Home தொடர்கதைகள் உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்

உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்

by காதல்ரசிகன்
6 minutes read
A+A-
Reset
இந்த உயிரில் கலந்த உறவே தொடரின் 14-வது அத்தியாயம், காதல்ரசிகன்-ஆல் தொடர்கதைகள் என்ற வகையினத்தில் கீழ் 2016-10-26 10:03 அன்று எழுதப்பட்டது.

முன் கதை சுருக்கம்...
ஜெய்யின் அப்பா தனசேகர் நண்பர் மூலமாக அஞ்சலி என்னும் பெண்ணின் ஜாதகத்தை கொண்டுவருகிறார். அஞ்சலி தங்கள் குடும்பத்துக்கேற்ப இருப்பதாக தனசேகர் கல்யாண பேச்சை தீவிரமாக்குகிறார். பிரபாகர் தான் அருகில் இருக்கும் வரை ஜெய் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான் என்று வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

Just ஒரு கேள்வி...

நீங்கள் LGBT மனிதர்களை பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் / webseries பார்ப்பீர்களா?

View Results

Loading ... Loading ...

பிரபாகர் வீட்டை விட்டு வெளியேறி இன்றோடு ஏழாவது நாள் முடிகிறது. ஜெய்க்கு ஆரம்பத்தில் பிரபாகர் மீது கோபம் இருந்தாலும், என்றாவது ஒரு நாள் அவனோடு சேர்ந்து வாழ்வோம் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் பிரபாகர் ஒரேயடியாக வெட்டிக்கொண்டு போனதில் முதலில் நிலை குலைந்தது அவன் தான். பிரபாகர் தன் வீட்டை விட்டு வேறு ரூமுக்கு போவதாக முன்னமே சொல்லியிருந்தால் அவனை பிரிவதை ஏற்றுக்கொள்ள மனது பக்குவப்பட்டிருக்கும். ஆனால் தான் வெளியேறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் பிரபாகர் சொன்னதால், அது உண்மையாக நடந்துவிட்டது என்ற உண்மை உரைக்கும் முன்பே அவன் தன்னை பிரிந்துவிட்டு போனதை ஜெய்யின் மனது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனும் கிட்டத்தட்ட நடைபிணம் போல ஆனான்.

பிரபாகர் பக்கத்தில் இருந்த வரைக்கும் அவனை வார்த்தைகளால் குத்திக்கிழித்து தன்னுடைய அன்பை கோபம் போல வேடமிட்டு வெளிக்காட்டிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது பிரபாகர் இல்லாதது அவன் வாழ்க்கையில் ஒரு வெறுமையை கொண்டுவந்திருந்தது. படுத்துக்கொண்டு தன்னுடைய மொபைலில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த “நெருக்கமான” தருணங்களில் எடுத்த பலான ஃபோட்டோக்களை பார்த்து, அந்த சந்தோஷமான தருணங்களை அசைபோட்டுக்கிண்டிருந்தான்.

Random கதைகள்

ஜெய் மொபைலில் தன்னிச்சையாக Swipe செய்துக்கொண்டிருந்தபோது தனக்கு கை ஒடிந்ததபோது எடுத்த ஃபோட்டோக்கள் வந்தன.. ஒரு ஃபோட்டோவில் பிரபாகர் ஜெய்க்கு அரிசி கஞ்சி ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தான். மற்றொரு ஃபோட்டோவில் ஒரு சாக்லேட்டின் இரு முனைகளையும் இருவரும் தங்கள் உதட்டால் கடித்து “ஃப்ரெஞ்சு கிஸ்ஸுக்கு” தயாராகிக்கொண்டிருந்தார்கள். அந்த சாக்லேட் இருவரின் வாயிலும் கரைந்தவுடன் உதடுகள் வெறித்தனமாக ஆக்கிரமித்த நினைவு ஜெய்யின் கண்ணில் கண்ணீரை துளிர்க்கவைத்தது.

