Home தொடர்கதைகள் உ.க.உறவே 10. இடமாற்றம்

உ.க.உறவே 10. இடமாற்றம்

9 minutes read
A+A-
Reset
இந்த உயிரில் கலந்த உறவே தொடரின் 10-வது அத்தியாயம், காதல்ரசிகன்-ஆல் தொடர்கதைகள் என்ற வகையினத்தில் கீழ் 2016-06-22 04:04 அன்று எழுதப்பட்டது.

முன் கதை சுருக்கம்...
கிராமத்தில் ஜெய் மற்றும் பிரபாகரின் குடும்பங்கள் இனிமையான நேரம் செலவழித்த பிறகு கிளம்பும் நேரம் வருகிறது. பிரபாகரை வீட்டுக்கு வந்து போகுமாறு அவன் அம்மா அழைக்க, பிரபாகர் ஜெய்யை விட்டு பிரிய மனசில்லாமல் மறுக்கிறான். அது மட்டுமல்லாமல் தன் பெற்றோர்களை தன்னுடன் நகரத்துக்கு மாற்றலாகி வர சொல்ல, பிரபாகரின் அம்மா ஜெய்யின் வீட்டில் அவனை விட்டது தப்பாக போய்விட்டது என்று திட்டுகிறார். கடைசியில் ஜெய்யின் வீட்டினர் அனைவரும் பிரபாகர் வீட்டுக்கு செல்ல, அங்கே ஜெய்ய்யும் பிரபாகரும் பிரியாமல் ஜாலி செய்கிறார்கள்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

நீங்கள் LGBT மனிதர்களை பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் / webseries பார்ப்பீர்களா?

View Results

Loading ... Loading ...

மாதங்கள் ஒடின. இதுவே சினிமா அல்லது தொலைகாட்சி தொடராக இருந்தால் வேகமாக கேலண்டர் கிழிக்கப்படுவதையோ அல்லது மரம் பூத்துக்குலுங்குவதையோ காட்டியிருக்கலாம் ஆனால் அது போன்ற GIF படம் கிடைக்காத காரணத்தால் ‘மாதங்கள் ஓடின’ என்று எழுதிவிடலாம். ஜெய்யும் பிரபாகரும் உயிரோடு உயிராக கலந்துவிட்டிருந்தனர். ஜெய்யை மீண்டும் மீட்டெடுத்தது பிரபாகர் என்று சொன்னால் அது மிகையல்ல. ஓரளவுக்கு கை சரியானதும் தினமும் ஜெய்யை ஆஃபீஸில் விட்டுவிட்டு மாலை அவனை பிக்கப் செய்துக்கொண்டு ஜிம்முக்கு அழைத்துப்போய், ஜெய்யை குறைவான வெயிட்கள் வைத்து மீண்டும் உடற்பயிற்சியை முதலில் இருந்து ஆரம்பிக்க வைத்து, அவனுக்கு கடமையாக ஸ்பாட்டிங் செய்து, ஜெய்யை பழையபடி நாட்டுக்கட்டையாக உருமாற்ற 5-6 பிரபாகருக்கு மாதங்கள் பிடித்தன. தனசேகர் கண்டிப்பாக சொல்லிவிட்டதால் பிரபாகருக்கு அவன் அம்மா செல்வி வகையில் எந்த அழுத்தமும் இல்லை. தனசேகர் பிரபாகரையும் ஜெய்யையும் மாதத்துக்கு ஒரு முறை பிரபாகரின் ஊருக்கு கட்டாயம் சென்றுவர வைத்தார். அதனால் எல்லாரும் ஹேப்பி.

மாலை ஜெய் பிரபாகருடைய ஆஃபீஸுக்கு சென்று அவனை வீட்டுக்கு அழைத்து வர சென்றான். ஐடி பார்க் கேட்டின் அருகே இருந்த டீ கடையின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, அதில் ஸ்டைலாக சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தான். அவன் போட்டிருந்த கூலிங் க்ளாஸும், பிரித்துவிட்ட இரண்டு மேல்சட்டை பட்டன்களும், அவனுடைய சதைப்பற்றான தொடையை பிடித்திருந்த பேண்டும் ஜெய்யை கவர்ச்சி கண்ணனாக ஆக்கியிருந்தது. ஆஃபீஸிலிருந்து வெளியே வந்த பிரபாகர் ஜெய்யை பார்த்ததும் சினேகமாக கையை ஆட்டினான். சாலையை கவனமாக கடந்துவிட்டு பிரபாகர் பக்கத்தில் வர, ஜெய் வண்டியில் தாவி அமர்ந்தான். பிரபாகர் அவன் பின்னால் உட்கார்ந்தான்.

