அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)

அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)

இது அயலான் அன்பு தொடர்கதையின் 23-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
Gay ஆக இருப்பதில் தவறில்லை. ஆனால் ஒரு Closet Gay ஆக இருப்பவன் sexually aggressive gay-களின் சமுதாயத்தில் acceptance-ஐ தேடுவது தவறு என்று பாடம் கற்றுக்கொண்டு என் குடும்பம் முக்கியம் என்று "திருந்தி" வாழ முயற்சிக்கிறேன். அப்போது பார்த்து தீபா வந்து என் பழைய வாழ்க்கையை மீண்டும் கிளறிவிட்டு போகிறாள். நான் என்ன தான் செய்ய? அசோக் என்ன ஆனான் என்று கேட்க நினைத்தாலும் அதை வெளிப்படையாக கேட்க மனசில்லை. எனக்கு பதில் கிடைக்குமா?

அன்று வழக்கத்தை விட வேலைபளு கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. Office-ல் எனக்கு floor manager-ஆக promotion கிடைத்த பிறகு வேலைபளு கூடித்தான் போனது. நான் மட்டுமல்ல என்னுடன் இருந்த சக ஊழியர்களும் கூட பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் நிம்மதியும், மனதில் சந்தோஷமும் இருக்கும் காரணத்தால் என்னால் இந்த வேலை சுமையை தாங்கிக்கொண்டு புன்னகையோடு வளைய வரமுடிகிறது. எப்போதாவது என்றாலும்… Office washroom-ல் உட்கார்ந்து gay porn video-களை பார்த்து கையடிக்கும் பழக்கத்தை என்னால் முற்றிலுமாக கைவிட முடியவில்லை. இருந்தாலும் அது எனது sex life-ல் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்துவில்லை. ரோகிணியுடனான உடலுறவில் நான் உடம்பையும் மனதையும் ஒன்றாக சேர்த்து இயக்குவதால் அது சாத்தியமாகிறது போல… எது எப்படியோ… நான் பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது mobile phone சத்தமிட, நான் எடுத்து பார்க்கையில் அது reception-ல் இருந்து வருகிறது என்று தெரிவித்தது.

அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)
“காழ்ட்டி…. You have got a guest waiting here” என்று receptionist என் பெயரை கொலை செய்தபோது “இவ நாக்குல வசம்பு வச்சு தேய்க்கனும்” என்று முனகிக்கொண்டே நான் என் hand glouse-ஐ கழற்றியபடி shopfloor-ல் இருந்து வெளியேறினேன். இந்நேரத்துக்கு என்னை பார்க்க வந்திருப்பது யாராக இருக்கும் என்ற படபடப்பில் Shop floor-ல் இருந்து வேகமாக படியிறங்கி reception-ஐ நெருங்கியதும் எனது கால்கள் கருங்கல் போல பாரமாகி அப்படியே நின்றேன்.

என்னை பார்த்ததும் தீபா புன்னகையோடு எழுந்து நின்றாள். அவள் நிறை கர்பிணியாக இருந்தாள். அதனால் சட்டென்று எழுந்தது அவளது முகத்தில் சிறிய அசௌகரியத்தை காட்டிவிட்டு மறைந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த குட்டிப்பெண் வெட்கத்தில் தீபாவின் சுரிதாரில் தன் முகத்தை மூடியபடி தீபாவின் பின்னால் மறைந்தாள். அது ஸ்வேதாவாக தான் இருக்கவேண்டும். நன்றாக வளர்ந்துவிட்டாள். நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அப்படியே நின்றுக்கொண்டிருக்கிறேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)
“நல்லா இருக்கீங்களாண்ணா?” தீபாவின் கேள்வி என்னை சுயநினைவுக்கு கொண்டு வந்தது.

“ஆங்…. ம்ம்… நல்லா இருக்கேம்மா? நீ?” என் வாய் தன்னிச்சையாக சம்பிரதாயமான பதிலை சொன்னது. அதே சமயம் “அசோக் எப்படி இருக்கான்?” என்ற கேள்வி என் நுணி நாக்கு வரை வந்து sudden break போட்டு நின்றது.

“நீங்களே பாக்குறிங்க இல்ல? நல்லா இருக்கேன்….” என்றவள் நான் தீபாவின் கர்ப்பிணி வயிற்றை வெறிப்பதை பார்த்து “ஏழு மாசம் ஆச்சு…” என்றதும் நான் அவள் வயிற்றை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அசடு வழிந்தேன். என் மனதில் இன்னும் அந்த கேள்வி ஓடிக்கொண்டு இருந்தது.

அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)
“அண்ணா… நான்… நான் இப்போ தீபா பாலாஜி” என்று தீபா சங்கடமாக சொல்ல, நான் அதிர்ச்சியில் அவளை நிமிர்ந்து பார்த்தேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கதையில் கில்மா படங்களை மறைத்துவிட்டு, வெறும் text மட்டும் படிக்கும் வசதியை உபயோகிக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

“இந்த ஊர்ல எனக்கு குடும்பமா இருந்த உங்க கிட்டே கூட சொல்லிக்க முடியாம அவசரம் அவசரமா போயிட்டோம்…. அதுக்கு முன்னேயும் அப்புறமும் நிறைய நடந்துடுச்சு. அந்த பாதிப்புல இருந்து வெளியே வர ரொம்ப நாள் ஆச்சு…” நான் “என்ன நடந்தது?” என்று கேட்க தைரியம் இல்லாமல் அவளை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

“எனக்கும் அசோக்குக்கும் divorce ஆயிடுச்சு…. He had come out as gay. பாவம்… அவரால ரெட்டை வாழ்க்கை வாழமுடியலை. அதனால நானும் அவரும் எங்களோட பொம்மை கல்யாணத்தை சட்டப்பூர்வமா ரத்து பண்ணிட்டோம்…” தீபா என் கண்களை ஊடுருவி பார்த்ததில் நான் கூனிக்குறுகி போனேன்.

“அசோக் ஒரு gay-ங்குறத நான் தான் துப்புத்துலக்கி கண்டு பிடிச்சேன். எனக்கு துரோகம் பண்ணிட்டதா எனக்கு அசோக் மேலே ரொம்ப கோபம் வந்துச்சு… Confront பண்ணினேன். அவர் Gay-ஆ இருக்குறது தப்பு இல்லை… ஆனா அதை மறைச்சு என்னை கல்யாணம் பண்ணுனது தான் தப்பு… ஆரம்பத்துல தான் gay-ங்குறத அசோக் ஒத்துக்க மறுத்தார்.. ஆனா அவரோட பிடிவாதம் ரொம்ப நேரத்துக்கு தாக்கு பிடிக்கலை… ஒருவேளை இந்த உண்மை வெளியே வர்றதுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு நினைச்சாரோ என்னவோ…. ரெண்டு கையையும் மேலே தூக்கி ‘ஆமாம்! நான் gay தான்’னு surrender ஆயிட்டார்… எங்க கல்யாணத்தை முறிச்சுக்கனும்னு தான் நாங்க ஊருக்கு திரும்பி போனோம்…”

அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)
ஊருக்கு போகும்போது எனக்கு அசோக் மட்டுமில்ல… அவன் கூட தொடர்புல இருந்த ஆளுங்க மேலேயும் ரொம்ப கோபமா இருந்தேன்… ஒரு சிலர் மேலே எனக்கு சந்தேகமும் இருந்துச்சு…. பின்னாடி அசோக் அதை பூடகமா ஒத்துக்கவும் செஞ்சாரு… ஆனா எனக்கு இப்போ யார் மேலேயும் கோபம் இல்லை… அந்த stage-ஐ எல்லாம் நான் கடந்து வந்துட்டேன்னு நினைக்கிறேன்… time is the best healer” தீபா என்னை பார்த்த பார்வையில் அந்த list-ல் நானும் இருக்கிறேனா என்ற கேள்வி என் நாக்கு வரை வந்து நின்றது.

“அவங்க வீட்டுல பெரியவங்க எல்லாம் எங்களுக்கு மத்தியஸ்தம் பண்ண பேசுறப்போ தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது. அவரோட அப்பா அம்மாவுக்கும், அண்ணன்களுக்கும் அசோக்கோட sexual orientation ஏற்கனவே தெரிஞ்சு இருக்கு… ஆனால் குடும்ப மானம், கூண்டோட தற்கொலைன்னு என்னென்னவோ pressure போட்டு அசோக்கை ஒத்துக்க வச்சிருக்காங்க. அவங்களை பொறுத்த வரைக்கும் அசோக்குக்கு கல்யாணம் ஆகி பொம்பள சுகம் பார்த்துட்டா straight-ஆ மாறிடுவார்னு நினைச்சாங்களாம்… ஆனா இந்த experiment-ல கடைசியிலே பாதிக்கப்பட்டது நான் தான்…”

அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)
தீபா இன்னும் தொடர்ந்தாள்… “அவங்களோட conversation-ஐ பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு அசோக் மேலே இருந்த கோபம் மெல்ல மெல்ல பரிதாபமா மாற தொடங்குச்சு… நான் ஜீவனாம்சம், பாகப்பிரிவினை எந்த நிபந்தனையும் இல்லாம விவாகரத்துக்கு சம்மதிச்சேன்… அசோக் எனக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வச்சார்…. அது நான் விவாகரத்து செஞ்ச ஒரு வருஷத்துக்குள்ள மறுகல்யாணம் பண்ணிக்கனும்ங்குறது… தன்னோட sexuality-ஐ மறைச்சு கல்யாணம் பண்ணி என்னோட வாழ்க்கையை சேதம் பண்ணிட்டதா அசோக்குக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு போல… அதை பார்த்ததும் எனக்கு அசோக் மேலே இருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் போயிடுச்சு… இந்த தடவை நானே எனக்கு துணை தேடி… Touchwood! இப்போ பாலாஜி மூலமா எனக்கு ஒரு நல்ல companionship கிடைச்சிருக்கு. பாலாஜி கூட எங்களோட எதிர்காலம் நல்லா இருக்கும்னு உறுதி செஞ்சதுக்கு அப்புறம் தான், குழந்தை வேணும்னு முடிவு பண்ணி… இப்போ ஏழாவது மாசம்” தீபா புன்னகையோடு நிறுத்தினாள்.

“நான் பாலாஜி கூட திரும்ப இங்கே வந்து 2 வருஷம் ஆகப்போகுது… வேற suburb-ல தான் இருக்கோம். இருந்தும் இவ்வளவு நாளா ரோகிணி அக்காவை தொடர்புகொள்ள முயற்சிக்கவே இல்லை… ஏனோ ஒரு தயக்கம்… அண்ணா! அக்கா எப்போவாச்சும் என்னை பத்தி கேட்பாங்களா?” தீபாவின் குரலில் ஒரு ஏக்கம்.

அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)
“நாங்க உங்கள பத்தி நிறைய பேசுவோம்… அவளுக்கு உன் மேலே கோபம் எல்லாம் இல்லை… நீ அவளை கூப்பிட்டா அவ ரொம்ப சந்தோஷப்படுவா” நான் எட்டி தீபாவின் தலையை செல்லமாக தடவினேன். “அது சரி! ரோகிணியை முதல்ல call பண்ணாம, என்னை பார்க்க வந்தியே… அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று என் குற்ற உணர்ச்சியை மறைக்க முயற்ச்சித்தேன்.

தீபா “நீங்களும் அசோக்கோட close friend-ஆ இருந்தீங்க இல்லை… அதனால தான் உங்களை பார்க்க வந்தேன்… அசோக்கோட gay friends-ஐ பார்க்குறப்போ அவங்களை தைரியமா ‘வெளியே வந்து’ உண்மையான வாழ்க்கை வாழ சொல்றேன்.” என்றபோது “இதை ஏன் என் கிட்டே சொல்லனும்னு?” எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஒருவேளை தீபாவுக்கு உண்மை தெரிந்து… “இல்லைங்கண்ணா… ஒரு ஆம்பளையால தன்னோட நண்பன் ஒரு Gay-ங்குறத ஏத்துக்குற மாதிரி பொம்பளைங்களால ஏத்துக்கமுடியுமான்னு தெரியலை… அதனால உங்க மூலமா ரோகிணி அக்காவுக்கு message-ஐ convey பண்ணிட்டு அப்புறம் நேர்ல பார்க்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறேன். கடைசி trimester-ல இருக்கேன்… அக்கா துணையா இருந்தா நல்லா இருக்கும்..” தீபா தன் வயிற்றை தடவியவாறு சொன்னாள்.

“அசோக் gay-ஆ இருக்குறதுக்கும், ரோகிணி உன்னை திரும்ப சந்திக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ அனாவசியமா பயப்படுறே… அதுமட்டுமில்லாம ரோகிணி கொஞ்சம் progressive-ஆன பொம்பள… அவள் இதை வச்சு எல்லாம யாரையும் judge பண்ணமாட்டா… நீயா அவளுக்கு phone பண்ணினா அவ ரொம்ப சந்தோஷப்படுவா. அதனால நாம சந்திச்சதை நான் இப்போதைக்கு ரோகிணிக்கு சொல்லாம வச்சிருக்கேன்.. ரோகிணிக்கு call பண்ணி அவளுக்கு இன்ப அதிர்ச்சி குடு… Take care!” என்று அவளை வழியனுப்பியபோது என் மனதில் பழைய நினைவுகள் மீண்டும் கிளறப்பட்டன. ஆனாலும் நான் கடைசி வரைக்கும் அசோக் இப்போது எங்கே இருக்கிறான் என்பதை கேட்கவில்லை.

2 thoughts on “அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)”

  1. One of the finest story ending, really heart warming final episode with unexpected twists and turns. Thank you for the excellent story and your time for writing it Kadhal Karthik.

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      நன்றி K…. இந்த தொடர்கதையை படித்த ஒரே நபர் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். உங்கள் வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top