நா.அ.இ 07. கூலிக்கு மாரடித்து

...
 1. நா.அ.இ 01. உள்வாடகை
 2. நா.அ.இ 02. ரூல்ஸ் ராமானுஜம்
 3. நா.அ.இ 03. வெறித்தனம் வெறித்தனம்…
 4. நா.அ.இ 04. ஏண்டா இப்படி இருக்கே?
 5. நா.அ.இ 05. மூன்றாவது கண்
 6. நா.அ.இ 06. பழிவாங்க படுத்து
 7. நா.அ.இ 07. கூலிக்கு மாரடித்து
 8. நா.அ.இ 08 யார் சொல்வதோ யார் சொல்வதோ?
 9. நா.அ.இ 09 Job Interview
 10. நா.அ.இ 10 Make up sex
 11. நா.அ.இ 11 தன் கை அடுத்தவர்க்கு உதவி
 12. நா.அ.இ 12 ஆஃபீஸ் ஜிம் ஷவரில்
 13. நா.அ.இ 13 பாழா போன மனசும் உடம்பும்…
 14. நா.அ.இ 14 Sandwich ஆன சபா
 15. நா.அ.இ 15 காதலிச்சதே இல்லையா???
 16. நா.அ.இ 16 இடுப்பை பார்த்தியா இல்லையா?
 17. நா.அ.இ 17 நான் என்ன செய்ய?
 18. நா.அ.இ 18 நீ அவனே தான்…
 19. நா.அ.இ 19. ஆமாம்… நான் அவன் தான்

ஹரீஷ்! நீ என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்றியா? உன்னால இது முடியாது… Please don’t take it up” சபா ஹரீஷிடம் சொன்னபோது அவன் வார்த்தைகளில் உண்மையான அக்கறை தான் இருந்தது. ஹரீஷ் எப்படியும் சீக்கிரமாக சம்பாதிக்க ஆரம்பித்து சபாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்பவேண்டும் என்ற ஆத்திரத்தில் Costco Supermarket-ல் Warehouse- Material Handler-ஆக மணிக்கணக்கு கூலி வேலைக்கு சேர்வதற்கு offer letter வாங்கிவந்திருக்கிறான். சபாவுக்கு ஹரீஷின் படிப்பும் அவன் இதற்கு முன்பு பார்த்த வேலையும் தெரியும். இவை எல்லாவற்றையும் விட ஹரீஷின் உடம்பில் உள்ள physical stamina-வை இன்னும் நன்றாகவே தெரியும். Material Handler என்பது style-லான பெயராக இருந்தாலும் அது Cargo வண்டியில் இருந்து பொருட்களை இறக்கி Deep freezers-களில் அடுக்கவும், மற்றும் Deep freezer-ல் இருந்து உணவு பொருட்களை Cargo truck-களுக்கும் ஏற்றி இறக்கவேண்டிய கூலி வேலை. ஹரீஷின் பூஞ்சையான உடம்புக்கு அவன் இதை தாங்கமாட்டான் என்று சபாவுக்கு தெரிந்திருந்தது.

Random கதைகள்

ஹரீஷ்! பொறுத்தது பொறுத்தே…. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. உனக்கேத்த வேலை கிடைக்கும். நானும் எனக்கு தெரிஞ்ச professional & personal circles-ல உனக்காக சொல்லி வச்சிருக்கேன். இந்த வேலையால உனக்கு நல்லதை விட தொந்தரவு தான் அதிகமா இருக்கும்…” சபா ஹரீஷின் அருகே மாறி உட்கார்ந்து அவனது தோளை கரிசனையாக தொட்டான்.

“எல்லாம் தெரியும்… ஆனா என்ன பண்றது. வெறும் நம்பிக்கையையும், அன்பையும் கொண்டுபோய் கடையிலே பொருள் வாங்கமுடியாதே… வீட்டுக்கு வாடகை குடுக்க முடியாதே…” ஹரீஷ் நாசூக்காக சபாவின் கையை தட்டிவிட்டான்.

திரை படைப்புகள்

“அது தானா உன் பிரச்சனை? உனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் வீட்டு வாடகையை நான் முழுசா pay பண்ணிடுறேன். Groceries கூட வாங்கி போட்டுடுறேன்… இந்த வேலை வேண்டாம் ஹரீஷ்! உன் நல்லதுக்கு தான் சொல்றேன்”.

சபா இப்படி அக்கறையாக இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? நாமளும் செக்கச் செவேர்னு அழகா இருக்கோம்னு ஒருவேளை நம்மளையும் உஷார் பண்ண முயற்சி பண்றானோ? என்று ஹரீஷின் புத்தி மீண்டும் ஏடாகூடமாக யோசித்தது. கடைசியில் சபாவின் ஆலோசனைகள், அறிவுறைகள், வேண்டுகோள்கள் எல்லாம் ஒரேயடியில் நிராகரிக்கப்பட்டன. சபாவும் இனிமேல் தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது போல கையை உதறிக்கொண்டு எழுந்து சமையலறைக்கு போனான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

அடுத்த நாள் காலை ஹரீஷ் Tradie Uniform-ல் தன்னை கண்ணாடியில் பார்த்தபோது சிரிப்பாக வந்தது. ஏனோ மருதமலை படத்து சிரிப்பு போலீஸ் வடிவேலுவும், போக்கிரி விஜய்யும் காரணமே இன்றி நினைவுக்கு வந்து போனார்கள். இதுல ரெண்டாவது உதாரணத்துல உள்குத்து எதுவும் இல்லைங்க… 😉

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நீங்க Gym-ல சேர்ந்ததுக்கு / சேர விரும்புறதுக்கு முக்கியமான காரணம்....

View Results

Loading ... Loading ...

அன்றைய பொழுது முடிந்து வீட்டுக்கு வந்த ஹரீஷ் ஹால் Sofa-வில் நைந்த துணியாக விழுந்தபோது தான் அவனுக்கு வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்தது. சினிமாவில் மட்டும் தான் வெறியும், கோபமும் வந்ததும் கதாநாயகன் உடம்பில் ஆயிரம் யானைகள் பலம் வந்து அவன் முழு நெல் மூட்டையை அசால்ட்டாக ஒற்றை கையால் தூக்கிப்போடுவான். ஆனால் நிஜத்தில் நாம் சந்தோஷமாக இருந்தாலும் ஆக்ரோஷமாக இருந்தாலும் உடம்பு தன்னால் தூக்க முடிந்த பளுவை மட்டுமே தூக்கும். இது தெரியாம நாம போய தலையை குடுத்து மாட்டிக்கிட்டோமே என்று தன்னை தானே நொந்துக் கொண்டபோது அவன் எதிரில் சூடான, கமகமக்கும் காஃபி கோப்பை ஆவி பறக்க நீட்டப்பட்டது.

“I know Harish… You need this badly” என்றபடி காஃபியோடு ஒரு தட்டில் ஒரு வலி நிவாரணி மாத்திரையும், கொஞ்சம் பலகாரங்களும் வைத்து நீட்டினான். ஹரீஷ் வேறு வழியின்றி தன் ஈகோவை விழுங்கிக்கொண்டு காஃபியை வாங்கி ஒரு சிப் எடுத்தபடி மாத்திரையை வாயில் போட்டு சேர்த்து விழுங்கினான். அதை தொடர்ந்து ஹரீஷ் காஃபியை ஊதி ஊதி சூடாற்றியபடி குடிக்க, சபா அவன் பக்கத்தில் உட்கார்ந்து ஹரீஷின் தலையை ஓரிரு நொடிகள் கோதிவிட்டு எழுந்து வெளியே போனான். ஹரீஷுக்கு அவனது இந்த செயல் ஏனோ நெகிழ்ச்சியாக இருந்தது. ஒருவேளை இந்த மாதிரி செயல்களால் தான் கஷ்டப்பட்டு வீட்டுக்கு வெளியே உழைத்துவிட்டு வரும் கணவர்கள் மாலையில் வீட்டுக்குள் வந்ததும் உற்சாகம் ஆகிறார்கள் போல… ஹரீஷ் மெல்லிய புன்னகையோடு மீதி காஃபியை காலி செய்தான். காஃபியின் காஃப்பீனையும் மீறி களைப்பு ஹரீஷை அழுத்த, எவன் எப்போது உறங்கிப்போனான் என்று தெரியவில்லை.

ஹரீஷுக்கு முழிப்பு வந்த போது இரவு அடுத்த கட்டத்தை தாண்டியிருந்தது என்பதை அறையின் இருட்டும், ஊரின் மயான அமைதியும் சொன்னது. ஹரீஷுடைய வயிற்றுப்பசி அவனது களைப்பையும் மீறி தலையெடுத்ததால் தூக்கம் கலைந்திருந்தது. ஹரீஷ் எழுந்தபோது தான் Sofa-விலேயே உறங்கிவிட்டதையும், தன் மீது போர்வை போர்த்தப்பட்டு தலையணை வைக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான். தரையில் கால் வைத்தபோது உள்ளங்காலுக்கு ஏற்பட்ட சில்லிப்பு அவனது shoes மற்றும் socks கழற்றப்பட்டிருப்பதை சொல்ல, ஹரீஷ் எழுந்து kitchen-க்கு போனான். அங்கே Hot box-ன் மீது ஒரு PosIt Notes “Dinner for you” என்று அம்பு குறியிட்டு காட்ட, ஹரீஷ் அதை திறந்த போது கொஞ்சம் சூட்டில் இருந்த புலாவ் அரிசியில் இருந்து லேசாக ஆவி படர்ந்தது. ஹரீஷ் தனக்கு இருந்த பசிக்கு எதை பற்றியும் யோசிக்காமல் அதை தட்டில் எடுத்து போட்டு அவசரம் அவசரமாக காலி செய்தான்.

அடுத்த நாள் காலை ஹரீஷ் எழுந்திருக்க முயற்சித்தபோது யாரோ அவன் உடம்பில் மீது உட்கார்ந்துக்கொண்டு அழுத்துவது போல களைப்பாக இருந்தது. உடம்பு நெருப்பாக கொதிப்பது போல தோன்ற, கம்பளியை எடுத்ததும் லண்டன் குளிர் ஐஸ் கட்டி மழை பொழிவது போல சில்லென்று அவன் உடம்பை தாக்க, ஹரீஷ் பதற்றத்தோடு போர்வையை மூடினான். சுவற்றில் தொங்கிய கடிகாரம் அவன் ஏற்கனவே work shift-க்கு Late-டாகிவிட்டதாக தெரிவிக்க, ஹரீஷ் பதற்றத்தோடு எழுந்திருக்க முயன்று தோற்றுப்போனான்.

சபா ஹரீஷ் பக்கத்தில் உட்கார்ந்து அவன் வாயில் Thermometer-ரை வைத்துப்பார்த்தான். ஜுரம் 103 டிகிரியை தொட்டிருந்தது. சபா ஹரீஷின் நெற்றியில் தன் உள்ளங்கை பதிய வைத்து அவனது உடம்பு சூட்டை தன் உடம்புக்கு எடுத்துக்கொண்டான்.

ஹரீஷ்! உன்னால இன்னைக்கு வேலைக்கு போகமுடியும்னு எனக்கு தோணலை… மாத்திரை போட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கு… நான் G.P (General Physician) யாராச்சும் கிடைக்குறாங்களான்னு பாக்குறேன்”

“பரவாயில்லை சபா! மாத்திரை போட்டா சரியாயிடும்… உனக்கு லேட்டாகுது பாரு. நீ கிளம்பு” ஹரீஷ் முனகலாக சொன்னாலும், இது போன்ற நேரத்தில் யாராச்சும் பக்கத்தில் இருந்தால் தேவலை என்று உள்மனசு சொல்லியது.

“உன்னை இப்படி விட்டுட்டு போக எனக்கு மனசில்லை… எனக்கு வீட்டிலே இருந்து வேலை பாக்குற luxury இருக்கு… நான் இன்னைக்கு வீட்டிலே இருந்து வேலை பாக்குறேன்… நீ தூங்கு” என்று ஹரீஷ் மீது போர்வையை போர்த்திவிட்டு மீண்டும் அவன் தலையை கோதிவிட்டு எழுந்திருக்க, ஹரீஷ் மெல்ல சிலிர்த்தான். அந்த சிலிர்ப்பிலேயே பாதி களைப்பு காணாமல் போனதாக தோன்ற, மாத்திரையின் தாக்கத்தில் ஹரீஷை மீண்டும் தூக்கம் தழுவியது.

Few hours later… ஹரீஷ்! எழுந்திரு… G.P கிட்டே போகலாம். Honslow-ல Dr. Singh கிட்டே appointment கிடைச்சிருக்கு” சபா எங்கோ தூரத்தில் இருந்து சொல்லிக்கொண்டிருப்பது போல தோன்ற, ஹரீஷுக்கு கண்களை பிரிப்பது பெரும்பாடாக இருந்தது. ஹரீஷுக்கு சபா தன் கன்னத்தில் தட்டுவதையும், தன்னிடம் “Harish… Are you OK?” என்று கேட்பதும் ஹரீஷின் காதுகளில் விழுந்தாலும் அவனால் பதில் எதுவும் கொடுக்கமுடியவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பு ஹரீஷுக்கு தான் வானத்தில் பறப்பது போல தோன்ற, சிறிது நேரத்தில் சபா தன்னை கைகளில் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு நடப்பதை உணர்ந்ததும் மீண்டும் மயக்கத்துக்கு போனான்.

Picture of the day


நா.அ.இ 07. கூலிக்கு மாரடித்து

ஹரீஷ் மாதிரி உங்கள் வட்டத்தில் Playboy-யாக இருந்த ஆண் திடீரென்று Gay-ஆக செய்வதை பார்த்திருக்கிறீர்களா?

சபா மீது கொண்ட அன்பினால் ஹரீஷ் Gay-ஆக come out ஆனதை பற்றி உங்கள் கருத்து?

இந்த கதை லண்டனில் நடப்பதற்கு பதிலாக நம்மூரில் நடப்பதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளமுடியுமா?

About காதல்ரசிகன்

Avatar photo
காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Check Also

பருவம் 17. Job வேணுமா

பருவம் 17. வாயும் போட்டு வேலையும் குடுத்து…

சூரிய வெளிச்சம் பிருத்வியின் முகத்தை செல்லமாக தீண்டியபோது தூக்கம் கலைந்தாலும், கண்ணை திறக்க முடியாத அளவுக்கு களைப்பு அவனை ஆட்கொண்டிருந்தது. பிருத்வி தலையை தூக்கி பார்த்தபோது ஆளுயர கண்ணாடி சுவற்றுக்கு பின்னால் ஈஃபில் கோபுரம் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. தன் உடம்பில் கை போட்டு படுத்திருக்கும் விக்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator