முன் கதை சுருக்கம்... |
---|
என் மனைவி ரோகிணிக்கும் பக்கத்து வீட்டு தீபாவுக்கும் நல்ல நட்பு உருவாகிறது. நான் அவர்கள் வீட்டு விஷயத்தை கேட்பது போல நைசாக அசோக்கை பற்றிய தகவல்களை கறக்கிறேன். இது வரை கிடைத்த தகவல்களை வைத்து நான் அசோக்கும் என்னை போல closet gay ஆக இருக்கமாட்டானா என்று ஏங்க ஆரம்பிக்கிறேன். |
காலச்சக்கரம் மட்டும் அப்படி என்ன special engine வைத்த வண்டியில் போகிறதோ தெரியவில்லை… அதற்குள் மாதங்கள் கடந்துவிட்டன. அவர்கள் குடிவந்த இரண்டு மூன்று மாதங்களில் நான் அசோக்கை பார்த்ததும் அதிகப்பட்சம் நான்கைந்து தடவைகள் தான் இருக்கும். எனக்கு ஒரு விஷயத்தில் மனசு லயித்துவிட்டால், அது நன்மை விளைவிக்காத பட்சத்தில், அதை சட்டென்று நிறுத்தும் அளவுக்கு மனதின் மீது self control கிடையாது என்பதால் நானும் வேண்டுமென்றே அசோக்கை சந்திப்பதை தவிர்த்தேன் என்பது தான் உண்மை. ஆனாலும் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே மற்றவர்களை பற்றி அடுத்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டே தங்கள் நட்பை வளர்த்தது போல நானும் அசோக்கை பற்றி கேட்டு கேட்டே அவன் மீதான எனது காதலை வளர்த்துக்கொண்டேன். காதல் என்பது கொஞ்சம் அதிகப்படியாக தான் இருக்கிறது என்பது எனக்கே தெரிகிறது. இருந்தாலும் சொல்லிக்கொள்ளலாமே…
அன்று காலை Tea break-ல் காஃபியை நிரப்பிய cup-ஐ கையில் எடுத்துக்கொண்டு pantry-ல் தனியாக உட்கார்ந்து எங்கள் Industrial estate-ஐ ஒட்டி இருக்கும் highway-ல் வாகனங்கள் சீறிக்கொண்டு போவதை வெறித்து பார்த்துக்கொண்டு முதல் sip-ஐ இழுத்தேன். இன்று பெரிதாக வேலை இல்லை என்றாலும் மாலை வரைக்கும் இருந்தாக வேண்டும். ஏனோ என் மனது தன்னாலேயே அசோக்கை நினைத்து உருகியது. காரணம் இல்லாமல் இல்லை. நேற்று மாலை தீபாவும் ரோகிணியும் என் வீட்டில் living room-ல் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்ததை நான் உள்ளே internet-ல் browsing செய்தபடியே கேட்டுக்கொண்டிருந்தேன்.
“அக்கா… என் ஆளு ஒரு lady killer. எங்க வீட்டுல எந்த விசேஷத்துக்கு போனாலும் என் ஆளை சுத்தி ஒரு பத்து பொம்பளைங்களாவது இருப்பாங்க…” தீபா.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“ஏன்… அவருக்கு female fan following-ஆ?” – ரோகிணி.
நான் வளர்ந்து வந்த சமயத்தில் அதாவது எனது teenage மற்றும் இருபதுகளின் ஆரம்பத்தில் நானும் இப்படி தான்… வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றிலும் நான் எப்போதும் என் அக்காக்கள் மற்றும் அத்தைகள் புடைசூழ தான் இருப்பேன். அதனாலோ என்னவோ எனக்கு அசோக்கும் அப்படி தான் என்று கேள்விப்பட்ட போது, அவனும் “என்னை” போல இருப்பானோ என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல துளிர்த்தது. என்னை அறியாமலேயே என் உதடுகள் “அசோக்” என்று உச்சரித்தது. அதை தொடர்ந்து ஒரு “I love you da..”வும் இலவச இணைப்பாக வந்தது.
“சீ! இது என்ன வயசு பொண்ண முதல் தடவையா பாக்குற மாதிரி blush பண்றேன்” என்று என்னையே நான் தலையில் தட்டிக்கொண்டு Coffee cup-ஐ காலி செய்துவிட்டு எழுந்து மீண்டும் வேலையை தொடர ஓடினேன்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
சில வாரங்கள் கழிந்தன. ஒரு நாள் இரவு Dining table-ல் நானும் ரோகிணியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எனக்கு பொறியல் வைத்தபடியே ரோகிணி செய்தி ஒன்றும் பரிமாறினாள்.
“நம்ம தீபா புருஷன் அசோக் இருக்காப்படில்ல?”
“ஏண்டி… நல்ல வேளை அசோக்ன்னு ஒருத்தர் பக்கத்து வீட்டுக்கு குடிவந்திருக்காங்கன்னு ஆரம்பிக்காம விட்டியே… எனக்கு அசோக்கை ஞாபகம் இருக்கு” சிரித்தேன்.
“ஹி! ஹி!… அசோக்குக்கு புது வேலை கிடைச்சிருக்காம். இது General shift-ல போற மாதிரி வேலையாம்…”
“ஏன் General shift-ன்னு அழுத்தி சொல்றே?”
“ம்ம்ம்…” நான் அமைதியாக சாப்பிட, ரோகிணியும் சாப்பிட்டு முடித்தாள்.
அன்றிரவு படுக்கையில் மல்லாந்து விட்டத்தை பார்த்தபடியே படுத்திருந்த எனக்கு அசோக்-தீபாவின் பிரச்சனைகளுக்கு வெறும் வேலை நேரம் மட்டுமே காரணமாக இருக்காது என்று தோன்றியது. அதே சமயம் என் மனது உண்மையை அறிய முயற்சிக்காமல் கிடைக்கும் செய்தியை அசோக்கும் என்னை போல Closet gay-யாக இருக்கக்கூடாதா என்ற என்னுடைய ஆசைக்கேற்ப கிடைக்கும் தகவலை manipulate செய்து அற்பமாக சந்தோஷம் கொள்கிறதா என்றும் சந்தேகம் எழுந்தது. எது எப்படியோ… எனக்கு நாளுக்கு நாள் அசோக் மீது ஈடுபாடு அதிகரித்து வருகிறது என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.
“வணக்கம் அசோக்…”
“வணக்கம் கார்த்தி… வேலை நேரத்துல disturb பண்றேனா?”
“ஹே! அதெல்லாம் இல்லை… முதல் தடவையா உங்க கிட்டே இருந்து call வருதுல்ல… இது நிஜமா இல்ல கனவான்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என் குரலில் கட்டுக்கடங்காத பரவசம்.
“Ha! ha! நான் இப்போ உங்களை கூப்பிட்டது ஒரு சொந்த விஷயத்துக்காக…. இங்கே புது வேலையிலே join பண்றேன். As a part of joining formalities, forms-ஐ fill பண்ணும்போது emergency contact ஒன்னு கேட்குறாங்க. Spouse தவிர வேற ஆளா இருக்கனுமாம்… எனக்கு உங்க ஞாபகம் வந்துச்சு… உங்க பேரை குடுக்கவா?”
“அதுக்கென்ன அசோக்… தாராளமா. Atleast இதுக்காச்சும் உனக்கு என் ஞாபகம் வந்துச்சேன்னு எனக்கு சந்தோஷம்…”
“கார்த்தி… எனக்கும் உங்க கிட்டே பேசனும் பழகனும்னு ரொம்ப ஆசை இருக்கு… ஆனா நேரம் தான் ஒத்துவர மாட்டேங்குது… இனிமேலாச்சும் சாயங்காலத்துல நாம சந்திக்கவும், socialise பண்ணவும் சந்தர்ப்பங்கள் இருக்கும்னு ரொம்ப வேண்டிக்கிறேன்..” நான் நெகிழ்ந்து போனேன்.
இருந்தாலும் என் விரல்கள் அவ்வப்போது அசோக்கின் விரல்களை தடவிக்கொண்டிருந்ததை அவன் பேச்சு சுவாரசியத்தில் acknowledge கூட செய்யவில்லை என்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
“கார்த்தி… இன்னைக்கு காலையிலே நான் call பண்ணினப்போ நீங்க Busy-யா இருந்தீங்களா? நான் உங்களை தொந்தரவு பண்ணினேனா?” அசோக் apologetic-ஆக கேட்டான்.
“இல்லை அசோக்… அது என்னோட coffee break நேரம். பொதுவா தினமும் அந்த சமயத்துல Pantry-ல தான் இருப்பேன்… தனியா”
“அப்பாடி! நல்லதா போச்சு…” அசோக் தன் நெஞ்சில் மென்மையாக கை வைத்து அழகாக சிரித்தான்.
ஆனால் அந்த “நல்லதா போச்சு”க்கு அர்த்தம் என்னவென்று எனக்கு அடுத்த நாள் தான் தெரிந்தது. நான் morning break-ல் காபி குடித்துக்கொண்டிருந்தபோது என் mobile phone-க்கு அசோக்கிடம் இருந்து அழைப்பு வந்தது.
“கார்த்தி Busy-யா? கொஞ்ச நேரம் பேசலாமா?” – அசோக்.
“அசோக்.. உனக்கு இல்லாத time-ஆ? நான் morning break-ல கையிலே cup வச்சுக்கிட்டு ஜன்னல் வழியா highway-ஐ பார்த்துக்குட்டு coffee குடிச்சுட்டு இருக்கேன்…”
அசோக் “நானும் சும்மா தான் கூப்பிட்டேன்… உங்க குரலை கேட்கனும் போல இருந்துச்சு…” என்றபோது என் மனதில் பனிமழை பொழிந்தது.
ரொம்ப நேரம் பேசினோம். அத்தனையும் Sweet nothings 🙂 ஆனாலும் மனசு நிறையவில்லை. வேறு வழியின்றி வேலை காரணமாக அழைப்புகளை துண்டிக்கவேண்டி வந்தது.
அடுத்தடுத்த நாட்களில் தினமும் அந்த சரியாக சமயத்துக்கு என்னை அழைப்பதை அசோக் கடமையாக வைத்திருந்தான். எங்கள் நட்பு, அன்பு அந்த தொலைபேசி அழைப்புகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆரோக்கியமாக வளர்ந்தது. அரசியல், நாட்டு நடப்பு, வீட்டுவேலைகள் என்று தொடர்ந்த எங்கள் உரையாடல்களில் ஒரு கட்டத்தில் சினிமா கிசுகிசுக்கள் நுழைய, அதை தொடர்ந்து சீக்கிரமாகவே ஆண்களுடைய பேச்சுகளில் இருக்கும் வழக்கமான செக்ஸ் பற்றிய விஷயங்களும் சேர்ந்துக்கொண்டன.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 25/08/2020
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|
Nice..
Very natural and eager to read upcoming episodes… keep writing