அடுத்த ஃபோட்டோவில் ஜெய்யின் உடைந்த கையின் மாவுக்கட்டில் “Get Well soon” என்று பிரபாகர் கையெழுத்து போட்டிருந்தான். “எனக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா அப்படி பதறுனானே… ஆனா சட்டுன்னு விட்டுட்டு போகுற அளவுக்கு எப்படி தான் மாறுனான்?” ஜெய் இன்னும் நடந்தவற்றை நம்பமுடியாமல் இருந்தான். அடுத்த ஃபோட்டோவில் ஹாலில் டிவி பார்க்கும்போது கையை கோர்த்துக்கொண்டு கிஸ்ஸடித்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக்கிழமை ஆனா ராத்திரி முழுக்க டிவியிலே படம் போட்டுக்கிட்டு சோஃபாவுல நாங்க தனியா வேற பிட்டு படம் காட்ட.. எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு… இப்படி இந்த வெள்ளிகிழமை என்னை தனியா புலம்ப விட்டுட்டானே என்று பிரபாகர் மீது கோபம் தான் வந்தது.

வேலை விஷயமாக வெளியூர் போயிருந்த தனசேகர் செவ்வாய்க்கிழமை வந்தபோது வீட்டின் அமைதியை கண்டு அவரும் எதுவும் பேசாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார். பிரபாகர் வீட்டில் இருந்து கிளம்பியதும் வழியிலேயே தனசேகருக்கு மொபைலில் அழைத்து தான் வெளியேறுவதை சொல்லிவிட்டான். இப்போது அதை பற்றி பேசவேண்டாம் என்று தனசேகரும் கொஞ்ச நாள் அமைதி காத்தார்.

ஜெய்… டின்னர் சாப்பிட்டுட்டியா?” – டைனிங் டேபிளில் இருந்து குரல் கொடுத்தார் தனசேகர்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“ம்ம்… என்று முனகலை மட்டும் ஜெய் பதிலாக கொடுக்க, “அவன் இன்னும் சாப்பிடலை…” என்றார் வனஜா.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கே பதியப்படும் சுட்டகதைகளில் நீங்கள் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

ஜெய்.. இங்கே வா” – தனசேகர்.

அறைக்குள் இருந்து “என்ன விஷயம்ப்பா?” – பலகீனமாக ஜெய்யின் குரல் கேட்டது.

“உன்னோட கல்யாண விஷயம் பத்தி இல்லை… தைரியமா வா” என்று சொன்னபடி டிவியில் சேனல் மாற்றினார். சன் மியூசிக் சேனலில் ஏ.ஆர் ரஹ்மான் தனது இளமை குரலில் படத்தில் இல்லாத கேரக்டரான முஸ்தஃபாவை கவலைப்படாமல் இருக்கும்படி “Don’t worry Mustafa” என்று பாடிக்கொண்டிருந்தார்.ஜெய் தன் அறையில் இருந்து வெளியே வந்து டைனிங் டேபிளில் தனசேகர் எதிரில் உட்கார்ந்தபோது அவன் கண்கள் அந்த பாடலில் குத்திட்டு நின்றது. திரையில் வரும் வினீத்தும் அப்பாஸும் செய்த அத்தனை செயல்களையும் தானும் பிரபாகரும் செய்திருந்தது அவன் கண்ணில் நிழலாடியது. ஜெய் டிவியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஜெய்… பிரபாவை ஆஃபீஸ்ல பார்த்தியா?” – தன்சேகர் நிதானமாக கேட்டார்.

வனஜா முந்திக்கொண்டு பதில் சொன்னார். “அவன் தான் நாமல்லாம் வேணாம்னு சட்டுன்னு எல்லாதையும் உதறிட்டு போயிட்டானே.. அவனை பத்தி இவன் எதுக்கு கவலைப்படனும்? நான் அவனை என்னைக்கோ மறந்துட்டேன்… உங்க தங்கச்சி பையன்னு நீங்க பார்க்குறதுன்னா வெளியே வெச்சு பார்த்துக்கோங்க.. அதை வீட்டுல வந்து பீத்திக்கவேணாம்” என்று சிடுசிடுக்க, தனசேகர் வனஜாவை ஒற்றை கோபப்பார்வையாலே அடக்கினார்.

