உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்

உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்

இது உயிரில் கலந்த உறவே தொடர்கதையின் 24-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஜெய்க்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் ஆகப்போகிறது என்று நம்பும் பிரபாகர், ஜெய் தனியாளாக கொண்டாடப்போகும் கடைசி பிறந்த நாளுக்கு Birthday present ஆக ஒரு Bluetooth speaker வாங்கி கொடுக்கிறான். ஆனால் ஜெய் அதைவிட பிரபாகருடன் அம்மணமாக கட்டிப்பிடித்து படுப்பதே சிறந்த பரிசு என்று சொல்ல, பிரபாகர் சந்தோஷமாக அதையும் கொடுக்கிறான்.

“வாங்க… வாங்க…” தனசேகரும் வனஜாவும் வாசலில் வந்து அஞ்சலியின் குடும்பத்தினரை வரவேற்றார்கள். “வாம்மா…” என்று வனஜா அஞ்சலியின் தோளில் கைபோட்டு Special-லாக உள்ளே அழைத்துச்சென்றார். ஜெய்க்கும் அஞ்சலிக்கும் இந்த திடீர் நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்தாலும் தங்கள் எதிர்ப்பை காட்டக்கூடிய நிலையில் இல்லை.

“நாள் நல்லா இருக்கு… இன்னைக்கு விட்டா அடுத்த நாள் வர்றப்போ நாங்க வெளியூர் போகவேண்டிய அவசியம்… அதனால திடீர்னு வந்துட்டோம்… மாப்பிள்ளைக்கு இதிலே சிரமம் எதுவும் இல்லையே?” அஞ்சலியின் அப்பா தன்னுடைய அவசரத்துக்கு நியாயம் கற்பித்துக்கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

“சரி! நீங்க பேசிட்டு இருங்க.. நான் எல்லாருக்கும் பலகாரம் எடுத்துட்டு வர்றேன்…” வனஜா எழுந்திருக்க, “நானும் வர்றேங்க Aunty” என்று பின்னாலேயே எழுந்தாள் அஞ்சலி. வனஜாவுக்கு பயங்கர பூரிப்பு.. “வா!” என்று மீண்டும் அஞ்சலியின் தோளில் கை போட்டு கிச்சனுக்கு அழைத்துச்சென்றார். ஜெய்க்கு இவர்கள் எப்போது கிளம்புவார்கள் என்று பரபரப்பாக இருந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“சரிங்க… கிளம்புறோம்” அஞ்சலியின் பெற்றோர்களும் கூட வந்த உறவினர்களும் எழுந்து கைகூப்ப, “பேசாம அஞ்சலியை இங்கேயே விட்டுட்டு போயிடுங்க… நான் பத்திரமா பாத்துக்குறேன்” என்று வனஜா சொன்னார்.

“சீக்கிரம் அனுப்பிடுறேங்க… அதுக்கு தானே எல்லாரும் காத்திட்டு இருக்கோம்…” என்று சொல்லிவிட்டு “வர்றேன் மாப்பிள்ள…” என்று ஜெய்யின் தோளை தட்டினார் அஞ்சலியின் அப்பா. ஜெய்க்கு சம்பிரதாயத்துக்கு கூட சிரிக்க தோன்றவில்லை.

அஞ்சலி தன் முன்னே இருக்கும் tall glass-ல் இருந்து Strawberry Shake-கை நிதானமாக உறிஞ்சிக்கொண்டிருக்க, உள்ளே ஜெய் கொதித்துக்கொண்டிருந்தான்.

“முதல் தடவை என்னை பார்க்க வந்தப்போ அப்படி சிடுசிடுன்னு இருந்தே… அதே மாதிரி எங்க அம்மா கிட்டேயும் இருந்திருக்கலாம் இல்லை? இப்போ அவங்க கிட்டே Breakup-னு சொன்னா நீ ரொம்ப அப்பாவி, நான் தான் பொல்லாதவன்னு ஆயிடுவேன்…” ஜெய் லேசாக இரைந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நீண்ட பதிவை 600-650 வார்த்தைகளுக்கு ஒரு பக்கம் என்று பிரிப்பது வசதியாக இருக்கிறதா?

View Results

Loading ... Loading ...

“இல்லப்பா…. எனக்கு பிடிச்ச friend-டோட அம்மா கிட்டே என்னால rude-ஆ இருக்க முடியலை… நானும் கிளம்பும்போது அப்படி சிடுசிடுன்னு இருக்கனும்னு தான் நினைச்சேன்… ஆனா அவங்க அவ்வளவு அன்பா casual-ஆ பேசும்போது I just got carried away…. சாரி!”

“இதெல்லாம் வக்கனையா பேசு… சரி! இப்போ Breakup-க்கு என்ன காரணம் சொல்லலாம்?”

“நான் இந்த Shake-கை காலி பண்றதுக்குள்ளே நீ ஏதாச்சும் யோசி…” அஞ்சலி Strawberry Shake-ஐ அவ்வளவு லேசில் விடுவதாக இல்லை.

“நான் Harley Davidson bike கேட்டு அடம் பண்றேன்னு சொல்றியா? Iron 883 மாடல் கிட்டத்தட்ட ரூ. 10 லட்சத்துக்கு வரும்… நான் வரதட்சனை கேட்டு அடம்புடிக்கிறேன்னு வேண்டாம்னு சொல்லிடுவாரு…”

“ம்க்கும்… அவர் உனக்கு கல்யாண Gift-டா Mercedes E series பார்த்துட்டு இருக்காரு… Starting rate ரூ.58 லட்சம். வேற ஏதாச்சும் புதுசா யோசிடா…” அஞ்சலி அசரவே இல்லை.

“சரி! பையன் அவன் cousin கூட ரொம்ப intimate-ஆ இருக்கான்… ஒருவேளை Homo-வா இருபானோன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்லேன்…”

அஞ்சலி சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

“பார்த்தியா… உனக்கே Shock-கா இருக்கு… சொல்ற மாதிரி சொன்னா உங்கப்பா நிச்சயம் இந்த கல்யாணம் வேண்டாம்னு நிறுத்திடுவார்…”

“போடா… எங்கப்பா மட்டுமில்ல… நம்ம சமுதாயத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச Homosexuals ஒன்னு “வேட்டையாடு விளையாடு” வில்லன்கள் மாதிரி பயங்கரமா இருக்கனும்… இல்லைன்னா வடிவேலு காமெடில வர்ற மாதிரி “அவனா நீ?”நு caricatured-ஆ இருக்கனும்… உன்னை பார்த்தா பயமும் வராது.. சிரிப்பும் வராது… அதனால இதை நம்புறதும் கஷ்டம் தான்”.

“ஆனா நீ சொல்ற விதத்துல சொல்லனும்…”

ஜெய்.. நானும் இன்னொரு பொண்ணு அழகா இருந்தா sight அடிப்பேன்… அதுபோல பசங்க மத்த பசங்களை ரசிக்கிறதுல எதுவும் தப்பா தோணலை… சொல்லப்போனா public-ல கைகோர்த்துக்குற பசங்களை பார்த்தா எனக்கு cute-ஆ இருக்கும்… ஊர் என்ன தப்பா நினைச்சுக்குமோன்னு பயப்படாம அவங்களோட அன்பை வெளிப்படையா காண்பிக்கிறதுக்கும் தைரியமும், தங்களோட அன்பு மேலே ஒரு கர்வமும் வேணும்… I think நீ பிரபாகர் மேலே அன்பா இருக்குறதும், கூச்சமே படாம அவன் கையை கோர்த்துக்குறதும், என் முன்னாடியே அவன் தோள்ல சாஞ்சிக்கிறதும் தான் எனக்கு உன் மேலே ஈடுபாடு வரவச்சிருக்கு… அதனால இந்த காரணத்தை வச்சு உன்னோட அன்பை அசிங்கப்படுத்தி நான் இந்த கல்யாணத்தை நிறுத்த விரும்பலை… இப்போ அவசரத்துக்கு ஏதாச்சும் சொல்லிவச்சு, இது அரசல் புரசலா கல்யாண சந்தையிலே பரவி அப்புறம் உனக்கு வேற பொண்ணு பாக்கும்போது இந்த விளையாட்டு வினையா முடியலாம். அதனால இந்த காரணத்தை விட்டுட்டு வேற யோசிக்கலாம்…”

“சரி! எதுனாச்சும் காரணம் யோசிச்சு வைப்போம்… பிரபா Book Fair-க்கு போகனும்னு சொல்லிட்டு இருந்தான். இந்த வாரம் நம்ம ரகசிய ஜோடிங்களை அங்கே தான் Date-க்கு அழைச்சிட்டு போகனும்… நாம அந்த Book Fair-ல ஏதாச்சும் காரணம் வச்சு முதல் சண்டையை ஆரம்பிக்கனும்…”

“Done…” அஞ்சலி கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top