரி… நம்ம சுயநலத்துக்காக நாம அவங்களோட ஆசையில மண்ணள்ளி போடுறது பாவம் இல்லையா? வேணும்னா ஒன்னு பண்ணலாம்… ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்துல வர்ற மாதிரி நீயும் பிரபாகரும் பக்கத்துல பக்கத்துல உங்க வீடுங்களை கட்டுங்க… காம்பவுண்டே இல்லாம… ரெண்டு குடும்பங்களும் அடுத்தடுத்த வீடுங்கள்ல சந்தோஷமா இருக்கலாம்…. நானும் செல்வியும் உன்னோட பசங்களையும், பிரபாவோட பசங்களையும் வச்சு ஒரு creche-ஏ போட்டுடுறோம்… வாழ்க்கையிலே உனக்கு எதுனாச்சும் சாதிக்கனும்னு தோணுச்சுன்னா இதை மட்டும் செய்” என்றார்.
ஜெய் தன் உள்ளத்து கேள்விகளுக்கு பதில் கிடைத்த வகையில் குழப்பமாக வெளியே போனான். அவனுக்கும் பிரபாவுக்கும் இடையே உள்ள உறவை அம்மாவால் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது என்பதை விட, அவருக்கு அவன் பிரபாகரை ‘மருமகன்’ என்று சொன்னது புரியாததால், அவரால் இந்த உறவை புரிந்துக்கொள்வது முடியுமா முடியாதா என்ற சந்தேகமும் இருப்பதை புரியவைத்தது. அப்பா சொன்னது போல தானும் பிரபாகரும் Gay couple-ஆக வெளிநாட்டுக்கு ‘தப்பித்து’ப்போய்விட்டால் தாங்கள் மட்டும் தான் சந்தோஷமாக இருப்போம்.. ஆனால் அம்மாக்களை துன்பத்து நரகத்தில் தள்ளிவிட்டதாக ஆகிவிடும்.. அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை பற்றிய கனவுகள் இருக்கிறது… அதிலும் தாங்கள் இருவருமே ஒற்றை மகனாக போய்விட்டதால் அவர்களுடைய கனவுகளும் ஆசைகளும் நஷ்டப்பட்டும் என்பது ஜெய்யின் உள்ளத்துக்கு உரைக்க ஆரம்பித்தது.
ஆகையால் பிரபாகர் மீது உள்ள தன்னுடைய ஆழமான காதலை புதிதாக ஒரு பெண்ணிடம் பங்கிட்டே ஆகவேண்டும். அதே சமயத்தில் அவளுக்கும் தனக்கு வரும் கணவனிடமும், கல்யாண வாழ்க்கையிலும் எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அவளுக்கும் ஏமாற்றங்கள் கொடுக்கக்கூடாது என்றால் பிரபாகரையும் வரப்போகும் பெண்ணையும் சரிசமமாக காதலிக்கவேண்டும். அப்பா சொன்னது போல தன் வாழ்க்கையின் பகுதிகளை இருவருக்கும் சரியாக பிரித்து தரவேண்டும். அதற்கு முதல் படி தன்னுடைய வருங்கால மனைவியை பிரபாகருக்கும், அவளுக்கு பிரபாகரையும் பிடிக்கவேண்டும். அதனால் ஜெய் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வேலையை பிரபாகரிடம் முழுசாக ஒப்படைத்துவிட தீர்மானித்தான்.
அதற்கு முன்பு அப்பாவை அவருடைய உள்ளங்கவர்ந்த நண்பரிடம் மீண்டும் சேர்க்கவேண்டும் என்று ஜெய்யின் மனது பரபரத்தது. அப்பா சொன்ன கதையை மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தான்… “உங்க அம்மாவை பிரசவத்துக்காக ஊர்ல விட்டுட்டு வந்தப்போ அந்த நாலு மாசமும் அவளை “அக்கா அக்கான்னு” உள்ளங்கையிலே வச்சு தாங்கினான். நீ பொறந்தப்போ அவன் ஊருக்கே விருந்து வச்சான்.“… அம்மா சொன்னதையும் அப்பா சொன்ன கதையில் வந்த கதாபாத்திரத்தையும் பொருத்திப்பார்த்தால் அது பன்னீர் மாமாவை உருவகப்படுத்துகிறது. ஆனால் அது சரியா தவறா என்று தெரியவில்லை. ஒருவேளை அது பன்னீர் மாமாவாக இருந்தால்..? மனத்திரையில் தனசேகரும் பன்னீரும் கட்டிப்பிடித்து கிஸ்ஸடித்துக்கொள்ள் ஜெய்க்கு ‘உவ்வேக்’ என்று குமட்டிக்கொண்டு வந்தது. ஏனோ காரணமே இல்லாமல் பன்னீர் மீது ஒரு வெறுப்பு வந்தது.
“என்னடா குட்டி ஏதோ யோசனையிலே இருக்கே?” ஜெய்யின் தோளை சுற்றி கை போட்டவாறே அவனை ஒட்டிக்கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தான் பிரபாகர். ஜெய் பிரபாகரை பார்த்தான். இவன் அந்த பன்னீர் மாமா பையன் தானே என்று தோன்றவும், அவனுக்கு பிரபாகரின் தீண்டல் லேசான அருவெறுப்பை கொடுத்தது.
“ஒன்னும் இல்லடா பிரபா… ரிமோட் எங்கே? ” என்று சொல்லிக்கொண்டு டி.வி ரிமோட்டை எடுப்பதாக லாவகமாக பிரபாகரின் கையை விலக்கிவிட்டு எழுந்து சென்று டி.வி-யை ஆன் செய்துவிட்டு இயல்பாக உட்காருவதை போல வேறு சோஃபாவில் உட்கார்ந்துக்கொண்டான். பிரபாகர் ஜெய் தனிமையை தேடுவதை உணர்ந்ததால் இவன் அருகில் வரவில்லை.
மாலை வானில் சூரியன் ஓய்வெடுக்க ஆரம்பிக்க, வெயிலின் உக்கிரம் தாழ்ந்து இளஞ்சூட்டில் இதமாக ஜெய் மொட்டைமாடியின் கைப்பிடி சுவற்றில் இரு கைகளையும் ஊன்றி உட்கார்ந்திருந்தான். அவன் மனதில் இது தான் என்று காரணமே இல்லாமல் ஏதோ ஒரு வெறுமை ஆக்கிரமித்திருந்தது. ஏனோ அவனுக்கு வாய்விட்டு அழவேண்டும் போல தோன்றியது. ஆனால் கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை.
பக்கத்தில் நிழலாடியதும், அவன் எதிர்பார்த்தது போலவே பிரபாகர் தன் பக்கத்தில் வந்து நிற்பதையும் ஜெய்யால் உணரமுடிந்தது. ஆனால் ஜெய்யின் பார்வை மாடியின் தரையில் பதிக்கப்பட்டிருந்த சிவந்த ஓடுகளில் நிலைகுத்தி இருந்தது.
“குட்டி… என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி என்னவோ மாதிரி இருக்கே?”
“எனக்கு அப்பாவோட ஆளு யாருன்னு தெரிஞ்சுக்கனும் போல இருக்கு…”
பிரபாகர் அவன் பக்கத்தில் நெருங்கிவரவில்லை… ஆனால் குரல் மட்டும் வாஞ்சையாக ஒலித்தது “குட்டி… அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. அவரா வெளியே சொல்ற வரைக்கும் நாம அதைப்பத்தி ஆராய்ச்சி பண்றது அநாகரீகம்னு தோணுது.. அவர் நம்ம கிட்டே அவ்வளவு சொன்னதே அவர் மனசுல இருந்த பாரத்துல பெரும் பங்கை இறக்கி வச்ச திருப்தியில இருப்பார்… ஆனா நீ அதால இப்படி disturb ஆயிட்டேன்னு தெரிஞ்சா அது அவருக்கு இன்னும் அழுத்தத்தை குடுக்கும்… பாவம் அந்த மனுஷன்… இத்தனை வருஷமா யார் கிட்டேயும் சொல்லிக்க முடியாம தன்னோட மனசுக்குள்ளேயே வச்சு புழுங்கியிருந்திருக்கார்.. அவரை மேலும் கஷ்டப்படுத்தனுமா?”
ஜெய் பிரபாகரின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தான். அந்த முகத்தில் ஒரு அமைதி குடிகொண்டிருந்தது.
