ஜெய்யும் ஜெஃப்பும் – ஜெஃப் வீட்டில் ஜெய் முதலிரவு

ஜெய்யும் ஜெஃப்பும் – ஜெஃப் வீட்டில் ஜெய் முதலிரவு

இது ஜெய்யும் ஜெஃப்பும் தொடர்கதையின் 2-வது அத்தியாயம்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்ததும் project மீண்டும் சூடு பிடித்தது. மொத்த டீமுமே பம்பரமாய் சுழன்று சுழன்று வேலை செய்தது. ஜெய்யும் ஜெஃப்பும் தங்கள் காதலை பரஸ்பரம் தெரிவித்தபிறகு முடிந்த அளவுக்கு அலுவலகத்தில் ஒன்றாக இருப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். எந்த கடின வேலையாக இருந்தாலும் இருவரும் முன்னின்று செய்தனர். அவர்களது காதல் இந்த project-ன் கடினமான நேரத்தில் செழித்து வளர்ந்தது. மேனேஜர்களுக்கும் ஜெய்யும் ஜெஃப்பும் நல்ல டீம் என்று தெரிய தொடங்கியது. அதன் காரணம் அவர்களுக்கிடையே இருக்கும் நல்ல நட்பு என்று எல்லோரும் நம்பினார்கள். அதற்கும் மேலே ஏதாவது இருக்கிறதா என்று ஆராயும் மனநிலையில் யாரும் இல்லை. காரணம் Project pressure அப்படி… எப்படியும் வேலை பிசகில்லாமல் முடிந்தால் போதும் என்ற மேனேஜர்களின் நிலைமை. ஜெய்யும் ஜெஃப்பும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வதை பயங்கரமாக enjoy செய்வதால் அவர்களால் எந்த கடினமான வேலையையும் ஈடுபாட்டுடன் செய்யமுடிகிறது என்று அனைவரும் ஏகமனதாக ஆமோதித்தனர். அதனால் மேனேஜர்களே ஜெய்யையும், ஜெஃப்பையும் ஒரே டீமாக்கி வேலை கொடுத்ததால் இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்கக்கூடிய சூழல் ஆஃபீஸில் உருவானது.

கடைசியில் அந்த நாள் வந்தது.. Developments எல்லாம் production-க்கு move செய்யப்பட்டு சீக்கிரம் Live போக ரெடியானார்கள். மொத்த டீமும் வீட்டுக்கு கூட போகாமல் ஆஃபீஸே கதி என்று கிடந்தார்கள். அங்கேயே உறங்கியும், வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு உடனே ஆஃபீஸுக்கு வந்து தங்கள் வேலையை தொடர்ந்தனர். ஜெஃப் fitness freak என்பதால் வீட்டுக்கு சென்று கொஞ்ச நேரம் உடற்பயிற்சியும், தனக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவையும் கொண்டுவந்தான். ஜெய்க்கும் ஒரு உணவு டப்பா சேர்த்து எடுத்துவந்தான். மற்றவர்கள் எல்லாம் அதை கேலி செய்ததை இருவரும் டீமுக்கு தாங்கள் கொடுக்கும் comical relief என்று சேர்ந்து சிரித்தனர்.

காலை வழக்கமான வேலை தொடங்கும் நேரம் முதல் புதிய system அமலுக்கு வந்தது. அனைவரும் live ஆன system-ல் ஏதாவது பிரச்சனை வருகிறதா என்று கண்ணும் கருத்துமாக கவனித்தனர். வந்த issue-கள் எல்லாம் அதே வேகத்தில் முடித்துவைக்கப்பட்டன. மூன்று நாட்கள் கழித்து system stable ஆனது. issue-களின் வரத்து குறைய தொடங்கியது. ஐந்தாம் நாள் issue-களின் வரத்து கிட்டத்தட்ட நிற்க தொடங்கியது. மொத்த டீமும் கொஞ்சம் ஆசுவாச பெருமூச்சு விட்டனர். அடுத்தடுத்த நாட்களில் டீம் பிரியப்போவதால் உள்ளுரில் உள்ள team member-கள் பிரெஸில் கலாச்சாரப்படி மற்றவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து உபசரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் நாட்டை விட்டு கிளம்பும்போது இனிய நினைவுகளை கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு விருந்தும் கவனமாகவும் இனிமையாகவும் நடத்தப்பட்டது. ஜெய்க்கு தான் விரைவில் ஜெஃப்பை பிரியவேண்டிவரும் என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அந்த வெள்ளிகிழமை இரவு ஜெஃப் மொத்த டீமையும் தன்னுடைய வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தான். விருந்துக்கு ஏற்பாடு செய்யவேண்டி இருந்ததால் ஜெஃப் மதியமே விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். ஜெய்யோடு இந்தியாவிலிருந்து வந்த மற்ற டீம் மெம்பர்களும் சில மேனேஜர்களின் கார்களில் பிரிந்து ஜெஃப் வீட்டுக்கு சென்றனர். ஜெஃப்பின் அம்மா வந்த டீம் மெம்பர்களை அன்பாக வரவேற்றார். முதல் கேள்வியாக “இதில் யார் ஜெய்?” என்று கேட்டார்.

“என் பையன் தன் இத்தனை வருட அனுபவத்தில் இதுவரைக்கும் எந்த ஆஃபீஸ் நண்பர்களை பற்றியும் எங்களிடம் சொன்னதில்லை. ஆனால் முதன் முறையாக கடந்த சில வாரங்களாக கேட்குற எனக்கே அலுத்து போகும் அளவுக்கு ஜெய் ஜெய் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். அதனால் எனக்கு யார் அந்த ஜெய் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை அடக்கமுடியவில்லை” என்றார்.

எல்லாரும் ஜெய்யை கை காட்ட, ஜெய் வெட்கத்தில் முகம் சிவந்தான். எழுந்து வந்து ஜெஃபின் அம்மாவின் காலில் விழப்போனவனை தடுத்து அணைத்துக்கொண்டார். டீம் மெம்பர்கள் எல்லாம் கை தட்ட, ஜெய் ஜெஃப் இருவருக்கும் பயங்கர வெட்கம். பின்னர் விருந்து ஆரம்பித்து எல்லாரும் ஜெஃப்பின் வீட்டை கலகலப்பாக்கினர். திடீரென்று ஒரு மேனேஜருக்கு அவர் வீட்டிலிருந்து அவசர அழைப்பு… “Please excuse me! ஒரு அவசர நிலைமை.. நான் உடனே கிளம்பவேண்டும். நீங்கள் எல்லோரும் இருந்து enjoy செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

விருந்து முடிந்ததும் கார் இல்லாதவர்கள் எல்லோரும் இருக்கும் கார்களில் தங்களை பிரித்துக்கொள்ள, ஜெய்க்கு எந்த காரிலும் இடம் இல்லாமல் போனது. அங்கே அது ஒரு விவாதப்பொருளாக மாறும் முன்பு ஜெஃப் “நான் ஜெய்யை அவரோட அபார்ட்மெண்டில் டிராப் செய்துவிடுகிறேன். ஜெய்யின் அபார்ட்மெண்டில் இருக்கும் மற்றவர்கள் கூட ஜாயின் செய்துக்கொள்ளலாம்” என்று சொன்னான். கடைசியில் ஜெஃப் ஜெய்யை மட்டும் கொண்டுவந்து டிராப் செய்வது என்று முடிவானது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இனி வரும் பதிவுகளின் header image-ல் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு பதிலாக பொதுவான romantic / erotic images வைத்தால் comfortable ஆக feel செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

விருந்தோம்பலுக்கு நன்றி சொல்லிவிட்டு மொத்த டீமும் ஜெஃப் வீட்டிலிருந்து கிளம்ப தயாரானது. ஜெஃப் ஜெய்யையும் அவனது அறை நண்பர்களையும் தனியாக அழைத்து “ஜெய்! ஒரு 30 நிமிஷம் காத்திருக்கீங்களா? இந்த பார்ட்டி பாத்திரங்களை எல்லாம் ஒழிச்சு Dish washer-ல போட்டுட்டு போகலாம். இல்லையென்றால் அம்மா இந்த வேலையை இழுத்துப்போட்டு செய்வார்.” என்று கேட்டான். ஜெய்யும் சரியென்று தலையாட்ட, அனைவரும் கிளம்பினார்கள். ஜெய் ஜெஃப்புக்கு பாத்திரங்களை ஒழித்துப்போட உதவி செய்தான். ஜெஃப் தடுத்தபோதும் ஜெய் உரிமையோடு வேலை செய்தான்.

ஜெஃபின் அம்மா மணியை பார்த்துவிட்டு “ஜெஃப்… இது வெள்ளிக்கிழமை இரவு… பீச் ரோட்டில் தண்ணி அடிச்சுட்டு சுத்துறவங்க கூட்டம் அதிகமா இருக்கும். பார்த்து போயிட்டு வா! அப்புறம் ராத்திரி மழை வரும்போல இருக்கு… திரும்பி தனியா வரும்போது ஜாக்கிரதையா வா! மழையிலே வண்டியை ரொம்ப ஸ்பீடுல ஓட்டாதே” என்றார்.

ஜெஃப்பும் “சரிம்மா… நான் careful-லா இருக்கேன்” என்றான்.

திடீரென்று ஜெஃப்பின் அம்மா ஜெய்யிடம் “ஜெய்! எங்க வீட்டில் தங்குறதுல உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே? ஜெஃபை காலையிலே உன்னை உன்னோட ரூம்ல டிராப் பண்ண சொல்றேனே” என்றார்.

ஜெய் திகைத்துப்போனான். “இல்லைங்க ஆண்ட்டி… நான் cab பிடிச்சு போயிக்கிறேன்” என்றான். ஜெஃப்பும் இந்த சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை.

Hug

ஜெஃப்பின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருவரும் மாடியில் இருந்து கீழே இறங்கினார்கள்.. ஜெய் முதலில் இறங்கினான், பின்னாடியே கார் சாவியை எடுத்துக்கொண்டு ஜெஃப் வந்தான். வழியில் தென்னைமர கீற்றுகள் நிலவு வெளிச்சத்தையும், லைட் வெளிச்சத்தையும் மறைத்து கொடுத்த இருட்டு பகுதி வந்ததும் ஜெஃப் ஜெய்யை பின்புறமாக இருந்து கட்டிப்பிடித்தான். அவனிடம் இருந்து ஒரு ஆழமான பெருமூச்சு வந்தது. அந்த மூச்சின் ஆழமும் வேகமும் எவ்வளவு நேரமாக ஜெஃப் தன் விரகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இந்த தனிமையான தருணத்துக்காக காத்திருந்திருக்கிறான் என்பதை தெளிவாக சொன்னது. ஜெய் அப்படியே நின்றான்.

ஜெஃப்பின் சூடான மூச்சுக்காற்று ஜெய்யின் காது மடலில் வேகமாக அடித்தது. ஜெஃப்பின் கைகள் ஜெய்யின் செழுத்த மார்பை பிசைந்தது… மறு கை ஜெய்யின் இடுப்பை கட்டிக்கொண்டது. மெல்ல ஜெஃப்பின் உதடு ஜெய்யின் காதை மெலிதாக கடித்தது. பின்னர் கிசுகிசுப்பான குரலில் ஜெஃப் சொன்னான் “ஜெய்! என்னை விட்டுட்டு போகாதே… இன்னைக்கு ராத்திரி என் கூட இரு… இது வரைக்கும் உன் கூட நான் தனியா இருந்ததில்லை… ஆஃபீஸ்லயும், பார்ட்டியிலேயும் கூட்டத்துல தனியா இருக்குறது வேற… எல்லாம் மற்றவங்க கண்காணிப்புல தனியா இருக்குற மாதிரி… இன்னைக்கு ராத்திரியை எனக்கு மட்டும் குடு ஜே!… எனக்கே எனக்குன்னு கொஞ்சம் சமயம் குடு.. ப்ளீஸ் ஜெய்” என்றான்.

ஜெய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஜெஃப்பின் ஆசையில் நியாயம் இருந்தாலும், இரவு ரூமுக்கு திரும்பாவிட்டால் தன் அறையில் மற்றவர்கள் ஏதானும் தவறாக நினைத்துக்கொள்வார்களோ என்றும் சங்கடமாக இருந்தது. இருக்கப்போகும் சில நாட்களில் எந்த வித கிசுகிசுக்களோ இல்லை தர்மசங்கடமான சூழ்நிலைகளோ வந்துவிடக்கூடாது என்று ஜெய் கவலைப்பட்டான். அதனால் ஜெய் கண்ணில் கண்ணீர் தளும்ப, மனதை கல்லாக்கிக்கொண்டு எதுவும் பேசாமல் மெதுவாக படியில் முன்னே இறங்கினான். ஜெய் நிற்காததால் ஜெஃப் ஏமாற்றத்துடன் பின் தொடர்ந்து வந்தான். இருவரும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஜெஃப்பின் காருக்கருகே வந்தார்கள். ஜெஃப் ஜெய்யின் கண்ணில் கண்ணீரை கவனித்தான். ஏன் ஜெய் பிடிவாதமாக கிளம்பவேண்டும் என்று நினைக்கிறான் என்று ஜெஃப்புக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. இருப்பினும் இருவரிடையே நிலவிய கனத்த மௌனத்தை விலக்க இருவரும் முயற்சி செய்யவில்லை.

அந்த நேரம் பார்த்து பயங்கரமாக காற்றடிக்க ஆரம்பிக்க, ஜெஃப்பின் அம்மா பால்கனியில் வந்து நின்றார். ஜெய்… மழை ரொம்ப வேகமா வரும்னு நினைக்கிறேன். கட்டாயம் இந்த நேரத்துல போகனுமா? நாளை காலை போகலாம்.. ரெண்டு பேரும் மேலே வாங்க” என்றார். ஜெய் தயக்கத்தோடு நிற்க, மழை தூறல் பெரிதாக விழ ஆரம்பிக்க, ஜெஃப் ஜெய்யின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மீண்டும் மாடிக்கு ஓடினான். ஜெய்க்கு அன்றிரவு இருவரும் ஒன்றாக கழிக்கவேண்டும் என்று இயற்கை கட்டளை இட்டது போல தோன்றியது.

மாடிக்கு வந்ததும் ஜெஃப்பின் அம்மா “ஜெய்.. முன்னாடியே இங்கேயே இருக்கேன்னு முடிவு பண்ணியிருக்கலாமா? Welcome again” என்று சிரித்தவாறே வரவேற்றார். ஜெய் வெட்கத்தோடு சிரித்தான். ஜெஃப் ஜெய்யை சோஃபாவில் உட்கார வைத்துவிட்டு டிஷ் வாஷரில் போட்டிருந்த பாத்திரங்களை மேற்பார்வையிட்டான். அதற்குள் ஜெஃப்பின் அம்மா ஜெஃப்புக்காக வாங்கி வைத்திருந்த புது பஜாமா செட்-ஐ எடுத்துவந்து ஜெய்யிடம் கொடுத்து, ஜெஃபின் அறையை காண்பித்து அங்கே உடை மாறிக்கொள்ள சொன்னார். ஜெய் உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.

