முன் கதை சுருக்கம்... |
---|
அஞ்சலி ஆசைப்பட்டது போல அவளுக்கு ஆன்சைட் போவதற்கு விசா கிடைத்துவிட்டதால் என்ன காரணம் சொல்லி சண்டை போட்டு பிரியலாம் என்று ஜெய்யிடம் விவாதிக்கிறாள். அப்போது நடக்கும் புத்தக கண்காட்சிக்கு பிரபாகரையும் காயத்ரியையும் அழைத்துச்செல்லலாம் என்றும் அங்கே பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அனைவரும் கூடுகிறார்கள். அப்போது ஏற்படும் சிறு விபத்தில் ஜெய்க்கு மீண்டும் வலது கையில் அடிபடுகிறது. |
“குட்டி…. கையை அசைக்காத. கொஞ்சம் பொறுத்துக்கோ… தலையாணி வக்கிறேன்…” பிரபாகர் ஜெய்யை சோஃபாவில் உட்காரவைத்து அவன் கைக்கு தாங்கலாக டீப்பாயில் வனஜா எடுத்துவைத்த தலையாணிகளை அடுக்க ஆரம்பித்தான். மருத்துவமனையில் ஜெய்க்கு வலதுகையில் ஏற்பட்டிருந்த தீக்காயத்துக்கு மருந்துகள் போட்டு டிரஸ்ஸிங் செய்திருந்தார்கள். ஜெய் சோர்வாக பிரபாகரின் முதுகில் சரிந்துக்கொள்ள, இருவரும் தாங்கள் போன பல்ஸாரிலேயே வீட்டுக்கு திரும்ப வந்தார்கள். கொடுக்கப்பட்ட மருந்தின் தாக்கத்திலும், சோர்விலும் ஜெய் வந்தவுடன் தூங்கிவிட, பலமுறை அழைத்த அஞ்சலிக்கு பிரபாகர் தான் பதில் சொன்னான்.
“என்னடா இது.. பட்ட கால்லயே படும்னு சொல்ற மாதிரி தொடர்ந்து ஒரே கையிலேயே அடிபடுது…” கவலையோடு அங்கலாய்த்தவாறே வனஜா காஃபி கலந்துக்கொண்டு வந்தார். பிரபாகர் அதை வாங்கி ஜெய்க்கு ஊட்டுவதற்கு வாகாக அவன் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டான்.
“குட்டி! அஞ்சலி நாலஞ்சு வாட்டி ஃபோன் பண்ணிட்டா… காஃபி குடிச்சுட்டு அவளுக்கு ஃபோன் பண்ணிடுடா… பாவம் ரொம்ப பதறிப்போயிட்டா” காஃபி டம்ளரை ஜெய்யின் வாயில் வாகாக ஊட்டியபடி பிரபாகர் சொன்னான்.
ம்ம்…” என்று ஆமோதிக்கும் தொனியில் ஜெய் காஃபி குடித்தபடி பதில் சொன்னான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
ஜெய்யின் iPhone சிணுங்கியது. பிரபாகர் எடுத்துப்பார்த்து அது “அஞ்சலி” என்று பெயர் காட்ட, பக்கத்தில் இருந்த Bluetooth Speaker-க்கு அழைப்பை divert/திசைதிருப்பிவிட்டு அதை எடுத்து ஜெய்யின் கைகள் இருந்த தலையணையில் வைத்துவிட்டு, ஜெய் குடித்த காஃபி கப்பை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
இப்போ கைக்கு எப்படி இருக்கு ஜெய்?” வழக்கமான அஞ்சலியின் துறுதுறுப்பு இல்லை.
“பரவாயில்லை… தூங்கி எழுந்ததுக்கு அப்புறம் வலி கொஞ்சம் கம்மியா இருக்கு… நீ பத்திரமா வீட்டுக்கு போயிட்டியா?”
“ம்ம்… நான் வீட்டுக்கு வந்ததுட்டு உனக்கு கால் பண்ணினேன்… நீ தூங்கிட்டு இருக்கேன்னு பிரபா சொன்னாப்படி… சரி! நல்லா ரெஸ்ட் எடு….”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“சரி அஞ்சலி…”
அதை தொடர்ந்து இரண்டு பக்கங்களிலும் நீண்ட மௌனம். அழைப்பும் துண்டிக்கப்படவில்லை… ஆனால் அதே சமயம் எதிர்முனையில் எதுவும் பேசவும் இல்லை…
அஞ்சலி..” ஜெய் அழைத்தான்.
“ம்ம்.. சொல்லு ஜெய்…
“சத்தமே கேட்கலையா…. கால் கட்டாயிடுச்சோன்னு நினைச்சேன்..”
“இல்லை… நான் கட் பண்ணலை… இங்கே தான் இருக்கேன்”
“அப்போ ஏன் அமைதியா இருக்கே? ஏதாச்சும் பேசு..”
ஜெய்… இன்னைக்கு வீட்டுக்கு வர்றப்போ யோசிச்சுட்டே வந்தேன்… நீ, பிரபா, காயத்ரின்னு உங்க உலகம் ரொம்ப அழகா இருக்கும்… அதுல நானும் ஒரு பாகமாக முடியலையேன்னு எனக்கு கஷ்டமா இருக்கு…. அது தானா நடக்கலைன்னாலும் பரவாயில்லை… எனக்கு கிடைச்ச சான்ஸ நானே வலியப்போய் கெடுத்துக்குட்டேன்னு நெனைக்கும்போது எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு ஜெய்… உங்களோட உலகத்துல எந்த பொண்ணு வந்து சேர்ந்தாலும் அவ ரொம்ப சந்தோஷமா இருப்பா… அதிர்ஷ்டசாலி… நான் தான் கிடைச்சதை தொலைச்சுட்டு அதிர்ஷ்டக்கட்டையா நிக்கிறேன்…” அஞ்சலி அழ ஆரம்பிப்பது அவள் குரலில் தெரிந்தது.
அஞ்சலி…” ஜெய் அவளை சமாதானப்படுத்த முயற்சித்தபோது அந்த போஸ் ஸ்பீக்கர் எதிர்புறத்தில் அஞ்சலியின் சிறு விசும்பலை கூட துல்லியமாக ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. விபரீதத்தை உணர்ந்து ஜெய் தன் இடதுகையால் மொபைலை எடுக்க முயற்சி செய்ய, பிரபாகர் அந்த மொபைலை பிடுங்கி மியூட்டில் போட்டான்.
எதிர் பக்கம் அஞ்சலி தொடர்ந்தாள் “நம்ம திட்டப்படி நான் இப்போ எங்க வீட்டுல உன்னை பத்தி குறை சொல்ல ஆரம்பிக்கனும்.. ஆனா என்னான்னு பொய்யா குறை சொல்லனும்? என்னால அப்படி பொய் சொல்லமுடியலை ஜெய். பொண்ணு ஒருத்தி பையனோட propsal-லை reject பண்ணுனா அந்த பொண்ணு மூஞ்சில ஆசிட் அடிக்கிற, இல்லைன்னா என்னையா வேண்டாம்னு சொன்னேன்னு friendsஸோட சேர்ந்து அந்த பொண்ண gangrape பண்ற generation-ல, நீ எக்கேடோ கெட்டுப்போன்னு விடாம எனக்காக நல்லது பண்றே… உன்னை விட உன்னோட பிரபாவுக்கு ஒரு நல்ல துணை கிடைக்கனும்னுட்டு உன்னை வேண்டாம்னு சொன்ன என்னை அடிக்கடி சந்திக்கிறப்போ எந்த வெறுப்பும் காட்டாம ஒரு friend-க்கு செய்யுற மாதிரி பார்த்து பார்த்து help பண்றே…. இதை புரிஞ்சுக்கம onsite-ஐ முக்கியம் நினைச்ச என் புத்தியை செருப்பால அடிக்கனும். I had fallen in love with you Jai…”
ஜெய் எழுந்து ஃபோனை பிடுங்க முயற்சி செய்தாலும் அவன் கை அவனை பெரிதாக நகர விடாதது பிரபாகருக்கு வசதியாக போனது. இந்த பக்கம் நடப்பவைகள் எதுவும் அறியாமல் அஞ்சலி எதிர் பக்கத்தில் தன் உணர்ச்சிகளை கொட்டிக்கொண்டிருந்தாள். ஜெய்யின் iPhone-ல் இணைக்கப்பட்டிருந்த Bose-ன் Soundlink Revolve 360 technology காரணமாக அவளுடைய குரல் தெள்ளத்தெளிவாக வீடெங்கும் ஒலித்தது.
ஜெய்… எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… I am madly in love with you… உனக்கு என்னை பிடிக்குதான்னு தெரியலை. என்னை உனக்கு பிடிச்சிருக்கா? உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் பூராவும் உன் கூட வாழ ஆசைப்படுறேன். நான் உன் பதிலுக்காக காத்திட்டு இருப்பேன். ஒருவேளை உனக்கு வேற இடத்துல கல்யாணம் ஆனாலும் நான் அடுத்து பாக்குற பசங்களுக்குள்ளே ஒரு ஜெய் இருப்பானான்னு தேடுவேன். எங்க அப்பாவுக்கு பயந்து கட்டாய கல்யாணம் எல்லாம் பண்ணிக்கமாட்டேன். உன்னை மாதிரி ஒரு பையன் கிடைக்குற வரைக்கும் நான் காத்திட்டு இருப்பேன்…” எதிர்பக்கம் மௌனமாக இருப்பதை உணர்ந்த அஞ்சலி “ஜெய்… Are you there?” என்று கேட்டாள்.
“என்னடா பசங்களா நடக்குது?” வனஜா இந்த உரையாடலை பாதியில் இருந்து கேட்டுவிட்டு பதற்றத்தோடு கிச்சனில் இருந்து வெளியே வந்தார்.
பிரபாகர் ஃபோனை mute-ல் இருந்து எடுத்துவிட்டு ஜெய்யின் அருகே நீட்ட “இருக்கேன் அஞ்சலி…எனக்கு என்னன்னு… ” ஜெய்யின் வாய் குழறியது.
“சரி! ஜெய்… உன்னை எந்த வகையிலும் நிர்பந்திக்கனும் நினைச்சு நான் இதையெல்லாம் சொல்லலை… எனக்கு சொல்லனும்னு தோணுனதை சொல்லிட்டேன். அவ்வளவு தான்… நீ நல்லா ரெஸ்ட் எடு. நாம அப்புறம் பேசலாம்… Bye Jai.. Take Care” என்று மெல்லிய விசும்பலோடு அழைப்பை துண்டித்தாள்.
பிரபாகரும் அம்மாவும் ஜெய்யை ரவுண்டு கட்டிக்கொள்ள, வேறு வழியில்லாமல் தனக்கும் அஞ்சலிக்கும் இடையே நடந்தவற்றை சுருக்கமாக சொன்னான்.
“பிரபாவுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி என்னோட கல்யாணம் வேண்டாம்னு எனக்கு தோணுச்சு… அதே சமயம் அவளுக்கும் கொஞ்ச நாள் சுதந்திரமா தனியா இருக்கனும்னு தோணுச்சு… அதனால ரெண்டு பேருக்குமே கல்யாணம் வேண்டாம்னு இருந்ததால சேர்ந்து முடிவு பண்ணினோம்… அதே சமயத்துல எங்களுக்கு பிரபாகருக்கும் காயத்ரிக்கும் செட்டாகும்னு தோணினதால அவங்களை நெருக்கமா பழகவிடுறதுக்காக திரும்ப திரும்ப சந்திச்சுக்கிட்டோம்… நாங்க எதிர்பார்த்த மாதிரி பிரபாகருக்கு காயத்ரியையும், அவளுக்கு பிரபாகரையும் பிடிச்சுப்போச்சு… அஞ்சலிக்கும் UK-க்கு onsite-ல கிளம்புறதுக்கு நேரம் வந்துடுச்சு… அதனால ஏதாச்சும் காரணம் கண்டுபிடிச்சி ரெண்டு பேருக்கும் ஒத்துவராதுன்னு பிரேக்கப் பண்ணிக்கிட்டதா நடிச்சு கல்யாண பேச்சை நிறுத்தனும்னு திட்டம் போட்டிருந்தோம்… ஆனா அவளுக்கு திடீர்னு இப்படி தோணியிருக்கு”
வனஜாவும் பிரபாகர் அதிர்ச்சியில் உறைந்தனர். முதலில் தேறியது வனஜா தான்.
“அப்போ இவ்வளவு நாள் நடிச்சிட்டு இருந்தியாடா? அவங்க வீட்டுல வேற வந்துட்டு போயிட்டாங்க…. உங்களுக்கு கல்யாணங்குறது விளையாட்டா போச்சா? நீங்க பண்ணினதால ரெண்டு குடும்பங்களுக்கு நடுவே தேவையில்லாத பொல்லாப்பு வரும்னு தோணவே இல்லையா? இப்போ உங்க அப்பா கிட்டே நான் என்னான்னு சொல்லுவேன்?” வனஜா தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
“அத்தை… கொஞ்சம் நிதானமா இருங்க. அஞ்சலி இவனை பிடிச்சிருக்கு வாய் விட்டு சொல்லிட்டா… இவனுக்கு பிடிக்கலைன்னா இந்நேரத்துக்கு சொல்லியிருப்பானே… பிடிக்காமலா அவளுக்காக நம்ம கிட்டே சொல்லாம VFS-க்கு அழைச்சிட்டு போறதும், பத்திரமா கார்த்திக் வீட்டுல அஞ்சலி தங்குறதுக்கு இடம் ஏற்பாடு பண்றதுன்னு செஞ்சிருப்பான்… எல்லாம் நல்லபடியா நடக்கும்… நீங்க டென்ஷன் ஆகாதீங்க..” பிரபாகர் வனஜாவை சமாதானப்படுத்திக்கொண்டிருக்க, ஜெய் தளர்வாக எழுந்து வெளியே நடந்தான்.
வனஜாவுக்கு கோபம் கொப்பளித்தது. “அமுக்குனியாட்டம் பண்றதை எல்லாம் பண்ணிட்டு எங்கேடா எழுந்திருச்சு போறே? இப்போ உங்க அப்பாவுக்கும் உறவுக்காரங்களுக்கும் நான் என்ன பதில் சொல்றது?” வனஜாவின் காட்டமான கேள்விக்கு ஜெய்யிடமிருந்து பதிலில்லை.
“அத்தை… கொஞ்சம் நேரம் அவனை தனியா விட்டுடுங்க… பையன் கொஞ்சம் யோசிக்கட்டும்… எதிர்பார்க்காம அஞ்சலி propose பண்ணின shock-ல இருக்கான்… நடக்குறதை absorb பண்ணிக்கிறது அவனுக்கு கொஞ்சம் டைம் குடுங்க… கொஞ்ச நேரம் பொறுத்து நானே போய் அவனை கூட்டிட்டு வர்றேன்” என்று பிரபாகர் வனஜாவின் தோளை பிடித்து ஆறுதல் சொன்னான்.
மாலை இளங்காற்று வீச… சூரியன் மறைய ஆரம்பித்ததால் உலகத்துக்கே ஆரஞ்சு வண்ணம் தெளிக்கப்பட, ஜெய் மாடிக்கைப்பிடி சுவற்றில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். அவன் கண்கள் எங்கோ வெற்றிடத்தை வெறித்துக்கொண்டிருந்தது. பிரபாகர் ஜெய்யின் தோளோடு நெருங்கி உட்கார்ந்து அவன் கையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு ஜெய்யின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்து ஜெய் திரும்பி பிரபாகரின் முகத்தை பார்த்துவிட்டு பார்வையை கீழே தாழ்த்தினான்.
“குட்டி… ஏண்டா திடீர்னு நீ தியாகியாயிட்டே? அப்படியே நீ தியாகம் பண்ணினாலும் அது யாருக்காக செய்யுறியோ அவங்களுக்கு அது தேவையான்னு யோசிக்கமாட்டியா?”
ஜெய் குழப்பத்தோடு பார்த்தான்.
“நீயும் அஞ்சலியும் breakup பண்ணிட்டா உன்னை மீறி நான் காயத்ரி கூட போயிடுவேன்னு நெனச்சு என்னையும் கேவலப்படுத்திட்டே இல்ல?” பிரபாகரின் வாக்கியத்தில் குறை சொன்ன கோபத்தைவிட வேதனை தான் தூக்கலாக இருந்தது.
“இல்லை பிரபா… என்னோட ஆசை எப்பவுமே உன்னை முதல்ல settle பண்ணிட்டு அப்புறம் தான் நான்…”
பிரபாகர் ஜெய்யின் கன்னத்தில் பளாரென்று அறையப்போக, reflex action-ல் ஜெய் கண்களை மூடிக்கொண்டு கன்னத்தை திருப்பினான். ஆனால் பிரபாகர் அறையவில்லை… மாறாக ஜெய்யின் கன்னத்தை தடவினான்.
“குட்டி…. உனக்கும் அஞ்சலிக்கும் முதல்ல கல்யாணம் ஆகனும்… அவளை நான் என் கூடப்பொறந்த தங்கச்சி மாதிரி பார்த்துக்கனும்… உன்னோட குழந்தைங்க என்னை பிரபா மாமான்னு வந்து மேலே ஏறிக்கனும்… நீ அதுங்கள மிரட்டினா அதுங்க ‘நான் பிரபா மாமா வீட்டுக்கு போயிடுவேன்னு’ அதுங்க உன்னை திரும்ப மிரட்டுற அளவுக்கு நான் அவங்களை செல்லம் குடுத்து கெடுத்துவைக்கனும்… நீயும் அஞ்சலியும் சந்தோஷமா இருக்குறதை பார்த்து நான் சந்தோஷப்படனும்னு எனக்கும் ஏகப்பட்ட கனவுங்க இருக்குடா… உனக்கு அது புரியலையாடா? நீயும் அஞ்சலியும் செட்டாயிட்டீங்கன்னு தோணுனதுக்கு அப்புறம் தான் நான் காயத்ரி கூட ஃப்ரெண்டானேன்…. ஆனா அது உன்னோட சதின்னு நெனச்சு கூட பார்க்கலைடா” பிரபாகரின் குரல் உணர்ச்சிவசப்பட்டிருந்ததால் லேசாக நடுங்க ஆரம்பித்தது.
ஜெய் நிதானமாக பிரபாகரை பார்த்தான். சில நொடி அமைதிக்கு பிறகு “பிரபா… எனக்கும் நீ சொன்னதை எல்லாம் திரும்ப சொல்லனும் போல இருக்கு… நடுவுல மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்க… எனக்கும் அஞ்சலியை பிடிச்சிருக்கு… ஆனா எனக்கு உலகத்துல எல்லாத்தையும் விட அதிகமா உன்னை தான் பிடிச்சிருக்கு… அவளுக்கு கல்யாணத்துக்கு ஓகே சொல்றதுக்கு எனக்கு சில விஷயங்கள் உறுத்தலா இருக்குடா…”
“என்னடா அது?” – பிரபா
“வெளியே இருந்து பாக்குறவங்க என்ன சொல்வாங்க… அந்த பசங்க ரெண்டுபேரும் கல்யாணம் ஆகுற வரைக்கும் செக்ஸ் வச்சிட்டு enjoy பண்ணிட்டு இருந்தாங்க… அப்புறம் எல்லாத்தையும் மறைச்சுட்டு யோக்கியனுங்க மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்வாங்க…”
“குட்டி… நம்ம சம்பந்தப்பட்ட விஷயம் என்னன்னு நமக்கு மட்டும் தான் தெரியும். நாம சீரியஸா லவ் பண்ணினோம்.. பண்றோம்.. கடைசி வரைக்கும் பண்ணுவோம். இந்த உலகத்துல கல்யாணம் ஆன எல்லாருக்கும் ஒரு பழைய காதலாச்சும் இருக்கும்… நம்ம love story-ல நாம் ரெண்டு பேரும் ஆம்பளைங்களா போயிட்டோங்குத தவிர என்ன வித்தியாசம்? மத்தவங்க கேஸ்ல அது ஆம்பளை பொம்பளையா இருந்தா “ஆட்டோகிராஃப்”… டைரியிலே எழுதிவச்சு பார்த்துக்குற அளவுக்கு புனிதம் ஆனா நாம காதலிச்சா மட்டும் என்ன அசிங்கமா? அதையெல்லாம் கண்டுக்காத…”
ஜெய்யின் விரல்களை கோர்த்துக்கொண்டு பிரபா மேலும் தொடர்ந்தான் “Admitted.. நாம LGBT சமூகத்துக்காக போராடுற போராளிகள் இல்லை… எல்லாத்தையும் எதிர்த்துக்கிட்டு என்னுடைய அடையாளத்துக்காக எதையும் இழந்துட்டு சண்டை போடுவேன்னு நிக்கிறதுக்கு நாம எந்த போராட்டமும் பண்ணலை…. நாம குடும்பங்குற கட்டமைப்புக்கு கட்டுப்பட்ட சாதாரண மனுஷங்கடா… நம்மளால இவ்ளோ தான் பண்ணமுடியும்… ஏன்னா நாம Gay couple-ஆ சேரமுடியாதுங்குறதுக்கு நமக்க்குன்னு சில காரணங்கள் இருக்கு… நம்ம அம்மாக்கள், அவங்களோட ஆசைகளை நஷ்டப்படுத்த முடியாத இயலாமை… நமக்கு வாழ்க்கை குடுத்தவங்களை கஷ்டப்படுத்திட்டு நாம சுயநலமா Gay couple-ஆ வாழ நினைச்சோம்னா நம்மளால் நிம்மதியா வாழமுடியாது. அதுக்காக தான் நாம நம்ம காதலை பின்னாடி தள்ளிவச்சிருக்கோம்….”
“ஆனா பிரபா… அதுக்காக நாம வேற இடத்துல கல்யாணம் பண்ணிகிறது அந்த பொண்ணை ஏமாத்துற மாதிரி இல்லையா? அந்த குற்றஉணர்ச்சி காலத்துக்கும் உறுத்தாதா?”
“குட்டி… கல்யாணம் ஆனதுக்கப்புறம் மத்தவங்களை நேசிக்க கூடாதுன்னு யாருமே சொல்லலை… நீ செக்ஸ் பத்தி சொல்றேன்னா நாம நம்மள LGBT-ன்னு அடைச்சிக்குறதனால தான் இந்த குற்றஉணர்ச்சிகள். அதுக்கு பதிலா நாம நம்மள GLHF-நு வகைபடுத்திக்குவோம்… Good Lovers, Husbands & Friends-நு. நம்ம உடம்பு நெருக்கமே நாம நல்ல lovers, உயிருக்கு உயிரான friends-ஆ இருக்குறதால தானே… வர்ற பொண்ணுங்களையும் நாம் lover-ஆ, நெருக்கமான friend-ஆ பார்ப்போமே… Do I need to fuck a girl-னு mechanical-ஆ நினைச்சா தானே இந்த sexuality பிரச்சனைகள் எல்லாம்.. We’ll make love with our lovers… உறவுகள் நெருக்கமாக ஆக sex இயல்பா organic-ஆ எல்லாம் தானா நடக்கும் பாரேன்… அதனால அந்த part-ஐ நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதே” பிரபாகர் ஜெய்யின் கோர்த்துக்கொண்ட விரல்களை எடுத்து மெதுவாக முத்தமிட்டபடி பேசினான்.
ஜெய் பிரபாகரின் biceps-ஐ கட்டிக்கொண்டு அவன் தோளில் சாய்ந்துக்கொள்ள, பிரபாகர் ஜெய்யின் தலையை இதமாக கோதிவிட்டான்.
“குட்டி… இந்த கல்யாணத்தால மட்டுமில்ல… வாழ்க்கையிலே நாம எந்த சூழ்நிலையிலேயும் பிரியப்போறது இல்லை… என் வகையிலே நான் சத்தியம் பண்ணி தர்றேன். அப்புறம் நாம இந்த கல்யாணத்தோட மூலமா யாரோட வாழ்க்கையும் கெடுக்கப்போறது இல்லை… Instead நமக்கு நல்ல துணைகள் கிடைக்கப்போறாங்க… அவங்களையும் நம்ம உலகத்துக்குள்ளே அழைச்சிட்டு வர்றோம்… நாம் எல்லாரும் சந்தோஷமா இருப்போம். நீ நல்லா யோசிச்சு அஞ்சலிக்கு உன்னுடைய முடிவை சொல்லிடு.. பாவம் அந்த பொண்ணு! உன்னை புரிஞ்சுக்க முயற்சிக்காமலேயே வேண்டாம்னு சொல்லிட்டோம்னு குற்றஉணர்ச்சி அவளுக்கு… உன்னோட பதில் அவளுக்கு நிம்மதியை தரட்டும்…”
ஜெய் தலையை நிமிர்த்தி பிரபாகரை பார்க்க, பிரபாகரும் திரும்பி ஜெய்யின் கண்ணை ஆழமாக ஊடுருவி பார்த்தான். சில நிமிடங்கள் வெறும் பார்வைகள் மட்டுமே ஆயிரம் விஷயங்கள் பேசி தங்களுக்குள்ளே இருந்த தயக்கங்களை தவிடுபொடியாக்கிக்கொண்டிருந்தன. ஜெய் பிரபாகரின் பிடரி முடியை பிடித்து மென்மையாக இழுக்க, பிரபாகர் ஜெய்யின் மனதை உணர்ந்து அவன் உதட்டை கவ்வினான். அந்த முத்தத்தில் தாங்கள் கல்யாணத்தால் இழந்துவிடப்போவதாக பயந்த உறவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற ஆசுவாசமும், சந்தோஷமும் நிறைந்திருந்தது.
இது அவர்களுடைய கடைசி முத்தம் இல்லை.
பின் குறிப்பு: அஞ்சலியின் நீண்ட நாள் ஆசைக்காக ஜெய் அவளை UK-விற்கு onsite-க்கு அனுப்பிவைத்துவிட்டு அவள் திரும்பிபோது கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்று அவளுக்காக சந்தோஷமாக காத்திருந்தான்.
ஜெய்யின் கல்யாணமும் தன் கல்யாணமும் ஒன்றாக ஒரே முகூர்த்தத்தில் தான் நடக்கவேண்டும் என்று பிரபாகர் தீர்மானமாக சொல்லிவிட்டதாலும், காயத்ரிக்கு வயது இருப்பதால் காத்திருப்பதற்க்கு பெரியவர்கள் வகையில் சில சலசலப்புகளை தவிர பெரிதாக எதிர்ப்புக்களோ இல்லை பிரச்சனைகளோ எதுவும் வரவில்லை. காயத்ரியின் Tamil OCR application பிரபாகரின் கூட்டு முயற்சியால் மிக அற்புதமாக வந்திருந்தது.
ஜெய்யின் பிரிவை தாங்கமுடியாமல் அஞ்சலி தன் onsite சீக்கிரம் முடித்துக்கொண்டு வந்து ஏர்போர்ட்டில் எல்லோருக்கும் முன்னாடி ஜெய்க்கு ஃப்ரெஞ்சு கிஸ்ஸடிக்க… விட்டேனா பார் என்று ஜெய்யும் கோதாவில் இறங்கி முத்தத்தில் கலக்க… எல்லாருக்கும் ஒரே பப்பி ஸேம்…
கடைசியில் எல்லாரும் சுபமாக வாழ்வதாக இந்த பகுதி நிறைவடைகிறது.
<<<<< முற்றும் >>>>>>
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 24/07/2017
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|
The story I keep reading again and again, the narration with naturally portrayed characters and emotions is so good and I love it.
Thank you Karthi, can’t thank you enough
நன்றி K! ஒருவேளை இதில் நிறைய எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் என்பதால் எழுத்தில் இயல்பாக தோன்றியிருக்கிறது போல… நான் தான் ஜெய், பிரபாகர் என் மாமா பையன் ஆகாஷ். கதைக்காக சில காட்சிகளில் sex quotient-ஐ கூட்டி எழுதியுள்ளேன். உதாரணம் – நாங்கள் அலுவலகத்தில் Service lift-ல் கிஸ்ஸடித்துக்கொள்வோம் ஆனால் கதையில் அது முழு sex session-ஆக விரிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் கயிற்று கட்டிலில் நாங்கள் இன்பம் துய்த்தது அப்படியே நடந்தது. நிஜத்தில் என் அப்பா எனது தன்பால் ஈர்ப்பை உணர்ந்து ஏற்றுக்கொண்டால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஏக்கம் தான் அந்த அத்தியாயம். நானும் ஆகாஷும் கல்யாணத்துக்கு முன் பேசியது கடைசி அத்தியாயத்தில் அப்படியே எழுதியுள்ளேன்…
Ungalodoa feelings than Intha kathaikku uyir nu padikkarappave theinjuthu Karthi, check your inbox.