ஜெய்யின் கைகளை எடுத்துக்கொண்டு ஜெய்… உன் கிட்டே பிரபாவை ஆஃபீஸ்ல பார்த்தியான்னு கேட்டேன்” என்று மென்மையாக கேட்டார்.

ஜெய்யின் பார்வை இன்னும் முஸ்தஃபாவின் மூழ்காத ஃப்ரெண்ட்ஷிப்பிலேயே நிலைகுத்தியிருந்தது.

தனசேகர் அந்த பாட்டு முடியும்வரைக்கும் பொறுமையாக இருந்தார். விளம்பர இடைவேளை தொடங்க, மூன்றாவது முறையாக “ஜெய்.. பிரபாவை ஆஃபீஸ்ல மீட் பண்ணுனியா?” என்று கேட்டார்.

“இல்லை..”

“முஸ்தஃபா பாட்டை என்னவோ இன்னைக்கு தான் மொத தடவையா பாக்குற மாதிரி அப்படி வெறிச்சு வெறிச்சு பாத்தே… நீ அவனை மிஸ் பண்றியா?”

“நான் ஏன் அவனை மிஸ் பண்ணனும்? இத்தனை வருஷமா அவன் இல்லாம தானே இருந்தேன்… இப்போ ஒரு வருஷமா தானே அவன் வந்தான்… வந்த மாதிரியே திரும்ப போயிட்டான்… நான் அவன் இல்லாம இருக்க பழகிக்குவேன்..” ஜெய் வார்த்தையை மென்று முழுங்காமல் நிதானமாக தெளிவாக பேசினான்.

“ம்ம்… பழகிக்குவேன்..” தனசேகர் ஜெய்யின் வாயிலிருந்து வந்த வார்த்தையில் இருந்து கொக்கியை எடுத்தார். மெல்லிய புன்னகையோடு ஜெய்யின் கையை எடுத்து மெதுவாக விரல்களை ஒவ்வொன்றாக பிரித்து அதனிடையே தன்னுடைய விரல்களை பொருத்தினார். ஓரிரு நிமிடங்கள் ஹாலில் டிவியின் விளம்பர சத்தத்தை தவிர வேறெதுவும் கேட்கவில்லை.

“சரி வா! நான் டிரஸ் மாத்திட்டு வர்றேன்… உனக்கு அவன் இருக்குற மேன்ஷன் தெரியுமா?”

“என்ன உங்க தங்கச்சி பையனை தேடிட்டு போறீங்களாக்கும்… அப்படியே பாசம் பொங்கி வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துடாதீங்க… அப்புறம் நான் வீட்டுல இருக்கமாட்டேன்”

ஜெய்… ரெடியாயிரு” வனஜாவின் முனுமுனுப்பை பொருட்படுத்தாமல் தன் அறைக்கு சென்று டி-ஷர்ட் மாட்டியபடி வெளியே வந்தார். கார் அவர்கள் இருவரையும் சுமந்துக்கொண்டு வெளியேறியது. “கேட்டை சாத்துறதுக்கு மட்டும் நான் வேலைக்காரி..” திட்டிக்கொண்டே வனஜா காம்பவுண்ட் கதவை சாத்தினார்.

அந்த ஏரியா முழுவதும் மேன்ஷன்களாக இருந்ததால் இவர்கள் கார் அந்த ஜனநெருக்கடியில் ஊர்ந்து தான் செல்ல முடிந்தது. ஆரம்பத்தில் ஜெய் பிரபாகரின் மொபைலுக்கு அழைக்காமல் அவனுக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கலாம் என்று நினைத்தது அவனுக்கே வினையாகி போனது. பிரபாகரின் எண்ணை அழைத்தால் ஒரு இனிமையான பெண்குரல் வாடிக்கையாளர் தன் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டதாக பணிவாக சொல்லிக்கொண்டிருந்தது. இவர்கள் அந்த ஏரியாவுக்கு போகும்போது இருட்டிவிட்டதால் சோடியம் வேப்பர் விளக்கொளி வெளிச்சத்தில் பிரம்மச்சாரிகள் மெஸ்ஸுக்கும் ரூமுக்குமாக நடந்து தெருவை அடைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஜெய்… பிரபா எந்த மேன்ஷன்ல இருக்கான்னு தெரியுமா?”

“அவனை ரீச் பண்ணவே முடியலைப்பா… அனேகமா அவன் மாதவ் ரூம்ல தான் இருக்கனும்…” என்று சொல்லிவிட்டு மாதவின் சேமிக்கப்படாத எண்ணை தன்னுடைய வாட்ஸப் குரூப் செய்திகளில் தேடினான்.

“மாதவ்… நான் ஜெய் பேசுறேன்… பிரபாகரோட கஸின்”

சொல்லு ஜெய்… நானே உன்னை ரீச் பண்ணனும்னு நினைச்சேன்… பிரபாகர் 2 நாளா ஆஃபிஸுக்கு வரலை.. மேனேஜர் கத்திட்டு இருக்கான்… நான் தான் அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஒரு மாதிரி சமாளிச்சு வச்சிருக்கேன்.. திங்கட்கிழமை அவன் வரலைன்னா பெருசா ஏதோ நடக்கும்…”

“What???… ரெண்டு நாளா வரலையா?”

“உனக்கு தெரியாதா?”

“நாங்க அவன் உன்னோட தங்கியிருக்கான்னு நினைச்சிட்டு இருக்கோம்…”

“இல்லை… அவன் KJR Mansion-ல ரூம் பார்த்திருந்தான்.. அங்கே விசாரிக்கலாம்… ஜெய்! All OK? Is anything serious?”

“இருக்காது மாதவ்.. நான் அவனை கண்டுபிடிச்சுட்டு உன்னை கூப்பிடுறேன்…”

KJR Mansion-ன் reception-ல் ஜெய்யும் தனசேகரும் பதற்றத்தோடு நின்றுக்கொண்டிருக்க, மேனேஜரும் இன்னொரு தயிர்சாதப்பையனும் இவர்களை “சிக்குனாண்டா சேகரு” என்பது போல ரம்பம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

“சார்! அவர் வரும்போது ரொம்ப டீசெண்டா IT-ஆள் போல இருந்ததால தான் ரூம் குடுத்தேன்… அதுமட்டும் இல்லாம Rent-ம், advance-ம் ரெண்டும் முன்னாடியே கரெக்டா குடுத்துட்டாரு… ஆனா வந்தப்புறம் அவரோட நடவடிக்கை எல்லாம் சைக்கோ மாதிரி இருக்கு… ”

“ஆமாங்க… நான் தான் அவர் ரூம்மேட்.. ரெண்டு மூணு நாளா எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கு.. நடு ராத்திரியிலே என்னவோ உறுத்துற மாதிரி இருக்குன்னு திடுக்குன்னு முழிச்சு பார்த்தா அந்த ஆளு எழுந்து உட்கார்த்து விட்டத்தை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கார்… இன்னைக்கு காலையிலே ஆஃபீஸ் கிளம்புனப்போ எப்படி உட்கார்ந்திருந்தாரோ சாயங்காலம் வந்து பார்த்தா அதே பொசிஷன்ல சிலை மாதிரி உட்கார்ந்திருக்கார்… நான் கூட மூச்சு இருக்கான்னு அவரை ஒரு தடவை தொட்டுப்பார்த்தேன்… நான் ஃப்ரெஷ் ஆயிட்டு பாத்ரூமில இருந்து வந்து பார்த்தா ரூம்ல ஆளை காணோம்…

மேனேஜர் பேச்சை Takeover செய்தார்… “சார்! அவர் தற்கொலை மாதிரி ஏதாச்சும் பண்ணிட்டா என் பொழப்பு கெட்டு போயிடும்… உங்க சொந்தக்காரர்னா நீங்களே அவரை ஏதாச்சும் நல்ல மெண்டல் டாக்டர் கிட்டே கூட்டிட்டு போங்க சார்”

அப்பா காரை மெதுவாக ஓட்ட, ஜெய் தன் பார்வையை கூர்மையாக்கிக்கொண்டு தாங்கள் கடந்து போகும் ஒவ்வொரு மனித முகத்தையும் scan செய்துக்கொண்டிருந்தான். தனசேகர் காரை ஒரு ஓரமாக நிறுத்தினார். அந்த ஏரியாவின் கடைசியில் ஒரு சேரியின் ஆரம்பித்தது. இரண்டையும் ஒரு ரயில் தண்டவாளம் பிரித்து வைத்தது. அந்த ரயிலிவே கேட்டுக்கு அருகில் குப்பைமேட்டுக்கு அடுத்து இருந்த ஒரு சிறிய கல்வெட்டின் மேலே பிரபாகர் கைகளை கல்வெட்டில் ஊன்றிக்கொண்டும், கால்களை தொங்கப்போட்டுக்கொண்டும், தன் கால்களுக்கருகே சில எச்சில் இலைகளை சுற்றி தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டிருந்த தெரு நாய்களை வெறித்து பார்த்து உட்கார்ந்திருந்தான்.

தனசேகர் ஜெய்யிடம் அவனை சுட்டிக்காட்ட, ஜெய் கார் கதவை திறந்து ஓட்டமும் நடையுமாக சென்று பிரபாகரின் தோளை தொட்டான். பிரபாகர் தலையை நிமிர்த்தி பார்த்தான். அவன் முகத்தில் சந்தோஷம் கோபம் பரிதாபம் என எந்த உணர்ச்சியும் இல்லை. ஜெய் அவனை தோளை பிடித்து இழுக்க, பிரபாகர் சாவி கொடுத்த பொம்மையாக அவனுடன் நடந்துவந்தான்.

தனசேகர் வெயிட்டரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு 20-30 நிமிஷம் கழித்து சாப்பாட்டை கொண்டுவந்தால் போதுமானது என்று தங்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்பதை நாசூக்காக சொன்னார். தனசேகர் இவர்களோடு பேசவேண்டும் என்பதற்காக NH-ல் உள்ள ஒரு Dhaba Restaurant-ன் A/C Hall-க்கு அழைத்து வந்திருந்தார். ஜெய்யும் பிரபாகரும் தனசேகரும் எதிரில் டேபிளில் உட்கார்ந்திருக்க, தனசேகர் இருவரின் முகத்தையும் தீர்க்கமாக பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.

“பேசுங்க… ஏன் இப்படி ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க?”

“மாமா… அது…”

ஜெய்.. பிரபா… நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொல்லனும்…” என்று சொன்னவாறே தன்னுடைய மொபைலை திறந்து என்னவோ எடுத்து ஜெய் மற்றும் பிரபாகர் இருவரிடமும் நீட்டினார். ஜெய்க்கும் பிரபாகருக்கும் அதிர்ச்சியில் கண்கள் விரிய, வாயிலிருந்து சத்தம் வராமல் உறைந்துபோனார்கள்.

தனசேகரின் மொபைலில் ஒரு screenshot இருந்தது.. அதில் ஜெய்யும் பிரபாகரும் எடுத்த “நெருக்கமான” போட்டோக்கள் இருந்த ஜெய்யின் iCloud account-ன் screenshot… அதில் Thumbnail-களாக ஜெய்யும் பிரபாகரும் உதட்டோடு உதடு வைத்து கிஸ்ஸடித்துக்கொண்டும், பப்பி ஷேமாக சில ஃபோட்டோக்களில் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

“உங்களுக்குள்ளே இருக்குற physical relationship எனக்கு தெரியும்… அதனால ரெண்டு பேரும் புதுசா யோசிச்சு கதை விடாம உண்மையை மட்டும் பேசுங்க…”

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்

Leave a Comment

Free Sitemap Generator