உ.க.உறவே 22. காதல் நாடக மேடை

உ.க.உறவே 22. காதல் நாடக மேடை

இது உயிரில் கலந்த உறவே தொடர்கதையின் 22-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
அடுத்த நாள் அஞ்சலி ஜெய்யின் அலுவலகத்துக்கு வந்து முதல் நாள் தன்னுடைய நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்கிறாள். தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்றும் ஆனால் அதை பெற்றோரிடம் நேரடியாக சொல்ல தைரியம் இல்லாமல் கொஞ்ச நாளுக்கு பேசிவிட்டு பின்னர் சண்டை போட்டு பிரிந்துவிட்டதாக நாடகம் போடலாமா என்று கேட்கிறாள். ஜெய்க்கும் அந்த யோசனை பிடித்துவிடுகிறது.

“டாய்… நீ உன் ஆள் கூட கடலை போடப்போறே… நான் உன் கூட வந்து என்ன பண்ண… நான் வரலை… என்னை போற வழியிலே ஜிம்-ல இறக்கிவிட்டுட்டு போ..” பிரபாகர் சோஃபாவின் மீது கால்களை மடக்கியபடி டிவியில் சேனல் மாற்றிக்கொண்டு பதில் சொன்னான்.

“அவ்வளவு இது இருக்குறவன் அன்னைக்கு ஏன் கூட வந்தியாம்?” ஜெய்யின் குரலில் பொய்யான கோபம் எட்டிப்பார்த்தது.

வனஜா பாத்திரங்களை ஒழித்துவிட்டு மொபைலை எடுத்துக்கொண்டு ஹால் சோஃபாவில் வந்து உட்கார்ந்தபடி இவர்களது சண்டையை ரசித்துக்கொண்டிருந்தார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“அத்தை… அவன் அஞ்சலியை பார்க்க வர்றேன்னு சொல்லிட்டானாம்… கூட நான் எதுக்கு போகனும்… அவங்க ரெண்டு பேரும் பேசிக்கட்டுமே… நான் பாட்டுக்கு பேந்த பேந்த முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கனும்… நீங்களாச்சும் சொல்லுங்க அத்தை” பிரபாகர் தன்னை காப்பாற்ற வனஜாவிடம் சரணடைந்தான்.

“இது உங்க ரெண்டு பேருக்குமான விஷயம்.. அனாவசியமா நடுவுல என் தலையை உருட்டாதீங்க..” என்று சொல்லி கையை எடுத்து கும்பிட்டார்.

“ஹா! ஹா! அம்மாவே சொல்லியாச்சு…. என் செல்லம் இல்லை… கிளம்புடா” ஜெய் பிரபாகரின் தாடையை பிடித்து கொஞ்சினான்.

“இதுக்கு தான் வேண்டாம்னு சொல்றேன்… இந்த கொஞ்சஸை அஞ்சலிக்கிட்டே பண்ணினா சில பல முத்தாக்கள் எக்ஸ்டிரா கூட கிடைக்கலாம்….” பிரபாகர் கண்ணடித்தான். வனஜா வெட்கத்தோடு தரையை பார்த்து சிரித்தார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Bus journey-ல உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்குற ஆண் உங்க கிட்டே பேசுற விதத்துல அவர் கூட ஜாலி பண்ண ஆசைப்படுறது நல்லா தெரியுது. ஆனா அவர் first step எடுக்கலை... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

ஜெய் கைகளை தலைக்கு மேலே கட்டிக்கொண்டு ஸ்டைலாக மேலே பார்த்தபடி “பிரபா… அஞ்சலியை பார்க்க அண்ணன் ரொமான்ஸ் மூடுல போகனும்னு ஆசைப்படுறேன்… வழியிலே ப்ளடி பக்கட்ஸ் எல்லாம் கண்டபடி வண்டி ஓட்டுவானுங்க… அப்புறம் டென்ஷன்ல ஐயாவோட மூடு கெட்டுப்போயிடும் இல்லை…. அதனால நீ வண்டி ஓட்டுவியாம்.. நான் அப்படியே பின்னாடி உட்கார்ந்து சட்டை கசங்காம கனவுல மிதந்துட்டு வருவனாம்…” ஜெய் பிரபாகரை கிட்டத்தட்ட கிஸ்ஸடிக்கும் அளவுக்கு நெருங்கி கெஞ்சினான்.

