Sugar Daddy 11. Coming Out

...
  1. Sugar Daddy 01. Lust at first sight
  2. Sugar Daddy 02. Sexy Follow Up
  3. Sugar Daddy 03. Bare the soul
  4. Sugar Daddy 04. Smack and slap
  5. Sugar Daddy 05. Emotional Baggage
  6. Sugar Daddy 06. I Love You
  7. Sugar Daddy 07. I am a Sugar Daddy
  8. Sugar Daddy 08. Slow and Steady
  9. Sugar Daddy 09. Gerontophile
  10. Sugar Daddy 10. In the Heart beat
  11. Sugar Daddy 11. Coming Out
  12. Sugar Daddy 12. Daggers drawn
  13. Sugar Daddy 13. All’s well and ends well

“மேடம்! சார் ரொம்ப Critical-ஆ இருக்காரு… Immediate-ஆ Open heart surgery பண்ணனும். நீங்க இந்த undertaking form-ல கையெழுத்து போடுங்க… நாங்க எங்க doctors team-ஐயும், Operation theatre-ஐயும் பண்றோம்.” நர்ஸ் அருந்ததியின் கையில் forms-ஐ திணித்துவிட்டு, விக்னேஷை பார்த்து “சார்! நீங்க initial deposit-ஆ ஒரு 2 லட்ச ரூபாய் counter-ல pay பண்ணிடுங்க…” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு பரபரப்புடன் ஓடினாள். அருந்ததி விக்னேஷை helpless-ஆக பார்க்க, “ஆண்ட்டி! நீங்க எதை பத்தியும் கவலைபடாம அப்படி உட்காருங்க…. இன்னும் 2-3 நாள்ல மாமா உங்க கிட்டே காரக்குழம்பு வச்சு தர சொல்லி கெஞ்சப்போறார் பாருங்க” என்று சொன்னபடியே அருந்ததியின் தோளை பிடித்து அழைத்துச்சென்று வரிசையாக போடப்பட்டிருக்கும் நாற்காலிகள் ஒன்றில் உட்காரவைத்துவிட்டு, counter-க்கு சென்று தனது credit card-ஐ நீட்டினான். Counter-க்கு பின்னால் இருந்த பெண் கடமையாக அதை தேய்த்து விக்னேஷின் Credit Account-ல் இருந்து ரூ. 2 லட்சத்தை அசால்ட்டாக தேய்த்துக்கொண்டு புன்னகையோடு customer receipt-ஐ நீட்டினாள்.

Random கதைகள்

விக்னேஷ் குணாலிடம் “Thanks da! நீ வீட்டுக்கு என் காரை எடுத்துட்டு போ” என்று சொல்ல, அவன் “இல்லை பாய்! நான் Uber பிடிச்சுக்குறேன்.. எதுனாச்சும் உடனே call பண்ணு… நான் இருக்கேன் உனக்கு help-க்கு” என்று சொல்லிவிட்டு கட்டிப்பிடித்தான். அந்த அணைப்பில் சத்தியமாக விகல்பம் இல்லை. விக்னேஷ் நரேனை சேர்த்திருந்த MICU -க்கு போக, வாசலில் இருந்த security அவனிடம் ஒரு நீல அங்கியும், scarf-ம், disposable glouse-களும் கொடுத்தான். விக்னேஷ் அவற்றை அணிந்துக்கொண்டு உள்ளே போக, நரேனை ஒரு medical team செய்துக்கொண்டிருந்ததால் தூர நின்றபடி அவனது உள்ளம் கவர்ந்த மாமா காய்ந்த சருகாக கிடப்பதை பார்த்தபோது விக்னேஷுக்கு அழுகையை கட்டுப்படுத்தமுடியவில்லை.

“எனக்கு பிடிச்ச மாமா… மாமாவுக்கும் என்னை பிடிச்சிருக்கு… அதனால தான் பிரிவோட stress-ஐ எடுத்துக்க முடியாம உடைஞ்சு போயிருக்கார்… உலகத்துல கர்மா-ன்னு ஒன்னு இருந்துச்சுன்னா மாமா மேல இருக்குற என்னோட உண்மையான காதல் அவரை திருப்பி கொண்டுவரட்டும்…” விக்னேஷின் கண்களை கண்ணிர் திரையாக மறைக்க, எல்லாமே அவனுக்கு out of focus-ல் போனது. பின்னால் ஒரு இளம் டாக்டர் விக்னேஷின் தோளை தொட்டு, “அவருக்கு extremely critical-ஆ தான் இருக்கு… ஆனால் நாங்க முடிஞ்சவரைக்கும் போராடி அவரை காப்பாத்துவோம்… நீங்க பக்கத்துல போய் பாருங்க” மென்மையாக தள்ள, விக்னேஷ் நரேன் படுத்திருந்த கட்டிலின் அருகில் சென்று செயற்கை சுவாசத்தில் நரேனின் நெஞ்சு மேலும் கீழும் சீராக ஏறி இறங்குவதை பார்த்தான்.

திரை படைப்புகள்

தான் இதுவரை பார்த்த வயசுக்கு குறைந்த இளமையும், துறுதுறுப்பும், சிரிப்புமாக இருந்த மாமாவை இந்த கோலத்தில் பார்க்க சங்கடமாக இருந்தது. “மாமா தன்னை இந்த distress-ல் இருந்து காப்பாற்ற தான் தன்னுடைய காதலை வெளிப்படையாக ஏற்க மறுத்தார் போல… ஆனா இந்த மாதிரி சூழ்நிலையில் தான் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது… இது ஏன் இந்த கிழவனுக்கு புரியலை” என்று நினைத்துக்கொண்டே நரேன் Operation theatre-க்கு எடுத்துச்செல்லபடுவதை பார்த்தான்.

அடுத்த நாள் விடியற்காலை நரேன் அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் MICU-ல் கொண்டுவந்து கிடத்தப்பட்டபோது தொற்று காரணமாக அவருக்கு அருகே செல்ல யாருக்கும் அனுமதியில்லை. நரேன் MICU-ன் கதவில் இருந்த ஓட்டைவழியாக தன்னுடைய உள்ளத்தை கவர்ந்த மாமாவை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே நின்றான். அப்போது அவன் தோளை தொட்டதும் திரும்பிப்பார்க்க பின்னால் அருந்ததி ஆண்ட்டி நின்றிருந்தார். என்ன தான் பெண்களை weaker sex என்று சொன்னாலும், சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வதில் அவர்கள் strong தான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“வீட்டுக்கு போய் rest எடு விக்கி! உன்னோட ஆஃபீஸ் வேலையும் கெடுது…. உங்க மாமாவுக்கு ஒன்னும் ஆகாது… ஏன்னா எனக்கு உள்ளுக்குள்ளே ஏதோ சொல்லுது… ஹரீஷ் ஃப்ளைட் ஏறிட்டானாம்… அனேகமா மதியானத்துக்கு வந்துடனும்… நீ வீட்டுக்கு போயிட்டு வா!”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கதைகளின் நடுவில் நிறைய படங்கள் வருவது படிப்பதற்கு தடையாக இருக்கிறதா?

View Results

Loading ... Loading ...

விக்னேஷுக்கு மெல்ல மெல்ல உண்மை உறைத்தது. என்ன தான் உண்மையான காதல் என்றாலும் இந்த மாதிரி சமயங்களில் அங்கீகரிக்கப்பட்ட உறவுகளுக்கு தான் உரிமை இருக்கிறது. தான் என்றும் ஒரு மூன்றாவது மனிதனாக வாசல் வரைக்கும் தான் வரமுடியும். விக்னேஷ் கண்களை துடைத்துக்கொண்டு “பரவாயில்லைங்க ஆண்ட்டி… ஹரீஷ் வந்ததுக்கு அப்புறம் போறேன்” என்று சொல்லிவிட்டு corridor-ல் போடப்பட்டிருந்த காலி chair-களில் ஒன்றில் சரிந்தான்.

“விக்கி!” மென்மையான குரலில் அழைப்பும், அதை போலவே மென்மையான தொடுதலும் தன் தோளை லேசாக தட்ட, chair-ல் சரிந்தபடி கண் அயர்ந்திருந்த விக்னேஷ் கண் விழிக்க, பக்கத்தில் ஒரு NRI களை கொண்ட இளைஞன் உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இருந்த laptop bag-ல் தெரிந்த Emirates-ன் hand baggage tag அவன் இப்போது தான் airport-ல் இருந்து வந்திருப்பதை சொன்னது.

“விக்கி! நான் ஹரீஷ்! நரேன் அங்கிளோட பையன்…” அந்த நேரத்திலும் மென்மையாக புன்னகைத்தான்.

விக்ணேஷ் கண்ணை தேய்த்தபடி “ஹாங்! மாமாவை பார்த்தீங்களா?”

“Doctor கிட்டே பேசிட்டு தான் வர்றேன் விக்கி… அப்பா இன்னும் critical-ஆ இருந்தாலும் stabilise ஆக இன்னும் 48 மணி நேரம் observation-ல வைக்கனும்னு சொல்லியிருக்காங்க… நீ நேத்து இருந்து வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்கேன்னு அம்மா சொன்னாங்க…. நான் செய்யவேண்டியதை எல்லாம் நீ செஞ்சிருக்கே… நான் வந்தாச்சு இல்லை… இப்போவாச்சும் போய் ரெஸ்ட் எடு விக்கி! எங்க அப்பா உயிர் பிழைச்சா அவரோட மீதி வாழ்க்கையை தினமும் உன் பேரை சொல்லி தான் வழுவோம்.” ஹரீஷின் பேச்சில் விக்னேஷ் மீதான மரியாதையும் அன்பும் அப்பட்டமாக தெரிந்தது.

“இல்லை… மாமாவுக்கு ஒன்னும் ஆகாது!” விக்னேஷின் குரலில் தொண்டை அடைப்பு…

“எனக்கும் அப்படி தான் தோணுது… ஆனா அதுக்காக உன் உடம்பை நீ ரொம்ப stress பண்ணாதே. வீட்டுக்கு போயிட்டு தூங்கிட்டு வா! நான் வந்த cab-காரன் கிட்டேயே சொல்லியிருக்கேன். உன்னை நம்ம வீட்டுல விட்டுடுவான். உன் கிட்டே நம்ம வீட்டு சாவி இருக்குன்னு அம்மா சொன்னாங்க… போய் நம்ம வீட்டுல படு… நான் நிலைமையை பார்த்துட்டு 2-3 மணி நேரத்துல வீட்டுக்கு வர்றேன். அப்படி வந்தா ரெண்டு பேரும் கூட ஒன்னா திரும்ப வரலாம்.”

விக்னேஷ் சோர்வாக வீட்டுக்கு கிளம்பினான்.

இந்த தொடரை படிக்கும் முன்பே உங்களுக்கு இந்த கதையில் வரும் sugar Daddy, Gerantophile ஆகியவற்றை பற்றி தெரியுமா?

வயதான நரேனும், இளைஞனான விக்னேஷும் ஒருமித்த மனதோடு மீதி வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

உங்களது வட்டாரத்தில் விக்னேஷ் மற்றும் நரேனை போல character-ஐ பார்த்திருக்கிறீர்களா?

About காதல்ரசிகன்

Avatar photo
காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Check Also

பருவம் 17. Job வேணுமா

பருவம் 17. வாயும் போட்டு வேலையும் குடுத்து…

சூரிய வெளிச்சம் பிருத்வியின் முகத்தை செல்லமாக தீண்டியபோது தூக்கம் கலைந்தாலும், கண்ணை திறக்க முடியாத அளவுக்கு களைப்பு அவனை ஆட்கொண்டிருந்தது. பிருத்வி தலையை தூக்கி பார்த்தபோது ஆளுயர கண்ணாடி சுவற்றுக்கு பின்னால் ஈஃபில் கோபுரம் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. தன் உடம்பில் கை போட்டு படுத்திருக்கும் விக்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator