கா.ஒ.கா 11 – விரதம் முடிந்து விருந்து

கா.ஒ.கா 11. விரதம் முடிந்து விருந்து

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 11-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
என் அப்பா எங்களை compromising position-ல் கையும் களவுமாக பிடித்த பிறகு என்னுடைய sexual orientation-ஐ மாற்ற என்னை conversion therapy-க்கு உள்ளாக்குகிறார். முதலில் மதரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறாததால் என்னை உளவியல் ரீதியாக 'குணமாக்க' முயற்சிக்கிறார். இதில் என் மனநிலை பாதிக்கப்படுகிறது. சரியான நேரத்தில் விஷ்வா என்னை காப்பாற்றி அர்ணாபுக்கு தகவல் சொல்கிறான். அர்ணாப் என்னை மருத்துவமனையில் வந்து சந்திக்கிறான்.

கா.ஒ.கா 11. விரதம் முடிந்து விருந்து
இரண்டு வார ஹாஸ்பிடல் சிகிச்சைக்கு பிறகு இன்று காலை discharge ஆகி நான் என் வீட்டின் Living room sofa-ல் தளர்வாக உட்கார்ந்திருக்கிறேன். அர்ணாபும் விஷ்வாவும் என்னுடைய கட்டில் மெத்தையை, மலமும் மூத்திரமும் ஊறிய coir mattress-ஐ கழுவி சுத்தப்படுத்த மாடிக்கு கொண்டு போகிறார்கள். அதை பார்த்து நான் படுக்கையில் சிறுநீர் கழித்ததை நினைத்து எனக்கு ஒரு பக்கம் வெட்கமாக இருந்தாலும் மறுபுறம் அதனுடன் இணைந்த கெட்ட நினைவுகளை விரட்ட முயற்சிக்கிறேன். விஷ்வாவும் அர்ணாபும் என் பார்வையில் இருந்து மறைந்தபோது அப்பா Horlicks கலந்து கொண்டு வந்து நீட்டினார். எனக்கு அதில் ஏதாவது மருந்து கலந்திருப்பாரோ என்ற சந்தேகம் தோன்றியது.

நான் அந்த கோப்பையை எடுத்துக்கொண்டு தளர்வாக மாடிக்கு செல்ல எழுந்தேன். “தம்பி! அதை குடிச்சிட்டு போடா…” என்று அப்பா சொன்னதை காதில் கேட்காதது போல மாடிக்கு போனேன். மாடிப்படி ஏறும்போது கையில் இருந்த ஹார்லிக்ஸ் கோப்பையை திருட்டுத்தனமாக கொட்டிவிட்டு, மொட்டைமாடிக்கு போனபோது அர்ணாப் mattress-ஐ நிமிர்த்தி பிடித்து நிற்க, விஷ்வா தோட்டத்து hose pipe-ல் தண்ணீரை முழு force-ல் அதன் மீது அடித்து சுத்தப்படுத்தி கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் விஷ்வா hose pipe-ஐ என் பக்கம் திருப்ப, நான் எதிர்பாராமல் நனைந்தேன். வெயிலுக்கு அந்த குளிர்ந்த நீர் இதமாக இருந்தது.

கா.ஒ.கா 11. விரதம் முடிந்து விருந்து
நான் தளர்வுடன் தன்னிச்சையாக என் மீது விழும் தண்ணீரை கையால் தடுக்க முயற்சி செய்தேன். அர்ணாப் சிரித்தபடி மெத்தையை கீழே கிடத்திவிட்டு என்னை நோக்கி வந்தான். என் முகத்தில் இருந்த தண்ணீர் துளிகளை தன் உள்ளங்கையால் துடைத்தான். அவன் கண்களில் நான் உடல்நலம் தேறி வரும் சந்தோஷம் அப்பட்டமாக தெரிந்தது. அர்ணாப் தோள்களை பிடித்து “பிரணயி! போர் அடிக்குதா? நல்ல வெயிலா இருக்குல்ல… அதனால mattress-ஐ பண்ணலாம்னு எடுத்துட்டு வந்துட்டோம். அந்த mattress-ல core coir எல்லாம் காயறதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும். உனக்குன்னு Amazon-ல order பண்ணுன புது mattress சாயங்காலம் வந்துடும்…” என்று என்னை உச்சி முகர்ந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

விஷ்வா “அஹ்ம்.. அஹ்ம்ம்…” என்று செருமி காட்ட, அர்ணாப் வேண்டுமென்றே என் முகமெங்கும் முத்தம் வைத்து விஷ்வாவை செல்லமாக கடுப்பேற்றினான். விஷ்வா “டேய்! ரொம்ப கொஞ்சாதீங்கடா… Closet Gay-யோட சாபம் உங்களை சும்மா விடாது” என்று ‘மிரட்ட’, அர்ணாப் விஷ்வாவையும் இழுத்து ஒரு group hug செய்தான். எனக்கு நான் தேறி வரும் சந்தோஷத்தோடு சேர்ந்து விஷ்வாவை நினைத்து கவலையாகவும் இருந்தது. பாவம்.. நான் கஷ்டப்பட்டாலும் தத்தி திணறி ஒளிவுமறைவில் இருந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் அவன் closet-க்குள்ளே இரட்டை வாழ்க்கையில் மூச்சு திணறுவதை கண்கூடாக காண முடிந்தது.

வீட்டுக்கு வந்த முதல் பகல் ஓரளவுக்கு நன்றாகவே கழிந்தது. மாலை விஷ்வா கிளம்பிவிட, வீட்டுக்குள் ஒரு வித அசௌகரியமான மௌனம் நிலவியது. அவராக வந்து பேசினாலும் எனக்கு அப்பாவிடம் பேசவே தோன்றவில்லை. அவர் மீது கோபமோ அல்லது வருத்தமோ இல்லை. சொல்லப்போனால் அவர் மீது எனக்கு ஒரு உணர்ச்சியும் இல்லை. எனக்கு அவர் தன் செயலுக்காக குற்றஉணர்வில் இருக்கிறாரோ அல்லது என் உடல்நிலை மீது பரிதாபம் கொள்கிறாரே தவிர இன்னும் என் Sexual Orientation-ஐ ஏற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை. நான் சில்லு சில்லாகி போன என்னையே மீண்டும் பொறுக்கி, உடைந்த துண்டுகளை இணைத்து முழுமையாக்கும் முயற்சியில் இருக்கும்போது அவருடன் இணைவது பற்றி யோசிக்கும் நிலையில் இல்லை.

ஆனால் அர்ணாப் என் அப்பாவிடம் இயல்பாக தான் பேசுகிறான். அப்பா அவனை அசிங்கப்படுத்தி இருந்தாலும் என்னை பார்த்து கொள்வதற்காக அவன் அப்பாவின் அனுமதியை கூட எதிர்பார்க்காமல் வீட்டோடு தங்கிவிட்டான். அவன் என் அப்பா மீதுள்ள கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கிறானா இல்லை இந்த ஆளோட தராதரம் இவ்வளவு தான் போல என்று மன்னித்துவிட்டானா தெரியவில்லை. நான் தளர்வாக Sofa-வில் சரிய, அர்ணாப் என் கால்களை பிடித்து நீட்டி முழுசாக படுக்க வைத்தான். அப்பா “நான் போய் நாம எல்லாருக்கும் dinner ready பண்றேன் என்று சமையலறைக்கு நடக்க, அர்ணாப் “நானும் வர்றேங்கப்பா” என்று அவருக்கு உதவி செய்ய போனான்.

கா.ஒ.கா 11. விரதம் முடிந்து விருந்து
இரவு சாப்பாடு சமைத்து முடிந்து, அப்பாவும் அர்ணாபும் சேர்ந்து புது மெத்தையையும், படுக்கை விரிப்பையும் என் கட்டிலில் விரித்தார்கள். அர்ணாப் என்னை எழுப்பி சாப்பிட வைத்துவிட்டு, “கார்த்தி! இந்த மாத்திரைங்களை சாப்பிட்டுட்டு உள்ளே போய் படு… நான் அப்பா கூட சேர்ந்து kitchen-ஐ சுத்தம் பண்ணிட்டு வர்றேன்” என்றான். நான் அவன் நீட்டிய மாத்திரைகளை வாங்கி விழுங்கிவிட்டு எழுந்து உள்ளே போனேன். சில நாட்களுக்கு முன்பு வரை கக்கூஸ் மாதிரி நாறிக்கொண்டிருந்த அறையை அர்ணாபும் விஷ்வாவும் அதில் நிகழ்ந்த கெட்ட நிகழ்வுகளின் சுவடே இல்லாதவாறு மீண்டும் பழைய மாதிரி மாற்றியிருந்தார்கள். சமையலறையில் சமைத்த பாத்திரங்களை எல்லாம் ஒழித்துவிட்டு அர்ணாப் என் படுக்கை அறைக்குள் வந்தபோது நான் அரைத்தூக்கத்தில் இருந்தேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Bus journey-ல உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்குற ஆண் உங்க கிட்டே பேசுற விதத்துல அவர் கூட ஜாலி பண்ண ஆசைப்படுறது நல்லா தெரியுது. ஆனா அவர் first step எடுக்கலை... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

