முன் கதை சுருக்கம்... |
---|
ஒரு காதலர் தினத்தன்று விக்கி நரேனுக்கு மோதிரம் மாட்டி அவரை தன்னுடைய வாழ்க்கை துணையாக வருமாறு propose செய்கிறான். அவனது காதலின் தீவிரத்தை கண்டு நரேன் அதை diffuse செய்ய முயற்சிக்கிறார். ஆனாலும் நரேன் விக்கி தன் காதலில் தீவிரமாக இருப்பதை கண்டு அவனை தன் வயதுக்கு ஏற்ற துணையை தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். காதலர்களிடையே இடைவெளி உருவாகிறது. அவர்களுடைய நெருக்கம் எல்லாம் அவ்வளவு தானா? |
நரேன் சாலையில் பார்வையையும், கவனத்தையும் வைத்து போக்குவரத்து நெரிசலை லாவகமாக சமாளித்தபடி ஓட்டிக்கொண்டே பேசினார்.
“நான் Engineering Colleges-க்கு Hydarulics பற்றி Guest lectures எடுக்கப்போறது வழக்கம். அப்படி ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி MIT-க்கு போனப்போ Students Coordinator-ஆ இருந்த பிரகாஷ் கூட அறிமுகம் ஏற்பட்டுச்சு…. உனக்கே தெரியும் நாம Gays-க்கு ஒரு extra sensory perception இருக்கும்… நம்மள அறியாமலேயே அடுத்தவங்களும் Gay-யா இல்லையான்னு ஒரு உள்ளுணர்ச்சி, intuition சொல்லுமே… எனக்கும் பிரகாஷுக்கும் seminar தொடர்பான communications-லயே ஒரு நெருக்கம் ஏற்பட்டுடுச்சு… Yes! He is also a gay by orientation. அதனால நாங்க சீக்கிரமே நெருங்கிட்டோம்…”
“விக்கி! நான் அவன் கிட்டே எதிர்பார்த்தது casual sex இல்லை… என்னை மாதிரி இருக்குற closetted gay எந்த ஒரு முகமூடியும் இல்லாம பேச என்னைபோல இன்னொரு ஜீவன்…. அது மட்டுமில்லாம என்னை பொருத்தவரை Intelligence is the real sexy… அப்படி பார்த்தா he is the sexiest person I had ever come across… அவன் கிட்டே நான் என்னோட technical stuffs-ம் பேசமுடியும்… இப்போ எந்த ஹீரோயின் எந்த boyfriend கூட சுத்திட்டு இருக்கான்னு கிசுகிசுவும் பேசமுடியும்… அவன் கூட பழகுறப்போ இந்த generation கூட connect ஆகிக்கிற சந்தர்ப்பமும் என்னை update பண்ணிக்கிற வாய்ப்பும் கிடைச்சுது… Yet we had sex once”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“பிரகாஷ் தேனி district-ஐ சேர்ந்தவன்… ஒரு weekend என்னை சுருளி தீர்த்ததுக்கு trekking அழைச்சிட்டு போனான். அந்த மலையை பார்த்து நான் என்னால முடியாதுன்னு பயந்தேன்… ஆனா அவன் என்னை உற்சாகப்படுத்தி மலை உச்சிக்கு அழைச்சிட்டு போனான்… அங்கே இருந்து sunset-ஐ பார்த்தபோது என்னாலயும் முடியுமாங்குற பிரமிப்பு போய் நானும் மனசளவுல மட்டுமில்லாம உடம்பளவிலேயும் இன்னும் இளைஞன் தான்னு ஒரு feelgood feeling வந்துச்சு… அந்த உச்சியிலே அடுத்த நாள் காலையிலே sunrise பாக்குறதுக்காக நாங்க மலையுச்சியிலே camping பண்ணினோம்… அன்னைக்கு ராத்திரி we made love in the tent…. அது ஒரே தடவைன்னாலும் அதுவே எங்களுக்கு போதுமானதா இருந்துச்சு..”