விட்டால் இவன் வனஜா அத்தை முன்னாடியே கிஸ்ஸடிச்சாலும் அடிச்சுடுவான் என்று மனசுக்குள் பயந்தவாறே “ஓ! அப்போ என்னை டிரைவர் வேலைக்கு தானா கூப்பிடுறே..” என்று அலுத்துக்கொண்டே பிரபாகர் கிளம்புவதற்காக எழுந்தான்.

“இவனை கிளப்பறதுக்கே புதுசு புதுசா யோசிக்கனும் போல… ஜெய் மனசுக்குள்ளே பேசிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தான்.

அஞ்சலி ஏற்கனவே பேசி வைத்தது போல காயத்ரியோடு இம்பீரியல் மாலில் காத்துக் கொண்டிருந்தாள். ஜெய்யையும் பிரபாகரையும் பார்த்து புன்னகையோடு கையசைத்தாள்.

“என்னங்க ஜி! உங்க cousin-ஐ நான் தின்னுடுவேன்னு பயமா…” பிரபாகரை பார்த்து சிரிப்போடு கேட்டாள்.

“கிழிஞ்சுது லம்பாடி லுங்கி…. நான் சாருக்கு வெறும் டிரைவரா தான் வந்திருக்கேன்… முதலாளி உத்தரவு குடுத்தார்னா நான் அப்படி ரோட்டுப்பக்கம் ஏதாவது டீக்கடையிளே சாயா குடிச்சுட்டு நீங்க கிளம்புற வரைக்கும் பொழுதை ஓட்டுறேன்…” என்று ஜெய்யை பார்த்து பவ்யமாக கைகட்டினான்.

“என்ன பிரபா… கோவிச்சுக்கிட்டீங்களா? நான் சும்மா சொன்னேன்… நீங்க இருந்தாலாச்சும் உங்க cousin பேசுறாரான்னு பாக்குறேன்”

“ஆமாம் ஆமாம்… அன்னைக்கு ஜெய்யோட Office-க்கு வந்து reception-ல வந்து சும்மா நின்னு பார்த்துட்டு மட்டும் போயிட்டீங்கன்னு சொன்னான்..”

அஞ்சலி ஜெய்யை பொய்க்கோபத்தோடு கண்ணை உருட்ட, ஜெய்யை காப்பாற்ற பிரபாகர் உள்ளே புகுந்தான் “இல்லைங்க.. நீங்க மட்டும் உங்க தங்கச்சியை கூடவே கூட்டிட்டு வந்து அவங்களுக்கு எல்லா விஷயத்தையும் நேரடியா காமிச்சுடிறீங்க… எங்க ஜெய் பாவம்.. அன்னைக்கு நான் பக்கத்துல இல்லாததால நீங்க வந்ததை சொல்லிட்டான்… அவனை போய் முறைக்கிறீங்க… பாருங்க பச்சப்புள்ள பயந்து போயிருக்கு” என்றபடி ஜெய்யின் தாடையை கொஞ்சினான்.

“ஓ! அப்படி ஒரு பாயிண்ட் இருக்கா…. காயத்ரி நீ எங்கேயாச்சும் கடை சுத்திட்டு இரு… நான் கிளம்புறப்போ கூப்பிடுறேன்” என்றாள்.

“என்னடி இது அநியாயமா இருக்கு? வீட்டுல டிவி பார்த்துட்டு இருந்தவளை இழுத்துட்டு வந்து அசிங்கம் பண்றியா?” காயத்ரிக்கு கோபம் வருவது தெரிந்தது.

“அவங்க ரெண்டு பேரும் நம்மளை டிரைவராவும் பாடிகார்டாவும் தான் கூட்டிட்டு வந்திருக்காங்க…. நாம தான் நெருக்கம் அப்படின்னு ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டு upset ஆகுறோம்… விடுங்க காயத்ரி” பிரபாகர் காயத்ரியை சமாதானப்படுத்தினான். சிறிது நேரத்துக்கு பிறகு பிரபாகரும் காயத்ரியும் ஜெய்யையும் அஞ்சலியையும் தனியாக விட்டுவிட்டு மாலில் கீழே இருந்த open floor-க்கு சென்றார்கள்.

ஜெய் அஞ்சலியிடம் “அதுங்க ரெண்டும் எங்கே இருக்குதுங்க?” என்று கேட்டான்.

“அஞ்சலி கீழே எட்டிப்பார்த்து அங்கே படிக்கட்டுல உட்கார்ந்திருக்காங்க” என்று குறும்போடு சொன்னாள்.

“சரி! நான் எனக்கு Paneer sandwich சொல்லப்போறேன்… உனக்கு என்ன வேணும்?” – ஜெய்.

“எனக்கும் அதுவே சொல்லிடேன்…. அது என்னோட favourite snack” – அஞ்சலி.

ரொம்ப நேரம் வரிசையில் நின்று இரண்டு கைகளிலும் இரண்டு plate sandwich-மாக ஜெய் தங்கள் Table-க்கு வந்தபோது அஞ்சலி கீழே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஜெய் ஒரு sandwich-சை அவள் பக்கம் நகர்த்திவைக்க, அஞ்சலி ஜெய் பக்கம் திரும்பி “உன் cousin உன்னை விட கொஞ்சம் பெட்டர்…” என்றாள்.

“எப்படி?”

“கிட்டத்தட்ட 10 நிமிஷம் ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் பார்த்துட்டு உட்கார்ந்திருந்தாங்க… அப்புறம் பிரபா காயத்ரிகிட்டே என்னவோ கேட்டான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் காயத்ரி பிரபாகருக்கு பக்கத்துல கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்தா… ரெண்டும் இப்போ தான் பேச ஆரம்பிச்சிருக்குங்க…” என்று சிரிப்போடு சொன்னாள்.

“அப்புறம்… வீட்டுல என்ன நிலவரம் அஞ்சலி?”

“அம்மா கிட்டே நான் உன்னை பார்க்க வர்றேன்னு சொன்னேன்… அப்பாவுக்கு தெரியாம என்னை அனுப்பியிருக்காங்க…. அப்பா ரொம்ப பழைய காலத்தை சேர்ந்தவர்…. பொண்ணும் பையனும் பேசினாலே அவங்களுக்குள்ளே physical relationship தான்னு நினைக்கிறவர்… அதனால தான் அவர் என்னை சீக்கிரமா கல்யாணம் பண்ணி அனுப்பனும்னு நினைக்கிறார்..”

“அப்போ breakup-ன்னு சொன்னா ஏதாச்சும் பெரிய ரகளை நடக்கப்போகுது..”

“விடு… அதுக்குள்ளே ஏதாச்சும் வழி கண்டு பிடிச்சுக்கலாம்…”

ஜெய்யும் அஞ்சலியும் வேண்டுமென்றே பிரபாகரும் காயத்ரியும் அதிக நேரம் ஒன்றாக செலவழிப்பது போல பார்த்துக்கொண்டார்கள். என்ன தான் இருந்தாலும் நேரம் போவதை யாராலும் தடுக்கமுடியாதே… “சரி அஞ்சலி! கிளம்பலாமா? இவங்களை அடுத்த வாரமும் ஏதாச்சும் காரணம் சொல்லி கூட்டிட்டு வரணும்” – ஜெய்.

மாலை சூரியன் மங்க ஆரம்பிக்க, இதமான வெயில் கண்ணை கூச, ஹெல்மெட்டின் பின்னால் பிரபாகர் வண்டி ஓட்டிக்கொண்டிருக்க, ஜெய் பிரபாகரை முதுகோடு அணைத்தவாறே பின் சீட்டில் அமர்ந்திருந்தான்.

“சாரிடா பிரபா… ரொம்ப போர் அடிச்சுடுச்சா?”

“சீ.. அதெல்லாம் இல்லை… அது சரி! நீங்க ரெண்டு பேரும் நல்லா பேசிக்கிட்டீங்களா? இந்த courtship period தான் சுவாரசியமா இருக்கும்…”

“ஹா! பார்றா… அனுபவஸ்தர் அறிவுரை சொல்றாரு..” ஜெய் நக்கல் அடித்தான்.

“நெருப்பு தொட்டா சுடும்னு எல்லாருக்கும் தெரியும்… அதை சுட்டுக்கிட்டு தான் தெரிஞ்சுக்கனும்னு அர்த்தம் இல்லையே… மத்தவங்க லைஃப்ல இருந்து கத்துக்குறது தான்…”

போடா…” ஜெய் செல்லமாக பிரபாகருடைய சட்டைக்குள் கையை விட்டு அவன் இடுப்பை தோலோடு தடவி கட்டிக்கொண்டான்.

“குட்டி… இப்போ நீ தடவுறது என் இடுப்பையா இல்லை கற்பனையிலே அஞ்சலியையா?”

“இப்போ நான் கோச்சிக்கிட்டு உன்னை தொடக்கூடாது… அது தானே உன்னோட திட்டம்… அதை நான் ஜெயிக்க விடமாட்டேன்” ஜெய் பிரபாகரை சட்டைக்குள்ளே விட்டகையை மேலே தூக்கி பிரபாகரின் காம்புகளை தடவிக்கொண்டே அவன் கழுத்தில் முகம் புதைத்தான்.

“டேய்… என்னடா இது நடுரோட்டுல…” பிரபாகர் பதறினானே தவிர ஜெய்யை தடுக்கமுடியவில்லை.

“என்னடா சொல்றா என் மருமக?” வீட்டுக்குள் நுழையும்போதே அம்மா கேட்டார்.

“இப்போ தான் பேசவே ஆரம்பிச்சிருக்கோம்… அதுக்குள்ள அவ உனக்கு மருமகளாயிட்டாளா?” – ஜெய் சட்டை பட்டனை கழற்றியவாறே அறைக்குள் போனான்.

“அவன் கிடக்குறான்… நீ சொல்லு பிரபா… நல்லா பேசுறாளா?”

“ம்ம்… அவங்க ரெண்டு பேரும் நான் இருக்குறதையே மறந்துட்டாங்க…. அப்படி ஒரு லவ்ஸ் அத்தை… சீக்கிரமே நீங்க கல்யாண பத்திரிகை அடிக்க வேண்டியிருக்கும்” பிரபாகர் சமாளித்தான்.

“எங்கே பிரபா… செல்வி உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டா ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா பண்ணிடலாம்… என்ன சொல்றா உங்கம்மா?” பிரபாகர் பதில் சொல்ல தடுமாற “விடு… நானே அவ கிட்டே பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனார்.

ஜெய்க்கு “நாமளே காயத்ரியை பிரபாகருக்கு கேட்டா என்ன?” என்று சொல்ல வார்த்தை வாய்க்கு வந்தது.. ஆனால் இப்போதைக்கு அப்படி எதுவும் சொன்னால் அவன் காயத்ரியிடம் பேசாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அந்த விஷயத்தை சுத்தமாக underplay செய்தான்.

இரவு கட்டிலில் பிரபாகர் விட்டம் பார்த்து படுத்திருக்க, ஜெய் அவன் நெஞ்சில் தலை வைத்து, பிரபாகரின் கால்கள் மீது கால்கள் போட்டுக்கொண்டு படுத்திருந்தான். பிரபாகரின் கைகள் ஜெய்யின் தலைமுடியை அன்போடு கோதிக்கொண்டிருந்தது.

“பிரபா… நாளைக்கு கட்டாயம் Gym போகலாம்… இன்னைக்கு நீ போகனும்னு இருந்தே ஆனா நான் தான் உன்னை என் கூட இழுத்துட்டு போயிட்டேன்..”

“அதுக்கு என்னடா குட்டி… நீ குஜால்ஸா இருந்தாலே எனக்கும் சந்தோஷம் தான்…”

“நான் குஜால்ஸா இருந்தேன் சரி.. நீ எப்படி பொழுது ஓட்டினே?”

“நான் காயத்ரி கிட்டே பேசிட்டு இருந்தேன்… நல்லா பேசினா… ரெண்டு பேருக்கும் பேசறதுக்கு பொதுவான விஷயங்கள் இருந்துச்சு… அதனால நேரம் போயிடுச்சு”

“அப்படி என்னடா பேசுனீங்க…?”

“சொந்தமா ஒரு OCR (Optical Character Recognition) ஒன்னு டெவலப் பண்ணிட்டு இருக்கா… அதை பத்தி பேசிட்டு இருந்தோம்… எனக்கு தெரிஞ்ச inputs குடுத்தேன்..”

“மார்க்கெட்டுல ஆயிரத்தெட்டு OCR இருக்கே… இவ எதுக்கு இருக்குறதையே திரும்ப கிரியேட் பண்ணிட்டு இருக்கா? College project மாதிரி…”

“ஆனா தமிழுக்குன்னு நல்ல OCR இல்லையே…  ஒண்ணு ரெண்டு இருக்கு ஆனா அதுல ஸ்கேன் பண்றதுக்கு கையாலேயே டைப் பண்ணிட்டு போயிடலாம்… அவ்வளவு மோசம்.. அவளுக்கு தமிழ் ஆர்வம் ரொம்ப அதிகமா இருக்கு… அதனால அவளே ஒண்ணு டெவலப் பண்ணிட்டு இருக்கா..”

“அவ அவ்வளவு ஆர்வக்கோளாறா? ஆனா ஆள் பார்த்தா கொஞ்சம் அசமஞ்சமா இருக்கா இல்லை… நான் கூட உன்னை அவ கிட்டே தனியா விட்டுட்டு வந்துட்டோமேன்னு மனசுக்குள்ள பதைபதைப்பாவே இருந்தேன்..”

“என்னை நினைச்சுகிட்டு நீ அஞ்சலி கிட்டே ஒழுங்கா பேசுனியா இல்லையா?”

“Not a bad time… அடுத்த வாட்டி மீட் பண்ணும்போது இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்..”

“அடி சக்கை… கிளம்புறதுக்குள்ள அடுத்த மீட்டிங்குக்கு பிளான் பண்ணிட்டீங்களா?”

“வேற வழி…”

“பாரு! நீ ஆரம்பத்துல எவ்வளவு ராவடி பண்ணினே.. இப்போ எல்லாமே ஸ்மூத்தா போகுது… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா குட்டி” பிரபாகர் விட்டத்தை பார்த்தே பேசிக்கொண்டிருந்ததால் ஜெய்யின் முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தை கவனிக்கவில்லை.

“பிரபா…”

“என்னடா குட்டி?”

“எனக்கு உன்னை கிஸ் பண்ணனும்..”

பிரபாகர் ஜெய்யின் முகத்தை குணிந்து பார்த்தான். “என்னடா இது புது பழக்கமா கேட்குறே? தோணுச்சுன்னா அடிக்க வேண்டியது தானே?” பிரபாகர் தலையை லேசாக குணிய, ஜெய் மேலே நகர்ந்து எழுந்து பிரபாகரின் உதட்டை கவ்வினான். ஒரு நீண்ட ஆழமான முத்தத்துக்கு பிறகு ஜெய்யின் நெஞ்சிலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. அந்த அரையிருட்டிலும் ஜெய்யின் கண்கள் பிரபாகரின் கண்களை தீர்க்கமாக ஊடுருவி பார்த்தது.

“என்னடா குட்டி.. திடீர்னு சீரியஸாயிட்டே?”

ஒன்னும் இல்லடா..” ஜெய் வார்த்தைகளை சத்தம் வராத அளவுக்கு பதிலளித்தான்.

பிரபாகர் ஒரு கையால் ஜெய்யின் இடுப்பை சுற்றிக்கொண்டு, மறு கையால் அவன் கன்னத்தை தடவிக்கொண்டு “இதெல்லாம் முடியப்போகுதேன்னு feelings-ஆடா குட்டி?”

ஜெய் உதட்டை பிதுக்கி “ப்ஸ்ஸ்… அப்படின்னு இல்லை.. ஆனா என்ன காரணம்னு தெரியலை…” பிரபாகரின் தாடையில் தன் நெற்றியை சாய்த்தான்.

“எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… உனக்கும் அஞ்சலிக்கும் நடக்கப்போற ஃபர்ஸ்ட் நைட் ரூமை நான் தான் அலங்காரம் பண்ணுவேன்… உனக்கு performance appraisal எல்லாம் இருக்கும்… அதை நான் தான் evaluate பண்ணுவேன்” பிரபாகர் ஜெய்யின் தலையை லேசாக தூக்கி அவன் உதட்டில் மென்மையாக முத்தம் வைத்தான்.

அப்போ அன்னைக்கு பண்ணப்போறதை நான் இன்னைக்கு உன்னை வச்சு practise பண்ணப்போறேன்…” ஜெய் பிரபாகரின் கைகளை தன் கைகளால் இறுக்கி கோர்த்துக்கொண்டு சிறையெடுத்துவிட்டு பிரபாகரின் உதட்டை ஆக்ரோஷமாக ஆக்கிரமித்தான். அப்படியே மெல்ல மெல்ல பிரபாகரை முழுமையாக ஆக்கிரமித்தான். அதுவும் ஒருவகையில் therapeutic sex தான்… ஆனால் ஜெய்யின் மனதில் இருந்த பாரத்தை பிரபாகருக்கு தெரியாமல் சாமர்த்தியமாக ஜெய்யே அந்த உடலுறவின் மூலம் இறக்கிவைத்துக்கொண்டான்.

இந்த உயிரில் கலந்த உறவே இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 14/04/2014
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2017/04/22.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
உ.க.உறவே 22. காதல் நாடக மேடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top