உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்

உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்

இது உயிரில் கலந்த உறவே தொடர்கதையின் 13-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
புதிய வேலையும், அலுவலகத்தில் ஒன்றாக நிறைய நேரம் என்று ஜெய் மற்றும் பிரபாகரின் காதல் வாழ்க்கை நிறைவாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நேரத்தில் முடியவேண்டுமே. ஜெய் மற்றும் பிரபாகரின் பெற்றோர்கள் அவர்களுக்கு (வெவ்வேறு பெண்களுடன்) கல்யாண வேலை ஆரம்பிக்க கோவிலுக்கு போகிறார்கள். பிரபாகருக்கு ஏதோ தவறாக நடக்கப்போவதாக உள்ளுணர்வு சொல்கிறது.

இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, ஹாலில் வட்டம் போட்டு உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். பிரபாகரும் அம்மாவும் வாக்கிங் கிளம்ப, ஜெய்யின் அப்பா தனசேகர் “இன்னைக்கு கட்டாயம் வாக்கிங் போகனுமா?” என்று கேட்டார். மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ஜெய் சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தான். “என்னாச்சு இவருக்கு?” என்று மனதில் அவன் கேட்டது அப்பாவுக்கு புரிந்தது போல… “நம்ம ஆஃபீஸ்ல சீனியர் மேனேஜர் ஒருத்தர் அவரோட ஃப்ரெண்டு வீட்டு பொண்ணுன்னு இந்த சம்பந்தத்தை கொண்டு வந்தார். பொண்ணு ஃபோட்டோ பார்த்தேன். நம்ம ஜெய்க்கு பொருத்தமா இருப்பான்னு தோணுச்சு… குடும்பமும் நல்ல குடும்பம். அவர் ஞாபகப்படுத்தினதுக்கு அப்புறம் தான் நான் ஏற்கனவே அந்த பொண்ணை அவங்க அப்பாகூட வச்சு ரெஸ்டாரண்டுல பார்த்திருக்கேன்னு ஞாபகம் வந்துச்சு. அவளும் IT-யிலே இருக்குற பொண்ணு தான். Deputations, Onsite-ன்னு உலகம் சுத்தியிருக்கா.. நல்லா sensible-ஆ பேசுனா.. ஜெய்க்கு ஜாதகம் பொருந்தி, அவன் ஓகே செஞ்சான்னா, கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்று சொன்னபடி தன்னுடைய ப்ரீஃப்கேஸில் இருந்து ஒரு கவரை எடுத்து வனஜாவிடம் நீட்டினார்.

“என்னங்க இப்படி திடுதிப்புன்னு அதிர்ச்சி குடுக்குறீங்க… முடிவுன்னெல்லாம் சொல்றீங்க…” ஜெய்யின் அம்மா செல்லமாக கோபித்தவாறே தனசேகரிடம் இருந்து கவரை வாங்கினார். ஃபோட்டோவை பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.

ஜெய்க்கு முகம் கறுத்தது. “எனக்கு கல்யாணம் வேண்டாம்… அவ்வளவு பிடிச்சிருந்தா அவரையே கல்யாணம் பண்ணிக்க சொல்லு… எனக்கு புதுசா சித்தி வர்றதுல ஆட்சேபனை இல்லை” என்று வெடுக்கென்று சொன்னான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“என்னடா அப்பான்னு கூட பார்க்காம இப்படி மரியாதை இல்லாம பேசுறே?” வனஜா ஜெய்யின் தலையில் அடிவைத்தார்.

“விடு வனஜா… எல்லா பசங்களும் பொண்ணுங்களும் கல்யாண பேச்சை எடுத்ததும் வழக்கமா சொல்றது தான்… அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு விட்டுடமுடியுமா?” என்றபடி சோஃபாவில் சரிந்தார்.

“எனக்கு கல்யாணம் வேண்டாம்… நான் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி இல்லை…” ஜெய் கோபத்தோடு எழுந்து தன் அறைக்குள் சென்றான்.

பிரபாகர் செய்வதறியாது அடித்து சார்த்தப்பட்ட அறைக்கதவையும், தனசேகரையும் இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பயந்த பிரிவு இதோ வந்துவிட்டது. இதை தான் சில வாரங்களுக்கு முன்பு பெரியவர்கள் எல்லோரும் கோவிலுக்கு போயிருந்தபோது இவனது உள்மனது இதோ இந்த பிரிவை முன்பே உணர்த்தியிருக்கிறது போல.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

முகம் இல்லாத கில்மா gif image-கள் (உ.ம் tight closeup-ல் ஊம்புவது, ஓழ் வாங்கும் சூத்தை மட்டும் காட்டுவது) உங்களை ஈர்க்குமா?

View Results

Loading ... Loading ...

தனசேகர் பிரபாகரை பார்த்து “உன் ஃப்ரெண்டு என்ன நினைச்சுட்டு இருக்கான்னு கேட்டு சொல்லு? ஒரு வாஜ்பேயி போல இல்லை அப்துல் கலாம் போல கல்யாணம் பண்ணிக்காம நாட்டுக்கு சேவை செய்யப்போறானா?”

பிரபாகரின் வாயில் இருந்து வார்த்தைகள் தத்தளித்தது “மாமா… அது வந்து….”

தனசேகர் பிரபாகரை தன் அருகில் வருமாரு கண்ணால் சைகை செய்தார். பிரபாகர் தயக்கத்துடன் அவர் அருகில் சென்றான். தனசேகர் பிரபாகரின் கையை பிடித்து அவனை தன் அருகில் உட்கார வைத்தார். “பிரபா… ஜெய்யும் நீயும் உங்க வீடுகளுக்கு ஒத்தப்பசங்க… உங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணிவச்சு பேரன் பேத்தி பார்த்து கொஞ்சனும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா? நீங்களும் எத்தனை நாளுக்கு தடிப்பசங்களாட்டும் அலைஞ்சிட்டு இருப்பீங்க… படிச்சீங்க.. நல்ல வேலையிலே சேர்ந்து கையிலே காசு பார்த்துட்டீங்க… ஆன்சைட்டுங்குற பேர்ல உலகத்தையும் சுத்திட்டீங்க.. போதும் போதும்ங்குற அளவுக்கு சுதந்திரத்தையும் அனுபவிச்சுட்டீங்க… இப்போ அடுத்த கட்டத்துக்கு போகவேண்டியது தானே முறை?”

“ம்ம்… ஆமாம் மாமா… ஆனா…”

“என்ன ஆனா..? அவன் யாரையாச்சும் லவ் பண்றானா?”

பிரபாகருக்கு “என்னை தான் மாமா..” என்று சொல்ல வார்த்தைகள் நுணி நாக்கு வரை வந்துவிட்டது. ஆனாலும் வெளியே கொண்டுவர தைரியமில்லை.

“அப்படியே யாரையாச்சும் லவ் பண்ணினா சொல்ல சொல்லு… நல்ல குடும்பம், நல்ல பொண்ணா இருந்தா நானே போய் சம்பந்தம் பேசுறேன்.. நான் லவ்வுக்கு எல்லாம் எதிரி இல்லை பிரபா… அதுக்காக கண்ட கழுதையையும் கூட்டிட்டு வந்தா ஏத்துக்குற அளவுக்கு சேவை மனசும் கிடையாது”

அதை தொடர்ந்து தனசேகர் பேசியது எதுவும் பிரபாகரின் காதிலும் மனசிலும் பதியவே இல்லை. அவனுக்கு ஜெய்யை பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது மட்டும் திட்டவட்டமாக தெரிந்தது. தனசேகர் கொஞ்ச நேரம் மௌனமானதும் அவர் பேசிமுடித்துவிட்டார் என்று யூகித்துக்கொண்டு, எழுந்து தன் அறைக்கு சென்றான் உள்ளே ஜெய் கட்டிலில் குப்புற படுத்திருந்தான். அவன் உடம்பு சீராக வேகமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அவன் இன்னும் தூங்கவில்லை என்பதை உணர்ந்தான் பிரபாகர். ஜெய்யின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் முதுகில் மெதுவாக கைவைத்து “குட்டி… இங்கே பாரேன்” என்று கூப்பிட்டான்.

ஜெய் ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு பிரபாகர் பக்கம் திரும்பினான். “ஜெய்ப்பா… இப்போ வெறும் proposal தானே கொண்டுவந்திருக்காங்க… பொண்ணு photo-வை பாரு… அப்புறம் react பண்ணு” என்றான்.