“உனக்காகவே வாங்கினது மாதிரி இருக்கு… இங்கே உட்கார்” என்றார். ஜெய் ஜெஃப்பின் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்தான். அவர் ஜெய்யிடம் அவனை பற்றிய விவரங்களை ஆர்வமாக கேட்டார். பின்னர் “ஜெஃப் பயங்கர introvert & shy kid… அவ்வளவு சீக்கிரம் யார் கிட்டேயும் பழகமாட்டான். இப்போ சில நாட்களா உன்னை பற்றி நிறைய சொல்றான். என் பையன் உன்னை பற்றி நிறைய வாய் ஓயாம பேசுறான்னா நீ அவனுக்கு நிச்சயம் ஏதோ ஸ்பெஷல் தான்… என் பையனுக்கு ஸ்பெஷலானவங்க எல்லாம் எனக்கும் ஸ்பெஷல் தான்… so feel at home” என்றார். இதற்குள் ஜெஃப்பும் வந்து சோஃபாவில் அம்மாவின் தோளை கட்டிக்கொண்டு உட்கார்ந்தான்.

“ஜெஃப்.. உன்னோட ஜெய்க்கு போரடிக்காத மாதிரி ஏதாச்சும் பேசிட்டு இரு… Netflix போட்டுட்டு விடிய விடிய சினிமா பாக்காத… படம் எப்போ வேணும்னாலும் பார்க்கலாம் ஆனா ஜெய் எப்போவாச்சும் தான் வர்றான். அவன் நம்ம வீட்டுல இருக்குற ஒவ்வொரு நொடியும் காலத்துக்கும் நினைவுக்கு வச்சுக்குற மாதிரி இனிமையா இருக்கனும்… படம் பார்த்துக்குட்டு அவனை தனியா ஃபீல் பண்ண விட்டுடாதே..” என்று கண்டிப்பு கலந்த கரிசனத்தோடு சொன்னார்.

Kiss

“சரி! நான் படுக்கப்போறேன். dish washer-ல போட்ட பாத்திரம் எல்லாம் வெளியே எடுத்து வச்சுட்டு படு.. ” என்று சொல்லிவிட்டு எழுந்துக்கொண்டார். ஜெய்யின் கன்னத்தை தடவியபடி ” Good night my son” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றார். ஜெஃப் dish washer-ஐ பார்த்துவிட்டு வரும்போது அம்மாவின் அறை முழுசாக தாழிடப்பட்டதா என்று உறுதி செய்துக்கொண்டு சோஃபாவில் வந்து ஜெய்யின் அருகே உட்கார்ந்து அவன் கையை இறுக்க கோர்த்துக்கொண்டான். பின்னர் ஜெய்யின் கன்னத்தில் முத்தமிட்டான். ஜெஃப்பின் குதூகலத்தை பார்க்கும்போது ஜெய்க்கு ஏதோ சந்தோஷமாக இருந்தது. ஜெய் தன் ரூம் நண்பர்களுக்கு அழைத்து இங்கே மழை அதிகமாக இருப்பதால் இரவு ஜெஃப் வீட்டில் தங்கிவிட்டு காலையில் வருவதாக சொன்னான். அவர்களும் தாங்கள் மழையில் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்ததாகவும், ஜெய்யை கவனமாக அடுத்த நாளே வரச்சொன்னார்கள்.

ஜெய்யும் ஜெஃப்பும் சோஃபாவில் ஒருவர் மீது மற்றொருவர் சாய்ந்தபடி டீப்பாயில் கால்கள் நீட்டியபடி, கைகளை கோர்த்துக்கொண்டு, எம்.டிவியில் பாடல்கள் போட்டுக்கொண்டு ஜாலியாக அரட்டையடித்தார்கள். பின்னர் ஜெஃப் “ஜெய்… தூக்கம் வரும்போது சொல்லு… ஏன்னா எனக்கு வெள்ளிக்கிழமை ராத்திரிகள் எல்லாம் முழுசா முழிச்சு படம் பாக்குறது வழக்கம்.” என்றான். அவ்வப்போது ஜெஃப் ஜெய்ய்க்கு முத்தங்கள் கொடுத்தபடியே இருந்தான்… சில சமயம் கன்னத்தில், சில சமயம் உதட்டில்… குழந்தை போல குதூகலித்தான். அதை பார்த்து ஜெய்யும் தானாக அடிக்கடி ஜெஃப்புக்கு நிறைய முத்தங்கள் பரிசளித்தான். ஜெஃப்பின் சந்தோஷத்தை பார்த்து ஜெய்க்கு மனசு நிறைந்தது.

இரவு 01:30 மணி ஆனது… ஜெய் “ஜெஃப்… தூங்க போகலாமா? என்று கேட்டான்.

“ஓகே.. வாங்க போகலாம்!” என்று எழுந்து டிவியை அணைத்தான். எழுந்து நின்ற ஜெய்யை கையை பிடித்து அழைத்துக்கொண்டு தன் அறைக்கு போகும் வழியில் ஹால் விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு வந்தான். ஜெய்க்கு முன்பு அறைக்குள் சென்று “Welcome to my room” என்றான்.

ஜெய் “நான் இங்கே தான் டிரெஸ் மாத்துனேன்..” என்று சொல்லிவிட்டு கதவில் தொங்கிய தன் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டை காண்பித்தான்.

ஜெஃப் சந்தோஷத்தோடு வழிந்தவாறே “பரவாயில்லை! திரும்பவும் Welcome” என்று சொல்லிவிட்டு கதவை சாத்தினான்.

ஜெய் சென்று கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தான். ஜெஃப் அறையில் கண்ணாடி கதவுகளை மூடிய திரைசீலைகளை முழுசாக விரித்தான். தூரத்தில் Ipanema beach-ல் காற்றில் ராட்சத அலைகளோடு மூர்க்கமாக கரையை தாக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் பிரம்மாண்டமான கிரைஸ்ட் சிலை அந்த மழையை சமாதானப்படுத்துவது போல கைகளை விரித்து நின்றது. இரவு இருட்டில் ரியோ டி ஜெனிரோ நகரம் விளக்கு வெளிச்சத்தில் அழகாக் மின்னிக் கொண்டிருந்தது. அந்த சூழ்நிலை தனக்கு ஒத்துப்போவது போல ஜெய்க்கு தோன்றியது… மனதில் அடிக்கும் குழப்பப்புயல், அதை சமாதானப்படுத்தும் ஒரு உயர் சக்தி…

Jeff

ஜெஃப் ஜெய்யிடம் “ஏன் ஜெய் டென்ஷனா இருக்கே… காஷுவலா இரு. நல்லா உட்காரு” என்று சொல்லிவிட்டு தன் டி-ஷர்ட்டை கழற்றி கதவில் இருந்த ஹேங்கரில் மாட்டினான். ஜெய் முதன் முறையாக ஜெஃப்பின் வெற்றுடம்பை பார்க்கிறான். மனுஷனா இவன்… என்று தான் முதலில் ஜெய்க்கு தோன்றியது. செமத்தியான உடம்பு… பல வருஷங்களாக பார்த்து பார்த்து செதுக்கிய கட்டான உடம்பு… ஆனால் ஜெஃப்பின் முகமோ அப்பாவி குழந்தை போன்றது. “Beauty & Beast” கலந்த சரியான கலவை என்று தோன்றியது. ஜெஃப் ஜெய் தன்னை கவனிப்பதை கண்டுக்கொள்ளாமல் தன் ஜீன்ஸை கழற்றினான். ஜெய்க்கு ஜீன்ஸுக்குள் ஒளிந்திருந்தது கால்களா இல்லை கல் தூண்களா என்று தோன்றியது. தன்னை அறியாமல் வாயை பிளந்து ஜெஃப்பை பிரமிப்போடு பார்த்தான்.

ஜெஃப் படு சாதாரணமாக கழற்றிய ஜீன்ஸை எடுத்து ஹேங்கரில் மாட்டிவிட்டு ஜட்டியோடு பாத்ரூமுக்கு சென்று கடனை முடித்துவிட்டு, முகம் அலம்பிவிட்டு சோப் வாசனையோடு ஜெய் அருகில் வந்து உட்கார்ந்தான். “ஜே! ஜன்னல் திறந்திருக்குறதுல எதுவும் பிராப்ளம் இல்லையே? நான் எப்பவும் ஜன்னலை மூடுறதே இல்லை… இங்கே இருந்து அலைகளையும், Christ the redeemer சிலையையும் பார்த்துக்கிட்டே இருந்தேன்னா நேரம் போறதே தெரியாது… எப்போ கண்ணுல் தூக்கம் மூடும்னு தெரியாது” என்றான்.

ஜெய் “எதுவும் பிராப்ளம் இல்லை ஜெஃப்.. தூங்க போகலாமா? நீ நைட் டிரெஸ் போடலை?” என்று கேட்டான்.

ஜெஃப் “இல்லை ஜெய்… நான் இப்படி தூங்கி பழக்கம்… சொல்லப்போனா பிரெஸில் வீட்டுல எல்லாருக்கும் பசங்களும், பொண்ணுங்களுக்கும் ராத்திரியில இப்படி வெறும் உள்ளாடைகளோட தூங்குறது சாதாரணம்… அங்கே பீச்சிலேயே பாரேன்… கிட்டத்தட்ட nude-ஆ இருந்தாலும் அதை பத்தி ஒரு குறுகுறுப்பு இல்லாம இயல்பா இருக்குறதை… நாங்க Brazilians இந்த விஷயத்துல ரொம்ப தாராளம் தான்.. carefree attitude. அதனால தான் அம்மா எனக்கு வாங்குன நைட் டிரெஸ்-ல நிறைய போடாம இருக்கும்.. அதுல ஒண்ணு தான் உனக்கு வந்திருக்கு…” என்று சொல்லிவிட்டு ஜெய்யை பார்த்து “இந்த டிரெஸ் உண்மையிலேயே உனக்காக வாங்குன மாதிரி இருக்கு. நீயே அதை எடுத்துட்டு போயிடு…. ஊப்ஸ்… இல்லை இல்லை! இங்கேயே இருக்கட்டும். நீ வர்றப்போ போட்டுக்க வசதியா இருக்கும்” என்றான்.

ஜெய்க்கு ஜெஃப் தன்னை அடிக்கடி தன் வீட்டுக்கு வந்து தங்குமாறு அழைப்பதை எவ்வளவு இயல்பாக பேச்சுவாக்கில் சொல்லிவிட்டான் என்று தோன்றியது. Project முடிகிற தருவாயில் இருப்பதால் எத்தனை நாள் அந்த கொடுப்பினை இருக்கப்போகிறதோ என்று தெரியவில்லை என் அடுத்த கவலையை தன் மனதில் ஏற்றிக்கொண்டான்.

“சரி படுக்கலாம்.. நான் லைட்டை Off பண்ணிட்டு வந்து படுத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு ஜெஃப் ரூம் வாசலுக்கு போனான். அவனது பின்னழகை ரசித்தவாறே ஜெய் கட்டிலில் சரிந்து படுத்தான். ஜெஃப் லைட்டை அணைத்துவிட்டு வந்து Quilt-ஐ தூக்கிவிட்டு உள்ளே நுழைந்து ஜெய்யை கட்டிக்கொண்டு படுத்தான்.

ஜெய்… எனக்கு இந்த நிமிஷம் surreal-ஆ இருக்கு… நீ தான் என் கூட படுத்திருக்கேன்னு நம்ப முடியலை.. என்னை கிள்ளேன்” என்றான்.

ஜெய் மெதுவாக ஜெய்யின் மூக்கை கடித்தான். “ஸ்ஸ்ஸ்…. உண்மை தான்” என்று சொல்லியபடி ஜெஃப் ஜெய்யின் உதட்டில் மெலிதாக ஒரு முத்தம் வைத்தான். ஜெய் அழகாக சிரித்தான். ஜெஃப் தன் கையை எடுத்து ஜெய்யின் கன்னத்தை ஏந்தினான். ஜெய் ஜெஃப்பை இறுக்க கட்டிப்பிடித்தான். ஜெஃப்பும் தன் கால்களை ஜெய்யின் மேல் போட்டுக்கொண்டு அவன் கால்களை தன் காலோடு பின்னிக்கொண்டான். ஜெய் ஜெஃப்பின் உதட்டில் முத்தம் வைத்தான்.

ஜெஃப் “ஜெய்… உன் சட்டையை மட்டுமாவது கழற்றேன்.. என் உடம்பு உன் உடம்பை ஃபீல் பண்ணனும்… நம்ம உடம்புகளுக்கு நடுவிலே இந்த துணி வேண்டாம்” என்றான்.

ஜெய் “சரி கழற்றிடுறேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்தான். அதற்குள் ஜெஃப் தாவி எழுந்து ஜெய்யின் மடியில் அவன் முகம் பார்த்து அமர்ந்து தன் கால்களை ஜெய்யின் இடுப்புக்கு இருபக்கமும் முட்டிப்போட்டு, ஜெய்யின் முகத்தை தன் கைகளில் ஏந்தி ஜெய்யின் உதட்டை கவ்விப்பிடித்தான். ஜெஃப் ஜெய்யை கிஸ்ஸடித்தபடியே ஜெய்யின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்றினான். பட்டன்கள் அவிழ்க்கப்பட்டதும், ஜெஃப் ஜெய்யின் சட்டையை கழற்றி தூக்கிப்போட்டான். அப்படியே ஜெய்யை கட்டிலில் தள்ளி ஜெஃப் அவன் மேல் படுத்து ஜெய்யின் வாய்க்குள் தன் நாக்கை விட்டு சுழற்றினான்.

ஜெய்யும் ஜெஃப்பின் முதுகை தடவியவாறே இறுக்க எலும்பு நொறுங்கும் அளவுக்கு இறுக்க அணைத்துக்கொண்டான். ஜெஃப் கொஞ்ச நேரம் முத்தமிட்ட பிறகு பக்கவாட்டில் படுத்துக்கொண்டு ஜெய்யின் நைட் பேண்ட்டை கீழே இழுத்து சமிஞ்சை கொடுக்க, ஜெய் தன் பேண்ட்டை கீழே இறக்கி, கால்களால் கழற்றிவிட்டு, தன் சூடான கால்களால் ஜெஃப்பின் கால்களோடு பின்னிப்பிணைந்தான்.

Jai Jeff first sex

வெளியே மழை சோவென்று பிய்த்துக்கொண்டு அடிக்க, ஐபனாமா கடற்கரையில் ராட்சத அலைகள் ஆட்டம்போட, மழை கொண்டுவந்த குளிருக்கு இதமாக ஜெஃப்பின் அறையின் கட்டிலில் Quilt போர்வைக்குள் வெப்பத்தில் இரு உடல்களும் காதலில் இணைந்தன… காதலிலிருந்து கட்டிலுக்கு இயல்பாக எந்த வித அதிர்வுகளும் இல்லாமல் organic-ஆக அவர்கள் உடல்கள் ஆடை என்ற பொய்யை விலக்கி மெய்யான மெய்(உடம்பு)கள் மட்டும் கலவியில் கலந்தன. இது வழக்கமான one night stand அல்ல. மாறாக இரு மனங்களின் இணைப்பை உடலுறவின் மூலம் உறுதிப்படுத்திய முதலிரவு காமச்சடங்கு… அதனால் அவர்களின் கதவை சார்த்திவிட்டு நாம் வாழ்த்திவிட்டு நாகரீகம் கருதி அந்த அறையிலிருந்து வெளியே வருவோம். தூரத்தில் கடலலை ஆர்ப்பரிப்பிலும், புயல் காற்றின் மூலமும் இயற்கையும் அவர்களை வாழ்த்தியது.

இந்த ஜெய்யும் ஜெஃப்பும் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 31/12/2012
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
ஜெய்யும் ஜெஃப்பும் – ஜெஃப் வீட்டில் ஜெய் முதலிரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top