கா.ஒ.கா 08. கொஞ்சம் தேன்நிலவு நிறைய நெருப்பு...

கா.ஒ.கா 08. கொஞ்சம் (தேன்)நிலவு கொஞ்சம் நெருப்பு…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 8-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
அர்ணாப் என்னை ராய்கஞ்ச் அருகே கிராமத்தில் உள்ள அவனது வீட்டுக்கு அழைத்துச்செல்கிறான். அவனது பெற்றோர்கள் என்னை முதலில் ஏற்க மறுத்தாலும், ஒரு பெரியவரின் அறிவுரைப்படி அவன் தாயும், தங்கையும் எங்களை ஒன்றாக ஏற்றுக்க்ள்கிறார்கள். அர்ணாப் சிறிய வயதில் அவன் கிராமத்தின் அருகில் உள்ள குளத்து கரையில் கஜகஜா செய்து மாட்டிய கதையை ஏற்கனவே சொல்லி இருந்ததால் நான் அந்த இடத்தை பார்க்கவேண்டும் என்று சொல்கிறேன். அர்ணாப் அங்கே என்னை அழைத்து போக, நாங்கள் அதே இடத்தில் மீண்டும் உடலுறவு கொள்கிறோம்.

கா.ஒ.கா 08. கொஞ்சம் (தேன்)நிலவு கொஞ்சம் நெருப்பு…
நேற்று அர்ணாப் வீட்டுக்கு வந்ததற்கும் இன்று வருவதற்கும் எனக்கு நிறைய வித்தியாசம் இருந்தது. இன்று இவர்கள் பேசும் பாஷை எனக்கு புரியாது என்றாலும் இவர்களும் என் வீட்டு மனிதர்கள். என்றேனும் ஒரு நாள் எங்களுக்குள் உரையாட மொழி தேவைப்படாத நிலை விரைவில் வரும் என்ற நம்பிக்கையில் நான் அர்ணாபின் விரல்களை கோர்த்துக்கொண்டு அவன் வீட்டுக்குள் வலது காலை வைத்து நுழைந்தேன். என் மாமனார் வீட்டில் இருக்க மாட்டார் என்று தெரிந்து அந்த நம்பிக்கையில் தான் காலையிலேயே வந்துவிட்டோம். அர்ணாபின் அம்மா கொஞ்சம் புன்னகையுடனும், என்னை பார்த்து நிறைய வெட்கத்துடனும் சமையலறையில் இருந்து வெளியே வராமல் டபாய்த்து கொண்டிருந்தார். அர்ணாபின் தங்கை கொஞ்சம் கூச்சம் குறைந்து எங்களுக்கு பப்பா பிட்டாவும், அலுமினிய டம்ளரில் டீயும் கொண்டு வந்து ஒரு plastic stool-ஐ நகர்த்தி எங்கள் எதிரில் வைத்தாள். நான் உரிமையுடன் டீ டம்ளரையும் பிட்டா உருண்டையயும் எடுத்துக்கொண்டு அவளை stool-ல் உட்காருமாறு சைகையில் சொன்னேன்.

கா.ஒ.கா 08. கொஞ்சம் (தேன்)நிலவு கொஞ்சம் நெருப்பு…
கண்கள் நிறைய வெட்கத்துடன், அதை வித அதிகமான தயக்கத்துடன் வித்யா அர்ணாபை பார்க்க, அவன் “இனி உங்கள் பாடு” என்பது போல தோளை குலுக்கிக்கொண்டு எழுந்து சமையலறைக்கு நகர்ந்தான். அவள் plastic stool-ல் உட்கார்ந்து என்னை பார்த்துவிட்டு மீண்டும் தரையை வெறிக்க ஆரம்பித்தாள். நான் அவளிடம் “ஹிந்தி மாலும்…?” என்று கேட்க, அவள் “இல்லை” என்பது போல தலையசைத்தாள். நான் ஆசுவாசத்துடன் “அப்பாடா… எனக்கும் நஹி மாலும்…” என்று வழிந்தேன். “ஹிந்தி படிச்சா இந்தியா முழுசும் போகலாம்” என்று என்னை பாடுபடுத்தியவர்களை மனசுக்குள் திட்டியபடி “What is your name?” என்று கேட்டேன். அவள் “பித்தா..” என்று எனக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள். நான் “பித்தா?” என்று குழப்பமாக கேட்டேன்.

சமையலறையில் இருந்து அர்ணாப் “அவ பேர் வித்யா. நாங்க பெங்காலிகள் ‘வ (V)’-வை ‘ப (B)’-ன்னு சொல்லுவோம்… எழுதுறது வித்யான்னாலும் நாங்க சொல்றது பித்தான்னு தான்” என்று சத்தமாக சொன்னான். நான் அர்ணாபிடம் “அப்போ எங்க ஊர் வைத்தியநாதன் உங்க ஊருக்கு வந்தா பைத்தியநாதன் ஆயிடுவாரா? தமிழ்ல பைத்தியம்னா mad-ன்னு அர்த்தம்” என்று சத்தமாக கேட்க, அர்ணாப் “ஆமாம்… இது தான் linguistic differences” என்று சமையலறையில் இருந்தே பதில் கொடுத்தான். நான் ஒரு நகைச்சுவை கேட்ட புன்னகையுடன் என் கவனத்தை மீண்டும் வித்யாவிடம் திருப்பினேன்.

கா.ஒ.கா 08. கொஞ்சம் (தேன்)நிலவு கொஞ்சம் நெருப்பு…
நான் “பித்தா… Do you know English?” என்று ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாக, தெளிவாக புரியுமாறு கேட்டேன். வித்யா ஆமாம் என்று தலையசைத்தாள். நான் எட்டி அவள் கையை பிடித்தேன். அவள் கூச்சப்பட்டாளே ஒழிய பதறாதது அவள் என்னை ஏற்றுக்கொண்டதை சொல்லாமல் சொன்னது. “Do you know who am I?” என்று கேட்டேன். வித்யா மீண்டும் ஆமாம் என்று தலையாட்டினாள். நான் புன்னகையுடன் “Tell.. who am I?” வித்யா அவள் அண்ணன் இருக்கும் திசையில் திரும்பி “அர்ணாபேரா…” என்று மீண்டும் வெட்கப்பட்டாள். அர்ணாப் வேண்டுமென்றே “யாரு?… எனக்கு காதுல விழலை” என்று சமையலறையில் இருந்து குரல்கொடுத்தான். வித்யா அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள். அவளை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று “I am Arnab’s Pranayi” என்று சொல்ல, அவள் “ஆமாம்” என்பது போல மீண்டும் தலையசைத்தாள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

நாண் வித்யாவிடம் “Biddha… I think you understand that we are not normal to this society” என்று சொல்ல, அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஆமாம் என்பது போல தலையசைத்தாள். நான் அர்ணபை கை காட்டி “Only we are for each other… Arnab for me.. I for Arnab” என்று முடிந்தவரை வார்த்தைகளுடன் நாடகத்தனமாக gestures-ம் செய்தேன். நான் என் கைகளை குவித்து “Ours is a small world”… என்று நாங்கள் மட்டும் தனியாக விடப்படுவோம் என்பதை தெரிவித்தேன். பின்னர் அவளிடம் “Will you be there for us?” என்று கேட்க, அவள் கண்கள் அகலமாக விரிந்தது. நான் மீண்டும் அவள் கைகளை பற்றிக்கொண்டு “I want you to be my dear little sister.. will you?” என்று கேட்டதும் அவள் என் கை மீது தன் அடுத்த கையை வைத்து தன் பதிலை சொன்னாள். சமையலறையில் இருந்து அர்ணாப் வந்து எங்கள் இருவரையும் சேர்த்து அணைத்து group hug செய்தான். நான் உணர்ச்சிவசப்பட்டு அர்ணாப்பின் தோளில் முகம் புதைத்தேன்.

கா.ஒ.கா 08. கொஞ்சம் (தேன்)நிலவு கொஞ்சம் நெருப்பு…
வயலுக்கு போயிருந்த அர்ணாப்பின் அப்பா வீட்டுக்கு வந்த பிறகு எந்த drama-வும் இப்போதைக்கு வேண்டாம் என்று நானும் அர்ணாபும் அங்கிருந்து கிளம்பினோம். நேரடியாக எங்களை திட்ட முடியாததால் அவர் வித்யாவை ஆட்டை மேய்ச்சலுக்கு கொண்டு போகுமாறு சத்தம் போட்டார். நாங்கள் கிளம்பும் முன்பு வித்யாவும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வெளியேறிவிட்டாள். அர்ணாப் அவன் அம்மாவிடம் சொல்வது போல வித்யாவை அடுத்த கல்வி ஆண்டில் மீண்டும் படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்றும், அதற்காக அவளது வங்கி கணக்கில் தான் பணம் அனுப்பிவிடுவதாக செய்தியை பொதுவாக சொல்லியிருந்தான்.

நாங்கள் மீண்டும் ராய்கஞ்ச்-க்கு செல்ல ஆட்டோ பிடிக்க போக, வெட்டவெளியில் வித்யா ஆடுகளை மேய்த்தபடி எங்களை தூரத்தில் இருந்து பார்ப்பதற்காக காத்திருந்தாள். ஆட்டை பிடித்துக்கொண்டு நின்ற, தன் நெற்றியில் விழுந்த முடியை லாவகமாக தள்ளி வியர்வை துடைத்த நளினம், சாயம் வெளுத்த மலிவான காட்டன் சுரிதாரில் அவளது எளிமையான உருவம் என் மனதில் பச்சக்கென்று புகைப்படம் போல ஒட்டிக்கொண்டது. இவள் என்னவனுடைய தங்கை மட்டுமல்ல… என்னுடைய உடன் பிறவாத சகோதரியும் கூட. இனி வித்யாவின் எதிர்காலம் என்னுடைய பொறுப்பும் கூட என்று நினைத்துக்கொண்டு அர்ணாபின் விரல்களை இறுக்கி கோர்த்துக்கொண்டேன்.

