No referring post found.
இது பார்த்திபன் கனவு தொடர்கதையின் 12-வது அத்தியாயம்.
அஷ்வினின் கோபம் பார்த்திபனுக்கு தான் அந்த Gay couple-ஐ மிரட்டியதும், gays-களை பற்றி கேவலமாக பேசியதும் தவறு என்று உணர்த்துகிறது. அஷ்வின் தன்னிடம் பாராமுகமாக இருப்பது பார்த்திபனை மிகவும் வாட்டுகிறது. மருத்துவமனையில் இருக்கும் தருணை பார்க்க அனைவரும் செல்கிறார்கள். தருண் அஷ்வினிடம் தன்னுடைய கடந்த கால நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்கிறான். அந்த நிகழ்வு பார்த்திபன் அஷ்வினிடம் தன்னுடைய மறைத்து வைக்கப்பட்ட தன்பாலீர்ப்பை வெளிப்படுத்த காரணமாக அமைகிறது. Flashback-ல் பார்த்திபனும் அர்ணாவும் அலுவலகத்திலேயே கில்மா செய்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
|
Walk-in-க்கு ஏற்பாடு செய்திருந்த agency- consultant அறைக்குள் உட்கார்ந்திருந்தவர்களை பார்த்து “Congratulations on making to HR round. நம்ம agency கூட இருக்குற arrangement படி இன்னைக்கே Offer letter-ஐ issue பண்ணிடுவாங்க. அதனால நீங்க எதிர்பார்க்குற hike இல்லைன்னாலும் Offer-ஐ refuse பண்ணாம accept பண்ணிக்கோங்க. அப்புறம் தனியா negotiate பண்ணிக்கலாம். 30% வரைக்கும் பிரச்சனை இல்லாம re-issue பண்ணிடுவாங்க…” என்று பேசிக்கொண்டிருக்க, அர்ணாவ் தன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பார்த்திபனின் கையை இறுக்கமாக பற்றினான். “பார்த்தி! நீ ஒரு prospective employee-யோட chances-ஐ கெடுக்குறே.. அவனுக்காச்சும் வேலை கிடைக்கும்ல?” என்று அர்ணாவ் அவன் பக்கம் குணிந்து கிசுகிசுத்தான். பார்த்திபன் “அதை அப்புறம் யோசிக்கலாம்..” என்று அர்ணாவின் கையை கிள்ளினான். இருவரும் தங்கள் offer letter-களை வாங்கிக்கொண்டு வெளியே வர இரவு 8:00 மணி ஆகியிருந்தது.
பார்த்திபன் அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்தபோது அர்ணாவ் இல்லை. நேற்றே அவன் offer letter-ஐ எடுத்துக்கொண்டு நாகூருக்கு சென்று துவா வைக்கப்போவதாக சொல்லியிருந்தான். இருவரும் ஒரே நாள் பேப்பர் போட்டால் ஏதாவது dramatic-ஆக நடக்கும் என்பதால் பார்த்திபன் தன் Employee portal-ல் login செய்து தன்னுடைய resignation-ஐ பதிந்தான். அன்றைய பொழுது அவன் எதிர்பார்த்ததை விட கூடுதல் drama-ஆக இருந்தது. Project Manager அவனை தக்க வைக்க தன்னாலான முயற்சிகளை செய்து ஓய்ந்துப்போனார். அதையடுத்து HR Executive பெண் அழைத்து இன்னும் கொஞ்சம் மொக்கை போட்டாள். பார்த்திபனுக்கு long term onsite deputation கொடுத்திருந்ததால் அவன் எவ்வளவு முக்கியமான resource என்றும், அவன் இப்போது வெளியே resourcing crisis-ஐ ஏற்படுத்தும் என்று கொஞ்சியும், கெஞ்சியும் பார்த்தாள். ஆனால் பார்த்திபன் தன் முடிவில் உறுதியாக நின்றான்.
அர்ணாவ் மீண்டும் அலுவலகத்துக்கு மறுநாள் வந்துவிடுவான் என்று எதிர்பார்த்த பார்த்திபனுக்கு அவன் வராததில் ஏமாற்றமாக இருந்தது. அவனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதெல்லாம் ஒரு பெண் குரல் “நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக” கடுப்படித்தது. அர்ணாவ் கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை கழிந்து வெள்ளிக்கிழமை வந்த போது அவன் முகத்தில் வழக்கமான மலர்ச்சி இல்லை. பார்த்திபனுக்கு அர்ணாவ் பேப்பர் போட்டதும் அந்த வாட்டம் போய்விடும் என்று தோன்றியது. பாபு பார்த்திபன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் “ஜி! உங்களை புரிஞ்சிக்கவே முடியலை… அவனவன் onsite opportunity-க்காக கொலை பண்ண கூட தயாரா இருக்காங்க… நீங்களோ லட்டு மாதிரி வந்த chance-ஐ அசால்ட்டா வேணாம்னு சொல்லிட்டீங்க… உங்க நண்பருக்காக பண்ற தியாகமா?” என்று கேட்க, பார்த்திபன் குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்தான்.
பாபு தொடர்ந்தான் “நீங்க பேப்பர் போட்டதும் அந்த chance-ஐ அர்ணாவுக்கு குடுத்துட்டாங்க. நேத்து அவன் VFS-க்கு போய் travel documents எல்லாம் குடுத்துட்டு வந்தான் போல…” என்று சொல்ல, பார்த்திபனுக்கு திடீரென்று தன் காலுக்கு கீழே பூமி பிளப்பது போல இருந்தது. பார்த்திபனுக்கு முதலில் அர்ணாவ் தான் பேப்பர் போடுவதில்லை என்பதை தன்னிடம் சொல்லவில்லை என்பதற்காக கோபம் வந்தது. முதல் கோபப்பொறி பின்னர் தான் அவனை அத்தனை முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், ஊருக்கு வந்த பின்னரும் தன்னை அழைக்காமல், சொல்லாமல் VFS-க்கு போனதை நினைத்து நெருப்பாக படர்ந்தது. பார்த்திபனுக்கு தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று உணராமல், அர்ணாவ் தன்னை பொருட்படுத்தாமல் முடிவெடுத்ததற்காக கோபம் வந்தது.
பார்த்திபன் அர்ணாவுடைய இடத்துக்கு போன போது அவன் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அர்ணாவ் பார்த்திபனை பார்த்து புன்னகை புரிந்தான். பார்த்திபன் “அர்ணாவ்.. நீ பேப்பர் போடுறதில்லைங்குறதை ஏன் என் கிட்டே சொல்லலை?” என்று சத்தமாக கேட்க, அர்ணாவ் திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அர்ணாவ் “பார்த்தி! கொஞ்சம் மெதுவா பேசு…” என்றபடி தன் laptop-ஐ lock செய்தான். அர்ணாவ் அமைதியாக வெளியே நடக்க, பார்த்திபன் அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக சென்றான். Lift corridor-ல் இருந்து கீழே IT park gate-க்கு வெளியே வரும் வரை அர்ணாவ் எதுவும் பேசவில்லை. காம்பவுண்ட் சுவரோரமாக நிழலில் வந்து நின்ற அர்ணாவ் ஒரு cigarette-ஐ எடுத்து பற்ற வைத்தான். பார்த்திபனை நிதானமாக திரும்பி பார்த்தான்.
அர்ணாவ் பார்த்திபனை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து “நேற்று பேப்பர் போடலாம்னு இருந்தேன். அதுக்கு முன்னாடி யோசிச்சு பார்த்தேன் பார்த்தி! ஒரு onsite opportunity குடுக்கலைங்குறதுக்காக paper போட்டு, அடுத்த company போய் அவனும் onsite குடுக்கலைன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சேன். அப்ப தான் அருண் வந்து நீ பேப்பர் போட்டுட்டதால திடீர்னு resource shortage-ன்னு என்னை consider பண்றதா சொன்னான். நான் என் முடிவை reconsider பண்ணி, பேப்பர் போடவேணாம்னு இன்னைக்கு office வந்தேன்” என்று சொன்ன விதத்தில் அவன் வார்த்தைகளில் உண்மை இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. பார்த்திபன் “ஆனா அர்ணாவ்.. இதுல என்னோட முடிவும் சேர்ந்து இருக்குல்ல? அதுக்காகவாச்சும் என் கிட்டே பேசனும்னு தோணலையா? நாம ரெண்டு பேரும் தானே ஒன்னா interview போனோம்.. Offer letter வாங்குனோம்…” வார்த்தைகள் தந்தி போல விட்டு விட்டு வந்தது.
அர்ணாவ் “பார்த்தி! நானா உன்னை resign பண்ன சொன்னேன்? HR Interview-க்கு முன்னாடியே நான் சொன்னேன்.. இன்னொரு candidate-ன் chance-ஐ நீ கெடுக்குறேன்னு. ஆனா நீ தான் பிடிவாதமா offer letter வாங்கினே… எல்லாமே உன்னோட சுயமான முடிவு. உன் resignation முடிவை ஏன் என்னோட சேர்த்து முடிச்சு போடுறே? அது மாதிரி இப்போ சூழ்நிலை மாறினதும் நான் அதுக்கேத்த மாதிரி எனக்கு சரின்னு பட்ட முடிவை எடுத்திருக்கேன். தேவையில்லாம ஏன் என்னை குற்றவாளி ஆக்குறே?” என்று மிக நிதானமாக கேட்டான். பார்த்திபனுக்கு தான் ஏமாறப்பட்டு விட்டோம் என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலை. அர்ணாவ் தன்னை gaslight செய்ததை நிரூபிக்க முடியாது. அதற்கு மேலே பேச்சு வராமல் தொண்டை அடைக்க, பார்த்திபனின் கண்ணில் கண்ணீர் திரண்டு உலகமே மங்கலாக தெரிந்தது.
வழக்கமாக alternate வார இறுதிகளில் வீட்டுக்கு வரும் பார்த்திபன் எதிர்பாராத விதமாக ஒரு வார நாளில் விடியற்காலையில் வீட்டு வாசல் கதவை தட்டியதை பார்த்து அவன் அப்பாவுக்கு ஏதோ நிலைமை சரியில்லை என்று மட்டும் தெரிந்தது. பார்த்திபனின் இறுக்கமும், அமைதியும் அதை உறுதி செய்தது. சரி! ஓரிரு நாள் போகட்டும் என்று அவர் விட்டுப்பிடிக்க, ஒரு நாள் மாலை பார்த்திபனை அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே போனார். “பார்த்தி! நீ ஏதோ உன் நெஞ்சை அழுத்திட்டு இருக்குதுன்னு மட்டும் தெரியுது. ஆனா அது என்னான்னு எனக்கு தெரியலை. நீயா சொல்வேன்னு எதிர்பார்த்தேன். எதுவா இருந்தாலும் பரவாயில்லை.. உன் பாரத்தை இறக்கி வச்சிடு… நான் உன்னை judge பண்ண மாட்டேன்” என்று அவர் பார்த்திபனின் தோளில் கை வைத்தது தான் தாமதம்.. பார்த்திபன் உடைந்து அழ ஆரம்பித்தான். பார்த்திபனின் அப்பா அவன் அழுது முடிக்கட்டும் என்று பொறுமையாக காத்திருந்தார்.
பார்த்திபன் “இன்னும் என் மனசு எத்தனை தடவை தான் உடையும்னு தெரியலைங்கப்பா…” என்றான். அவர் “யாருடா தம்பி? கூட வேலை பார்க்குற பொண்ணா?” என்று கேட்க, பார்த்திபன் தவித்துப்போனான். தன்னுடைய தன்பாலீர்ப்பை சொல்லிவிடலாமா என்று தோன்றும் அளவுக்கு பலவீனமான நிலையில் நின்றிருக்கிறான். அப்படி சொன்னால் இருக்குற பிரச்சனையில இதுவும் கூட சேர்ந்தால் தாக்கு பிடிக்க முடியுமா என்ற கேள்வி வர, பார்த்திபன் அர்ணாவ் கதாபாத்திரத்தை சுஜாதாவாக மாற்றி சொன்னான். அப்பா நிதானமாக அவன் சொல்வதை கேட்டார். “அந்த பொண்ணு என்னைக்கு onsite போகுது?” என்ற கேள்விக்கு, பார்த்திபன் “இன்னும் ரெண்டு வாரம் ஆகும்ப்பா” என்றான். அப்பா “அது வரைக்கும் இங்கேயே இரு.. என்ன மிஞ்சி மிஞ்சி போனா சம்பளம் போட மாட்டான் இல்லை pay out பண்ண சொல்லுவான்.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்” என்று அவன் தோளை தட்டிக்கொடுத்தார்.
இனிமேலும் பார்த்திபனை தனிமையில் விடவேண்டாம் என்று முடிவு செய்த அவர், பார்த்திபன் வேலை செய்யும் ஊரிலேயே வீடு எடுத்து மீண்டும் மனைவி, மகனோடு குடிபோனார். அடுத்த சில மாதங்களில், தெரிந்த வட்டத்தில் இருந்து சீதாவை தேர்ந்தெடுத்து பார்த்திபனுக்கு கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் வைத்துவிட்டு பெரியவர்கள் மட்டும் ஊர் திரும்பினர்.
பார்த்திபன் “அஷ்வின்! நான் சீதாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதுக்கு ஒரே காரணம் – தன் புருஷன்ங்குற ஒத்த காரணத்துக்காகவாச்சும் ஒரு பொம்பளை அந்த ஆம்பளையை நேசிப்பா. இந்த உலகத்துல என்னை நேசிக்கிறதுக்கு ஒரு ஜீவன் கிடைக்கும்ன்னு தான். வெறும் lust-க்கு மட்டுமே முக்கியத்துவம் தர்ற இந்த gay வாழ்க்கை எனக்கு வேண்டாம்ன்னு நான் என் கனவுகளை புதைச்சுட்டு சீதாவுக்கு உண்மையான புருஷனா இருக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இந்த சமயத்தில் இந்த மாதிரி gay-க்கள் என் கண் முன்னால உலாத்துறதை பார்த்தா இந்த உலகம் என்னை கேலி பண்ற மாதிரி இருக்கு… அந்த கோபத்தை தான் இப்படி gay-க்களை வெறுக்குற மாதிரி comment மூலமா வெளிப்படுத்துறேன்… ஆனா எல்லாரையும் விட நீ தான் என்னை இன்னும் கூடுதலா கொடுமை படுத்துறே..” என்று இரைந்த போது அஷ்வின் “நானா?” என்று நம்ப முடியாமல் கேட்டான்.
பார்த்திபன் தொடர்ந்தான் “ஆமாம்.. உன்னை எப்போ முதல்ல பார்த்தேனோ அப்ப இருந்து என் மனசு உன் பின்னாடி வர ஆரம்பிச்சிடுச்சு… காரணம் எல்லாம் தெரியலை. அன்னைக்கு தியேட்டர்ல நீ என் கையை கோர்த்துக்கிட்ட போது என் மனசு most vulnerable state-க்கு போயிடுச்சு… பயந்துட்டு தான் உன்னை முதல்ல project-ல இருந்து remove பண்ணினேன். ஆனா சூழ்நிலை உன்னை திரும்ப -க்கு அழைச்சிட்டு வந்திடுச்சு… நீ நிஜமான நீயா இருக்குறதை பார்க்க, உன்னோட நல்ல குணம் தெரிய தெரிய உன்னோட ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை உன் கிட்டே வலுவா இழுத்துட்டு போகுது… அதுக்கு கடிவாளம் போட தான் அந்த homophobic ஆன comments எல்லாம்… I’m sorry! அஷ்வின்” என்று முடிக்கும் போது அஷ்வின் பார்த்திபனை நெருங்கி அவன் தோளை சுற்றி கை போட்டான்.
பார்த்திபனின் உடம்பு இன்னும் நடுங்கிக்கொண்டு இருக்கிறது. அஷ்வின் நிதானமாக பார்த்திபனை அணைத்தான். பார்த்திபன் அஷ்வினின் அணைப்பில் கோழிக்குஞ்சாக ஒடுங்கினான். அஷ்வின் “பார்த்தி! இங்கே பாருங்களேன்…” என்று அவன் தாடையை நளினமாக ஒற்றை ஆள்காட்டி விரலால் உயர்த்தினான். பார்த்திபன் மெல்ல நிமிர்ந்து பார்க்க, அஷ்வின் “life was unfair to you but… not as bad as you make it.. இவ்வளவு வலிகளுக்கு பிறகும் நீங்க சிரிக்கிறதே பெரிய விஷயம் தான்.. தளர்ந்துடாதீங்க.. ” என்று பார்த்திபனின் நெற்றியில் முத்தம் வைத்தான். பார்த்திபன் இன்னும் திரும்பி அஷ்வினிடம் குறுகியபடி அவன் இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டான்.
மீண்டும் அஷ்வின் பார்த்திபனின் நெற்றியில் முத்தம் வைத்தபோது பார்த்திபனின் கண்கள் மூடிக்கொண்டு, அவன் உதடுகள் லேசாக துடித்தது. அஷ்வின் குணிந்து பார்த்திபனின் கண்ணீரை தன் உதட்டால் ஒத்தி எடுத்தபோது பார்த்திபன் ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினான். அத்துடன் நில்லாமல் அஷ்வின் பார்த்திபனின் உதட்டை கவ்வியபோது பார்த்திபனிடம் இருந்து எதிர்வினை எதுவும் இல்லை. அஷ்வின் நிதானமாக பார்த்திபனின் உதட்டை சப்பி சப்பி சுவைக்க, கொஞ்ச நேரத்துக்கு முன்பு பார்த்திபன் அடித்த சிகரெட்டின் நிகோடின் எச்சில் வழியாக அஷ்வினின் வாய்க்குள் இறங்கியது. மொட்டைமாடி கைப்பிடி சுவற்றுக்கு வெளியே நகரத்தின் அமைதியும், வானத்து நட்சத்திரங்களும், மெல்லிய தென்றல் காற்றும் அவர்களை ஆதரிக்க, பார்த்திபனும் அஷ்வினும் அடுத்தவரது உதடுகளை சப்பி சப்பி முத்தமிட்டு கொண்டிருக்கின்றனர்.
மொத்த பார்வைகள்: 31
கதையின் மற்ற பக்கங்கள்: பக்கம்_1 >>
பக்கம்_2
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
*
பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 21/08/2026
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
|
|
உங்களுக்கு இவையும் பிடிக்கலாம்...
ம்ம்ம்.... இந்த மத்த கதைகளையும் படிச்சு பாருங்களேன்...