“பிரகாஷ் தான் அவங்க தலைமுறையில முதல் பட்டதாரி… B.E-ஐ ஒரு NGO-ட sponsorship-லயும், M.Tech-ஐயே Government குடுக்குற stipend-ல படிக்கிற அவனுக்கு Doctrate பண்றது எல்லாம் கனவுல கூட இல்லை… நான் தான் அவனுக்கு மாசா மாசம் பாக்கெட் மணி குடுத்து, அவனை GRE/TOEFL Coaching-க்கு அனுப்பி இப்போ அவனோட திறமையால Arizona University-ல admission-ம் வாங்கிட்டான். அவங்க குடும்ப பொருளாதார நிலைமை இவனை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப லோன் வாங்கற அளவுக்கு இல்லைன்னு எனக்கு தெரிஞ்ச circle-ல இருக்குற ஒரு Gay Bank manager மூலமா அவனுக்கு ஒரு மாதிரியா educational loan-ம் ஏற்பாடு பண்ணியாச்சு…. அந்த bank manager-க்கு லஞ்சமா நான் ஒரு ராத்திரி முழுக்க என்னை குடுக்க வேண்டியதா இருந்துச்சு… ப்ச்! ஆனா பிரகாஷோட எதிர்காலம் secure ஆயிடுச்சுங்குற சந்தோஷத்துக்கு முன்னாடி அது பிரச்சனையா தெரியலை… ”
“நம்ம ஊர்ல வப்பாட்டிங்குற concept-ஓட westernised version தான் இந்த Sugar Daddy. இதுல sex-ங்குறது ஒரு optional item-ன்னு சொல்லிக்கிட்டாலும் நிறைய நேரங்கள்ல Sugar Daddy/Baby relationship-ல அப்பப்போ உடல் இச்சைகளும் address ஆகும். நான் down-ஆ இருந்தா பிரகாஷ் எனக்கு handjob பண்னிவிடுவான்.. ஏதோ ஒரு வகையிலே ரெண்டு பேரோட தேவைகளும் பூர்த்தி செய்யப்படுது. அதே சமயம் இது continue பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணி advance notice குடுத்துட்டு நிறுத்திடலாம்… Emotional attachment இல்லாம… இதோ.. அவன் contract tenure முடிஞ்சுதுன்னு thanks சொல்லிட்டு கிளம்பிட்டான். ஆனா என்னால அவனை போல emotionally attach-ஆ ஆகாம இருக்க முடியலை… அதனால தான் எனக்கு உன்னை அவ்வளவு பிடிச்சாலும், உன்னோட proposal-ஐ accept பண்ணிக்கிட்டா நாளைக்கு நான் இல்லாம நீ ஏதாச்சும் கஷ்டப்படுவியோங்குற பயம் என்னை விலகிப்போக வைக்குது… Go and find a partner suitable for your age, sexual drive and interests.. I am happy being just a Sugar Daddy… உனக்கு சேர்த்து!”
விக்னேஷ் சல்லென்று எரிந்து விழுந்தான். “மாமா! திரும்ப திரும்ப நான் போனதுக்கு அப்புறம்னு சால்ஜாப்பு சொல்லிட்டு இருக்காதீங்க… இன்னைக்கு எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க? பிரகாஷை காட்டுறதுக்காக தானே? என் வாழ்க்கையிலே உனக்கு முன்னாடியே வேற ஒருத்தன் இருக்கான்னு காமிக்க தானே…. காமிச்சு என்ன நிரூபிக்க போறீங்க? உங்க லிஸ்டுல நானும் பத்தோட ஒன்னுன்னு சொல்லாம சொல்றதுக்கா? ஆனா மாமா நீங்க பண்றதெல்லாம் என்னை இன்னும் அதிகமா உங்களை வெறித்தனமா லவ் பண்ண வைக்குது… யாரு மாமா ஒரு நாள் கூட படுத்தவனை ஃபாரினுக்கு அனுப்பி படிக்க வைச்சு அழகு பார்ப்பாங்க? அப்படி பட்ட ஒருத்தருக்கு ஒரு நாள் spouse-ஆ இருந்தா கூட போதும்… அந்த நினைப்பிலேயே ஆயுசையும் கழிச்சிடலாம் மாமா… என்னோட stand-ஐ நான் சொல்லிட்டேன். என் முடிவை நீங்க ஏத்துக்குட்டே ஆகனும் நான் உங்களை எந்த வகையிலேயும் நிர்பந்தப்படுத்தலலை”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
Apartment-ன் நுழைவுவாயிலில் security மரியாதையாக வணக்கம் வைத்து கதவை திறந்துவிட, நரேனின் கார் Car Parking Lot-ல் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட slot-ல் smooth-ஆக சொருகி நின்றது. நரேன் காரின் ignition-ஐ நிறுத்தி சாவியை உருவியதும் விக்னேஷ் நரேனின் கையை பிடிக்க, திறக்கப்போன கதவை அப்படியே விட்டுவிட்டு நரேன் விக்னேஷ்-ஐ குழப்பத்தோடு பார்த்தார்.
“நீங்க வெறும் sugar daddy இல்லை… Sugary sweet person. நீங்க ஊரெல்லாம் உங்க Sugar Boys வச்சிருந்தாலும், நான் உங்களை adore பண்றதை நிறுத்தமாட்டேன்… ஒரே ஒரு நாளுக்குன்னாலும் நான் தான் உன்னோட spouse / partner… என் செல்ல கிழவா! நாளைக்கு ராத்திரி நாம Airport போய் உன் Sugar Boy-ஐ US-க்கு pack பண்ணி அனுப்பிட்டு வரலாம்… பிரகாஷ் மேல ஆசை அக்கறையெல்லாம் இல்லை… ஒரு distraction ஊரைவிட்டு போகுதுன்னு நான் confirm பண்ணிக்க தான்” நரேன் விக்னேஷ் கோர்த்த கையை எலும்பு நொறுங்கும் அளவுக்கு இறுக்கினார்.
“யோவ் மாமா… கையை விடுய்யா… கை வலிக்குது” விக்னேஷ் வலியில் துடிக்க, “போனா போகுதுன்னு விட்டா மூச்சுக்கு முன்னூறு தடவை என்னை கிழவா கிழவான்னு சொல்றே??? நான் இன்னும் யூத்து தாண்டா” நரேன் செல்லமாக கண்களை உருட்டி மிரட்டினார்.
காரை விட்டு இறங்கும் முன்பு இருவரும் நீண்ட நேரம் liplock செய்துக்கொண்டார்கள்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 27/04/2016
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2016/04/sugar-daddy-07-i-am-sugar-daddy.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
![]() |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|
![]() |