நானும் அர்ணாபும் ஒன்றாக lodge செய்த Canada Express PR Visa application-களில் அவனுக்கு மட்டும் கனடா குடியுரிமை கிடைத்துவிடுகிறது. மேலும் தகவல்கள் கொடுப்பதில் தாமதம் ஆனதால் எனது விண்ணப்பம் நிலுவையில் இருப்பதை கண்டு நொந்து போகிறேன். என் அப்பா என்னை சமாதானப்படுத்தவும், ஊர் சுற்றிப்பார்க்கவும், எங்களுடன் சில நாட்கள் செலவழிக்கவும் கொல்கத்தா வருகிறார். அந்த சமயம் அர்ணாபுக்கு கனடா project-ல் சேர அழைப்பு வருகிறது. முதலில் என்னை தனியாக விட்டுவிட்டு போக மறுக்கும் அர்ணாப் பின்னர் அந்த deputation offer-ஐ ஏற்றுக்கொள்கிறான்.
எனக்கு பிடித்த shorts-ல், sofa-வில் காலை மடித்துக்கொண்டு TV திரையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் திரையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று என் மனதில் register ஆகவே இல்லை. ஏனென்றால் என் மனமும், நினைவும் நான் இருக்கும் இடத்தில் இல்லை. “க்க்கும்…” என்று செருமியபடி என் அப்பா கையில் இரண்டு cup ஆவி பறக்கும் coffee-யுடன் வந்து என்னிடம் ஒன்றை நீட்டினார். நான் அவர் முகத்தை கூட பார்க்காமல் coffee cup-பை வாங்கினேன். அப்பா sofa-வில் அடுத்த ஓரத்தில் உட்கார்ந்தார். டிவி திரையில் யாரோ செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் எங்களிடையே ஒரு கனத்த மௌனம் ஓடிக்கொண்டிருந்தது. “அர்ணாப் message பண்ணினானா?” என்று அப்பா தான் மௌனத்தை கலைத்தார். நான் “ம்ம்… Doha-ல இருந்து message பண்ணினான். Connecting flight-க்கு wait பண்ணிட்டு இருந்தப்போ…. இந்த நேரத்துக்கு அவன் flight கிளம்பியிருக்கும்… Toronto போய் இறங்குறதுக்கு இன்னும் மொத்தமா 25 மணி நேரம் ஆகுமாம்.” என்று நான் உணர்ச்சிகள் இல்லாத flat ஆன குரலில் பதில் சொன்னேன்.
கொஞ்ச நேர வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு அப்பா “உங்களோட life-ல அடுத்த கட்ட plan என்ன?” என்று கேட்க, அந்த கேள்வியை எதிர்பார்காததால் நான் சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தேன். அப்பா நிதானமாக “இல்லைடா கார்த்தி! உனக்கு PR Visa வந்ததும் நீயும் அங்கே போன பிறகு என்ன plan பண்ணி வச்சிருக்கீங்க?” என்று திடமாக கேட்டார். நான் “வேறென்ன? நானும் வேலை தேடனும்…” என்றேன். அப்பா விடாமல் “வேலை கிடைச்சதுக்கு பிறகு?” என்று துளைக்க, நான் கோபத்தில் mobile phone-ஐ எடுத்து பரபரவென்று என் media folder-ல் தேடினேன். அர்ணாப் வீட்டில் நான் ‘பிரணயி’யாக முதல் முறை காலெடுத்து வைத்த video-வை அவரிடம் நீட்டினேன். அப்பா அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கையில் “இப்படி தான் எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கப்போறேன்” என்று வெடித்தேன்.
அப்பா “அப்புறம்?” என்று என்னை பார்த்தபடி mobile phone-ஐ என்னிடம் திரும்ப நீட்டினார். “தம்பி! எல்லாம் ஆரம்பத்துல நல்லா தான் இருக்கும். ஆனா காலம் ஓட ஓட உங்களுக்கு போரடிச்சுடாதா? அதைப்பற்றி கேட்குறேன்” என்று அவர் சொன்னது தான் தாமதம், நான் “எனக்கு நீங்க அவன் கிட்டே நைசா பேசி கனடா onsite deputation-ஐ எடுத்துக்க சொன்னப்பவே சந்தேகமா இருந்துச்சு? இப்போ அவன் போனதும் இப்படி பேசி என்னை அவன் கிட்டே இருந்து வெட்டி விட பாக்குறீங்களா?” என்று கோபத்துடன் Coffee cup-பை எதிரில் இருந்த டீப்பாயில் வைத்தேன். அந்த வேகத்தில் கப்பில் இருந்து கொஞ்சம் காபி வெளியே சிதறியது.
அப்பா “கார்த்தி! நீ இன்னும் என்னை புரிஞ்சுக்கலை… உன்னை சுத்தி இருக்குற Celebrity couples-ஐயே பாரேன். உனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் 10 வருஷமா காதலிச்சாங்களாம். ஆனா கல்யாணம் ஆன 3 வருஷத்துல பிச்சுக்கிட்டு போயிட்டாங்க. காதலிக்கிறப்போ எல்லாம் அழகா தான் இருக்கும். சேர்ந்து வாழும் போது தான் வித்தியாசங்கள் தெரியும். உங்க ரெண்டு பேரையும் காலத்துக்கும் tight-ஆ கட்டி வைக்கிறதுக்கு உங்க கிட்டே காதலை தவிர வேற ஏதாவது திட்டம் இருக்கா?… நான் கேட்குறது என்னன்னா எல்லா உறவுலயும் கொஞ்ச நாளுக்கு பிறகு ஒரு fatigue, boredom வரும்… உங்க ரெண்டு பேருக்கும் திரும்ப திரும்ப உங்களை மட்டுமே பார்த்து பார்த்து சலிச்சிடும். ஒரு நாய்க்குட்டியை வளர்க்குறதுங்குறது கூட அந்த monotony-ஐ break பண்ற unconscious effort தான். இப்போ புரியுதா நான் என்ன சொல்ல வர்றேன்னு?” என்று அப்பா கேட்க, நான் அமைதியானேன்.