“அப்பா சொன்ன அந்த ஸ்பெஷல் ஃப்ரெண்ட் பன்னீர் மாமாவா இருந்தா… அதாவது உங்க அப்பாவா இருக்கும்னு தெரிஞ்சா உனக்கு எப்படி இருக்கும்?” ஜெய் பிரபாகரின் முகத்தில் அதிர்ச்சி அல்லது ஒரு அசௌகரியத்தை எதிர்பார்த்து வெளிப்படாததில் ஏமாற்றம் அடைந்தான்.
“குட்டி… ஒன்னு சொல்லட்டுமா? மாமா சொன்னதும் எனக்கும் அந்த சந்தேகம் வந்துச்சு… ஏன்னா என்னோட சின்ன வயசுல இருந்தே எங்கப்பா தினமும் காலையிலே ஆறு மணிக்கு எல்லாம் அந்த share market page-ஐ வச்சு பார்த்துட்டும், சேடிலைட் டிவி வந்தப்புறம் காலையிலேயே ABNMoney channel-ஐ போட்டுக்கிட்டும் ஏதோ குறிச்சுக்கிட்டே இருப்பாரு… அவரோட ஃபோன்ல புது பேண்ட் வாங்குனா ஃபோட்டோ எடுத்து தனசேகர் மாமாவுக்கு WhatsApp-ல அனுப்பியிருக்குறதையும் பார்த்திருக்கேன்… எனக்கு தெரிஞ்சு அவர் வேற யார் கிட்டேயும் அப்படி ஷேர் பண்ணி பார்த்ததில்லை…. புதுசா பேனா வாங்குனா அவர் எழுதி பாக்குறது “தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்” – ஒருவேளை அந்த தனம் நம்ம தனசேகர் மாமாவா இருக்குமோன்னு இப்போ தோணுது.. அன்னைக்கு மாமா சொன்னதை எல்லாம் வச்சு correlate பண்ணி பார்த்தா எனக்கும் அவரோட ஸ்பெஷல் ஃப்ரெண்டு என்னோட அப்பாவான்னு சந்தேகம் பலமா இருக்கு…”
பிரபாகர் ஜெய்யின் முகத்தை சலனமே இல்லாமல் பார்த்து தொடர்ந்தான்.. “Hypothetically அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நட்பை தாண்டி ஒரு நெருக்கம் இருக்குன்னே வச்சுக்குவோம். அது அவங்க ரெண்டு பேரோட அந்தரங்கம்… அவங்களோட precious personal space.. They are protecting it fiercely. அதுக்குள்ள எனக்கு தெரிஞ்சு வேற யாருக்கும் அனுமதியில்லை… அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாப்புல அரை மணி நேரம் தொடர்ந்து பேசி நாம யாராச்சும் பார்த்திருக்கோமா? ஆனா அவங்க மனசும் பார்வையும் அவங்க வாழ்க்கையோட எல்லா சின்ன சின்ன விஷயங்களையும் மத்தவங்க கவனத்துல விழாத வகையிலே பகிர்ந்துக்கிட்டு இருந்திருக்கு.. இனிமேல் அவங்களா சொல்ற வரைக்கும் நான் ஏன் அதை நினைச்சு மனசை போட்டு குழப்பிக்கனும்னு தோணுச்சு… நம்மளோட யூகம் சரியா இருக்கலாம்… இல்லாமலும் போகலாம்… நான் சந்தேகப்பட்டது சரியாவே இருந்தாலும் அவங்க அன்பை தப்பா நினைச்சா நான் நம்மளோட உறவையும் கொச்சைப்படுத்திக்கிற மாதிரின்னு தோணுச்சு…. நாமளும் அவங்களை மாதிரி தானே? அவங்களை தப்பா நினைச்சா நாமளும் கேவலம் தானே?”
“புரியுது பிரபா… இருந்தாலும்…” ஜெய்யின் குரல் கம்மியது.
“குட்டி… நம்ம அப்பா அம்மா செக்ஸ் வச்சுக்குட்டதால தான் நாம பொறந்தோங்குறது நம்ம அறிவுக்கு தெரியும்… ஆனா நம்ம மனசு அவங்களை அந்த கோலத்துல நினைச்சுப்பார்த்தா அருவெறுப்பு தான் வரும்… ஆனா அவங்க எந்த வயசுலேயும் செக்ஸ் வச்சுக்குறது அவங்க உரிமை.. அவங்களோட அன்போட வெளிப்பாடுங்குறதை ஏத்துக்கிட்டா நாமளே அவங்களுக்கு இடமும் நெருக்கமும் ஏற்படுத்திக்குடுப்போம்… அதே லாஜிக் தான் இங்கேயும்… ”
“ஆனா பிரபா… பன்னீர் மாமா அப்பாவோட சொந்த தங்கச்சி புருஷன்… அவர் கூடப்போய்… சே!”