கா.ஒ.கா 08. கொஞ்சம் (தேன்)நிலவு கொஞ்சம் நெருப்பு…
நாங்கள் ராய்கஞ்ச் ஹோட்டல் அறையில் வந்து பொத்தென்று விழுந்தபோது எங்கள் மனதில் “அடுத்து என்ன?” என்பது போல தோன்றியது. அர்ணாப் அப்பா மனம் மாறுகிறாரோ இல்லையோ அர்ணாப்பின் அம்மா மற்றும் தங்கையின் அன்பு எங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இன்னும் என் அப்பாவை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியவில்லை. அர்ணாபின் அம்மா மற்றும் வித்யாவின் அன்பு மற்றும் ஆதரவு காலப்போக்கில் அர்ணாபின் அப்பா கல் மனதை மெல்ல மெல்ல இளக்கும் என்று மட்டும் குருட்டு நம்பிக்கை துளிர்க்கிறது. ஒரு சிறிய மலையை மயிரிழையேனும் நகர்த்திய அயற்சி எங்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. மீதமுள்ள நாளை என்ன செய்வது?

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கே பதியப்படும் சுட்டகதைகளில் நீங்கள் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

அர்ணாப் அந்த மாலை என்னை உள்ளூரில் உள்ள கர்னஜோரா பூங்காவிற்கு அழைத்துச்சென்றான். இந்த பூங்கா Highway-ல் இருப்பதால் பொதுவாக டார்ஜிலிங்கிற்கு long drive செல்லும் பயணிகள் அதை வழியில் ஓய்வெடுக்கும் இடமாக உபயோகப்படுத்துவது வழக்கம். அதனால் பூங்கா வாசலில் வாகன நெரிசல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. நான் அமைதி குலைந்த அசௌகரியத்தை முகத்தில் காண்பிக்க, அர்ணாப் என் தோளில் கை போட்டு “எல்லாரும் டார்ஜிலிங் போறவங்க…” என்று அர்த்தத்துடன் பெருமூச்சு விட்டான். என்னவன் கிளம்பிய நாளில் இருந்து ஆசைப்பட்டு கேட்டுக்கொண்டிருக்கிறான். அதை நிறைவேற்றாமல் நான் என்ன செய்ய? நான் “அவ்வளவு தானே? நாமளும் டார்ஜிலிங்க் போயிட்டா போச்சு…” என்று தோளை குலுக்கினேன்.

கா.ஒ.கா 08. கொஞ்சம் (தேன்)நிலவு கொஞ்சம் நெருப்பு…
அர்ணாப் என் கைவிரல்களை இறுக்க கோர்த்துக்கொண்டு “என் வீட்டுல நம்மள கலாச்சாரம், கௌரவம்னு சொல்லி எதிர்க்கப் போறதில்லைங்குற stand-ஐ எடுத்துக்குறதே நமக்கு வெற்றி தான்… இப்போ அவங்க வித்யாவுக்காக தான் பயப்படுறாங்க… அவ கல்யாணம் முடிஞ்சு settle ஆனதும் என் அப்பாவுக்கு நம்ம மேலே இருக்குற கோபம் காணாம போகலாம். சின்னதான்னாலும் that counts as a progressive step. இந்த நல்ல விஷயத்தை நாம கொண்டாடனும்… ஒரு குட்டி தேன்நிலவு… டார்ஜிலிங்க்கு இன்னைக்கு ராத்திரியே கிளம்பலாமா?” என்று கேட்டான். நான் “இல்லை” என்று இடம் வலமாக தலையாட்டினேன்.

குழப்பமாக பார்த்த அர்ணாபின் மூக்கோடு மூக்கை இழைத்துக்கொண்டு “பகல்ல போகலாம்… எனக்கு வழியில scenery பார்த்துக்குட்டே போகனும்… அங்கே இருந்து நேரா கொல்கத்தாவுக்கு flight-ல போனா இந்த வாய்ப்பு கிடைக்காதே…” என்று சொன்னேன். அர்ணாப் “சரி! உன் இஷ்டம்… இங்கே பக்கத்துல பர்மா புத்த மடம் ஒன்னு இருக்கு… அப்போ இன்னைக்கு ராத்திரி அதை போய் பார்த்துட்டு வரலாம்.. காலையிலே lodge-ஐ vacate பண்ணிக்கலாம்” என்று மீதி பொழுதுக்கும் திட்டம் போட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top