| தலைப்பு | Sublet | ||||||||||
| மொழி | English | ||||||||||
| வெளியான வருடம் | 2020 | ||||||||||
| வகை | Feature film | ||||||||||
| எங்கு பார்க்கலாம்? | Netflix | ||||||||||
| இலவசமாக பார்க்கலாமா? | இல்லை | ||||||||||
| நடிகர்கள் | John Benjamin Hickey (Michael), Niv Nissim (Tomer), Peter Spears (David), Miki Kam (Tomer's mother) | ||||||||||
| இயக்குனர் | Eytan Fox | ||||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||||
| முற்றிலும் எதிர் எதிர் அலைவரிசையை கொண்ட இரு ஆண்கள், முதலில் கருத்து மோதலில் தொடங்கி பின்னர் நட்பில் முடிவது என்பது நமக்கு புதிது அல்ல. அன்பே சிவம் முதல் மெய்யழகன் வரை நாம் இது போன்ற கதைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபடுகிறார்கள், எந்த புள்ளியில் இணைகிறார்கள் என்பது தான் அந்த கதையை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. “அன்பே சிவம்”-ல் materialistic அன்பரசு, அன்பை மட்டும் நம்பும் நல்லசிவத்தை சந்தித்த பிறகு அவனது எண்ணப்போக்கில் ஏற்படும் மாற்றமும், மெய்யழகனில் சொந்தங்களை வெறுக்கும் அருள்மொழி, அனைவரையும் நேசிக்கும் மெய்யழகனை சந்தித்த பிறகு ஏற்படும் மாற்றமும் இதன் உதாரணங்கள். அப்படிப்பட்ட ஒரு இரு துருவங்கள் சந்தித்து உரையாடும் அனுபவமாக “Sublet” என்னும் Israeli படம் அமைந்துள்ளது. இஸ்ரேலின் Tel Aviv நகரத்துக்கு வரும் ஓரினச்சேர்க்கையாளரான Columnist மைக்கேல் AirBnB மூலம் அங்கு வசிக்கும் தோமரின் வீட்டை Sublet-க்கு (உள்வாடகை) எடுக்கிறார். இருவரிடையே முதலில் Check-in தேதி குழப்பம் காரணமாக ஏற்படும் முரண்பாடு, தோமருக்கு மைக்கேல் தரும் வாடகையின் அவசியத்தை உணர்ந்து அவர் விட்டுக்கொடுப்பதன் மூலம் சரி செய்யப்படுகிறது. தோமர் மைக்கேலை அனைத்து சுற்றுலா பயணிகளும் போகும் cliched tourist spot-ளை தவிர்த்து புது இடங்களுக்கு அழைத்து சென்று மைக்கேலின் பயணத்தை அழகாக்குகிறான். தான் வாடகைக்கு இருக்கும் நாட்களில் எல்லாம் தோமர் வெளியே பூங்காவில் தூங்குகிறான் என்பதை அறிந்த மைக்கேல், அவன் தனக்கு guide-ஆக வேலை செய்வதற்கு பதிலுதவியாக அவன் அவருடனேயே தங்கிக்கொள்ள அனுமதிக்கிறார். இப்படியாக இருவரும் நெருங்கி பழகும் வாய்ப்பு உருவாகிறது. இளமையும், கவர்ச்சியும் நிறைந்த தோமருக்கு monogamy எனப்படும் ஒற்றை துணையுடன் வாழ்வதில் நம்பிக்கை இல்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக வயது முதிர்ந்த மைக்கேல் தினம் இரவு தூங்கப்போகும் முன்பு தனது கணவரான டேவிட்டுடன் Skype video அழைப்பின் மூலம் பேசுகிறார். டேவிட்டுக்கும் மைக்கேலுக்கும் இடையே வாடகை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு முரண்பாடு நிலவிக்கொண்டிருக்கிறது. தோமர் மைக்கேலின் “ஓய்ந்துப்போன” செக்ஸ் வாழ்க்கையை பற்றி கேலி செய்கிறான். அதற்கு மைக்கேல் செக்ஸை மட்டும் பிரதானப்படுத்தி, காதலிக்கும் / காதலிக்கப்படும் இனிமையை அவன் இழப்பதாக சுட்டிக்காட்டுகிறார். இரண்டு தலைமுறைகளுக்கு நடுவே இருக்கும் செக்ஸ் பிரதானத்தை குறித்த பார்வைகள் அழகாக விவாதிக்கப்படுகிறது.
அதற்கு முன்பு அவர் “குரங்கு நாசம் செய்த பழத்தோட்டம்” போல இருக்கும் தோமரின் wardrobe-ஐ அழகாக அடுக்குகிறார். தோமரிடம் “chaotic வாழ்க்கையின் thrill போல organised வாழ்க்கையும் இனிமையானதே” என்று சொல்கிறார். இருவருக்கும் பிரியப்போகும் நெகிழ்ச்சி unplanned sex-ல் முடிகிறது. அடுத்த நாள் மைக்கேல் கிளம்பும்போது relationship-களில் நம்பிக்கை இல்லாத தோமர் அவரை கட்டிக்கொண்டு அழுகிறான். விமானத்தில் ஏறும் மைக்கேல் தன் கணவரிடம் தான் தந்தை ஆவதற்கு தயாராக இருப்பதாக செய்தி அனுப்புகிறார். தோமர் மற்றும் மைக்கேல் இருவரின் எண்ணங்களிலும், வாழ்க்கை குறித்த பார்வையிலும் இந்த பயணம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக படம் முடிகிறது.
பி.கு: நிவ் நிஸ்ஸிம் நிஜ வாழ்க்கையிலும் ஒரு gay. அவன் legalised same sex marriage செய்து தன் கணவனுடன் வசித்து வருகிறான். பார்ப்பவர்கள் கண் திருஷ்டி படும் அளவுக்கு பாந்தமாக இருக்கிறார்கள். அவர்களது கல்யாண வீடியோ (https://www.instagram.com/reel/C_xxOBetsl-/?hl=en) குறிச்சொற்கள்: ஓரினக்காதல், ஓரினச்சேர்க்கை <--- முற்றும் ---> இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா? * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 26/06/2025
|
|||||||||||
| முன்னோட்டம் | |||||||||||
![]() |
|||||||||||
| விமர்சனம் | |||||||||||
![]() |
|||||||||||
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 26/06/2025
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |





