| முன் கதை சுருக்கம்... |
|---|
| சொக்கத்தங்கமான என் அர்ணாபை சந்தேகப்பட்டு நான் முன்பின் தெரியாத ஒருத்தனுடன் quickie sex செய்துவிட்ட குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன். என் Petrol Station-ல் நடந்த கொள்ளை முயற்சியால் என் வேலைக்கே ஆபத்து வந்து மயிரிழையில் தப்பிக்கிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நள்ளிரவில் என்னை சும்மா பார்த்துவிட்டு போக வந்த அர்ணாபின் வருகை என் குற்ற உணர்ச்சியை அதிகமாக்குகிறது. |
நான் “அப்பா சொல்ற பொருளாதாரம் நம்ம காதலை மூச்சு முட்ட வைக்கக்கூடாதுன்னு தான் இப்படி stress-க்கு ஆளாக்கிக்கிறேன்” என்று முனகலாக சொன்னபோது, அர்ணாப் என் கையை இழுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான். அந்த செய்கை எனக்கு ஆறுதலாக இருந்தது. அர்ணாப் என் கண்ணை பார்த்து புன்னகைத்தான். அவன் “ஆனா நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சாலும், இப்போவும் அது தானே நடக்குது? நமக்குள்ள இடைவெளி விழுந்ததையும், நம்ம காதல் மேலே ஒரு pressure இருக்குறதையும் உன் கண்ணுக்கு தெரியலையா? நீ இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வீட்டு செலவை ஏத்துக்கிறதால மட்டும் நம்ம காதல் மூச்சு முட்டாம இருக்கா?…” அர்ணாபின் குரலில் கனிவு பெருக்கெடுத்து ஓடியது. மீண்டும் ஒரு முத்தத்துக்கு பிறகு “Stress பண்ணிக்காதே! Take life as it comes-ன்னு தானே சொல்றேன். இருக்குறதை வச்சு சமாளிக்கலாம். இந்த நெருக்கடியான சமயத்தை ரெண்டு பேரும் சேர்ந்து கடக்கலாம்…”
அர்ணாப் நிதானமாக தொடர்ந்தான் “ஒரு சம்பளம் மட்டும் தான் வருதுன்னா என்ன இப்போ? நினைச்சப்போ புது dresses, latest gadgets வாங்க முடியாது… Spontaneous-ஆ restaurants-க்கு, Cinema-வுக்கு போக முடியாது… அதுக்கு முன்னாடியே monthly budget போட்டு வைக்கனும்… Strip shows, Gay Bars போறதை நினைச்சு கூட பார்க்க முடியாது… உடம்பு சரியில்லாம போனா கூடுதல் செலவுன்னு நாம சாப்பிடுறதுல, பழக்க வழக்கங்கள்ல, health-ல கவனமா இருக்கனும்… அவ்வளவு தானே? இருந்துட்டா போச்சு… இதையெல்லாம் sacrifice பண்ணினாலும், ஒருத்தரை ஒருத்தர் miss பண்ணாம, ஒன்னா இருப்போம்ல? அதுக்காக தானே நாம கனடா வந்தது?” அர்ணாபின் குரலில் இருந்த குழைவு என்னை இம்சித்தது.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
நான் உணர்ச்சிப்பெருக்கை அடக்க முடியாமல் குணிந்து அர்ணாபின் உதட்டை கவ்வினேன். “அர்ணாப் பாபு! அதுக்காக நீ தானே என்னை Gay-யா Come Out பண்ணினா கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னே… உனக்காக தான் வந்தேன் அதனால எல்லா பாரத்தையும் நீயே சுமந்துட்டு போ-ன்னு எல்லா பாரத்தையும் உன் மேலே போட்டுட முடியுமா? நீ சந்தோஷமா கஷ்டத்தை தாங்கிக்குவே அர்ணாப் பாபு! ஏன்னா நம்ம ரெண்டு பேர்ல என்னை விட நீ தான் ரொம்ப ஆழமான காதலோட விசுவாசமா இருக்கே. ஆனா உன்னை மட்டும் கஷ்டப்பட விடுறதுக்கு என் மனசு கேட்கலை… நம்ம உறவுல நாம ரெண்டு பேரும் சமமா இருக்கனும்னு நீ தானே சொல்லுவே. அப்படின்னா பாரம் சுமக்குறதலேயும் சமமா தானே இருக்கனும்? அதுக்காக தான் நானும் வேலைக்கு போறேன்…” என்று என்னை நியாயப்படுத்த முயற்சித்தேன்.
அர்ணாப் என் நெற்றியை செல்லமாக முட்டி சிரித்தான் “அட அசடே! நாம ரெண்டு பேருமே அநியாயத்துக்கு பொறுப்பா இருக்குறதால தான் இந்த பிரச்சனை. ஆளுக்கு பாதி living expenses-ஐ குடுத்துட்டோம்ன்னா நாம உறவுல சமம் ஆயிடுவோமா? ஒருவேளை share குடுக்கலைன்னா நீ தாழ்ந்தவன்னு அர்த்தம் ஆயிடுமா? எப்போ இருந்து நீ உன்னை இப்படி inferior-ஆ நினைச்சுக்க ஆரம்பிச்சே? ஒருவேளை நீ அப்படி நினைச்சுக்குவேன்னு நீ முடிவுக்கு வர்ற அளவுக்கு நான் கணக்கு பாக்குறவன்ங்குற impression-ஐ குடுத்திருந்தா I am truly sorry.. நான் dictator எல்லாம் இல்லை. Just ஒரு over protective partner… அவ்வளவு தான்!” என்று மீண்டும் என் விரல்களுக்கு முத்தம் வைத்தான்.நான் அவனது அன்பில் தடுமாறினேன். “பிரணயி! நான் திரும்பவும் சொல்றேன்… நீ Petrol Station வேலைக்கு போறதுல எனக்கு ஆட்சேபனை இல்லை. எந்த வேலையையும் கேவலமா பார்க்கலை. ஆனா உன்னோட வேலை நேரம் நம்ம உறவுல பாதிப்பு ஏற்படுத்துது… உன்னை இந்த problem-ஐ address பண்ண சொல்றேன்… ஒன்னு வேலை நேரத்தை மாத்திக்கோ இல்லை உன்னோட தகுதிக்கேற்ற வேலைக்கு மாறிக்கோ. நீ உனக்காக இல்லாம, வெறும் living expenses-க்காக தான் வேலைக்கு போறேன்னா நீ உனக்கு பிடிச்ச வேலை கிடைக்கிற வரைக்கும் காத்திருக்க சொல்றேன். அப்புறம் நாம எதுக்காக இங்கே relocate பண்ணி வந்தோமோ அந்த வேலையையும் கவனிக்கனும் இல்லை? எவ்வளவு நாளுக்கு தான் housemates-ஆ இருக்குறது? கல்யாணம், குழந்தைன்னு அடுத்த கட்டங்களுக்கு போக வேண்டாமா? I can’t wait to become a husband…” அர்ணாப் நான் தளர்ந்திருந்த சமயத்தில் smooch செய்து சாமர்த்தியமாக என்னை lock செய்தான்.
நான் என் பிடிவாத நிலையில் இருந்து தளர்ந்து நிற்கிறேன் என்பதை சரியாக கணித்த அர்ணாப் என்னை எழுந்திருக்க விடாமல் அடுத்த அம்பை வீசினான் – “பிரணயி! உனக்கு கனடாவுல living expenses share பண்ணிக்க ஒரு housemate தான் வேணும்னா நான் வெளியே கிளம்புறேன்… including from your life. நான் Gill Realty-கிட்டே இருந்து Lease amendment form வாங்கிட்டு வந்திருக்கேன். உனக்கு புது housemate கிடைக்கிற வரைக்கும் நான் பாதி வாடகை போட்டுடுறேன். இல்லை நம்ம love, relationship தான் முக்கியம்னா இந்த marriage license form-ல கையெழுத்து போடு… நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் house husband-ஆ இரு.”| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|
அறைக்குள் இன்னும் விசித்திரமான நிசப்தம் நிலவிக்கொண்டுள்ளது.