ஜெய்யின் முகம் கோபத்தால் சிவந்தது. “So.. என்னை கழற்றிவிட்டுட்டு உன்னோட Line-ஐ clear ஆக்கிக்கிட்டு நீ அடுத்தவன் கூட படுக்கப்போறியா?”

“மெதுவாடா..” பிரபாகர் பதற்றத்தோடு அவனை அடக்கினான்.

“என்னவோ போன மாசம் பெருசுங்க எல்லாம் கோவிலுக்கு போன அன்னைக்கு எனக்கு பயமா இருக்கு குட்டி… என்னை விட்டுட்டு போயிடாத குட்டின்னு அப்படி அழுதே… இன்னைக்கு என்னை வெட்டிவிட்டுட்டு போயிடலாம்னு அவர் கூட ஆடுறியா?… எல்லாம் கொஞ்ச நாளா உன்னோட அந்த குண்டு மாதவ் உனக்கு தினமும் Good Morning Buddy, Good Night Buddy, Sweet Dreams Buddy-ன்னு மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்…” ஜெய் வெடித்தான்.

“குட்டி… ஏன் இதுல அப்பாவி அவனை இழுக்குறே? அப்போ என்னை பத்தி இவ்வளவு மட்டமா தான் அபிப்பிராயம் வச்சிருக்கியா?” – பிரபாகர் குரலில் வேதனை தொனித்தது.

“பின்னே என்ன… அவர் சொன்ன உடனே மனசை மாத்திக்கிட்டு என்னை விட்டுட்டு போறேங்குற… மாமா நான் ஜெய் கூட தான் வாழப்போறேன்னு என் கூட நிக்கமாட்டே? அவ்வளவு கோழையாடா நீ.. உன்னையாடா நான் கடைசி வரைக்கும் கூடவே வருவேன்னு நம்பினேன்.. காதலிச்சேன்?”

“ஜெய்ப்பா… நான் இன்னும் உன்னை தான் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்… கடைசிவரைக்கும் காதலிச்சுட்டே இருப்பேன். ஆனா இப்போ என்னோட காதல்னு சுயநலமா யோசிக்கிறதை விட ஒரு அப்பாவா அவரோட ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பு குடுக்குறது தான் பெருசுன்னு தோணுது… அதுவும் இல்லாம அவர் என்னை நம்பி, என் கிட்டே நேரடியா உன்னை சமாதானப்படுத்த சொல்லும்போது நான் என்ன பண்றது?”

“அப்போ நீ என்னை விட்டுட்டு சந்தோஷமா இருப்பியா?”

“அப்படி நான் எப்போ சொன்னேன்…”

“எனக்கு நீ சொல்றதுல நம்பிக்கை இல்லை… நீ சட்டுன்னு மனசை மாத்திக்கிட்டு என்னை சமாதானப்படுத்துறத பார்த்தா நீ எப்படா என்னை கழற்றிவிடலாம்னு சந்தர்ப்பம் பார்த்துட்டு இருந்தது மாதிரியும், இப்போ அப்படி ஒரு சூழ்நிலை வந்ததும் அதை உன்னோட advantage-க்கு use பண்ணிக்கிற மாதிரியும் தான் எனக்கு தோணுது” ஜெய் கோபமாக சொல்லிவிட்டு தலையை திருப்பிக்கொண்டு குப்புற படுத்துக்கொண்டான்.

பிரபாகருக்கு இப்போது அவனிடம் பேசி ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று மட்டும் தோன்றியது. அவனுக்கு மனது பாரமாக இருந்தது. ஹாலில் விளக்குகள் அணைக்கப்பட்டு, வீட்டின் அரவம் அடங்கிய பிறகும் வெகு நேரத்துக்கு தூக்கம் வரவில்லை. பக்கத்தில் ஜெய்யை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் உடம்பு இப்போது அசைவில்லாமல் அடங்கியிருந்தது. அதனால் ஜெய் தூங்கிவிட்டான் என்று பிரபாகர் முடிவு செய்துக்கொண்டான். பிரபாகர் தன் உடம்பி எழுப்பி கொஞ்ச நேரம் ஜெய்யின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். ஜெய்யின் கன்னத்தில் முத்தம் வைக்கவேண்டும் என்ற தனது ஆசைக்கு கஷ்டப்பட்டு கடிவாளம் போட்டான்.

அதன் பிறகு எப்போது தூக்கம் வந்தது என்று பிரபாகருக்கு தெரியவில்லை.. மொபைல் கடிகாரத்தில் காலை 02:30 மணியை பார்த்தது அவனுக்கு நினைவில் இருந்தது. காலையில் ஜெய் குளித்துவிட்டு பனியனும், formal pants-ம் போட்டுக்கொண்டு பிரபாகரை தட்டி எழுப்பிவிட்டு ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஹாலுக்கு போனபோது, கண்ணை முழிக்கமுடியாமல் பிரபாகரின் கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சியது. இருந்தாலும் பொழப்ப பார்க்கணுமே என்று நினைத்துக்கொண்டு பிரபாகர் அன்றைய ஓட்டத்தை தொடங்கினான். பிரபாகர் குளித்துவிட்டு துண்டோடு தன் அறைக்குள் போனபோது ஜெய் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பிரபாகர் உடை மாட்டிக்கொண்டு வந்தபோது ஜெய் வண்டியில் உட்கார்ந்து பிரபாகருக்காக காத்திருந்தான்.

“டேய்… அவன் சாப்பிடட்டும்டா… கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று அம்மா பிரபாகருக்காக பரிந்து பேசியது அவன் காதில் கட்டாயம் விழுந்திருக்கும்… ஆனாலும் ஜெய் வண்டியில் இருந்து இறங்கவில்லை.

“பரவாயில்லைங்க அத்தை… நான் கேண்டீன்ல ஏதாச்சும் சாப்பிட்டுக்குறேன்… அவனுக்கு என்ன அவசரமோ..” என்று சொல்லிவிட்டு பிரபாகர் ஓட்டமும் நடையுமாக வண்டியில் ஏறிக்கொள்ள, ஜெய் தன் கோபத்தை கிக்கரில் உதைத்து காண்பிக்க, அது கதறியபடி என்ஜினை ஸ்டார்ட் செய்து சைலன்சர் வழியாக புகையை கக்கி வண்டி தன்னுடைய கோபத்தை வெளியேற்றியது. தங்கள் ஏரியாவை தாண்டியதும் ஜெய் தன் கையை இழுத்துக்கொள்வான் என்று பிரபாகர் காத்திருக்க, ஜெய் ஆஃபீஸில் சென்று இறங்கும் வரைக்கும் எதுவும் பேசவில்லை. பிரபாகருக்கு உலகமே கறுப்பு வெள்ளைக்கு மாறுவது போல இருந்தது.

அடுத்தடுத்த நாட்களில் பொழுதுகள் மாறினாலும், காட்சிகள் மாறாமல் அப்படியே தான் இருந்தது. தனசேகர் தினமும் பிரபாகரிடம் ஜெய் கல்யாணத்தை பற்றி என்ன சொல்கிறான் என்று கேட்பதும், ஜெய் பிரபாகரை ஒரு பொருட்டாகவே மதிக்காததும் பிரபாகரை நெருப்பில் இட்ட புழு போல துடிக்க வைத்தது. அப்போது தான் அவனுக்கு தனக்கென்று ஒரு personal space இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

அடுத்த நாள் மாலை ஜெய் Parking Lot-க்கு வந்து பிரபாகருக்காக காத்திருக்கும்போது, பிரபாகருக்கு பதிலாக அவனுடைய ஆழைப்பு தான் வந்தது. “குட்டி… CR Development வேலை கொஞ்சம் அதிகமா இருக்குடா.. அது மட்டுமில்லாம P1 issues வேற வந்திருக்கு… முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியாது.. எனக்காக வெயிட் பண்ணாம நீ கிளம்புடா” என்றான். ஜெய்க்கு ஏமாற்றமாக இருந்தது. என்ன தான் அவனுக்கு பிரபாகர் மீது கோபம் இருந்தாலும், அவன் அருகில் இருப்பதே ஜெய்க்கு போதுமானதாக இருந்தது. தனியாக பைக்கில் வீட்டுக்கு போகும்போது ஜெய்யை தனிமை வாட்ட தொடங்கியது.

அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டார்கள்… “இவன் இன்னும் வரலையே” என்று ஜெய்க்கு பதற்றமாக இருந்தது. குட்டிப்போட்ட பூனை போல இங்கும் அங்கும் உலாத்திக்கொண்டிருந்தான். ஜெய்யின் அழைப்புகளுக்கும், WhatsApp message-களுக்கும் பதிலில்லை… அவன் WhatsApp-பின் “Last Seen” மாலை ஐந்து மணியை காட்டியது. கிட்டத்தட்ட பதினொரு மணிக்கு கேட் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு ஜெய் ஓடிச்சென்று கதவை திறந்தான்.

பிரபாகர் களைப்பாக உள்ளே வந்தான். ஜெய்யை பார்த்ததும் ஒரு புன்னகை வெளிப்பட்டு சட்டென்று அடங்கியது.

“ஏண்டா இவ்வளவு நேரம்?”

“வேலை அதிகம்டா” பிரபாகர் குணிந்து ஷூவை கழற்றியபடி சாமர்த்தியமாக ஜெய்யின் பார்வையை தவிர்த்து பதிலளித்தான்.

“சரி! கை கழுவிட்டு வா… சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

“இல்லை… கேண்டீன்லயே சாப்பிட்டுட்டேன்”. அதற்கு மேலே உரையாடலை தொடரவிடாமல் பிரபாகர் துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு போனான்.

ஜெய்க்கு அடிபட்ட புலி போல கோபம் பொங்கியது. இவனுக்காக முழிச்சுட்டிருந்த என்னை செருப்பால அடிக்கனும் என்று மனதுக்குள் பொறுமிக்கொண்டே வராண்டாவின் கிரில் கதவை அடித்து சார்த்திவிட்டு தன் அறைக்குள் சென்று படுக்கையில் பொத்தென்று விழுந்தான். பிரபாகர் அவன் பக்கத்தில் வந்து படுக்க ரொம்ப நேரம் ஆனது. தன் மீது கை/கால் போடுவான் என்று காத்திருந்த ஜெய்க்கு, பிரபாகர் மல்லாக்க படுத்து தன் நெஞ்சில் மேல் கையை கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தது எரியும் கோபத்தீயில் மேலும் எண்ணெய் ஊற்றியது.

அடுத்த 2-3 நாட்களுக்கு இதே கதை தொடர்ந்தது. ஒரு சனிக்கிழமை காலை பிரபாகர் சாப்பிட உட்கார்ந்தபோது ஜெய்யின் அம்மா வனஜா அவனுக்கு தட்டில் இட்லி எடுத்து வைத்தார்.

“அத்தை… ஆஃபீஸ்ல வேலை அதிகமாயிட்டே போகுது… தினமும் வீட்டுக்கு வர நடுராத்திரி ஆயிடுது..”

“நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் பிரபா… நீ லேட்டா வர்றது மட்டுமில்ல.. எல்லாத்தையும் தான்” என்றார்.

“இல்லைங்க அத்தை… ஜெய்க்கு கொஞ்சம் டைம் குடுங்க… எல்லாம் சரியாயிடும்”

“ம்ம்.. பாக்கலாம். கல்யாண பேச்சை ஆரம்பிச்சதுல இருந்து வீடு எழவு வீடு மாதிரி அமைதியா ஆயிடுச்சு”

“ஐயோ அத்தை… சுபகாரியம் ஆரம்பிக்கிறப்போ என்ன இது.. இப்படி பேசிக்கிட்டு… எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்”

வனஜா பிரபாகரின் தட்டு காலியாவதை பார்த்து மேலும் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்தார்.

“போதும் அத்தை… அப்புறம் நான் இன்னும் ஒன்னு சொல்லனும்..” பிரபாகர் தயங்கினான்.

“என்ன பிரபா?”

“அத்தை… வேலை அதிகமா இருக்குறதால தினமும் வீட்டுக்கு லேட்டா வர கஷ்டமா இருக்கு… அதனால நான் ஆஃபீஸ் பக்கத்துலேயே மேன்ஷன்ல ரூம் பார்த்துட்டு போயிடலாம்னு இருக்கேன்..”

“ஏன் பிரபா? ராத்திரியிலே பஸ் புடிச்சு வர கஷ்டமா இருக்குன்னா ஊர்ல இருக்குற உன்னோட பைக்கை எடுத்துட்டு வந்தா பிரச்சனை தீருது… எதுக்கு இந்த ஊர்ல உனக்கு யாருமே இல்லைங்குற மாதிரி அனாதையாட்டும் வேற ரூமுக்கு போறே?”

ஹாலில் இருந்து ஜெய் சத்தமாக பதிலளித்தான் “அம்மா… சாருக்கு நாம எல்லாம் பழசாயிட்டோம்… அலுத்துபோயிட்டோம்… அவரு புது ஃப்ரெண்டு மாதவ் கூட மேன்ஷன்ல ஜாலியா இருக்கலாம்னு போறாரு… நீ ஏம்மா தடுக்குறே? கப்பல் மூழ்கும் போது அதுல இருக்குற எலிங்க தான் முதல்ல தப்பிக்க முயற்சி பண்ணுமாம்… அவன் சாதா எலி இல்லை… கொழுத்த பெருச்சாளி.. சரியான நேரத்துல தப்பிச்சுட்டு போறான்… உனக்கு என்னம்மா கவலை?” – ஜெய்யின் குரலில் கோபம் கொப்பளித்தது.

பிரபாகர் நிதானமாக “இல்லைங்க அத்தை… நானும் அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறதா நினைச்சுட்டு அவன் என் மேலே கோபத்துல இருக்கான்… கொஞ்ச நாள்ல அவனுக்கும் நிதர்சனம் புரியும்.. அப்போ அவன் என்னை புரிஞ்சுக்குவான்” என்றான்.

“சரி! ரூம் பாக்கறதுக்கு முன்னாடி செல்வியையும் பன்னீரையும் வரச்சொல்லு.. நான் அவங்க கிட்டே பேசிட்டு தான் உன்னை தனியா அனுப்பமுடியும்”

“நான் ஏற்கனவே ரூமுக்கு சொல்லிட்டேன் அத்தை… போன புதன் கிழமையிலே இருந்து வாடகை குடுக்க ஆரம்பிச்சுட்டேன்… அதனால இன்னைக்கே கிளம்புறேன்”

வனஜாவுக்கும் கோபம் வந்தது அவர் முகத்தில் தெரிந்தது. “ஆக… எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு கடைசில வெறும்னே செய்தி சொல்றே?”

“அம்மா… மனுஷங்களோட சுயரூபம் இப்போ புரியுதா? சீரியல்ல மட்டும் பார்த்த இந்த டுவிஸ்டை நிஜ வாழ்க்கையிலே எதிர்பாக்கலை இல்லை?” ஜெய் நக்கலாக சிரித்தான்.

பிரபாகர் நிதானமாக சாப்பிட்டுவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு சென்றான். கை கழுவிவிட்டு அறைக்கு சென்று தன்னுடைய பொருட்களை எல்லாம் pack செய்து வராண்டாவுக்கு கொண்டு வந்து வைக்க சில நடைகள் பிடித்தது.

அவனுடைய மூட்டை முடிச்சுகளின் எண்ணிக்கையையும் அளவையும் பார்த்துவிட்டு “மொத்தமா போறியா பிரபா?” என்று கேட்டபோது வனஜாவுக்கு கோபத்தையும் மீறி அழுகை வந்தது.

பிரபாகர் கால் டாக்ஸிக்கு அழைத்து விலாசம் சொல்ல, வனஜா “ஊருக்கு போயிருக்குற மாமா வரட்டுமேடா பிரபா… அவர் உன்னை ரூம்ல கொண்டுபோய் விடுவாரு” என்றார். ஆனால் பிரபாகர் விலாசம் சொல்லி முடிக்க, இனி அவனை நிறுத்தமுடியாது என்று புரிந்தது.

“விடும்மா… நடுவுல வந்தான்… நடுவுல போறான்… இதுல நீ அழறதுக்கு என்ன இருக்கு” ஜெய் அம்மாவின் தோள்களில் கைவைத்து தேற்றினான். அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் கால் டாக்ஸி வந்து பிரபாகர் மொத்தமாக அந்த வீட்டில் இருந்து காணாமல் போனான்.

இந்த உயிரில் கலந்த உறவே இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 10/10/2016
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top