| தலைப்பு | The Cakemaker | ||||||||||
| மொழி | Hebrew | ||||||||||
| வெளியான வருடம் | 2017 | ||||||||||
| வகை | Feature film | ||||||||||
| எங்கு பார்க்கலாம்? | Netflix | ||||||||||
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் | ||||||||||
| நடிகர்கள் | Tim Kalkhof [de] (Thomas), Roi Miller (Oren), Sarah Adler (Anat), Zohar Strauss (Motti) & Tamir Ben-Yehuda (Itai) | ||||||||||
| இயக்குனர் | Ofir Raul Grazier | ||||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||||
| The Cakemaker – இறந்து போன காதலனின் குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக, அவர்கள் அறியாமல், மூன்றாம் மனிதராகி அறிமுகம் ஆகி, நெருக்கமானவராக மாறி, கடைசியில் தான் யார் என்ற அடையாளம் தெரிந்ததும் காதலனின் குடும்பத்தால் அவமானப்படுத்தி விரட்டி அடிக்கப்பட்டு… கடைசியில் அதே குடும்பத்தினர் இவருடைய காதலின் மகத்துவம் புரிந்து, அவருடைய வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்… இது தமிழில் 1993-ம் ஆண்டு வெளியான, பானுப்ரியா, ஜெயராம் மற்றும் அர்ஜும் நடித்து, விக்ரமன் இயக்கிய “கோகுலம்” படத்தின் கதையாயிற்றே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ‘கோகுலம்’ படத்தில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு gender-களாக இருப்பதாலும், காதலன் மறைவுக்கு பிறகு காதலி அவன் குடும்பத்தை தாங்கிப்பிடிப்பது நெகிழ்ச்சியூட்டும் கதையாகிறது. ஆனால் இரண்டு காதலர்களும் ஒரே sex-ஆக, குறிப்பாக ஆண்களாக இருந்தால் இந்த சமுதாயம் எப்படி ஏற்கும்? இது தான் “The Cakemaker” என்னும் இஸ்ரேலிய LGBT படத்தின் கதை. ‘கோகுலம்’ கொஞ்சம் melodrama-வாக, நம்மூர் ரசனைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த “The Cakemaker”-ல் இயல்பு கூடுதலாகவும், melodrama குறைவாகவும் இருக்கும். Berlin நகரத்தில் வசிக்கும் தாமஸ் என்ற baker-க்கும், அலுவலக விஷயமாக Jerusalem நகரத்தில் இருந்து வரும் ஆர்லெனுக்கும் ஓரினக்காதல் ஏற்பட்டு அது உறவாகவும் தொடர்கிறது. பல காலமாக தன்னை காண வராத ஆர்லெனை தேடி அவன் அலுவலகத்துக்கு செல்லும் தாமஸுக்கு ஆர்லென் இறந்து ஒரு மாதம் ஆகிறது என்ற செய்தி பேரிடியாக இறங்குகிறது. அவனது குடும்பத்தை – மனைவி மற்றும் குழந்தையை ஒரு முறை தூரத்தில் இருந்தாவது பார்க்கலாம் என்று ஜெருசலேம் போகிறான். அங்கே அவன் மனைவி அனத் ஒரு coffee shop வைத்துக்கொண்டு அல்லாடுவதை பார்க்கும் தாமஸ், தான் யாரென்று சொல்லாமல் அவளிடம் வேலைக்கு சேர்கிறான்.
இந்த படத்தின் அழகே இதன் தெளிவான நீரோட்டம் போன்ற அமைதியான திரைக்கதையும், அதன் அடிநாதமான மென்சோகமும் தான். தாமஸ் தன் காதலை, காதலனை இழந்த துக்கத்தை வெளிப்படுத்தி இருக்கும் விதமும், அதை வெளியே சொல்ல முடியாத பரிதவிப்பும் பார்க்கும் நமக்கே திரைக்குள் சென்று அவனை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லலாமா என்பது போல இருக்கும். என்ன தான் காதல் இருந்தாலும், சமூகத்தின் முன்பு எந்த உரிமையில் அவன் ஆர்லெனின் குடும்பத்தை பார்க்க முடியும் என்ற பரிதாபம், இந்த சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாத மொத்த ஓரினக்காதல்களின் பிரதிநிதித்துவம்.
குறிச்சொற்கள்: ஓரினக்காதல், ஓரினச்சேர்க்கை <--- முற்றும் ---> இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா? * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 02/01/2026
|
|||||||||||
| முன்னோட்டம் | |||||||||||
![]() |
|||||||||||
| விமர்சனம் | |||||||||||
![]() |
|||||||||||
| முழு நீள வீடியோ | |||||||||||
![]() |
|||||||||||
<--- முற்றும் --->
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 02/01/2026
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |






