உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்

உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்

இது உயிரில் கலந்த உறவே தொடர்கதையின் 19-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
தன் மகன் ஒரு homosexual என்று தெரிந்தால் ஆணவ கொலை செய்யும் தந்தைகளுக்கு நடுவில் தனசேகர் தங்களிடம் அன்பு குறையாமல் இருப்பதை பார்க்கும் ஜெய், தன் தந்தையின் ஓரினக்காதலை கண்டுபிடித்து சேர்த்து வைக்க முடிவெடுக்கிறான். ஆனால் தனசேகர் பிடிகொடுக்காமல் நழுவுகிறார்.

அம்மா இப்போ எல்லாம் பன்னீர் சோடா கிடைக்குதா?” – எல்லோரும் டைனிங் டேபிளில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இந்த ஜெய் கேள்வியை எழுப்பினான்.

“எங்கேடா… இப்போ எல்லாம் கோலி சோடாவை கண்ணுலயே பாக்க முடியலை… இதுல பன்னீர் சோடா எங்கே கிடைக்கப்போகுது….” அம்மா அப்பாவுடைய தட்டில் இருந்த சப்பாத்திக்கு குருமா பரிமாரியவாறே ஆதங்கத்தோடு பதில் சொன்னார்.

“ஏண்டா குட்டி… உனக்கு அந்த டேஸ்ட் வேணும்னா Sprite குடி… கிட்டத்தட்ட அந்த டேஸ்ட்ல் இருக்கே…” பிரபாகர் ஜெய்க்கு பரிந்துரை செய்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

ஜெய் டி.வி-யில் சேனல் மாற்றினான். இளம் வயது சுரேஷ், பள்ளி மாணவியான சாந்தி கிருஷ்ணாவுடன் நட்பு பாராட்டிக்கொண்டிருக்க, பின்னணியில் இளையராஜாவின் இசையில் “பூந்தளிர் ஆட பொன்மலர் சூட..” என்று பாடிக்கொண்டிருந்தது.

“அம்மா… பன்னீர் புஷ்பங்கள் சூப்பர் படம் இல்ல?” – ஜெய்.

“ஆமாம்… இப்போ எங்கே இந்த மாதிரி சிம்பிளான கதைங்கள எடுக்குறாங்க… நம்ம வாழ்க்கையிலே நடக்குற விஷயங்கள்லயே ஆயிரம் கதை சொல்லலாம்… ஆனால் fantasy-ன்னு சொல்லி என்ன குப்பையவோ எல்லாம் எடுத்து தள்ளுறாங்க…” அம்மா சலித்துக்கொண்டார்.

அடுத்த பாட்டாக சக்கரை தேவனில் சுகன்யா “தண்ணீர் குடம் கொண்டு தனியாக போனேன்” என்று விஜயகாந்தை ஈர்க்கும் விதமாக பாடிக்கொண்டிருக்க, ஜெய் அதை “பன்னீர் குடம் கொண்டு தனியாக போனேன்..” என்று கூடவே பாடினான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்குள்ள 425+ கதைகளை navigate, explore செய்ய எந்தெந்த features-களை உபயோகிக்கிறீர்கள்?

View Results

Loading ... Loading ...

“என்னடா ஆச்சு உனக்கு… ஒரே பன்னீர் பன்னீர்னு பினாத்திக்கிட்டு இருக்கே” அம்மா சிரிக்க, ஜெய் அப்பாவின் முகத்தில் லேசாக கருமை படர்வதை கவனித்தான். அவருக்கு ஜெய் பேசுவது எல்லாம் யதேச்சையாக நடப்பதில்லை என்று புரிந்தது.

ஏம்மா கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு பன்னீர் தெளிச்சு வரவேற்குறாங்க?” ஜெய் அடுத்த கேள்வியை தொடுத்தபோது பிரபாகருக்கும் அவன் மாமாவை சீண்டுவதை உணரமுடிந்தது. பிரபாகர் இருதலை கொள்ளி எறும்பு போல தவித்தான். அவன் ஜெய்யை பார்வையாலேயே “ப்ளீஸ்.. நிறுத்து” என்று கெஞ்சிக்கொண்டிருந்தான்.

அப்பா சாப்பிட்டுவிட்டு எச்சில் தட்டை அப்படியே விட்டுவிட்டு எழுந்து வாஷ் பேசினை நோக்கி நடந்தார். “டேய்… அடுத்த தடவை இது மாதிரி மொக்கை போட்டே.. காலையிலே உனக்கு சமைக்கும் போது பேதி மாத்திரையை கலந்துடுவேன்.. ஜாக்கிரதை” அம்மா செல்லமாக மிரட்டிவிட்டு அவருடைய தட்டையும், தனசேகர் விட்டுவிட்டு போன எச்சில் தட்டையும் எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நடந்தார். சில நிமிடத்துக்கெல்லாம் பிரபாகரும் தன் எச்சில் தட்டை எடுத்துக்கொண்டு வனஜா பின்னாடியே நடந்தான். அவனுக்கு அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்று இருந்தது.

அப்பாவும் அம்மாவும் படுக்கப்போய்விட, அது வரைக்கும் பிரபாகரும் யாரிடமும் பேசவில்லை. தன் அறைக்கு படுக்கப்போய்விட்டான். ஜெய் கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு ஹாலின் விளக்குகளை அணைத்துவிட்டு அறைக்கு போனான்.

“குட்டி… நீ இன்னைக்கு மாமாவை தான் சீண்டுனேங்குறது அவருக்கும் புரிஞ்சிருக்கும்.. ஏன் இப்படி பண்றே?” பிரபாகர் பதைபதைத்தான்.

“சும்மா இருடா… அப்புறம் எப்படி விஷயத்தை வெளியே கொண்டு வர்றதாம்?” ஜெய் அவனை அடக்கினான்.

“வெளியே கொண்டுவந்து என்ன சாதிக்கப்போறே? நீ தேவை இல்லாம மாமாவை காயப்படுத்துறே..”

“விடுடா… இந்த கலகம் நல்லதுல தான் முடியும்…” ஜெய் படுத்து பிரபாகரை கட்டிப்பிடித்துக்கொண்டு அவன் மேலே கால் போட்டுக்கொண்டான். பிரபாகர் இப்போது கிளுகிளுப்பை தேடும் மனநிலையில் இல்லை என்பதால் மரக்கட்டை போல படுத்துக்கிடந்தான். ஜெய்யும் அவனை ‘தொந்தரவு’ பண்ணாமல் விட்டுவிட்டான்.

கொஞ்ச நேரத்தில் இவர்களது அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, பிரபாகர் தூங்குவதாக கண்ணை மூடிக்கொண்டான். ஜெய் தூக்கக்கலக்கத்தில் எழுந்திருப்பதை போல கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்து சென்று கதவை திறந்தான். வாசலில் அப்பாவை பார்த்து அவனுக்கு ஆச்சரியமோ இல்லை பதற்றமோ வரவில்லை.

“தூங்கிட்டியாடா?”

ஆமாம்பா…” ஜெய் கண்ணை கசக்கி, மெல்லிய கொட்டாவி விட்டு தன் நடிப்பை மேலும் மெருகேற்றினான்.

“பிரபா…?”

“அவன் அப்போவே தூங்கிட்டாங்கப்பா… நான் டிவி பார்த்துட்டு வர்றப்போவே அவன் தூங்கிட்டிருந்தான்”

“உன் கிட்டே கொஞ்சம் பேசனும்… மாடிக்கு வா” என்று சொல்லிவிட்டு அப்பா அவன் பதிலுக்கு எதிர்பார்க்காமல் ஹால் கதவை திறந்துக்கொண்டு வெளியேறினார்.

“ஏங்கப்பா… ஏதாச்சும் அவசரமா?” ஜெய் லேசாக இரைந்தான்.

தனசேகர் திரும்பி “ஷ்..” என்று வாயில் விரல் வைத்து சைகை செய்துவிட்டு மாடிப்படியேறினார். இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த பிரபாகருக்கு நெஞ்சில் நெருப்பு துண்டை அள்ளிப்போட்டது போல பதற்றமாக இருந்தது.

ஜெய் ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் ஆரம்பித்துவிட்டானே ஒழிய, தனசேகரை பின்தொடர்ந்து மாடிக்கு நடக்கும் போது அவன் நாக்கு உலர்ந்து அவன் வாயில் ஒட்டிக்கொண்டு பேச்சு வர சிரமமாக இருந்தது.

ஜெய்… உனக்கு என்ன தெரியனும்? நேரடியா பேசு.. சீக்கிரமா சொல்லு” தனசேகரின் குரலில் தெரிந்த கடுமை ஜெய்யை கொஞ்சம் நடுங்க வைத்தது.

ஒன்னுமில்லையேப்பா…” ஜெய் பம்மினான்.

“நீ சொல்றது பொய்யின்னு உனக்கே தெரியும்… ஒருவேளை கேட்க ஒன்னும்மில்லைன்னு உனக்கு மனசு மாறியிருந்துச்சுன்னா நாளை பின்னே இன்னைக்கு மாதிரி உளறிட்டு இருக்காதே..”

“அப்பா… நான் சும்மா தானே பன்னீர் புஷ்பங்கள், பன்னீர் சோடான்னு பேசிட்டு இருந்தேன்… அது ஏன் உங்களை டிஸ்டர்ப் பண்ணனும்?”

“ஒருவேளை தானே வாண்டடா வந்து சிக்கிக்கிட்டோமோ?” தனசேகர் மோவாயை மெலிதாக சொறிந்தவாறே உள்ளுக்குள்ளே லேசாக பதறினார்.

“ஏங்கப்பா நீங்க பதறனும்? ஒருவேளை நீங்க சொன்ன அந்த ஸ்பெஷல் ஃப்ரெண்டு பன்னீர் மாமாவா?”

மாடி இருட்டாக இருந்தாலும், சாலையிலிருந்த டியூப்லைட் வெளிச்சம் கலைத்த அரையிருட்டில் தனசேகரின் முகத்தில் கோபம் கொப்பளிப்பதையும், தன்னுடைய பற்களை கடிப்பதால் தாடைகள் இறுகுவதையும் ஜெய்யால் பார்க்கமுடிந்தது.

“இப்போ உனக்கு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னதுக்கு பதிலா நீ என்னை மிரட்டுறியா?”

“ஐய்யோ இல்லைங்கப்பா… நீங்க யாரை கை காமிச்சாலும் நான் கேள்வியே கேட்காம கல்யாணம் பண்ணிக்கிறேன்.. எந்த நிர்பந்தத்தாலயும் சொல்லலை… உங்களுக்கு ஒரு நல்ல மகனா இருக்க முயற்சிப்பண்ணிட்டு இருக்கேன்..”

“அப்படின்னா இப்போ இந்த ஆராய்ச்சிக்கு என்ன அவசியம்? நான் உன்னோட நல்லதுக்குன்னு நினைச்சு தான் என் மனசுல இருந்த ரகசியத்தை சொன்னேன்… நீ இப்படி அதை வச்சு blackmail பண்ணுவேன்னு எதிர்பாக்கலை.. சே!” தனசேகர் இயலாமையில் பொறுமினார்.

ஜெய் அவர் அருகே வந்து அவர் கையை எடுத்து “அப்பா… உங்க ரகசியத்தை இனியும் ரகசியமா இருக்கவேண்டாம்னு தான் ஆசைப்படுறேன்..”

“அப்படின்னா… நாணும் ஹோமோசெக்ஸ் பண்ணியிருக்கேன்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு திரியணுமா…”

“தப்பா பேசுறீங்கப்பா… உங்க நண்பரை நீங்க மறைச்சு வச்சிருக்காதீங்க… உங்க அன்பை, சந்தோஷத்தை வெளிப்படையா பகிர்ந்துக்கோங்கன்னு தான் சொல்றேன்… ”

தனசேகர் முகத்தில் இருந்து கோபம் மெல்ல மெல்ல விடைபெற்று அங்கு அமைதி குடியேறத்தொடங்கியது.

“வெளிப்படுத்தி” அவர் புருவம் உயர்ந்து அந்த ஒற்றை வார்த்தையை கேள்வியாக்கியது.

“உங்க அன்புக்கு ஒரு அங்கீகாரம் குடுங்கன்னு தான் சொல்றேன்… சந்தோஷமா உலகத்துக்கு முன்னாடி தைரியமா அவர் கையை பிடிச்சுட்டு நடங்க… நண்பேண்டான்னு கட்டிபிடிச்சுக்கோங்கன்னு சொல்றேன்… பன்னீர் மாமாவும் ரொம்ப சந்தோஷப்படுவார்…”

“இதுல பன்னீர் எதுக்கு சந்தோஷப்படனும்?”

“அவர் தானே உங்களோட உயிர்த்தோழன்?”

“ஓஹோ! நீ அப்படி போட்டு வாங்குறியா?” தனசேகரின் கோபம் மீண்டும் தலைக்கேறியது.

ஜெய்க்கு இப்போது ஏண்டா இந்த விஷயத்தை ஆரம்பித்தோம் என்று அயர்ச்சியாக இருந்தது. அவனது உத்தேசமும் உபயோகிக்கும் வார்த்தைகளும் எதிர் எதிர் திசையில் பயணிப்பதால் அவைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு ஜெய் தத்தளித்தான்.

“இல்லைங்கப்பா…. என்னோட ஆசை, என்னோட நிலைமையை புரிஞ்சுக்கிட்ட என்னோட அப்பா, கிட்டத்தட்ட அதே நிலைமையிலே தான் இருக்கார்.. அவரும் அதிலிருந்து வெளியே வரணும்ங்குறது தான்.. அவர் ஏன் தன்னோட நட்புக்கு வெளிப்படியா மரியாதை குடுக்கக்கூடாதுங்குற ஆதங்கம் தான்..” ஜெய் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

ஜெய்… உன்னோட உத்தேசம் நல்லதாவே இருக்கட்டும்… ஆனா என்னோட கதையை உன் கிட்டே சொல்லிட்டேங்குறதுக்காக நான் இத்தனை வருஷமா என் மனசுக்குள்ள பூட்டிவச்சு காப்பாத்திட்டு இருக்குற ரகசியத்தை வெளியே சொல்லிடுவேன்னு எதிர்பார்க்காதே.. நீ யாரை வேணும்னாலும் யூகிச்சுக்கோ, கை காட்டு… நீ அவங்க தான்னு ஆணித்தரமா நம்பினாலும் சரி நான் எதையும் மறுக்கவோ ஒத்துக்கவோ மாட்டேன்… ப்ளீஸ் இதுக்கு மேலே நான் இந்த விஷயத்தை பத்தி பேச விரும்பலை…”

“சரிங்கப்பா… ஒரு வேளை உங்க ஸ்பெஷல் நண்பர் வெளிப்படையா ஒத்துக்குட்டா? நீங்க அப்போ இல்லைன்னு மறுப்பீங்களா”

“எனக்கு என்னை விட அவன் மேலே நம்பிக்கை இருக்கு… நாங்க ரெண்டு பேரும் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் மாதிரி… தினசரி பார்த்துக்கனும், பேசிக்கனும்னு இல்லை… ஆனா ஒருத்தருக்கு ஒரு கஷ்டமோ இல்லை சங்கடமோன்னா தானாவே மத்தவங்க தொடர்புக்கு வருவோம்… எங்க அன்புக்கு மரியாதை குடுக்கனும்னு நினைச்சேன்னா இந்த விஷயத்தை இதோட விட்டுடு…” தனசேகர் சொன்னது ஜெய்க்கு கிட்டத்தட்ட கையெடுத்து கும்பிடுவது போல இருந்தது.

“சரிங்கப்பா… உங்க அன்பை நான் மதிக்கிறேன்… அதை Closet-ல இருந்து வெளியே எடுத்து உலகத்துக்கு முன்னாடி கொண்டுவந்து அதுக்கான மதிப்பை குடுக்கனும்னு தான் ஆசைப்பட்டேன்… உங்களுக்கா என்னைக்கு உங்க அன்புக்கான மரியாதையை குடுக்குறீங்களோ அன்னைக்கு உங்களுக்கு கை தட்டி வரவேற்குற முத ஆளா நான் தான் நிப்பேன்… அது பன்னீர் மாமா தான்னு எனக்கு நிச்சயமா தெரியும்.. ஆனா நீங்க தான் நான் எந்த பேர் சொன்னாலும் அதை மறுக்கவோ ஒத்துக்கவோ மாட்டேன்னு சொல்லிட்டீங்களே… அதனால உங்க நண்பருக்கு மிஸ்டர் எக்ஸுன்னு பேர் வச்சு என்னோட அன்பை தெரிவிச்சுக்குடறேன்.. அடுத்த தடவை நீங்க மிஸ்டர் எக்ஸ்கிட்டே பேசும்போது ஜெய் உங்களை நேசிக்கிறான், உங்களை ஆசையோட கட்டிக்கனும்னு சொன்னான்னு சொல்லுங்க…” ஜெய்க்கு தன்னை அறியாமலேயே குரல் கம்மத்தொடங்கியது. எப்போது அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வரத்தொடங்கியது என்று தெரியவில்லை… பேசி முடிக்கும்போது அவன் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் வழிந்திருந்தது.

தனசேகர் எதுவும் பேசவில்லை என்றபோதிலும் தெருவிளக்கின் உபரி வெளிச்சத்தில் அவர் உடல் குலுங்குவது Silhoutte-ல் தெரிந்தது. அவர் மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் இந்த கண்ணீரில் கரைந்து வெளியேறட்டும் என்று ஜெய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து மாடிப்படிக்கு இறங்கினான்.

“அப்பா… நான் நீங்க சொன்ன பொண்ண இந்த weekend-ல மீட் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…. formal-ஆ வீட்டுல வேணாம்… casual-ஆ  எங்கேயாச்சும் Coffee Shop-ல நாங்க மீட் பண்ணிக்கிறோம்… அப்புறம் ஒரு விஷயம்… இந்த சம்பந்தம் முன்னேறாதபடிக்கு நான் என் வகையிலே எந்த எடக்கும் பண்ணமாட்டேன்… I promise… நீங்க போய் நிம்மதியா தூங்குங்க… மிஸ்டர் எக்ஸ் என் கல்யாணத்துக்கு வர்றப்போ அவரோட அடையாளத்தை வெளிப்படுத்தினார்னா அதையே என்னோட ஆசிர்வாதமா, விலைமதிப்பில்லாத கல்யாண பரிசா எடுத்துக்குவேன்.. Good night அப்பா..” ஜெய் தனசேகரை நோக்கி திரும்பி நடந்து நெருங்கி அவரை அணைத்துக்கொண்டான். I love you அப்பா…” ஜெய் தனசேகரிடம் விசும்பலோடு சொன்னபோது தனசேகரிடமிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.

மாடிப்படியில் இருட்டில் நின்று இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரின் கண்களிலும் கண்ணீர் குளமாக நிறைந்திருந்தது… பிரச்சனை இல்லாமல் இந்த உரையாடல் முடிந்ததே என்ற நிம்மதி. கால் நுணிவிரலில் சத்தம் வராமல் கீழே இறங்கி அறைக்கு சென்று படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஹால் கதவு தாழிடப்படும் சத்தமும், தன் அறையின் கதவு திறந்து மூடும் சத்தமும் எல்லோரும் settle ஆகியதை சொன்னது. ஜெய் தூங்குவதாக நடித்துக்கொண்டிருக்கும் பிரபாகரின் நடிப்பை உணர்ந்து அவனை தொந்தரவு செய்யாமல் குணிந்து அவன் உதட்டை மென்மையாக கவ்விப்பிடித்து கிஸ்ஸடித்துவிட்டு சரிந்து படுத்துக்கொண்டான். தூக்கத்தில் திரும்புவது போல பிரபாகர் திரும்பி ஜெய்யை கட்டிக்கொண்டு அவன் மேல் கால்போட்டுக்கொள்ள, ஜெய் அவன் அணைப்பில் ஒடுங்கி உண்மையிலேயே உறங்கிப்போனான்.

இந்த உயிரில் கலந்த உறவே இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 28/02/2017
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2017/02/19.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top