உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்

உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்

இது உயிரில் கலந்த உறவே தொடர்கதையின் 24-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஜெய்க்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் ஆகப்போகிறது என்று நம்பும் பிரபாகர், ஜெய் தனியாளாக கொண்டாடப்போகும் கடைசி பிறந்த நாளுக்கு Birthday present ஆக ஒரு Bluetooth speaker வாங்கி கொடுக்கிறான். ஆனால் ஜெய் அதைவிட பிரபாகருடன் அம்மணமாக கட்டிப்பிடித்து படுப்பதே சிறந்த பரிசு என்று சொல்ல, பிரபாகர் சந்தோஷமாக அதையும் கொடுக்கிறான்.

“சரி! என்னோட close friend கார்த்திக் லண்டன் Docklands-ல இருக்கான்… அவன் wife ராதிகா இன்னும் வேலை கிடைக்காம தான் இருக்கா… உன்னை அவங்க கிட்டே அறிமுகப்படுத்தட்டுமா? உனக்கு ஊர் பழகுறவரைக்கும் பாதுகாப்பா இருக்கும்… அவங்களுக்கும் உன்னை host பண்றதால ஒரு வருமானம் கிடைக்கும்…”

“உன் friend-ன்னா நம்பலாம்… சரி! அவங்களை எனக்கு அறிமுகம் பண்ணி வை”

இப்போ என்ன time…” ஜெய் mobile phone-ல் நேரம் பார்த்துவிட்டு “அப்போ லண்டன்ல காலை 8:00 மணி… ஏன் நல்ல விஷயத்தை தள்ளிப் போடுவானேன்… இப்போவே அவங்களை கூப்பிடலாம்” ஜெய் அஞ்சலியின் பதிலுக்காக எதிர்பார்க்காமல் கார்த்திக்குக்கு WhatsApp-ல் இருந்து video call செய்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“சொல்லுடா மச்சான்… என்னா இன்னைக்கு திடீர்னு என் நெனப்பு” கார்த்திக் headset-ல் அவசரம் அவசரமாக Bread-டை வாயில் துறுத்தியபடி பேசினான்.

“என் friend அஞ்சலி சீக்கிரம் லண்டன் வருவா… அஞ்சலிக்கு ஒரு Hai சொல்லு” ஜெய் phone-னை அஞ்சலி பக்கம் திருப்ப அவள் “ஹாய் கார்த்திக்…” என்றாள்.

ஜெய் ஃபோனை மீண்டும் தன் பக்கம் திருப்பிக்கொண்டு “அஞ்சலி long-term-ல வர்றா…அவளை host பண்றதுக்கு உங்க வீட்ல இடம் ஏற்பாடு பண்ணுடா… நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட பொண்ணு…”

“அப்போ நீ எவ்ளோ நாள் கழிச்சு வருவே?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

சமுதாயமும் சுற்றத்தோரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் openly gay-ஆக Come Out செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

“நான்… ஏன்..?” ஜெய் குழம்பினான்.

“பிரபா தான் சொல்லிட்டானே… அஞ்சலி உன்னோட fiance-ன்னு… அஞ்சலி long term-ல வர்றங்கன்னா பின்னாடியே நீயும் வரப்போறேன்னு தானே அர்த்தம்? மச்சான்… கல்யாணத்துக்கு முன்னாடியே லண்டன்ல ஜல்ஸாவா? உன் privacy-க்கு நான் guarantee…”

ஜெய் சங்கடமாக அஞ்சலியை பார்த்தான். “டேய்! அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… நான் அஞ்சலியோட நம்பரை உனக்கும், உன்னோட நம்பரை அஞ்சலிக்கும் குடுக்குறேன்… அவளுக்கு Visa வந்ததும் இதை பத்தி திரும்ப பேசலாம்… Bye!” அவசரம் அவசரமாக துண்டித்தான். அஞ்சலியும் அவனது சங்கடத்தை உணர்ந்ததால் லண்டன் பயணம் பற்றி வேறெதுவும் பேசவில்லை.

ஜெய் Office-க்கு கிளம்பிவிட்டு கண்ணாடி முன்பு தன் அழகை ரசித்துக்கொண்டே தலை சீவிக்கொண்டிருந்தபோது அம்மா உள்ளே வந்து மெதுவாக “ஜெய்! இன்னைக்கு மதியானம் போல ஏதாச்சும் சாக்கு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துடுடா…” அம்மா சொன்னபோது “ஏன்?” என்பது போல புருவத்தை உயர்த்திப்பார்த்தான்.

“பொண்ணு வீட்டுல இன்னைக்கு நாள் நல்லா இருக்குங்குறதால நம்ம வீடு பார்க்க வர்றாங்களாம்… அவங்க ஜோசியர் திடீர்னு சொன்னதால நேத்திக்கு ராத்திரி தான் call பண்ணி தோதுபடுமான்னு கேட்டாங்க…. நல்ல விஷயத்தை தள்ளிப்போடக்கூடாதுன்னு அப்பா அவங்களை வரசொல்லிட்டார்…” அம்மா தன்னுடைய office bag-ஐ pack செய்துக்கொண்டிருந்த பிரபாவை பார்த்து “அவனை நேரத்தோட கூட்டிட்டு வரவேண்டியது உன் பொறுப்பு” என்றார்.

ஜெய்க்கு கோபத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது… இருந்தாலும் எதுவும் சொல்லாமல் கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top