“ஜெய்ப்பா…. தனசேகர் மாமாவா வாயை திறந்து தன்னோட ஸ்பெஷல் ஃப்ரெண்டு இவர் தான்னு கை காட்டட்டும்… அது வரைக்கும் நம்ம கற்பனைகளை எல்லை மீறாம பார்த்துக்குவோமே? சரி! அவர் அப்படியே என்னோட அப்பாவை கைகாட்டினாலும் என்ன? அன்பு என்ன உறவு முறை பார்த்துட்டா வரும்… அதுவும் இல்லாம ஒருத்தரை ஒருத்தர் என்ன plan பண்ணியா ஒருத்தரை ஒருத்தர் உஷார் பண்ணுனாங்க? தானா நடந்துடுச்சு… சரி! நாம அவங்க ரெண்டு பேரும் நெருக்கம்னே முடிவு பண்ணிக்குவோமே… புராணங்கள்ல சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் என்ன உறவு? விஷ்ணுவோட தங்கச்சி பார்வதியோட புருஷன் தான் சிவன்.. ஆனா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஐய்யப்பனை பெத்து தரலையா? கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என்ன உறவு? அர்ஜுனன் கிருஷ்ணனோட தங்கச்சி சுபத்ராவோட புருஷன். அவங்க நெருக்கத்தை நாம நட்புக்கு இலக்கணமா சொல்றது இல்லையா? நான் திரும்பவும் சொல்றேன்.. பன்னீரும் தனசேகரும் ரெண்டு தனிப்பட்ட மனுஷங்கன்னு வச்சுப்பாரு.. உனக்கு அவங்க உறவு தப்பாவே தெரியாது… ஆனா நம்ம அப்பாக்கள்னு பார்க்க ஆரம்பிச்சா தான் பிரச்சனையே.. நான் சொல்றது இன்னும் பச்சையாவே இருக்கும்… தனசேகர் மாமா என்ன threesome-ஆ போட்டார்? ஏன் அவரை போய் தப்பா நினைக்கிறே.. ”
“நாம ரெண்டு பேரும் முறைப்பசங்க உறவுக்குள்ள வந்துட்டதால நம்ம உடலுறவு தப்பில்லை… அது தானே உன் லாஜிக்? அப்படி பார்த்தா ஒரு பழமொழி இருக்கே… “அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி… தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டின்னு… அதையே gender reversal பண்ணிப்பாரு… தங்கச்சி புருஷன் தன் புருஷன்னு வரும்… அப்ப சரி தானே?” பிரபாகர் நமுட்டு சிரிப்பை உதிர்த்தான்.
ஜெய் எதுவும் பேசவில்லை…
“நாம திரும்ப திரும்ப மாமா சொன்ன அதே தப்பை தான் பண்ணிட்டு இருக்கோம்… மாமா ஏன் அவர் கூட நெருங்குனார்னு சொன்னார்… ஒரே frequency, சிந்தனைகள், ரசனை, பழக்கவழக்கங்கள்னு மனசு சம்பந்தப்பட்ட qualities தான் சொன்னார்.. நாம அவங்களுக்குள்ளே இருக்குற அன்பை பார்க்காம சில நிமிஷங்கள் மட்டும் நடந்த அந்த உடலுறவை வச்சு அவங்களை இத்தனை வருஷங்களுக்கு அப்புறமும் அவங்க ரெண்டுபேரையும் judge பண்றோம்… இப்போ மாமா தான் ஏன் அந்த ரகசியத்தை சொன்னோம்னு வருத்தப்படப்போறார்… தனசேகர் மாமா வனஜா அத்தைக்கு ஒரு நல்ல புருஷனாவும், உனக்கு நல்ல அப்பாவாவும் தானே இருக்கார். எப்போவாச்சும் தன்னோட கடமையிலே இருந்து தவறினாரா? இந்த விஷயம் தெரியாதவரைக்கும் உனக்கு அவர் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்துச்சு… ஆனா அந்த அபிப்பிராயம் இப்போ மாறிடுச்சு நினைச்சினா, அது ஏன் மாறுச்சுன்னு ஆராய்ச்சி பண்ணிப்பாரு… அது கடைசியிலே மாமா சொன்ன அதே பூட்டின கதவுக்கு பின்னாடி என்ன நடந்திருக்குமோன்னு ஏடாகூடமா கற்பனை பண்ணிக்கிறதுல தான் வந்து முடியும்” பிரபாகர் ஜெய் தனசேகர் மீது உருவாக்கியிருந்த எதிர்மறையான பிம்பத்தை தகர்க்க முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.
ஜெய் தரையை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான்.
ஜெய்… வெளியே இருந்து பாக்குறவங்களுக்கு நமக்கு நடுவுல இருக்குற physical affair கூட முறையில்லாத “incestuous relationship” தானே? அதுக்காக நீயும் நம்ம relationship அசிங்கம்னு ஒத்துக்குவியா? அப்படி தோணுச்சுன்னா இப்பவே சொல்லிடு… நான் அப்படி ஒரு உறவுலே இருந்து என்னையும் கறைப்படுத்தி அசிங்கப்படுத்திக்க விரும்பலை… நான் ஒதுங்கிக்கிறேன்.” பிரபாகர் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.
ஜெய் பிரபாகரை நிமிர்ந்து பார்த்தான்.
“ஜெய்ப்பா… நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேலே மத்தவங்களுக்கு இருக்குற காதல் எப்படி மூணாம் மனுஷங்களுக்கு புரியவேண்டிய அவசியம் இல்லையோ அப்படி தான் தனசேகர் மாமாவுக்கும்… நீ தனியா உட்கார்ந்திருந்தா இப்படி தான் ஏதாச்சும் கண்டதையும் யோசிப்பே.. வா கீழே போகலாம்… Gym-க்கு போகலாமா? மனசுல இருக்குற frustrations-ஐ எல்லாம் driving force ஆக்கி, நல்ல வெயிட் தூக்கி இந்த negative thoughts எல்லாத்தையும் போட்டு நசுக்கலாம்..”
ஜெய் சில நொடி மௌனத்துக்கு பிறகு பிரபாகரிடம் கையை நீட்ட, பிரபாகர் முன்னே வந்து ஜெய்யின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக்கொண்டு ஜெய்யை நெருங்கி நின்றான்.
ஜெய் பிரபாகரின் கோர்த்த கையை இழுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு பிரபாகரின் கண்களை ஊடுருவி பார்த்தான். “பிரபா… அன்னைக்கு நீ கேட்டதை இன்னைக்கு நான் கேட்குறேன்.. நீ எப்பவும் என் கூடவே இருப்பியா? என்னை விட்டுட்டு போக மாட்டியே? ஏன் கேட்குறேன்னா… இப்பவெல்லாம் நீ என்னை விட்டு போறதை பொசுக்கு பொசுக்குன்னு ரொம்ப ஈஸியா சொல்றே.. அது மட்டும் இல்லாம ஒரு தடவை செஞ்சும் காமிச்சிட்டே… ஆனா எனக்கு மனசுக்கு தான் எப்போ என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு இருக்கு” ஜெய்யின் கண்களில் வியர்வை துளிகள் துளிர்த்திருந்தது.
பிரபாகர் போலியான கோபத்தோடு “குட்டி… இப்படி மொக்கை போட்டுட்டு இருந்தா உனக்கு நாலு உதை தான் போடுவேன்… ஆனா உன்னை விட்டுட்டெல்லாம் ஓடிப்போகமாட்டேன் ” பிரபாகர் ஜெய்யை இழுத்து கட்டிக்கொண்டான்.
ஜெய் பரவசத்தோடு பிரபாகரின் முகமெங்கும் முத்தங்களால் நிரப்பிவிட்டு அவன் உதட்டை கவ்வி ஆழமாக கிஸ்ஸடித்தபோது அது இதுவரை இல்லாத புது உணர்ச்சியாக இருந்தது. இருவருக்குமே அந்த முத்தத்தை பிரிக்கத் தோன்றவில்லை. மாலை sunset பின்னணியில் இருவரும் கிஸ்ஸடித்துக்கொண்டது தென்றலுக்கு கூட பிடித்திருந்தது போல… மெதுவாக அவர்களை வருடி முத்தமிட்டுவிட்டு தொந்தரவு செய்யாமல் தாண்டிச்சென்றது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 12/02/2017
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|