| தலைப்பு | Nuovo Olimpo | ||||
| மொழி | Italian | ||||
| வெளியான வருடம் | 2021 | ||||
| வகை | Feature film | ||||
| எங்கு பார்க்கலாம்? | Netflix | ||||
| நடிகர்கள் | Andrea Di Luigi, Damiano Gavino,Aurora Giovinazzo | ||||
| இயக்குனர் | Nuovo Olimpo | ||||
| கதைச்சுருக்கம் | |||||
I hate porn that starts off fucking... I need to know why they are fucking இரு காதலர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்துக்கொள்வதாக பிரிகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த இடத்துக்கு மீண்டும் குறித்த நேரத்தில் வரமுடியாதபடி சந்தர்ப்ப சூழ்நிலை வில்லனாகிவிடுகிறது. ஒருவர் மற்றவரை தொடர்பு கொள்ள தேவையான முகவரியோ இல்லை தொலைபேசி எண்ணோ இல்லாத காரணத்தால் அவர்கள் ஒரேயடியாக பிரிந்து போய்விடுகிறார்கள். பின்னர் விதிவசப்படி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்கிறார்கள். இது ஒரு வழக்கமான காதல் கதை போல இருக்கிறது அல்லவா? தமிழில் கூட நாம் “ஜே! ஜே!”, “உனக்கு 18 எனக்கு 20”, “தித்திக்குதே” மாதிரியான படங்களை பார்த்திருக்கிறோமே. அதை காதலர்கள் இருவரும் ஆண்கள் என்று மாற்றி, காட்சிகளை கொஞ்சம் கூடுதல் அழகியலோடு சேர்த்தால் இத்தாலிய படமான “Nuovo Olimpo” ரெடி!சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே... கதைக்களம் 1978-ல் ஆரம்பிக்கிறது. ரோம் நகரத்தின் நடுவில் அமைந்துள்ள “Nuovo Olimpo” திரையரங்கம் க்ளாஸிகல் படங்களோடு சேர்த்து ஓரினச்சேர்க்கையாளர்களின் கூடும் இடமாகவும் அமைகிறது. பொதுவாக அவர்கள் தங்கள் இணைகளை திரையரங்கத்தில் பிக்கப் செய்து அங்குள்ள கழிப்பறையில் செக்ஸ் வைத்து குஜால்ஸாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திரையரங்கத்தில் நமது கதாநாயகர்கள் சந்திக்கிறார்கள்.ரோமில் படப்பிடிப்பு நடத்த வரும் திரைப்பட outdoor unit-ல் துணை இயக்குனராக பணிபுரியும் எனியா-வும், மருத்துவம் படிக்கும் பியட்ரோ-வும் (Andrea Di Luigi) ஒரு நாள் “Nuovo Olimpo” திரையரங்கத்தில் சந்திக்கிறார்கள். தங்கள் காம இச்சையின் வடிகாலுக்கு துணை தேடி வராமல் ஓடும் Classic திரைப்படத்தை பார்க்க வந்திருப்பது இருவரையும் இணைக்கிறது. கூடவே ஈர்ப்பும் வருகிறது. கழிப்பறைக்கு செல்லும் பியட்ரோவை பின்தொடரும் எனியா அவனை “approach” செய்ய, பியட்ரோ தான் எனியா மீது காதல் வயப்பட்டுவிட்டதாகவும், அவர்களது முதல் உடலுறவு இப்படி அவசரமாக, கழிப்பறையில் நடக்காமல் “special” ஆன இடத்தில் நடக்கவேண்டும் என்று சொல்கிறான்.அதற்கேற்ப, தனது பியட்ரோ எனியாவை பாட்டியின் வீட்டுக்கு அழைத்து சென்று இருவரும் gay sex-ல் இணைகிறார்கள். உடலுறவுக்கு பிறகு அவர்களது காதல் அதிகமாகிறது. மாலை மங்கும் நேரத்தில் மொட்டைமாடியில் மீண்டும் உடலுறவு கொள்கிறார்கள். சலிக்க சலிக்க சாந்திமுகூர்த்தம் முடிந்ததும் இருவருக்கும் பசிக்கிறது. பியட்ரோ வீட்டில் தேடிப்பிடித்து ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு ஜாம் பாட்டிலை எடுத்து எனியாவுக்கு ஊட்டிவிடுகிறான். அது இருவருடைய வாழ்க்கையில் ஸ்பெஷல் நினைவாக மாறிவிடுகிறது. அடுத்த நாள் இருவரும் மாலை சந்திக்கலாம் என்று பேசிவைத்துக்கொள்ள, அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸூக்கும் நடுவில் ஏற்படும் கலவரம் இருவரையும் பிரித்துவிடுகிறது.
பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் இதை Netflix-ல் subtitles போட்டு பாருங்கள். வழக்கமாக கதைகள் எல்லாம் dark ஆக, மனதில் பாரம் ஏற்றும் விதமாக இருக்கும்போது இந்த ஓரினக்காதல் கதை எளிதாகவும், அழகாகவும் இருப்பது ஒரு மாறுதலை கொடுக்கும்.
குறிச்சொற்கள்: ஓரினக்காதல் | |||||
| முன்னோட்டம் | |||||
![]() | |||||
| விமர்சனம் | |||||
![]() | |||||





