| தலைப்பு | The Blue Caftan | ||||||||||
| மொழி | Hebrew | ||||||||||
| வெளியான வருடம் | 2022 | ||||||||||
| வகை | Feature film | ||||||||||
| எங்கு பார்க்கலாம்? | Netflix | ||||||||||
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் | ||||||||||
| நடிகர்கள் | Saleh Bakri (Halim), Ayoub Missioui (Youssef), Lubna Azabal (Mina) | ||||||||||
| இயக்குனர் | Maryam Touzani | ||||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||||
| தமிழ் திரையுலகம் மட்டும் தான் gay-க்கள் எல்லாம் ‘வேட்டையாடு விளையாடு’ வில்லன்கள் போன்ற serial killer-கள் அல்லது ‘அவனா நீ’ என கேலிக்கு உள்ளாக்கப்படும் ஆட்கள் என்று வரையறைப்படுத்தும். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஓவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள், நடிகர்கள் என்று கலையின் மூலம் தங்களை வெளிப்படுத்துபவர்களில் அதிகம் பேர் gay-க்களாக உள்ளனர். காரணம் அவர்களுடைய மனம் பல நேரம் தனிமையில் இருப்பதால், தங்களுடைய உணர்வுகளை, சமுதாய கோட்பாடுகளின் எதிர்ப்பை வெளிப்படுத்த அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள் பெரும்பாலும் கலையை சார்ந்தே இருக்கும். Makeup கலைஞர்கள், Costume designers, model-கள், body builder-கள் என “aesthetics” சம்பந்தப்பட்ட துறைகளில் ஏராளமானோர் gay-க்களாக இருப்பதே இதற்கு சான்று. இந்த ‘The Blue Caftan’ படத்திலும் முதன்மை கதாபாத்திரங்கள் ஆடை வடிவமைப்பாளர்களே. மொராக்கோ நாட்டின் மதினத்துக்கு அருகே தையல் கடை நடத்திவரும் ஹாலிம் – மினா தம்பதியினருக்கு, அவர்களுக்கு வரும் ஆர்டர்களை தைத்து தரமுடியாத அளவுக்கு நல்ல பெயரோடு இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஹாலிம்மின் கை விரல்கள் பட்டுத்துணியிலும், தங்க நூலிழைகளையும் கொண்டு அற்புதமான டிசைகள் செய்யும் ஜாலம் தான். ஹாலிம் ஒரு closet gay… ஆனாலும் ஹாலிம் அரிப்பெடுத்த போதெல்லாம் ஊர்மேயும் ரகம் இல்லை. தனது உடற்பசியை தனக்குள் வைத்து பூட்டிக்கொண்டு வாழ்ந்தாலும் எப்போதாவது அவர்களது ஹமாம் என்னும் பொது குளியலறையில் மற்ற Gay-களுடன் புணர்ந்து தன் பாலுணர்ச்சிக்கு வடிகால் தேடிக்கொள்கிறான். ஹாலிமுடைய தன்பாலீர்ப்பு அவன் மனைவி மினாவுக்கும் தெரிந்த ‘ரகசியம்’. அவர்களிடையே உடலுறவு மட்டும் தான் awkward ஆக உள்ளதே தவிர, இருவருக்கும் அடுத்தவர்கள் மீது அன்பும், அக்கறையும் அபரிதமாக உள்ளது. ஹாலிமிடம் கடுமையாக பேசும் வாடிக்கையாளரை மினா கண்டிக்கிறாள். பின்னர் இருவரும் அந்த உரையாடலை mimicry செய்து சிரிக்கின்றனர்.
மினாவின் உடம்பில் மீண்டும் கேன்சர் தலைதூக்குகிறது. அவளை ஹாலிம் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறான். மினாவின் கடைசி நிமிடங்கள் எண்ணப்படுகின்றது. ஹாலிம் குற்ற உணர்ச்சி தாங்காமல் அவளிடம் மன்னிப்பு கேட்கிறான். மினா ஹாலிமை “ஒரு பரிசுத்தமான ஆன்மா” என்று புகழ்ந்து, அவனுடன் வாழ்ந்ததற்காக தான் பெருமை படுவதாக சொல்கிறாள். ரொம்ப நாட்களாக கடை மூடிக்கிடக்கிறது என்று அக்கறையுடன் யூசுஃப் விசாரிக்க வருகிறான். மினா அவனிடம் தான் கடுமையாக நடந்துக்கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறாள். ஹாலிம், மினா மற்றும் யூசுஃப் மூவரும் நிறைய நேரங்கள் ஒன்றாக செலவிடுகின்றனர் – அரட்டை அடிக்க, நடனமாட என்று. மேலும் ஹாலிமிடம் “நேசிப்பதற்கு பயப்படக்கூடாது” என்று மறைமுகமாக அவனது தன்பாலீர்ப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிறாள். கடைசியில் மினா இறந்த பிறகு அவளுடைய உடம்புக்கு பட்டு கஃப்தான் அணிவித்து, ஹாலிமும், யூசுஃப்பும் அவளை சுமந்து சென்று அடக்கம் செய்கிறார்கள்.
YouTube-ல் முழு படமும் உள்ளது. அதை இந்த பதிவின் இறுதியிலும் இணைத்துள்ளேன். மொத்தத்தில் right intentions-களோடு பார்த்தால் இந்த “The Blue Caftan” படம் நம் மனதில் ஏதோ ஒரு மூலையில் காலத்துக்கும் ஒட்டிக்கொள்ளும். குறிச்சொற்கள்: ஓரினக்காதல், ஓரினச்சேர்க்கை <--- முற்றும் ---> இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா? * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 28/06/2025
|
|||||||||||
| முன்னோட்டம் | |||||||||||
![]() |
|||||||||||
| விமர்சனம் | |||||||||||
![]() |
|||||||||||
| முழு நீள வீடியோ | |||||||||||
![]() |
|||||||||||
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 28/06/2025
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |






