முன் கதை சுருக்கம்... |
---|
ஜெய்க்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் ஆகப்போகிறது என்று நம்பும் பிரபாகர், ஜெய் தனியாளாக கொண்டாடப்போகும் கடைசி பிறந்த நாளுக்கு Birthday present ஆக ஒரு Bluetooth speaker வாங்கி கொடுக்கிறான். ஆனால் ஜெய் அதைவிட பிரபாகருடன் அம்மணமாக கட்டிப்பிடித்து படுப்பதே சிறந்த பரிசு என்று சொல்ல, பிரபாகர் சந்தோஷமாக அதையும் கொடுக்கிறான். |
Book fair களைகட்டி இருந்ததை பார்த்தால் மொத்த நகரமுமே மீண்டும் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டதோ என்று சந்தோஷம் கொள்ளும் அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. ஜெய், பிரபாகர், அஞ்சலி, காயத்ரி ஆகிய நால்வரும் கூட்டத்தில் மெல்ல ஐக்கியமானார்கள். மெல்ல மெல்ல ஜோடிகளாக, இவர்களை அறியாமேலேயே கூட்டம் இந்த ஜோடிகளை பிரித்தது. பிரபாகரும் காயத்ரியும் முன்னே போக, ஜெய்யும் அஞ்சலியும் பின்னே நடந்துக்கொண்டிருந்தனர்.
ஜெய்… அங்கே பாரேன்” அஞ்சலி ஜெய்யின் தோளை சத்தமில்லாமல் சுரண்டினாள். என்ன என்பது போல ஜெய் அவளை பார்க்க, அவள் பிரபாகர்-காயத்ரியை காட்டினாள். இயல்பாக காயத்ரியின் கைகள் பிரபாகரின் கைகளை அவன் முழங்கைக்கு கீழே பிடித்துக்கொண்டு நடந்தாள்.
சீக்கிரம் கையை கோர்த்துக்குவாங்க…” ஜெய் ஒரு புன்னகையோடு சொன்னான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
பிரபாகரும் அஞ்சலியும் திருமகள் பதிப்பகத்தின் Stall-க்கு சென்றார்கள். ஜெய்யும் அஞ்சலியும் கொஞ்சம் தூரத்தில் எதிர் ஸ்டாலிலிருந்து அவர்களது நடவடிக்கைகளை ரசித்துக்கொண்டிருந்தார்கள். இந்த ஜனநெருக்கடியிலும் பிரபாகருக்கும் காயத்ரிக்கும் தாங்கள் இருவர் மட்டுமே இந்த உலகத்தில் இருப்பதை போல எந்த ஒரு inhibitions இல்லாமல் நெருங்கிக்கொண்டிருந்தனர்.
பிரபாகர் சுஜாதா எழுதிய “அனிதாவின் காதல்கள்” எடுத்து காயத்ரியிடம் காண்பித்தான்.
அவள் எதுவும் பேசாமல் சுற்றும் முற்றும் இருந்த Book shelf-களில் இருந்து தேடி இந்திரா சௌந்தர்ராஜனின் “விட்டுவிடு கருப்பா”வை எடுத்து காண்பித்தாள்.
பிரபாகர் அங்கே இருந்த புத்தக குவியலில் இருந்து சுஜாதாவின் “தீண்டும் இன்பம்”-ஐ எடுத்து நீட்டினான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
பதிலுக்கு அதே சுஜாதாவின் “பத்து செகண்ட் முத்தம்”-ஐ காட்டுவது காயத்ரியின் முறை.
உடனே பிரபாகர் பரபரவென்று அடுக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து தேடி எடுத்து “உடல் பொருள் ஆனந்தி”-ஐ எடுத்து அதில் ஆனந்தியை மறைத்து அதற்கு பதிலாக நீ என்பது போல விரலை காயத்ரியை நோக்கி காட்டினான்.
காயத்ரி பாலகுமாரனின் “உள்ளம் கவர் கள்வன்”-ஐ எடுத்து அவன் முகத்துக்கு நேரே நீட்டினாள். அது நீ தான் என்று சொல்வது போல தன் ஆள்காட்டி விரலால் புத்தகத்தின் அட்டையை தொட்டுவிட்டு பிரபாகரை நோக்கி நீட்டினாள்.
கடைசியில் பிரபாகர் சுஜாதாவின் “ஆதலினால் காதல் செய்வீர்” என்ற புத்தகத்தை எடுத்து காயத்ரியிடம் propose செய்வது போல அவள் முன்பு முட்டிப்போட்டு நீட்ட, காயத்ரி அதை வாங்கி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
ஜெய் அஞ்சலியை பார்த்து “எவ்வளவு cute-ஆ propose பண்ணினான் பாரேன்… இந்த பையனுக்குள்ளேயும் என்னவோ இருந்திருக்கு…” என்று பரவசத்தோடு சொல்ல, அஞ்சலி “ஹேய்! அங்கே காயத்ரி மூஞ்சிலே எவ்வளவு வெட்கம் பாரேன்… சீக்கிரம் இவங்களை வீட்டுல மாட்டிவிட்டுடனும்”… என்று பரவசத்தோடு சொல்லிக்கொண்டிருந்தபோது ஜெய்யின் பக்கத்திலிருந்த ஜெனரேட்டர் குட்டிப்பாம்பு போல லேசாக சீறியபடி சன்னமாக வெடித்தது.
ஜெய்யின் அலறல் அந்த ஹாலில் ஒலிக்க, அனைவரும் சூழ்ந்துக்கொள்ள, ஜெய்யின் வலது கையில் கொஞ்சம் பலமான தீக்காயம். பிரபாகர் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஜெய்யை கைத்தாங்களாக உட்காரவைத்து முதலுதவி செய்தபடி “அஞ்சலி… நீ காயத்ரியை கூட்டிட்டு வீட்டுக்கு போ… நான் ஜெய்யை Hospital-க்கு கூட்டிட்டு போறேன்…” என்றான்.
“நானும் கூட வர்றேன் பிரபா… எப்படி இவனை அப்படியே விட்டுட்டு போறது?” அஞ்சலி கிட்டத்தட்ட அழ ஆரம்பிக்க, “இது எமோஷனலா பார்க்கவேண்டிய நேரமில்லை… practical-ஆ யோசிக்கனும். நான் இவனை two wheeler-ல உட்கார வச்சிட்டு சந்து பொந்துல பூந்து ஓட்டிட்டு Hopital-க்கு சீக்கிரம் போயிடுவேன்… இந்த கூட்டத்துல ஆட்டோ பிடிச்சு போனா எப்போ போய் சேருவோம்னு தெரியாது… பயப்பட ஒன்னும் இல்லை… நான் பார்த்துக்குறேன்..” என்று பிரபாகர் அவளை சமாதானப்படுத்தினான்.
ஜெய்யும் பிரபாகரும் ஏறிய Pulsar தங்கள் பார்வையில் இருந்து மறையும் வரைக்கும் அஞ்சலியும் காயத்ரியும் வண்டி stand-ல் அதே இடத்தில் பதற்றத்தோடு நின்றுக்கொண்டிருந்தார்கள்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 09/07/2017
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2017/07/24.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|