நான் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு “அப்பா, அர்ணாப் நீங்க அவனை முதல் தடவையா துரத்திவிட்டப்போ என் கிட்டே airport-ல ‘பயப்படாதே கார்த்தி! இப்படி பிரச்சனையே இல்லாம நமக்கு acceptance கிடைச்சிடுச்சுன்னா நாளைக்கு நம்ம குழந்தைங்க கிட்டே சொல்றதுக்கு சுவாரசியமான கதை இருக்காது‘-ன்னு சொன்னாம்ப்பா. கொஞ்ச நாள் கழிச்சு settle ஆனதும் நாங்க அதுக்கான procedures, formalities எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிப்போம். அப்படியே நாங்க parents ஆகுறதுக்கு தயார் ஆவோம்” என்று எங்களுக்கு குழந்தை ஆசை இருப்பதை சொன்னேன். அப்பாவின் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. “பரவாயில்லை… எங்கே நான் செத்தா பந்தம் பிடிக்க ஒரு பேரப்பிள்ளை இல்லாம செத்ததுக்கு அப்புறம் பேயா அலைஞ்சிட்டு இருப்பேனோன்னு பயந்துட்டு இருந்தேன்” என்று அவர் சொன்னபோது நான் அவரை கட்டிக்கொண்டேன். என் கண்ணில் இருந்து கண்ணீர் திரள்வதை தவிர்க்கமுடியவில்லை.
நான் எழுந்து mobile phone-ஐ எடுத்துக்கொண்டு அறைக்கு போனேன். அப்பா “Coffee ஆறிடுச்சு பாரு… சூடு பண்ணி எடுத்துட்டு வரட்டுமா?” என்று கேட்க, நான் “வேணாம்ப்பா” என்று குரல் கொடுத்தபடி கட்டிலில் விழுந்தேன். மொபைல் திரையில் நான் பட்டு வேட்டியில் அர்ணாபின் கையை பிடித்துக்கொண்டு ஆழாக்கு அரிசி தள்ளி அவன் வீட்டுக்குள் நுழைகிறேன். அர்ணாப் என்னை வெறித்தனமாக கட்டிப்பிடித்து என் உதட்டை கவ்வி நாக்கை உள்ளே விட்டு உழப்புகிறான். இதையும் அப்பா பார்த்திருப்பாரே என்று வெட்கத்தில் முகம் சிவந்தபடி நான் குப்புறப்படுத்து தலையணையில் முகம் புதைத்தேன். உதட்டை கடித்துக்கொண்டு என் தலையில் செல்லமாக நானே தட்டிக்கொண்டேன்.
என்னவன் இந்த நேரம் அந்த வானத்தில் பறந்துக்கொண்டிருப்பான். நான் காதலில் அந்த மேகங்களில் மிதக்கிறேன். நேற்று இந்த நேரம் என்று மனம் பின்னோக்கி பறந்தது. அர்ணாப் அவனது Studio flat-ஐ காலி செய்வதில் அவனை விட எனக்கு தான் மனம் பாரமாக இருந்தது. ஏனென்றால் நான் முதன் முதலில் ‘புகுந்த வீடு’ அது. அர்ணாப்பிடம் “அர்ணாப்! நாம இந்த flat-ஐ retain பண்ணிக்கலாமா? எனக்கு காலி பண்ண மனசே வரலை” என்று கொஞ்சினேன். அவன் புன்னகையுடன் என் உதட்டில் மென்மையாக முத்தம் வைத்து “ஏன் பிரணயி? வீட்டை வாடகைக்கு எடுத்து சும்மா பூட்டி வைக்கிறது waste of money. அது மட்டுமில்லாம retain பண்ணி என்ன பண்ண போறே?” என்று கேட்டான்.
நான் “இல்லைடா… எனக்கு இந்த வீட்டோட நிறைய இனிமையான நினைவுகள் associate ஆகியிருக்கு… அதனால தான்…” என்று கொஞ்சலாக அவன் வெற்று மேலுடம்பை தடவியபடி மீண்டும் என்னவனின் உதட்டை ஆக்கிரமித்தேன். Gym equipments-ஐ அவன் நண்பர்கள் எடுத்து சென்றுவிட, அர்ணாபின் சொந்த ஊருக்கு போகவேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் pack செய்து அட்டை பெட்டிகளில் அடைத்ததால் வீடு காலியாக, அட்டை பெட்டிகள் நிறைந்திருந்தது. நாளை பயணத்துக்கு போட்டுக்கொள்ளும் உடைகளை மட்டும் வெளியே cloth hanger-ல் தொங்க, மற்ற அர்ணாபின் உடைகள் suitcase-களில் pack செய்யப்பட்டு அவையும் ஒரு மூலையில் நின்றிருந்தன. துணி துவைக்க முடியாது என்பதால் நானும் அர்ணாபும் வெறும் boxer shorts-ல் அந்த வீட்டில் உலாத்திக்கொண்டிருக்கிறோம்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி