P G 12. பிரிவு

P G 12. பிரிவு

இது Paying Guest தொடர்கதையின் 12-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
முதலில் ரவி Gay-யாக இருப்பானோ என்று சந்தேகப்படும் ரூபா, அது அவினாஷாக இருக்கும் என்று முடிவு செய்கிறாள். இது தெரியாமல் கூட்டமில்லாத திரையரங்கில் ரவியும் அவினாஷும் public sex வைத்து கடைசி அந்தோஷத்தை அனுபவிகிறார்கள்.

“ரூபா… ஒவ்வொரு மனுஷங்களும் ஒவ்வொரு மாதிரி. அவனோட sexuality is not our business. அதுல நாம ஏன் மூக்கை நுழைக்கனும்? அவன் பாட்டுக்கு அவனா இருந்துட்டு போகட்டுமே. அவனை அவனோட sexuality-ஐ வச்சு ஏன் அவனை judge பண்றே? அவனோட sexuality தெரியாத வரைக்கும் அவன் ஒரு தங்கமான பையன். ஆனா இப்போ ஒரே second-ல அவன் dangerous ஆயிட்டானா? கொஞ்சம் யோசி!”

ஆவேசப் பெருமூச்சோடு ரூபா தன் தலைமுடியை தூக்கி முடித்தபோது அவன் கண்களில் அப்படி ஒரு வெறுப்பு. “சீ! ஒரு பொண்ன வச்சுக்கிட்டு வீட்டுக்குள்ளே இப்படி ஒரு கருமத்தையும் வச்சிருந்தா நாளைக்கு அவ எப்படி ஒழுக்கமா வளருவா? அவனுக்கு ஏன் இப்படி பரிஞ்சு பேசுறீங்க? ஒருவேளை நீங்களும் அவன் கூட கூட்டா?” ரூபாவின் கேள்வியில் ரவி நிலைகுலைந்து நின்றான்.

கோபத்தில் “ஆமாண்டி! நானும் அப்படி தான்” என்று கத்தவேண்டும்போல தோன்றினாலும் மிட்டு, மற்றும் சமுதாயத்தின் முன்பு தான் தலைகுணிந்து நிற்பதை நினைத்து நடுங்கினான். “ரூபா…” ரவியின் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை என்றாலும் அவன் ஏகத்துக்கும் வியர்த்திருந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

இப்போது ரூபாவின் கை மேலோங்கிவிட்டதை ரவி பார்த்துக்கொண்டே ஒன்றும் செய்யமுடியாமல் ஒருவித இயலாமையுடன் நின்றான்.

“சொல்லுங்க… நீங்களும் அவனை மாதிரி தானா?” ரூபாவின் குரல் வேகமாக ஒலித்தது.

“இல்லை…. ” ரவி மனசாட்சியை கீழே அமுக்கி வைத்து பொய் சொன்னான். “அவனை சட்டுன்னு எப்படி வெளியே போக சொல்றதுன்னு எனக்கு யோசிக்க தெரியலை…”

ரவி கெஞ்சும் ரூபா போது மிஞ்சினாள் – “அதையெல்லாம் அவன் கிட்டே நான் பேசிக்கிறேன். நீங்க இனிமே அவன் இருக்குற பக்கமே தலைவச்சு படுக்கக்கூடாது. வீட்ல இல்லைன்னா office-ல கூத்தடிக்கலாம்னு கனவு காணாதீங்க. Office-ல அவன் உங்க team-லயே இருக்கக்கூடாது. அவனை வேற team-க்கு மாத்த சொல்லுங்க. உங்களால அப்படி பண்ண முடியலைன்னா சொல்லுங்க, உங்க manager திவாரி சார் கிட்டே நானே பேசறேன். அதுவும் முடியலைன்னா என் சித்தப்பாவோட company-லே உங்களுக்கு உடனே உங்களுக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்ண சொல்றேன்”.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Point of View எனப்படும் என்னுடைய பார்வையில் நான் gay sex-ல் ஈடுபடுவதாக எழுதும் கதைகள் உங்களை ஈர்க்கிறதா?

View Results

Loading ... Loading ...

ரவி சோர்ந்து போய் சாப்பாட்டு தட்டில் எச்சில் கையை உதறிவிட்டு எழுந்து அறைக்கு நடந்தான். அவன் நடையில் ஒரு தளர்ச்சி தெரிந்தது. தான் விளையாட்டாக செய்த விஷயம் இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று ரவி எதிர்பார்க்கவே இல்லை என்பதை விட தனக்காக அவினாஷ் தண்டிக்கப்படுவதை நினைத்து புழுங்கியபடி கட்டிலில் விழுந்தான்.

