P G 15. ஒரு மெல்லிய கோடு…

P G 15. ஒரு மெல்லிய கோடு…

இது Paying Guest தொடர்கதையின் 15-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
Flashback-ல் சமீர் தனக்கு propose செய்தபோது மும்பை போலீஸால் sexual assault செய்யப்பட்டதை நினைத்து அவினாஷ் தான் அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று மறுக்கிறான். ஆனால் சமீருக்கு ஒரு துணை தேவை என்று தன் gym-ல் பார்த்த ஜோஷுவா என்னும் Brazilian papi-ஐ date-க்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் சமீர் தான் அவினாஷுக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பதாக சொல்கிறான்.

அவினாஷ் வீட்டுக்குள் நுழைந்தபோது கிச்சனில் சமீர் பிஸியாக சமைத்துக்கொண்டு இருந்தான். கனடா வீடுகளில் ஹாலின் ஒரு பகுதியில் அடுப்பு திட்டு இருக்கும். அதனால் living room-க்குள் நுழைந்ததுமே அவினாஷுக்கு சமைத்துக்கொண்டிருக்கும் சமீரின் முதுகு தான் தெரிந்தது. சமீர் திரும்பாமலேயே அவினாஷிடம் குரல் கொடுத்தான்.

“அவி! நேரா Bathroom-க்கு போய் குளிச்சிட்டு refresh ஆயிட்டு வா! நான் dinner செஞ்சிட்டிருக்கேன். வரும்போது fridge-ல இருந்து Dokla packet-ஐ எடுத்துட்டு வா” சமீரின் குரலில் உற்சாகம் தெறித்தது.

“வேண்டாம் சமீர்! நான் Salam Bombay போயிருந்தேன். உனக்கும் parcel வாங்கிட்டு வந்திருக்கேன். அடுப்பை அப்படியே நிறுத்திட்டு வா… அதை breakfast-க்கு சமைச்சுக்கலாம்” என்ற அவினாஷை புரியாமல் திரும்பிப்பார்த்தான் சமீர்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“I thought you were on gym… என்ன திடீர்னு Salam Bombay-க்கு? அதுவும் நான் இல்லாம.. என் சமையல் போரடிச்சிடுச்சா?” சமீர் தன் apron-ஐ கழற்றியபடி அவினாஷிடம் வந்தான்.

“நான் ஒருத்தனை பாக்குறதுக்காக போனேன்… I was on a date” சமீரின் முகத்தில் குழப்ப ரேகைகள் மாறி மாறி கோடுபோட்டன.

“Date-ஆ? யார் கூட…? அவி! Are you seeing someone?” சமீரால் நம்பவே முடியவில்லை.

“சமீர்! நான் அவனை உனக்காக பார்த்தேன். உனக்கு அவன் பொருத்தமா இருப்பான்னு உள்மனசு சொல்லுது… அவன் கண்ணுல அப்படி ஒரு innocence. உன்னோட பரபரப்புக்கு அவன் நேர் எதிர்… உன்னை slow down பண்ணி உன்னோட வாழ்க்கையை balance பண்ணுவான். You’ll be calmed down and it is high time you get into domestic bliss” அவினாஷ் சமீரை தோளை பிடித்து Sofa-வுக்கு வழிநடத்தி உட்கார வைத்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கே பதியப்படும் சுட்டகதைகளில் நீங்கள் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

“அவி! உனக்கு நம்ம company மேலே இருந்து interest போயிடுச்சா? இல்லை…. எப்போலே இருந்து இந்த love broker வேலையை ஆரம்பிச்சிருக்கே? இல்லை pimping பண்றியா?”

கூட்டிக்குடுக்குறியா என்ற வார்த்தை அவினாஷை காயப்படுத்தியது என்பது அவனுடைய மௌனத்திலேயே தெரிந்தது. “இல்லை சமீர்! உனக்கு ஒரு பார்ட்னர் வேணும்னு எனக்கு தோணுச்சு… You need to settle down”

“நான் settle down ஆகனும்னு நீ நினைச்சினா நான் யார் கூட settle ஆகனும்னு ஆசைப்படுறேன்னு உனக்கு தெரியாதா? அவ்வளவு அக்கறை இருக்குறவன் ஏன் என்னோட proposal-ஐ consider பண்ண மாட்டேங்குறே? Don’t I deserve your love?”

“சமீர்! It is the otherway round.. I don’t deserve your love. உனக்கு என்னை விட இன்னும் நல்ல, better-ஆன கிடைக்கனும்.”

“நீ எனக்கு better-ஆன பார்ட்னர் இல்லைன்னு ஏன் நினைக்கிறே?”

“எனக்கு அதிர்ஷ்டம் இல்லை சமீர்! எனக்கு propose பண்ணனும்னு நீ நெனச்ச அன்னைக்கு உனக்கு நடந்த கொடூரம்…. marine drive-ல அந்த sexual assault.. நான் கையாலாகாம அதை பார்த்திட்டு இருந்தது எனக்கு இன்னுமே குற்ற உணர்ச்சியா இருக்கு… just proposal-க்கே இந்த நிலைமைன்னா நான் உன் வாழ்க்கை முழுக்க உன் கூட இருந்தா? Recipe for disaster.. நீயே ஏன் சொந்த காசுல சூனியம் வச்சுக்கிறே?”

“இது பொய் அவி! நீ வந்ததுக்கு அப்புறம் தான் நம்ம startup அடுத்த level-க்கு போச்சு. அந்த sexual assault-க்கு அப்புறம் தானே இந்த shares buyout நடந்து நாம இன்னும் உயரத்துக்கு வந்திருக்கோம். அப்போ எல்லாம் உனக்கு உன்னோட அதிர்ஷ்டத்து மேலே complaints இல்லை. ஆனா திடீர்னு எனக்குன்னு ஒரு prospect உன் கண்ணுல பட்டதுக்கு அப்புறம் தான் நீ unlucky-ன்னு உனக்கு தோணுதா? Come up with a better story…”

அவினாஷ் சமீரின் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு “சமீர்! உனக்கே தெரியும்… நான் ரவியண்ணாவை unconditional-ஆ love பண்ணின மாதிரி என்னால திரும்ப யாரையும் love பண்ணமுடியும்னு தோணலை… வேற ஒருத்தரை மனசுல வச்சிக்கிட்டு உன்னை எப்படி ஏமாத்துறது? காதல்ங்குறது செடியிலே பூக்கிற பூ மாதிரி… ஒரு தடவை தான் பூக்கும். அது உதிர்ந்துடும்.”

சமீர் செல்லமாக முகத்தை சுளித்தான் “சீ! இது ஏதோ சினிமா டயலாக மாதிரி இருக்கு…. ஹாங்.. அனில் கபூர் நடிச்ச ‘Badhai Ho Badhai’-ல கேட்டிருக்கேன்” கேலியாக சிரித்தான்.

“ஆமாம்… அது எங்க விஜய் நடிச்ச பூவே உனக்காக படத்தோட ரீமேக். நான் சொன்னதும் அந்த படத்துல இருந்து கத்துக்கிட்டது தான்…” அவினாஷ் கொஞ்சம் வெட்கத்தோடேயே சொன்னான்.

“ஹ்ம்ம்ம்.. Kuch Kuch Hota Hai பார்த்தியா? அதுல ஷாருக் கான் “Hum ek baar jeete hain, ek baar marthe hai.. aur shaadi bhi ek baar hi karthe hai (நாம் ஒரு தடவை தான் பிறக்கிறோம், வாழுறோம், இறக்கிறோம்… அதே மாதிரி கல்யாணமும் ஒரே தடவை தான் பண்ணுறோம்)-னு சொல்லிட்டு கடைசியிலே மணவறையிலே இருந்து கஜோலை just like that தட்டிட்டு போவார்… நான் ஷாருக்-ஐ பார்த்து வளர்ந்தவன். அதனால எனக்கு உன்னோட பழைய காதல் ஒரு விஷயமே இல்லை…” சமீர் அவினாஷை கையை எடுத்து மென்மையாக முத்தமிட்டான்.

“ஆனா சமீர்… என்னோட மனசுக்கு திரும்ப காதல் வருமான்னு தெரியலை… ஏன்னா என் மனசு என் கிட்டயே இல்லை” அவினாஷ் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்.

சமீர் கொஞ்சம் டென்ஷன் ஆனான். ஆனால் சட்டென்று தன்னை recompose செய்துவிட்டு அவினாஷிடம் “OK… Let me ask you a hypothetical question. Just imagine that ரூபாவுக்கு நீ Gay-ங்குறது தெரியலை.. அவங்க உன்னை வீட்டை விட்டு அனுப்பலை. இந்த நாலு வருஷத்துல என்ன நடந்திருக்கும்?”

சமீர் அவினாஷின் முகத்தை தீர்க்கமாக பார்க்க, அவினாஷின் கண்கள் கீழே தரையை நோக்கியது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top