அர்ணாப் என் அறையின் விளக்கை dim செய்துவிட்டு என் அருகே கட்டிலில் உட்கார்ந்தான். கைகளை நீட்டி, உடம்பை லேசாக முறுக்கி வேலை செய்த அசதியை போக்கிவிட்டு, போர்வையை எடுத்து மேலே போட்டுக்கொண்டு கட்டிலில் சரிந்தான். அவன் என்னை நெருங்கி படுத்ததும் எனக்குள் லேசான பயம் பரவியது. என் உடம்பு லேசாக நடுங்க, உதடுகள் மெல்ல துடிக்க ஆரம்பித்தன. மாதங்களுக்கு பிறகு நாங்கள் தனியாக ‘படுக்கிறோம்’ என்று நினைவுக்கு வந்தது. இப்போது அர்ணாப் என் மேலே காமத்தோடு படரப்போகிறான் என்று நினைத்ததும் என் முதுகு தண்டில் பயம் சில்லிட்டது.

கா.ஒ.கா 11. விரதம் முடிந்து விருந்து
“பிரணயி! Good night..” என்று அர்ணாப் பின்பக்கமாக இருந்து என்னை கட்டிப்பிடித்து என் பின்னங்கழுத்தில் மெல்லிய முத்தம் ஒன்றை வைக்க, என் உடம்பில் என்னவோ நடந்தது. என் உடம்பு சிலிர்த்து அடங்க, அர்ணாப் “என்னாச்சு?” என்று குழப்பமாக என் நெற்றியில் கை வைத்து பார்த்தான். பின்னர் எழுந்து உட்கார்ந்தான். “பிரணயி! Are you OK?” என்று என்னை மெதுவாக மல்லாக்க திருப்பினான். அர்ணாப் என்னை கட்டிப்பிடித்து படுத்ததும் என் உடம்பு பயத்தால் சிறுநீரை வெளியேற்றி படுக்கை நனைந்திருந்தது. அது என்னையும் அறியாமல் நடந்ததால் என்னால் சிறுநீரை வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.

அர்ணாப் “ஒ.. ஓ! Bed-ஐ நனைச்சுட்டியா? diaper மாட்டிவிட மறந்துட்டேன்” என்று முகம் சுளிக்காமல் எழுந்து என் பீரோ shelf-ல் இருந்து துவைத்து மடித்த shorts மற்றும் diaper-ஐ எடுத்து வந்தான். நான் அர்ணாப்பை கூச்சத்துடன் பார்க்க, அர்ணாப் எதுவுமே நடக்காதது போல என் உடைகளை கழற்றினான். துண்டை எடுத்து water bottle தண்ணீரில் நனைத்து என் இடுப்புக்கு கீழான பகுதிகளை துடைத்தான். நான் படுக்கையில் இருந்து இறங்கி உடை மாற்றினேன். அதே சமயம் அர்ணாப் நனைந்த படுக்கை விரிப்புகளை எடுத்துவிட்டு மெத்தையை திருப்பி போட்டான். நான் shorts-க்குள் adult napkin-ஐ போட்டுக்கொண்டு வெட்கத்துடன் புது விரிப்பின் மேலே மீண்டும் கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டி ஒருக்களித்து படுத்தேன்.

கா.ஒ.கா 11. விரதம் முடிந்து விருந்து
அர்ணாப் என்னை மீண்டும் முதுகுப்புறமாக கட்டிப்பிடித்தான். நான் அவன் முகத்தை பார்க்காமல் “அர்ணாப் பாபு… Conversion Therapy-ல எனக்கு gay sex images-ஐ காமிச்சு electric shock வச்சு வச்சு, Sexual thoughts வந்தாலே பயத்துல எனக்கு தெரியாமலேயே என் உடம்புக்குள்ள பயத்துல என்னென்னவோ நடக்குது. என்னால அந்த feelings-ஐ control பண்ண முடிய மாட்டேங்குது. இப்போ நீ என்னை intimate-ஆ நெருங்கி கட்டிப்பிடிச்சதும் அது emotional trigger பண்ணிடுச்சு… அதனால தான்… urinate பண்ணிட்டேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தேன். அர்ணாப் என்னை தன் பக்கம் திருப்பினான். நான் அவன் பக்கம் முழுதாக ஒருக்களித்து படுத்தேன்.

அர்ணாப் என் கண்களை ஊடுருவி பார்த்தபடி என் கன்னத்தை தடவினான்.”பிரணயி! நான் உன்னை sex-க்காக கட்டிப்பிடிக்கலை… இத்தனை நாளா நீ திரும்ப கிடைப்பியோ மாட்டியோன்னு எனக்கு பயமா இருந்துச்சு. உன்னை கட்டிப்பிடிச்சு படுத்தபோது எனக்கு ஏதோ நான் உனக்குள்ள போயிட்ட மாதிரி பாதுகாப்பா தோணுச்சு… அவ்ளோ தான். நீ பயப்படாதே. அப்புறம்… Sex can wait but I can’t keep my hands off.. அதை மட்டும் பயப்படாம பொறுத்துக்கோ. நீ Sex-க்கு தயாராகி நீயே initiate பண்றதுக்கு எவ்வளவு நாள் ஆனாலும் நான் காத்திருப்பேன். ஒருவேளை நீ இனிமேல் Sex-ஏ வேணாம்னு முடிவு பண்ணிட்டாலும் பரவாயில்லை… அந்த முடிவு உன் மீதான என்னோட காதலை பாதிக்கவே பாதிக்காது. ஏன்னா My love is unconditional” என்று என் நெற்றியில் முத்தம் வைத்தபோது நான் என் கண்ணில் ஈரம் படர்ந்தது.

கா.ஒ.கா 11. விரதம் முடிந்து விருந்து
நான் “இவ்வளவு lovely-​ஆ இருக்காதே அர்ணாப் பாபு! என் மனசுல ஆசை வந்தா திரும்பவும் bed நனைஞ்சிடும்…” என்று விரக்தியாக புன்னகைக்க, அர்ணாப் “இருக்கட்டும் பிரணயி… அந்த ஈரத்துல தூங்குறது கூட எனக்கு சம்மதம் தான்…” என்று என் கை விரல்களை கோர்த்துக்கொண்டான். நான் “அர்ணாப்… நான் உனக்கு sexual pleasure குடுக்க முடியுமான்னு தெரியலை… So நாம breakup பண்ணிக்கலாமா?” என்று கேட்டதும் அவன் பதறுவான் என்ற என் எதிர்பார்ப்புக்கு மாறாக அர்ணாப் முகத்தில் பெரிய reaction எதுவும் இல்லை. மாறாக நிதானமாக புன்னகைத்தான்.

அர்ணாப் ஒற்றை புருவம் உயர்த்தி திடமான குரலில் “பிரணயி! You are offending me… நீ என்னை பத்தி இவ்வளவு தான் எடை போட்டிருக்கியா?” என்று என்னை கண்டித்தான். “நாம ரெண்டு பேருமே date பண்றப்போ சலிக்க சலிக்க செக்ஸ் வச்சிருக்கோம்… Also அதுக்கு முன்னாடியே நாம வெவ்வேற sexual partners கூட போதும் போதும்னு சொல்ற வரைக்கும் பல playground-ல goal போட்டிருக்கோம்… இதுக்கு மேலே sex-ல என்னடா novelty இருக்கு?… உனக்கு நம்ம relationship-ல இன்னும் sex தான் பிரதானமா இருக்குன்னா நீ தயாராகுற வரைக்கும் நான் காத்திருப்பேன்… Take your own time but I can’t walk away from our relationship… for any god damn reasons” என்று என் விரல்களை முத்தமிட்ட போது நான் napkin நனைந்துவிட்டதோ என்று கவலைப்பட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top