Home தொடர்கதைகள் உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?

உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?

by காதல்ரசிகன்
8 minutes read
A+A-
Reset
இந்த உயிரில் கலந்த உறவே தொடரின் 15-வது அத்தியாயம், காதல்ரசிகன்-ஆல் தொடர்கதைகள் என்ற வகையினத்தில் கீழ் 2016-11-27 01:58 அன்று எழுதப்பட்டது.

முன் கதை சுருக்கம்...
பிரபாகர் தன்னை கலந்து ஆலோசிக்காமல் வெளியேறிவிட்டதாக அவன் மீது கோபம் கொள்ளும் ஜெய்யின் தீவிரமான காதல் அந்த கோபத்தை சோகமாக மாற்றுகிறது. பித்து பிடித்த மாதிரி இருக்கும் ஜெய்யை தனசேகர் பிரபாகரை மீண்டும் அழைத்துவர சொல்லி கூட்டிப்போகிறார்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

நீங்கள் LGBT மனிதர்களை பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் / webseries பார்ப்பீர்களா?

View Results

Loading ... Loading ...

தனசேகர் தன்னுடைய மொபைலின் screen-ஐ lock செய்துவிட்டு அதை மீண்டும் டேபிளின் மேலே வைத்தார். அவர் அந்த screenshot-ஐ வைத்து உரையாடலை ஆரம்பிக்கவேண்டும் என்று தான் நினைத்தாரே ஒழிய அதை குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சி எதுவும் செய்ய விரும்பவில்லை என்பதை அவரது உடல்மொழி சொன்னது. பிரபாகருக்கு தனசேகரின் முகத்தை பார்க்கவோ இல்லை பதில் பேசவோ இன்னும் திராணி வரவில்லை. ஜெய்க்கும் அதே நிலைமை தான். ஆனால் அவனுக்கு ‘எதிராளி’ தன் தந்தை என்பதால் பிரபாகரை விட சற்று முன்னதாக மீண்டு வரமுடிந்தது. ஜெய்யின் காது மடல்கள் கோபத்தில் ரத்தம் பாய்ந்து சிவக்க தொடங்கியது.

“அப்பா! நீங்க எதுக்கு என்னோட personal account-டை hack பண்ணுனீங்க? அடுத்தவங்க privacy-ல நீங்க மூக்கை நுழைக்கிறது உங்களுக்கு அசிங்கமா தெரியலை?” – ஜெய் சீறினான்.

Random கதைகள்

ஜெய்.. என்னை நம்பு.. நான் உன்னோட account-ஐ hack பண்ணலை.. நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஃபிளைட் டிக்கட் பிரிண்ட் பண்ண நம்ம வீட்டு கம்ப்யூட்டர்ல லாகின் பண்ணுனப்போ “Browser crashed unexpectedly. Restore?”நு கேட்டுச்சு. நான் “Restore” option குடுத்தேன். அப்போ உன்னோட iCloud Login page வந்துச்சு.. நீங்க browser-ல password-ஐ save பண்ணியிருந்ததால அந்த password field ஏற்கனவே pre-populate ஆகியிருந்துச்சு. நான் அடுத்த Tab-க்கு navigate பண்றதுக்காக Ctrl+Tab குடுத்தேன்.. ஆனா நான் ctrl-button-ஐ சரியா அழுத்தாததால Tab அந்த page-ல இருக்குற “Login” button-ஐ activate பண்ணியிருக்கு. நான் கவனிக்காம வேகமாக enter-ஐ தட்டவும், அது icloud account-ல Login ஆகி Cache-ல இருந்து சட்டுன்னு Thumbnails-ஐ load பண்ணிடுச்சு. இப்படி தான் நான் யதேச்சையா உங்களோட அந்தரங்கத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.”

“இதை வச்சு உங்களை மிரட்டனுங்குறது என்னோட நோக்கம் இல்லை… இதோ உன் கண் முன்னாடியே இந்த screenshot-ஐ delete பண்றேன்..” சொன்னதுபடியே செய்தும் காண்பித்தார்.

தனசேகர் மேலும் தொடர்ந்தார் “அடுத்த நாள் காலையிலே நான் அவசரமா வெளியூர் போகவேண்டியிருந்ததால திரும்ப வந்ததும் உங்க கிட்டே பேசிக்கலாம்னு விட்டுட்டேன். ஆனா திரும்ப வந்தபோது பிரபாகர் வீட்டை விட்டு போயிருந்தான். பிரபாகர் போனதுக்கு exactly என்ன காரணம்னு தெரியலைன்னாலும், கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சதும் ஒரு காரணம்னு புரிஞ்சிக்க extrasensory அறிவெல்லாம் தேவைப்படலை. இதுவும் கடந்துப்போகும்னு நான் விட்டுட்டேன். சரி! ஆரம்பத்துல் பிரிவால ஜெய் இப்படி இருக்குறது இயல்பு தான்னு, நீங்களா தேறட்டும்னு விட்டுட்டேன். ஆனா ஜெய் பித்து பிடிச்ச மாதிரி இருக்குறத பார்த்தப்புறம் தான் பிரபாகரும் இப்படி தானே கஷ்டப்பட்டுட்டு இருப்பான்னு நினைச்சு, இந்த விஷயத்தை brush under the carpet-ங்குற மாதிரி மூடி மறைக்காம, உங்க கிட்டே பேசனும்னு உன்னை தேடிட்டு வந்தேன்.. தயவு செஞ்சு ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க…. நீங்க ரெண்டு பேரும் என்னை உன்னோட அப்பாவாவோ இல்லை மாமாவாவோ நினைக்காம ஒரு மூணாம் மனுதனா நினைச்சு உங்க கஷ்டத்தை சொல்லுங்க…

“மாமா.. நாங்க ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப நேசிக்கிறோம்… இன்னொருத்தர் இல்லாத வாழ்க்கையை நினைச்சுப்பாக்கவே முடியலை…. ஆனா நான் பக்கத்துல இருந்தா ஜெய் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்னு நினைச்சு தான் நான் வீட்டை விட்டு அவசரம் அவசரமா வெளியேறிட்டேன்

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“சரி பிரபா! நீ யோசிச்சு தானே ஜெய்யை விட்டு பிரியணும்னு வந்தே? அப்புறம் ஏன் பைத்தியக்காரன் போல குப்பை மேட்டுல உட்கார்ந்திருந்தே?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay நண்பருக்கு personal message-ஆ நினைச்சிட்டு, ஒரு romantic message-ஐ அவரும் இருக்குற WhatsApp group-க்கு தவறுதலா அனுப்பி சமாளிச்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“அப்பா… அது லவ்.. உங்களுக்கு புரியாது..” – ஜெய் இடைமறித்தான்.

ஜெய்… நானும் உன் வயசை எல்லாம் தாண்டி தான் வந்திருக்கேன்… திடீர்னு 40 வயசுக்காரனா பொறக்கலை… ”

“இருக்கலாம்.. உங்களால இந்த கே-லவ் எல்லாம் புரிஞ்சுக்க முடியாது”

“ஏண்டா… இந்த கே கலாச்சாரம் என்ன இன்னைக்கு நேத்திக்கா திடீர்னு வானத்துல இருந்து குதிச்சுது…. எப்போ ஆம்பளை பொம்பளைன்னு செக்ஸ் பாகுபாடு ஆரம்பிச்சுதோ அன்னைக்கே இதுவும் ஆரம்பிச்சுது… நம்ம புராணங்கள்ல இதை பத்தின குறிப்புகள் நிறைய இருக்குறதுல இருந்தே இதுவும் அவ்வளவு பழசுன்னு தெரியலையா?”

ஜெய்க்கு தனசேகர் இப்படி தன்பாலினஈர்ப்பு பற்றி தெளிவாக பேசுகிறார் என்பதை விட, அதை பற்றி அவருக்கு நிறைய தெரியும் போலிருக்கிறதே என்பதே இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

“சரி! நீங்க ரெண்டு பேரும் நேசிக்கிறீங்கன்னு சொல்றீங்க… அடுத்து என்ன பண்றதுன்னு என்னைக்காச்சும் உட்கார்ந்து பேசியிருக்கீங்களா?”

“இல்லை… அதுக்கான சமயம் வரட்டும்னு நாங்க விட்டுட்டோம்” – ஜெய்.

“நீங்க ரெண்டுபேரும் யாராவது பொண்ணு கிட்டே பழகியிருக்கீங்களா? அதை விடுங்க… நீங்க ரெண்டு பேருமே பொண்ணுங்க வாசனையே படாத கே-ஸ்னு எப்படி முடிவு பண்ணுனீங்க? ராமாயணத்துல ரிஷ்யச்ருங்கன்னு ஒரு கேரக்டர் இருக்கு… பொம்பளைன்னு ஒரு இனம் இருக்கறதே தெரியாம வளர்க்கப்பட்ட ஆளு அவன். ஆனா அவன் ஒரு பொண்ணோட அறிமுகம் கிடைச்ச உடனேயே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு கோல் போட்டு குழந்தையும் பெத்துக்குவான். அதே மாதிரி நீங்க யாராச்சும் பொண்ணுங்களை படுக்கையிலே வீழ்த்த வாய்ப்பு கிடைச்சு அப்போ நீங்க உங்களுக்கு ஆண் உடம்பு தவிர வேற எதுவும் ‘உங்களோடதை’ எழுப்பாதுன்னு புரிஞ்சுக்கிட்டீங்களா?”

ஜெய்யும் பிரபாகரும் எதுவும் பேசவில்லை.

“அப்பா! நீங்க பேசுறது செக்ஸ்.. நான் சொல்றது லவ்”

“அப்படியா? எனக்கு தெரிஞ்சு லவ்வும் செக்ஸும் Venn diagram-ல வர்ற மாதிரி mutually exclusive-ஆன விஷயம் இல்லை. Love-ங்குறது மனசு பிரதானமாகவும் அதனாலேயே உடம்பையும் சேர்ந்தது… ஆனா sex-ங்குறது மனசை கணக்குலேயே எடுத்துக்காம முழுக்க முழுக்க வெறும் உடம்பு சம்பந்தப்பட்டது.. சரி! லவ் பற்றி நீ என்ன புரிஞ்சு வச்சிருக்கேன்னு எனக்கும் சொல்லேன்.. வவ்வுன்னா டிரஸ் இல்லாம ஒன்னா படுக்கறதா? இல்லை Sex-ங்குறது தனக்கு பிடிச்சவங்களுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கனும்னு துடிக்கிறதா?”

“அப்பா… நீங்க அந்த காலத்துலேயே நிக்குறீங்க… உங்களுக்கு எங்களோட perspective-ல இருந்து பார்த்தா தான் எங்களோட நிலைமை புரியும்..”

“உங்க இடத்துல நின்னு பாக்குறதால தான் நான் உங்க கிட்டே நிதானமா பேசிட்டு இருக்கேன்… நான் மட்டும் Homophobic-ஆ இருந்திருந்தா இந்நேரத்துக்கெல்லாம் உங்களை ஆணவக்கொலை பண்ணிட்டு தான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருப்பேன்…”

“இல்லை.. நீங்க Homophobic இல்லைன்னு வேஷம் போடுறீங்க…”

ஜெய்! நீ என்னை பத்தி தப்பா நினைச்சாலும் பரவாயில்லை… எனக்கும் ஒரு Gay அனுபவம் இருக்கு… என்னோட வாழ்க்கையிலே நடந்த அந்த நிகழ்ச்சி என்னோட சேர்ந்து என்னோட சமாதிக்கு தான் போகும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா இப்போ உங்க கிட்டே சொன்னா இந்த சூழ்நிலைக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்.”

ஜெய்யும் பிரபாகரும் கொஞ்சம் அதிர்ச்சியாக தனசேகரை பார்த்தார்கள்.

“நான் இப்போ சொல்லப்போற நிகழ்ச்சியால நானும் உன்னோட அம்மாவும் வாழுற வாழ்க்கை போலியானது இல்லை… நான் அவ மேலே வச்சிருக்குற அன்பும், மரியாதையும் வேஷமும் கிடையாது..உன்னை எனக்கு பெத்துக்குடுத்த அந்த மகராசிக்கு நான் எந்த துரோகமும் பண்ணலை…”

நான் அப்படி எல்லாம் நினைக்கலைங்கப்பா…” ஜெய் தர்மசங்கடமாக சொன்னான்.

தனசேகர் பழைய நினைவுகளுக்கு போனார். “சின்ன வயசுல இருந்தே எனக்கு உன்னோட தாத்தா வீட்டுல எப்பவுமே தனியா இருக்குற மாதிரி தான் தோணும். காரணம் எனக்கு பிடிச்ச விஷயங்களை, என்னோட எண்ண ஓட்டங்களை பகிர்ந்துக்குற அளவுக்கு யாரும் இல்லை. அதனால எனக்கு நானே நிறைய பேசிக்குவேன். அதனால எல்லாரும் என்னை கேலி பண்றது இன்னும் அதிகமாயிடுச்சு. இது என்னை இன்னும் reclusive-ஆ மாத்திடுச்சு. காலப்போக்குல எனக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. உண்மையை சொல்லனும்னா என்ன தான் உங்க அம்மா ரொம்ப நல்லவளா, ரொம்ப அன்பானவளாவே இருந்தாலும், நான் என்னோட எண்ணங்களை உன்னோட அம்மா கிட்டே பகிர்ந்துக்குற அளவுக்கு எங்களோட IQ Wavelength / frequency ஒன்னா இருக்குறதா தெரியலை. அதனால கல்யாணத்து அப்புறமும் நான் மனசளவுல தனிமையிலே இருந்தேன். அந்த சமயத்துல தான் நம்மளோட சொந்தக்காரப்பையனோட அறிமுகம் கிடைச்சுது.”

“அவன் கிட்டே பேசும்போது எனக்கு நான் என் கிட்டேயே பேசுற மாதிரி இருக்கும். எங்க எண்ண ஓட்டங்களும், அதை வெளிப்படுத்த நாங்க தேர்ந்தெடுக்குற வார்த்தைகளும் ஒன்னு போலவே இருக்கும். அதனால நாங்க ரெண்டு பேரும் பயங்கர நெருக்கம் ஆயிட்டோம். இப்போ போல தினசரி ஃபோன்ல பேசவோ இல்லை தொடர்பு கொள்ளவோ எங்களுக்கு வழியில்லை. லெட்டர் எழுதலாம்னா அது மத்தவங்க கையில கிடைச்சா அதை அவங்க எந்த அர்த்தத்துல எடுத்துக்குவாங்களோங்குற பயம் ரெண்டு பேருக்குமே இருந்துச்சு. அதனால எங்களுக்கு ஏதாவது விசேஷத்துல சொந்தக்காரங்க நடுவுல பார்த்துக்குட்டா தான் ஆச்சு. அப்போ எல்லாம் ஆம்பளைங்க கையை கோர்த்துக்குட்டு பேசுனா தப்பா பாக்க தெரியாத, Globalisation-ங்குற பேர்ல மேற்கத்திய கலாச்சார நுழையாத காலம். நாங்க சொந்தக்காரங்க எல்லோரும் கும்பலா பேசிட்டு இருக்குற அப்போ ரெண்டு பேரும் கையை பிடிச்சுக்குவோம். ஆனா அந்த பிடியிலே மத்தவங்களுக்கு புரியாத ஆயிரம் அர்த்தம் இருக்கும். எங்களுக்குள்ளே இருக்குற நெருக்கம் எங்க விரல்கள் மட்டுமே தெரியும். ஆனா எங்களுக்குள்ளே செக்ஸ் ஆசை எல்லாம் தோணுனதே இல்லை. அவனை நினைச்சா உள்ளுக்குள்ளே சந்தோஷம் அருவி போல பொங்கும்.. ஆனா அதுக்கு வடிகால் எதுன்னு தெரியலை.”

“நம்ம வீட்டுல பெரியவங்க எல்லோரும் கிடா வெட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.. எனக்கு அந்த கூட்டம் பிடிக்காதுன்னாலும் அவனை பாக்குறதுக்காக மட்டுமே போகலாம்னு தோணுச்சு. அவனும் வந்திருந்தான். நாம அன்னைக்கு போனோம் இல்லை… அதே கோவில்ல தான் கிடா வெட்டினோம். எதிர்பார்த்தபடியே எல்லா பெருசுங்களும் என் வயசுல இருந்த சில ஆளுங்களும் கூச்சமே படாம சரக்கடிக்க ஒதுங்கிட்டாங்க… எனக்கு அந்த வாடையே ஆகாது… அந்த கெட்டப்பழக்கம் இல்லாததால அவங்க என்னை பண்ணின கேலிக்கும் கிண்டலுக்கு அளவே இல்லை… அவனுக்கும் குடியை பார்த்தாலே குமட்டிட்டு வந்ததுல ஆச்சரியம் இல்லை. அதனால நானும் அவனும் மரத்தடியிலேயே உட்கார்ந்து பேசிட்டிருந்தோம். பொம்பளைங்க எல்லாம் தூரத்துல அறுத்த கிடாயை சமைச்சிட்டு இருந்தாங்க. முத நாள் ராத்திரி முழுக்க கண் முழிச்சு கிடா வெட்டுக்கு தேவையானதை வாங்க அலைஞ்சதாலேயும், வந்தவங்களை கவனிச்சுக்க ஏற்பாடுகள் பண்ணினதாலேயோ என்னவோ ஒரு கட்டத்துக்கு மேலே அவனால தொடர்ந்து பேசமுடியலை… அவன் பயங்கர சோர்வா இருந்தான். ஆனா அதை கவனிக்காம நான் அவன் கிட்டே பேச்சு குடுத்துட்டு இருந்தேன்.”

தனசேகர் தொண்டையை செருமிக்கொண்டு மேலும் தொடர்ந்தார் “யதேச்சையா அவன் முகத்தை பார்த்தப்போ அவன் கண்ணுல அவ்வளவு அயற்சி… சரி! கொஞ்ச நேரம் படுத்துக்கோன்னு நாங்க உட்கார்ந்திருந்த பாயோட ஓரத்துல நகர்ந்துக்கிட்டு அவனுக்கு படுக்க இடம் விட்டேன். அவன் பாய்ல குறுக்கிக்கிட்டு படுத்தான். அவன் அப்படி சுருண்டு படுத்திருந்தத பார்த்ததும் எனக்கு பாவமா இருந்துச்சு… காரணமே இல்லாம மனசு கஷ்டமாயிடுச்சு.. அதனால நான் எந்த உள்நோக்கமும் இல்லாம தான் அவனை என் மடியிலே தலை வச்சுக்கிட்டு காலை நல்லா நீட்டி படுக்க சொன்னேன். அவனும் தயக்கம் இல்லாம என் தொடையிலே தலை வைச்சு படுத்துக்கிட்டான்.

நல்ல தனிமை… ஆலமரத்தடி நிழலும், ஆற்று தண்ணியிலே இருந்து வந்த குளிர்ச்சியான தென்றல் காற்றும், அவனோட அருகாமையும் என்னை என்னவோ பண்ணிச்சு. எனக்கு அவன் மேலே அன்பு பிரவாகமா எடுத்து ஓடுது ஆனா என்ன பண்றதுன்னு தெரியலை. அவனோட முகத்தை அப்படியே பார்த்துட்டே இருந்தேன். குழந்தை மாதிரி அழகா, அமைதியா கண்ணை மூடி தூங்கிட்டு இருந்தான். நான் அவனோட தலைமுடியை கோதிக்கிட்டே அவனை எவ்வளவு நேரம் பார்த்துட்டு இருந்தேன்னு எனக்கே தெரியலை. என்னை சுத்தி யாரும் எங்களை கவனிக்கலைன்னு தெரிஞ்சதும் நான் குணிஞ்சு அவனோட கன்னத்துல முத்தம் வச்சேன். அவன் கிட்டே லேசா அசைவு தெரிஞ்சுது.. ஆனா அவன் கண்ணை திறக்கலை… அவன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டு தூங்குற மாதிரி நடிக்கிறான். அவன் முழிச்சிருக்கான்னு எனக்கு நல்லா தெரிஞ்சுது. நான் இப்போ என்ன பண்றேன்னு தெரிஞ்சே குணிஞ்சு அவன் கன்னத்துல திரும்பவும் முத்தம் வச்சேன். அவன் இயல்பா தூக்கத்துல திரும்புற மாதிரி, கண்ணை திறக்காமலேயே புரண்டு படுத்து அடுத்த கன்னத்தை காட்டுனான். நான் சிரிச்சுக்கிட்டே அவனோட அடுத்த கன்னத்துலயும் முத்தம் குடுத்தேன். இப்போ திரும்பவும் யதேச்சையா நடக்குற மாதிரி மல்லாந்து படுத்தான். இப்பவும் அவன் கண்ணை திறக்கலை… நான் தைரியம் கூடி குணிஞ்சு அவனுக்கு உதட்டுல கிஸ் பண்ணினேன். ஏதோ ஆர்வத்துல அப்படி பண்ணிட்டேனே ஒழிய, ஆனா எனக்கு வியர்த்து விறுவிறுக்க ஆரம்பிச்சுடுச்சு. அவனை தலையை எடுத்து பாய்ல படுக்கவச்சுட்டு நான் எழுந்து போயிட்டேன். அன்னைக்கு முழுசும் நான் அவன் கிட்டே இருந்து ஒதுங்கியே இருந்தேன். ஆனால் என்னோட மனசும் கண்ணும் அவனை தேடிட்டே இருந்துச்சு. அவனுக்கும் அப்படி தான் இருந்துச்சுன்னு அப்புறம் சொல்லி சிரிச்சான்.

இது தப்புன்னு எனக்கு மனசு உறுத்துச்சு. இனிமேல் அவனை தனிமையிலே பார்க்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா புத்தி வேற மனசு வேறயாச்சே… அப்போ நம்ம ஊர்ல கோவில் திருவிழா போட்டிருந்தாங்க. நம்ம வீட்டு பின்னாடி தான் ஸ்கூல் கிரவுண்டு இருக்கு.. அதுல தினமும் ஏதாச்சும் கூத்து, கச்சேரின்னு திருவிழா நாள் ராத்திரிகள்ல ஏதாச்சும் நிகழ்ச்சி நடந்துட்டு இருக்கும். அன்னைக்கு ராத்திரி அதுல “அரவாண் பலி” கூத்து போட்டிருந்தாங்க. நம்ம வீட்டு மொட்டை மாடியிலே கைப்பிடி சுவற்றுல உட்கார்ந்து பார்த்தா மைதானம் நல்லா தெரியும். அதனால நம்ம வீட்டு ஆளுங்க எல்லாம் ராத்திரி சாப்பாட்டை சாப்பிட்டு முடிச்சுட்டு, மொட்டை மாடி செவுத்துல காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து கூத்து பார்த்துட்டு இருந்தோம். நம்ம பொம்பளைங்களுக்கு வீட்டுல இருக்குற சேர், பெஞ்ச் எல்லாம் போட்டுக்கொடுத்தோம். கூத்து ஆரம்பிச்சதும் கொஞ்ச நேரம் கழிச்சு அவன் என் பக்கத்துல வந்து உட்கார்ந்தான். மெல்ல என் கையை பிடிசான். அவ்வளவு தான்… என்னோட வீம்பும், வீறாப்பும் எங்கே போச்சுன்னு தெரியலை. நானும் அவனோட விரல் கோர்த்துக்கிட்டேன். அந்த இருட்டுல நடு ராத்திரி வரைக்கும் எங்க விரல்கள் மட்டும் பேசிட்டே இருந்துச்சு. தெருக்கூத்துல இருந்து எங்க கவனம் எப்பவோ போயிடுச்சு.

கொஞ்ச நேரம் கழிச்சு அவன் எழுந்து மாடிப்படிக்கு அந்தாண்ட போனான். போகும்போதே வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு என்னை திரும்பி பார்த்துக்கிட்டே போனான். அவன் பார்வை என்னை அவன் பின்னாடி வரச்சொல்லி கூப்பிட்டது என் மனசுக்கு புரிஞ்சுடுச்சு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு எழுந்து அவன் போன பக்கமே போனேன். நாங்க ஒதுங்குனதை பாக்குற அளவுக்கு, அரவாணை கவனிக்காதவங்க யாரும் இல்லை… எல்லோரும் கூத்துல அப்படி மூழ்கிப்போயிருந்தாங்க. நான் மறைவுக்கு போகவும் அவன் என்னோட ரெண்டு கைகளையும் தன் கையோட கோர்த்துக்கிட்டான். நான் கையை கோர்த்துக்குட்டு அவனை பார்த்துக்குட்டே நின்னுட்டு இருந்தேன். அவன் என்னோட பார்வையோட வீரியம் தாங்காம கண்ணை மூடிக்கிட்டு, ஒத்தை காலை சுவத்துல ஊன்றிக்கிட்டு, சாஞ்சு நின்னான். நான் என்னையும் அறியாம அவனோட விரிச்ச கால்களுக்கு நடுவுல போய் அவன் மேலே சாஞ்சு அவனை திரும்ப கிஸ் பண்ணினேன். அப்புறம் எங்களுக்குள்ளே “அது” சுருக்கமா நடந்துச்சு. ஆனா இந்த தடவை எனக்கு குற்ற உணர்ச்சி எதுவும் வரலை. மாறாக ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?

Leave a Comment

Free Sitemap Generator