கண்ணிமைக்கும் முன்பு அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மிக வேகமாக நடந்தன. ரூபாவே அவினாஷை mobile phone-ல் அழைத்து அன்று மாலையே வீட்டை விட்டு வெளியேறுமாறு திட்டவட்டமாக சொன்னாள். அதே சமயம் அவனுக்காக சித்தப்பா ஏற்பாடு செய்திருந்த Guest House அறையின் விவரங்களையும் தெரிவித்தாள். இவை அனைத்தும் தன் கண் முன்னே நடக்கும் போது எதுவும் செய்யமுடியாமல் ரவி உலர்ந்த சருகாக கிடந்தான். அதே சமயம் எதிர்முனையில் அவினாஷின் மனது எப்படி துடிக்கிறதோ என்று நினைத்தபோது ரவியின் நெஞ்சில் யாரோ நெருப்பு அள்ளிப்போட்டது போல எரிந்தது.

பக்கத்து அறையில் சாமான்கள் எல்லாம் pack செய்யப்படும் சத்தத்தை கேட்டுக்கொண்டே ரவி துவண்டு போய் படுத்துக்கிடந்தான். அவினாஷ் வழக்கத்தை விட சற்று முன்பு வந்து தன் பொருட்களை pack செய்ய ஆரம்பித்துவிட்டான். அவனை முகத்துக்கு நேராக பார்க்கும் திராணி ரவிக்கு இல்லை. அதனால் அங்கே போகாமல் தன் அறையிலேயே அடைந்து கிடந்தான். மாலை ஆகிவிட்டது என்பது அறையில் பரவிய இருட்டிலேயே தெரிந்தது.

“அவி மாமா! எங்கே போறே? ஊருக்கா போறே? எப்போ வருவே..?” என்று மிட்டு அவனிடம் மழலையில் கேட்டபோது “மிட்டு! சும்மா இருக்க மாட்டே? அங்கே போய் விளையாடு இல்லை school book-ஐ எடுத்து படி” என்று ரூபாவின் அதட்டலுக்கு அப்புறம் மிட்டுவின் சத்தமே கேட்கவில்லை. பாவம்! குழந்தை எப்படி பயந்து போயிருக்கிறாளோ? பக்கத்து அறையில் packing-ன் சத்தம் குறைந்து கிட்டத்தட்ட நின்றது. ரவி இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் எழுந்து அடுத்த அறைக்கு சென்றான்.

இரண்டு பெரிய suitcase-கள் முழுசாக பூட்டப்பட்டு, ஒரு பெரிய polythene கவரில் அழுக்கு தலையணைகளையும், போர்வையும் போடப்பட்டிருந்தது. அவினாஷ் கட்டிலின் மீதிருந்த மெத்தை கவரை கழற்றிக்கொண்டிருந்தான். வாசலில் ரவியை பார்த்ததும் அவினாஷின் கண்களுக்கு ரவியின் கண்ணில் இருந்த வலியை உணரமுடிந்தது. அவினாஷ் ரவியை பார்த்து மென்மையாக புன்னகைத்தான்.

ரவி தளர்வாக நடந்து உள்ளே வந்து கட்டிலில் உட்கார்ந்தான். அவன் கண்கள் மெத்தையின் மீதிருந்த கறைகள் மீது வெறித்து நின்றது. அவை ரவியும் அவினாஷும் புணர்ந்து இன்பம் துய்த்தபோது அடித்து ஊற்றிய கஞ்சித்துளிகள் காய்ந்து ஏற்படுத்தியிருந்த கறைகள். அவை வெறும் கறைகள் அல்ல… அவர்களது காதல் நிமிடங்களின் பதிவுகள், இன்பத்தின் நினைவு சின்னங்கள். ரவி அவற்றின் மீது ஏக்கமாக தன் விரல்களை படரவிட்டான்.

அவினாஷ் ரவியின் மனதுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்குறது என்பதை முழுமையாக உணர்ந்திருந்தான். முழுசாக கழற்றிய மெத்தையின் cover-ஐ எடுத்து முகர்ந்தான். இந்த cover-ஐ கறைபடுத்திய பின்பு தான் மெத்தை கறைபட்டது. அதனால் அந்த மெத்தை cover-ல் இருந்த கறைகளை தன் கன்னத்தில் வைத்து ஒத்திக்கொண்டான். ரவியின் அன்புச் சின்னமாக அவினாஷ் அந்த உறையை எடுத்துச்செல்வதற்காக மடித்துவைத்தான்.

“ரவிண்ணா… இந்த மெத்தை cover-ஐ நான் எடுத்துட்டு போறேன். Online-ல வேற மெத்தை order பண்ணிடுறேன். அது வந்ததும் இதை தூக்கிப்போட்டுடுங்க… ப்ளீஸ்” என்றபோது ரவி உடைந்து நொறுங்கினான். தாவி அவினாஷை கட்டிப்பிடித்து அவன் முகத்தை தன் நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டான். அவினாஷின் கண்ணீர் ரவியின் சட்டை போடாத வெற்று மார்பை ஈரமாக்குவதை ரவியால் உணரமுடிந்தது. ரவி அவினாஷை முழுவதுமாக தன் பிடிக்குள் இறுக்கினான்.

“சாரி அவி! நான் பண்ணுன தப்புனால தான் இப்போ இந்த நிலைமை. ஆனா இந்த பிரச்சனையிலே உனக்கு ஆதரவா எதுவும் செய்யமுடியாததை நினைச்சா ரொம்ப குற்றமா இருக்குடா… நான் செஞ்ச தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்கிறியே… கடைசி வரைக்கும் உன்னை நான் வெறுமனே உபயோகிச்சுட்டு use & throw மாதிரி தூக்கிப்போட்டுட்டதா என் குற்ற உணர்ச்சி என்னை கொல்லுதுடா… என்னை மன்னிச்சிடுடா” ரவி வாய்விட்டு அழுதான்.

அவினாஷ் விசும்பியபடி “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்கண்ணா…. எங்கே போனா என்னங்கண்ணா? நான் உங்களை, அண்ணியை, மிட்டுவை எப்பவும் ஞாபகம் வச்சிட்டு தான் இருப்பேன். ப்ளீஸ் அழாதீங்க” என்றபோது உணர்ச்சிவசப்பட்ட ரவி அவனது தலைமுடி, நெற்றியை மொச்சு மொச்சுவென முத்தங்களால் நிரப்ப, வாசலில் கைதட்டல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்ப, ரூபா நின்றிருந்தாள்.

“சபாஷ்! அப்போ சித்தப்பா சொன்னது சரி தான் போல… இத்தனை நாளா என் முதுகுக்கு பின்னாடியே இவ்வளவும் நடந்திட்டு இருந்திருக்கு ஆனா நான் தான் கேணச்சியாட்டும் எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பிட்டு இருந்திருக்கேன்… நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க… இனிமே நான் எதுக்கு உங்களோட ஜாலிக்கு குறுக்கே… நான் போறேன்” என்று கோபத்தோடு நடக்க, “அண்ணி! நான் சொல்றதை கேளுங்க” என்ற அவினாஷை ரூபா கையமர்த்தினாள்.

“அயோக்கிய நாயே! இனிமே உன்கிட்டே இருந்து என்னத்தடா கேட்கனும்? ஆம்பள பொறுக்கி… என் முன்னாடி அண்ணா அண்ணான்னு கூப்பிட்டுட்டு பின்னாடி என் புருஷனையே கண்ணா கண்ணான்னு கொஞ்சி வளைச்சு போட்டுக்கிட்டியா? ச்சீசீய்! எப்படிடா உன்னால உண்ட வீட்டுக்கு உனக்கு துரோகம் பண்ண முடிஞ்சுது? த்தூ…” ரூபா காரி காரி உமிழ்ந்ததை பார்த்த அவினாஷ் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். ரூபாவின் இந்த ருத்ர தாண்டவம் அவன் இதுவரை காணாதது. அதை முதன்முறையாக பார்த்தபோது விக்கித்து போனான்.

ரவி ரூபாவின் பின்னால் ஓட, அவர்கள் அறைக்குள் ஏற்பட்ட சத்ததில் இருந்து ரூபா தன் suitcase-ஐ pack செய்ய முயற்சிப்பதையும், ரவி பலவீனமாக அவளிடம் தான் சொல்வதை கேட்குமாறு மன்றாடுவதையும் அவினாஷ் சிலையாக நின்று கேட்டுக்கொண்டிருந்தான்.

அவினாஷ் மெல்ல தன் suitcase-களை இழுத்துக்கொண்டு வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு, மீண்டும் உள்ளே வந்து polythene bag-ல் சேகரிக்கப்பட்ட அழுக்கு தலையணை உறைகளையும், விந்துக்கறை படிந்த மெத்தை cover-ஐயும் எடுத்துக்கொண்டு மீண்டும் வாசலுக்கு வந்தான். வீட்டுக்குள்ளே கடைசி தடவையாக ஏக்கத்தோடு ஒரு முறை பார்க்க, மிட்டு இந்த களேபரத்தில் என்ன செய்வது என்று புரியாமல் நின்றுக்கொண்டு வாசலில் நின்றிருந்த அவினாஷை பார்க்க, அவன் அவளுக்கு டாட்டா காட்டிவிட்டு கதவை சார்த்தினான்.

வீட்டுக்கு வரும்போது எப்படி ராஜமரியாதையோடு வந்தோம்… இப்போது எப்படி கேவலப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்படுகிறோம் என்று நினைத்தபோது இப்போதே சாவு வந்துவிடக்கூடாதா என்று வேதனையோடு அவினாஷ் கீழே இறங்கினான். அவனுக்கு லேசாக நெஞ்சு வலிப்பது போல இருக்க, அப்படியே corridor சுவற்றில் சரிந்து உட்கார்ந்தான்.

இந்த Paying Guest இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 18/02/2019
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2019/02/p-g-12.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
P G 12. பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top