முன் கதை சுருக்கம்... |
---|
தன்னுடைய வயதில் இருக்கும் விக்கி தான் தன்னுடைய அப்பாவின் காதலன் என்று தெரிந்து ஹரீஷ் விக்கியை ஒரு scammer ஆக இருப்பானோ என்று சந்தேகப்பட்டு அவனை அவமதிக்கிறான். பின்னர் அவன் தன் காதலியுடம் பேசும் போது தன் தந்தைக்கும் என்று ஒரு வாழ்க்கை, விருப்பு வெறுப்புகள் இருக்கிறது என்றும், அந்த தனிமனித உரிமையை மதிக்கவேண்டியது தன் கடமை என்று உணர்கிறான். அதை நரேனிடமும் வெளிப்படுத்துகிறான். அவமானப்பட்டு போன விக்கி என்ன செய்தான்? அருந்ததிக்கு இது தெரியவரும் போது எப்படி இருக்கப்போகிறது? |
“தம்பி! இந்த ஊறுகாய் பாட்டில்ங்க எல்லாத்தையும் பத்திரமா சுத்தி வச்சுக்கோ. என்ன தான் இந்தியன் ஸ்டோர்ஸ்-ல கிடைச்சாலும் நம்ம ஊர் flavour அதுல இல்லை… அப்புறம் மசாலாக்கள் எல்லாம் தேவைக்கு கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்கோ… இந்த விபூதி பொட்டலத்தை hand baggage-ல வைக்கட்டுமா இல்லை luggage-ல போட்டுக்குறியா?” ஹரீஷ் மீண்டும் US-க்கு திரும்புவதில் வீடு அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருந்தது. நரேனும் அருந்ததியும் மாறி மாறி ஹாலுக்கும் ரூமுக்குமாக அலைந்துக்கொண்டிருக்க, இந்த களேபரங்களை நரேன் அமைதியாக ஹால் Sofa-வில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு வார Hospital வாசம் உடம்பில் தளர்வை ஏற்படுத்தியிருந்தாலும் புயலுக்கு பின் அமைதி போல நரேனின் முகமும், மனமும் தெளிவாக இருந்தது. ஒருவகையில் தன் சாவுக்கு பிறகு அருந்ததிக்கு ஒரு பாதுகாப்பான ஏற்பாடு செய்தாகிவிட்டதால் நரேனுக்கு சாவை பற்றிய கவலை இல்லாமல் போய்விட்டிருந்தது. Closet-ல் இருந்து ஹரீஷிடம் செய்துவிட்டதால் மனதில் பாரமில்லாமல் லேசாக இருந்தது.
“அம்மா! என்னோட திருப்பூர் package எங்கே?” ஹரீஷ் அறைக்குள் இருந்து கத்தினான். உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் நம்ம ஊர் TShirt தான் hanger-ல தொங்கும்… அதனால் ஒவ்வொரு முறை US போகும்போது திருப்பூர் சென்று தேவையான TShirts-களையும், innerwears-களையும் அள்ளிக்கொண்டு போவது இவர்கள் வீட்டு வழக்கம். இம்முறையும் இந்த கலவரத்திலும் அந்த routine தவறவில்லை. ஹரீஷ் நரேனை விக்னேஷின் care of-ல் விட்டுவிட்டு ஒரு நாள் போய் hosieries-ஐ அள்ளிக்கொண்டு வந்தான்.
விக்னேஷ் வழக்கம் போல கதவை திறந்துக்கொண்டு உள்ளே வர, ஹரீஷ் “வா விக்கி! நீ முன்னாடியே வருவேன்னு பாத்துட்டிருந்தேன்… எனக்கு இந்த luggage-ஐ weigh பண்ண help பண்ணு.” என்று செல்லமாக கடிந்துக்கொண்டான். விக்னேஷ் ஹரீஷின் அறைக்குள் சென்று அவனுக்கு எடை பார்க்க உதவி செய்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“விக்கி! இந்த wardrobe-ல இருக்குற துணி எல்லாம் இனிமேல் உன்னோடையது… உனக்கு பிடிச்சதை வச்சிட்டு மீதியை ஒரு weekend உன் boyfriend… அது தான் உன் நரேன் கூட போய் அந்த orphanage-ல குடுத்துட்டு வந்துடுங்க… இந்த ரூம்ல என்னோட things-ன்னு எதுவும் பெருசா இல்லை. உன்னோட எல்லாம் இங்கே பத்தும்… மேலே பரண்ல கொஞ்சம் இடம் இருக்கு… இனிமே இது உன்னோட ரூம்! இது உன்னோட வீடு…. உன்னோட நரேன், அருந்ததி…. நான் தான் விருந்தாளி”
விக்னேஷ் கண்கள் பனிக்க ஹரீஷை பார்த்தான். ஹரீஷ் நாசூக்காக கண்ணை துடைத்துக்கொண்டே “என் அப்பா இவ்வளவு நாள் தனக்கான வாழ்க்கையை வாழாம எங்களுக்காக வாழ்ந்திருக்கார். அவருக்கு இஷ்டமில்லைன்னாலும் நான் சொல்ற horror படங்களுக்கு அழைச்சிட்டு போரது, அவருக்கு வாய்ல வைக்க முடியலைன்னாலும் எனக்கு பிடிச்ச Italian Restaurants-க்கு கூட்டிச்சு போறது, இந்த வீடு கூட நான் அடம் புடிச்சதால இந்த locality-ல வாங்குனது, என்னோட friends போனாங்கன்னு நான் அடம் புடிச்சதால கடனை உடனை வாங்கி என்னை US அனுப்பினது, இப்படின்னு நிறைய சொல்லலாம்… ஆனா நான் என்னோட வாழ்க்கைன்னு நேராவே பார்த்துட்டு ஓடிட்டு இருந்ததால் இவரோட தேவைகளை பத்தி யோசிக்கவே இல்லை…. I had taken him for granted… அவர் இனிமே அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை எந்த முகமூடியும், நிர்ப்பந்தமும் இல்லாம வாழட்டும்… நீ அவரை பத்திரமா பார்த்துக்குவியா விக்கி?”
“மாமா என்னோட உயிர்… என் உயிரை குடுத்தாச்சும் அவரை காப்பாத்துவேன் ஹரீஷ். அவரை உளங்கையிலே வச்சு தாங்குவேன்….”
“70 கிலோவை நீ உள்ளங்கையிலே தூக்குவியா விக்கி! ஹரீஷ் செல்லமாக விக்னேஷின் தோளில் குத்தினான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“மாமா நின்னா நான் தூக்க ரெடி…”
“நீ செஞ்சாலும் செய்வே…. ஆனா ஒரு முக்கியமான விஷயம். அம்மா முன்னாடி உங்களோட PDA (Public Display of Affection)-ஐ வச்சுக்காதீங்க… அவங்களுக்கு இந்த விஷயத்தை counselling session மூலமா தான் சொல்லனும்… அது வரைக்கும் நீயும் அப்பாவும் ஒரே roof-க்குள்ளே சேர்ந்து வாழுற வாழ்க்கையை ஒரு probation period-ஆ எடுத்துக்கோங்க.”
அதுக்கான அவசியம் வராது ஹரீஷ்! சொல்லாமலே கூட விட்டுடலாம்… ஏன்னா ஆண்ட்டியோட வாழ்க்கையிலே பங்கு கேட்கனுங்குறது என்னோட intention இல்லை! எனக்கு ரொம்பவும் பிடிச்ச மாமாவோட நிழல்ல இருக்கனுங்குறது மட்டும் தான் என்னோட தேவை… அது கூட இந்த வீட்டுலேயே குடிவந்து தான்னும் அவசியம் இல்லை… அவரை கண்ணெதிர்ல வச்சுக்கிட்டு இருந்தாலே போதும்… இப்போ கூட நான் இங்கே shift பண்ண ஒத்துக்கிட்டதே இந்த சமயத்துல மாமாவுக்கும் ஆண்ட்டிக்கும் ஒரு உதவியா இருப்பேன்ங்குற எண்ணம் தானே தவிர, என்னோட love-க்கான அங்கீகாரத்தை அடைஞ்சிட்டேன்ங்குற சந்தோஷத்துல இல்லை.”
“விக்னேஷ்! நீ பேசுறது எனக்கு விக்ரமன் படத்து climax-ல கதாநாயகன் பேசுற வசனம் மாதிரி இருக்கு… நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்குறப்போ தான் உங்களுக்குள்ளே எவ்வளவு compatibility இருக்குன்னு தெரியும். எனக்கு நீங்க ரெண்டு பேரும் forever சந்தோஷமா இருக்கனும்… Just hoping that this attraction is not a passing phase”
“அப்படியெல்லாம் இருக்காது… நானும் மாமாவும் ரொம்ப நல்ல ideal partners-ஆ வாழ்ந்து காட்டுவோம்”
“அதுக்கு முன்னாடி நீ பண்ண வேண்டிய வேலைங்களும் இருக்கு…. என்னோட network-ல உன்னை பத்தி சொல்லியிருக்கேன்… உனக்கு ஒரு US based company-ல வேலை வாங்கிட்டா உன்னையும் அங்கே அழைச்சிட்டு போயிடலாம்… அப்படியே அப்பாவையும் அம்மாவையும் அழைச்சிட்டு போயிடனும்… ஏன்னா நம்ம நாடுல homophobia இன்னும் அதிகமாவே இருக்கு… இங்கேயோட compare பண்ணும்போது US-ல LGBT+s-ஓட நிலைமை ஓரளவுக்கு பரவாயில்லை. You can be openly gay yet with some dignity… அம்மாவை ஆம்னா, எங்க குழந்தைங்கன்னு கவனத்தை ஓரளவுக்கு திசை திருப்பிடலாம்…”
ம்ம்…” விக்னேஷ் ஹரீஷ் சொன்னதை மௌனமாக ஆமோதித்தான்.
“என்னை விட என் அப்பாவை நீ இன்னும் அதிகமா கண்ணும் கருத்துமா பார்த்துக்குவேன்னு தெரியும்.. அதனால எனக்கு அந்த வகையிலே கவலை இல்லை. ஆனா தான் closet-ல இருந்து வெளியே வந்துட்டோங்குற excitement-ல அப்பாவோட heart beat rate அதிகம் ஆகாம பார்த்துக்கோ… மனுஷன் முகம் இப்போ தெளிவா இருக்கு… அந்த சிரிப்பை இனிமே உதிராம பார்த்துக்கவேண்டியது உன்னோட பொறுப்பு விக்கி!”
“ரெண்டு பசங்களும் என்ன குசுகுசுன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க? Packing முடிச்சிட்டா சீக்கிரம் dinner சாப்பிட்டுடலாம் இல்லை? Uber-க்கு சொல்லிட்டியாடா? அருந்ததி அறை வாசலில் இருந்து இவர்கள் இருவரையும் பார்த்து சொன்னார்.
“முடிஞ்சுதும்மா… இனிமே இந்த ரூம்ல விக்னேஷ் தானே இருக்கப்போறாப்படி. அதனால விக்கி கிட்டே என்னோடthings -ஐ எல்லாம் பத்திரமா பார்த்துக்க சொல்லிட்டு இருந்தேன். இப்போ Uber-க்கு கூப்பிட்டுடுறேன்” என்றபடி mobile-ஐ எடுக்க, “ஆண்ட்டி… நான் ஹரீஷ் கூட Airport போய் அவரை send off பண்ணிட்டு வந்துடுறேன்
“அவரை இல்லை… அவனை” ஹரீஷ் திருத்தினான்.
“என்னவோ! உங்க சின்ன பசங்க விஷயத்துல நான் நடுவுல வரலை… சீக்கிரம் வாங்க!” அருந்ததி நகர்ந்தார்.
ஹரிஷும் விக்னேஷும் luggage-களை எல்லாம் காரில் ஏற்றிவிட்டு வீட்டுக்கு வர, நரேனும் அருந்ததியும் வீட்டு வாசலில் நின்றிருந்தார்.
“மாமா! மணி 9:30 ஆகுது.. நானும் ஹரீஷும் Airport-க்கு கிளம்ப இன்னும் 30-45 நிமிஷமாவது ஆகும். நீங்க போய் படுங்க… இப்போ உங்க நிலைமைக்கு 8 மணி நேர தூக்கமாச்சும் அவசியம். நீங்க ரூமுக்கு போங்க, நான் மாத்திரைங்க எடுத்துட்டு வர்றேன்” விக்னேஷ் நரேனின் மருந்து பொட்டலத்தை பிரித்து இரவுக்கான மருந்துகளை சேகரித்தான்.
ஹரீஷ் அருந்ததியை Sofa-வில் உட்காரவைத்து “அம்மா! இனிமே விக்கியோட பொறுப்புல அப்பாவை விட்டுடு… அப்பாவோட health-க்கு விக்கி responsibility எடுத்திருக்கான். நீ அவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கோ…. அப்புறம் ஆம்னா உன்னை பார்க்கனும்னு சொல்லிட்டு இருக்கா… ஒரு Pakistani tourist-ஐ நாம host பண்ணினா அப்புறம் நாம Indian Government-ஒட surveillance-ல வந்துடவேண்டியிருக்கும்… தேவையில்லாத தொல்லை… அதனால நீ ஒரு நடை வந்து அவளை பார்துட்டு போ…” ஹரீஷ் அருந்ததியை engage செய்திருக்கும் வேளையில் விக்னேஷ் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் போனான்.
“மாமா! தண்ணி எடுத்துக்கோங்க… நான் மாத்திரைங்களை ஒவ்வொன்னா தர்றேன்… சின்ன பசங்க மாதிரி கடகடன்னு முழுங்கிடுங்க….” அதே போல செய்தான். நரேனை படுக்கவைத்து போர்வையை நெஞ்சு வரைக்கும் இழுத்து போர்த்திவிட்டு “Good night மாமா” என்று சொல்லிவிட்டு, அறை விளக்கை அணைத்துவிட்டு குணிந்து நரேனின் உதட்டில் சின்னதாக முத்தம் வைத்துவிட்டு நகர நரேனின் முகத்தில் அதே புன்னகை.
ஹரீஷ்! உன்னோட சமையல்ல என்ன speciality?” விக்னேஷ் கேட்க, ஹாலில் நடக்கும் அரட்டை கச்சேரியை கேட்டபடி நரேன் சந்தோஷமாக உறக்கத்துக்கு போனார்.
பி.கு: Let’s hope that they lived happily ever after.
<<<முற்றும்>>>
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 09/02/2018
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|