Random கதைகள்

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Jai in sunglass

வழக்கமாக ஜெய்யை பார்த்ததும் பிரபாகரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாகும். ஆனால் அன்று ஏதோ மிஸ்ஸிங். ஜெய்க்கு அதை கவனிக்கமுடிந்தது.

“என்ன பிரபா! இன்னைக்கு ஏதோ மூட் அவுட்ல இருக்கே? ஆஃபீஸ்ல ஏதாச்சும் பிரச்சனையா?”

“ஒன்னும் இல்லைடா…”

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“இல்லை எதோ இருக்கு… இல்லைன்னா நீ இப்படி அமைதியா இருக்கமாட்டியே?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

ரொம்ப கஷ்டப்பட்டு உஸார் பண்ணுன ஆண் நண்பர் கூட வெறியோட படுக்க போறீங்க... அவர் உதட்டு முத்தம் கூடாது, வாய் போடனும்னு அடம் பிடிக்கிறார்... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

“இல்லைன்னு சொன்னா நம்புடா… ஏதாச்சும் இருந்தா உன் கிட்டே சொல்லமாட்டேனா?”

ஜெய் வலது கையால் வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக்கொண்டு, இடது கையை தன் இடுப்பை சுற்றிக்கொண்டிருந்த பிரபாகரின் வலது கையோடு கோர்த்துக்கொண்டு “நான் நம்பலை… ஆனாலும் உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு..” என்று அப்போதைக்கு விஷயத்தை துண்டித்தான். பிரபாகர் ஜெய்யின் தோளில் தன் தாடையை இருத்திக்கொண்டு அமைதியாக வந்தான்.

பிரபாகரின் அமைதியை ஜெய்யின் அம்மாவும் கவனிக்க தவறவில்லை. இருந்தாலும் பிரபாகருக்கு தேவைப்படும் personal space-ஐ கொடுத்து அவனை வாட்டும் விஷயத்தை அவனாக சொல்லும் வரைக்கும், அது பற்றி யாரும் எதுவும் கேட்கவில்லை.

மாலை ஜெய் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போதும் பிரபாகர் அறையிலிருந்து வெளியே வரவில்லை. பொதுவாக இந்நேரத்தில் இருவருமே டீ/காஃபி குடித்துக்கொண்டு கமெண்ட் அடித்துக்கொண்டு டிவி பார்ப்பது வழக்கம். ஆனால் அன்று வீடு அமைதியாக இருந்தது.

“என்ன பண்றான் இவன்.. இன்னைக்கு கொஞ்சம் மூடியா இருக்கானே” என்று தனக்குள் முனுமுனுத்துக்கொண்டு ஜெய் டிவி ரிமோட்டை ஹால் சோஃபாவில் வீசியெறிந்துவிட்டு தன் அறைக்குள் போனபோது பிரபாகர் ஸ்டடி டேபிளில் உட்கார்ந்து, வாசலுக்கு முதுகு காட்டியபடி லேப்டாப்பில் என்னவோ செய்துக்கொண்டிருந்தான்.

ஜெய் இயல்பாக நடப்பது போல கதவை காலால் சாத்தியபடி உள்ளே வந்து “என்னடா செல்லம் பண்றே…” என்று சொன்னபடி சேரில் உட்கார்ந்திருந்த பிரபாகரை பின்பக்கமாக வந்து கட்டிப்பிடித்தான். பிரபாகரின் கன்னத்தில் முத்தமிட்டபடி அவன் லேப்டாப்பில் என்ன செய்துக்கொண்டிருக்கிறான் என்று பார்த்தபோது அவன் Naukri.com, monster.com ஆகிய jobsite-களை திறந்து வைத்திருந்தான்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

Blog Image

NSFW Image

“என்ன பிரபா திடீர்னு jobsites-ஐ எல்லாம் open பண்ணி வச்சிருக்கே? என்ன பண்றே?”

“என்னோட profile-ஐ update பண்ணிட்டு இருக்கேன்டா குட்டி…”

ஜெய் சீரியஸானான். “அதுக்கு இப்போ அவசியம் என்ன? ஆஃபீஸ்ல எதுவும் பிரச்சனையா? நீ சாயங்காலத்துல இருந்து சரியே இல்லை… என்ன நடந்துச்சுன்னு இப்போவாச்சும் சொல்லேன்” என்று சொன்னபடி பிரபாகரின் சேரை தன் பக்கம் திருப்பினான்.

“வேற வேலை தேட ஆரம்பிக்கனும்… அப்படி ஒரு நிலைமை.. அது எங்கேயா இருந்தாலும் பரவாயில்லை”

“என்ன நடக்குதுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லமாட்டியா? சொல்றதுல உனக்கு என்ன தான் பிரச்சனை? என்னை விட்டுட்டு போறியா?” ஜெய்யின் அணைப்பில் பதற்றம் தெரிந்தது.

பிரபாகர் மௌனமாக இருந்தான்.

“ப்ளீஸ் பிரபா… என்னை கொல்லாதே… இப்போ தான் வாழ்க்கை அமைதியா போயிட்டு இருக்குன்னு நினைச்சிட்டு இருக்கேன்… நீ திடீர்னு அதை கலைக்காதே.. என்ன விஷயம் சொல்லு..” கிட்டத்தட்ட அழாத குறையாக கெஞ்சினான் ஜெய்.

“எனக்கு வருஷாந்திர அப்ரைசல்ல ‘D’ போட்டுட்டான் என் மேனேஜர் நாய்…. அதனால எனக்கு decrements / salary cut, திரும்பவும் ஒரு வருஷம் probation period extension-ன்னு ஆரம்பிச்ச இடத்துலே இருந்து ரெண்டு படி கீழே வந்து நிக்குறேன்” பிரபாகரின் குரலில் இயலாமை தொனித்தது.

ஜெய் பிரபாகரின் பக்கத்தில் உட்கார்ந்து அவனை தன் பக்கம் திருப்பி “என்ன பிரச்சனை வேலையிலே? எனக்கு தெரிஞ்சு performance issues எதுவும் இருந்திருக்காது.. நீ technically பயங்கர strong… மேனேஜர் கூட என்ன ஈகோ மோதல்?” என்று கேட்டான்.

“என்னவோ எனக்கும் அவனுக்கு பெருசா ஒட்டவே இல்லை…”

“அப்படின்னா அவன் அட்லீஸ்டு neutral-லா ‘C’ இல்லை குடுத்திருக்கனும்… ஏன் ‘D’?”…. திடீரென்று ஜெய்க்கு பொறி தட்டியது.. “நீ எனக்காக Work from home போட்டதால உனக்கும் மேனெஜருக்கு எதுவும் பிரச்சனையா?”

பிரபாகர் பதில் சொல்லவில்லை…

ஜெய் தன் நெற்றியில் கையை வைத்துக்கொண்டு பதற்றமாக சொன்னான் “இப்போ நினைவுக்கு வருது… அம்மா நீ உன் மேனேஜர் முதல்ல Work from home குடுக்க மாட்டேன்னு மறுத்தப்போ நீ அவன் கிட்டே ஃபோன்ல கத்துனேன்னு சொன்னாங்க… அவன் அப்போதைக்கு வேலை நின்னுடக்கூடாதுன்னு உனக்கு பர்மிஷன் குடுக்குற மாதிரி குடுத்துட்டு எதிர்த்து பேசுனதுக்காக இப்போ அப்ரைசல்ல கை வச்சுட்டானா?”

பிரபாகர் முனகலாக “ம்ம்..” என்றான்.

“ஷிட்… என்னால உனக்கு இப்போ பிரச்சனை… நான் உனக்கு நல்லது பண்ணலைன்னாலும் உன்னோட career-ல விளையாடிட்டேன்..” ஜெய்யின் குரலில் பதற்றம் அதிகரிக்க, பிரபாகர் “டேய் குட்டி… அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் நடக்குறபடி தான் நடக்கும்… அன்னைக்கு ஜோசியம் பார்த்த சித்தரும் இதை தானே சொன்னார்… நீ எதுக்கு பழியை உன் மேலே போட்டுக்குறே..” இப்போது சமாதானப்படுத்துவது பிரபாகரின் முறையானது.

ஜெய்யும் பிரபாகரும் சேர்ந்து பிரபாகரின் online profile-களை update செய்துவிட்டு, பிரபாகரின் word format CV-யும் புதிதாக தயார் செய்தார்கள். எல்லாம் முடித்துவிட்டு படுக்கப்போகும்போது மணி பதினொன்றை தொட்டிருந்தது.

அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டு பிரபாகரின் ரோமம் நிறைந்த மார்பில் ஜெய் தலைவைத்து பிரபாகருடைய கைகளை கோர்த்துக்கொண்டு, படுத்திருந்தான். பிரபாகரின் மறுகை ஜெய்யின் தலைமுடியை கோதிக்கொண்டிருந்தது. பொதுவாக படுத்த சில நிமிடங்களில் இவர்கள் உடம்புகளோ இல்லை இதழ்களோ காதல் மொழிகளும் முத்தங்களையும் பேசிக்கொண்டிருக்கும் ஆனால் அன்று கனத்த மௌனம். இருவரும் பேசும் நிலைமையில் இல்லை.

முதலில் தேறியது பிரபாகர் தான். “ஜெய்ப்பா… என்ன ஆச்சுன்னு இப்படி ஙொய்யுன்னு இருக்கே?”

“நீ வேற வேலை தேடுறீன்னா அது எந்த ஊர்ல கிடைக்குதோ அங்கே போகனும்… என்னை விட்டுட்டு போறியா?”

“டேய்! ஏண்டா இப்படி யோசிக்கிறே? எனக்கு ‘D’ ரேட்டிங்க் குடுத்திருகானே ஒழிய என்னை கம்பெனியிலே இருந்து terminate பண்ணலையே? நான் Rating dispute-ஐ HR கிட்டே raise பண்ணியிருக்கேன். HR கிட்டே பேசி atleast ‘C’ rating வாங்குறதுக்கு try பண்றேன்.. போதுமா?”

“இல்லை… அப்படி பண்ணினா உனக்கு அங்கே மரியாதை இருக்காது.. நீ வெளியே பாக்குறது தான் நல்லது.. நான் என்னை தேத்திக்குறேன்” ஜெய் பெருமூச்சோடு சொன்னான். அவன் வாய் அப்படி சொன்னாலும் அவன் மனம் இன்னும் பிரிவை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு வரவில்லை என்பதை அவனது சீராக இல்லாத பெருமூச்சும், வேகமாக துடித்த நெஞ்சுத்துடிப்பு சத்தமும் தெளிவாக சொன்னது.

“ஜெய்ப்பா.. இங்கே பாரேன்” என்று பிரபாகர் ஜெய்யின் முத்தை தூக்கி அவன் கண்ணை பாத்தான். ஜெய்யின் கண்கள் குற்ற உணர்ச்சியில் பிரபாகரின் கண்களை நேருக்கு நேராக சந்திப்பதை தவிர்த்தது. அவனை சமாதானப்படுத்த பிரபாகர் குணிந்து ஜெய்யின் உதடுகளை கவ்வினான். ஆனாலும் ஜெய் உணர்ச்சிகள் இல்லாமல் மரக்கட்டை போல படுத்துக்கிடந்தான். அன்றிரவு ஜெய்யை ‘Therapeutic Sex’ மூலம் மீட்டுக்கொண்டு வருவது பிரபாகரின் கடமையானது.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

அடுத்த நாள் காலையில் ஆஃபீஸ் போகும்போது ஜெய்யிடம் வழக்கமான துறுதுறுப்பே இல்லை. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ அவன் ‘D’ ரேட்டிங்க் வாங்கியது போலவும் பிரபாகர் அவனை தேற்றுவது போலவும் தோன்றும் அளவுக்கு காயப்பட்டு இருந்தான். பிரபாகரை ஆஃபீஸில் இறக்கிவிட்டு, சாலையோரம் வண்டியில் உட்கார்ந்தபடியே ஜெய் பிரபாகரின் கையை பிடித்துக்கொண்டு “உன்னோட profile என்னோட personal mail id-க்கு அனுப்பு… நான் அதை commercial resume building service-கிட்டே அனுப்பி கேட்டு அதை current trend-க்கு ஏத்தமாதிரி எப்படி மாத்துறதுன்னு பாக்குறேன்… நீ கவலைப்படாதே.. சரியா?” என்றான்.

“டேய்! என்னை விட நீ தான் கவலையா இருக்கே… HR கிட்டே பேசிப்பாக்குறேன். என்ன update இருந்தாலும் உடனே உன்னை கூப்பிடுறேன்… சரியா?” பிரபாகர் ஜெய்யின் கன்னத்தை செல்லமாக தட்டினான். அப்படியும் அவன் முகத்தில் இயற்கையான சிரிப்பு வரவில்லை. பிரபாகர் சுற்றும் முற்றும் சூழ்நிலையை கணக்கில் கொள்ளாமல் குணிந்து சாலையென்று பாராமல் ஜெய்யின் உதட்டை கவ்வினான்.

“குட்டி.. நீ பத்திரமா ஆஃபீஸ் போ…. சாயங்காலம் பார்க்கலாம்… நான் உன்னை விட்டுட்டு போகமாடேன்.. சரியா?” ஜெய்யின் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை எட்டிப்பார்த்தது. “தட்ஸ் குட்…” பிரபாகர் ஜெய்யின் கன்னத்தில் செல்லமாக தட்டினான்.

புதிதாக profile update செய்யப்பட்டதால் பிரபாகரின் மொபைலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு job consultants மாறிமாறி அழைத்து அவனது availability பற்றியும், சம்பள எதிர்பார்ப்புகள் பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிரபாகரின் HR executive அவனுக்கு மீட்டிங்கிற்கு அப்பாயிண்ட்மெண்ட் எதுவும் கொடுக்காததால், Rating dispute குறித்த ஜெய்யின் கேள்விகளுக்கு பிரபாகரால் பதில் எதுவும் கொடுக்கமுடியாத நிலைமை.

மூன்றாவது நாள் பிரபாகர் கேண்டீனில் கிரீன் டீ குடித்துக்கொண்டிருந்த சமயம் அவன் மொபைலில் ஒரு அழைப்பு வர, பிரபாகர் எடுத்து “ஹலோ!” என்றான்.

“Am I speaking to Mr. Prabhakar?”

“Ys ma’m”

“நாங்க IT SOultions கம்பெனியோட Recruitment team-ல இருந்து பேசுறோம்.. உங்க profile கிடைச்சுது… Are you actively looking out?”

பிரபாகருக்கு முதலில் தன்னுடைய புரொஃபைல் எப்படி IT Consulting கம்பெனிக்கு போனது என்று தெரியவில்லை. சட்டென்று அவன் மூளையில் மின்னல் அடித்தது… அது ஜெய் வேலை பார்க்கும் கம்பெனி. OK.. ஜெய் தான் கொடுத்திருக்கவேண்டும்.

“யெஸ் மேடம்… Very actively looking out..”

சம்பிரதாயமான பேச்சுக்களுக்கு பிறகு அந்த சனிக்கிழமை பிரபாகருக்கு நேர்முகத்தேர்வுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. பிரபாகருக்கு ஏனோ பயங்கர உற்சாகம்…

“Mr. Prabhakar.. Can you tell about yourself briefly?” வழக்கமான கேள்வியில் நேர்முகத்தேர்வு ஆரம்பித்தது.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர் கேட்ட கிடுக்கிப்பிடி டெக்னிகல் கேள்விகளுக்கு பிரபாகர் லாவகமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் “பிரபாகர்! என்னோட கேள்விகள் முடிஞ்சுது… நீங்க எதாவது கேட்கனும்னா கேட்கலாம்” என்றார்.

“சார்! நான் Selected-டா இல்லையான்னு கேட்கமாட்டேன்.. ஆனா நான் technically எந்த விஷயத்துல என்னை இன்னும் மேம்படுத்திகனும்ங்குறதை சொன்னீங்கன்னா எனக்கு உதவியா இருக்கும்” என்று பிரபாகர் தெளிவாக சொன்னான்.

அவர் சிரித்தபடி “எனக்கு உங்க புரொஃபைலை மிஸ்டர். முருகானந்தம் தான் கொடுத்தார். பொதுவா அவர் யாரையும் ரெஃபர் பண்ணமாட்டார்… அப்படிப்பட்டவர் ஒரு புரொஃபைலை குடுக்குறார்னா அப்படி உன் கிட்டே என்ன இருக்குன்னு பாக்குற ஆர்வத்துல தான் நான் உன்னை இண்டர்வியூ பண்ணினேன்.. I think he had shortlisted a right candidate… உங்களை இன்னும் 2-3 நாளுக்குள்ளே எச்.ஆர் கூப்பிடுவாங்க… இந்த ரோலுக்கு எங்க பட்ஜெட் ரூ.19 Lakhs per annum… நீங்க இதுக்கும் ரொம்ப கம்மியா கேட்டீங்கன்னா அது கிளையண்ட் முன்னாடி உங்களோட இமேஜை பாதிக்கும். உங்க சம்பள எதிர்பார்ப்பு அதுக்குள்ள இருந்தா நீங்க சீக்கிரம் சேரவேண்டி இருக்கும்” என்று சொல்லிவிட்டு கைகுலுக்கியபோது பிரபாகருக்கு ஆச்சரியம்.

வெளியே டென்ஷனில் நகம் கடித்துக்கொண்டிருந்த ஜெய், பிரபாகரை பார்த்ததும் துள்ளி எழுந்துவந்தான். பிரபாகரின் உற்சாகமும் துள்ளலான நடையும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. பிரபாகர் பக்கத்தில் வந்து சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு “Better luck next time-னு சொல்லிட்டாரு” என்றான்.

“நல்லது… அடுத்த ஆறு மாசம் கழிச்சு தான் திரும்ப interview-க்கு slot குடுப்பாங்க.. அதுவரைக்கும் உன்னோட சைக்கோ மேனேஜர் கிட்டேயே குப்பை கொட்டிக்கோ” என்று சொல்லிவிட்டு ஜெய் எழுந்து வண்டியை நோக்கி நடந்தான்.

“என்னடா இப்படி ஏமாத்துறே…. நீ உடனே ஐயோ பாவம்.. கவலைப்படாதே… வேற நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு என்னை கட்டிப்புடிச்சு ஆறுதல் சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்” என்று சிணுங்கினான் பிரபாகர். ஜெய்யின் கையை கோர்த்துக்கொண்டு இருவரும் வண்டி பார்க்கிங்கிற்கு நடந்தனர்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

“அது உண்மையா இண்டர்வியூ சரியா பண்ணாதவங்களுக்கு சொல்லலாம்… நீ இப்படி துள்ளிக்கிட்டு வர்றப்பவே உள்ளே என்ன நடந்திருக்கும்னு என்னால யூகிக்க முடியுது… கட்டிப்புடிக்கிறதுக்கு காரணம் வேணுமா என்ன? எப்போ date of joining சொன்னாரு?”

“அது 2-3 நாள்ல HR கால் பண்ணும்போது சொல்லுவாங்கன்னு சொன்னார்… அப்புறம் சம்பளத்துக்கு புராஜெக்ட்ல பட்ஜெட் எவ்வளவுன்னும் சொன்னார்.. அடிமாட்டு சம்பளம் கேட்டு மானத்தை வாங்காதேன்னு சொன்னார்… அது என் இப்போதைய சம்பளத்தை விட ரெண்டு மடங்கு அதிகம்…” என்று ஆச்சரியத்தில் கண்ணை விரித்தான் பிரபாகர்.

“அப்போ ஒரு மாச சம்பளம் எனக்கு referral bonus-ஸா தரணும்… வா முதல்ல சாப்பிடலாம்… காலையிலே இருந்து சாப்பிடாம வயிறு கத்துது” என்றபடி ஜெய் வண்டியில் காலைப்போட்டு உட்கார, பின்னால் பிரபாகர் உட்கார, ஐடி பார்க்குக்கு உள்ளே என்பதால் ஹெல்மெட்டை மாட்டாமல் வண்டியை எடுத்தான் ஜெய்.

“அது என்ன ஒரு மாச சம்பளம்… வேலைக்கு சேரும்போது HR கிட்டே என்னோட Bank account details-ல உன்னோட Account number-ஐ குடுத்தா சம்பளம் நேரடியா உனக்கே வந்துடும் இல்லை?” என்று சொன்னபடி ஜெய்யின் கன்னத்தில் முத்தம் வைத்தான் பிரபாகர்.

செல்லம்டா நீ…” என்று கொஞ்சியபடி ஜெய் வண்டியை சீராக செலுத்தினான். சனிக்கிழமை காரணமாக ஆளில்லாத அந்த ஐடி பார்க்கில் ஜெய்யின் வண்டி இவர்களை சுமந்துக்கொண்டு அதுவும் உற்சாகமாக ஓடியது.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 10. இடமாற்றம்

Leave a Comment

Free Sitemap Generator