பா.க 06 பட்டினி கிடந்தவனுக்கு பிரியாணி

பா.க 06 பட்டினி கிடந்தவனுக்கு பிரியாணி

No referring post found.

இது பார்த்திபன் கனவு தொடர்கதையின் 6-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
அஷ்வினின் வீட்டில் இருந்து திரும்பும் பார்த்திபன், தன் மனைவி சீதாவுக்கு தெரியாமல் நள்ளிரவில் வேலை செய்வதாக சொல்லி "Boy Erased" படத்தை பார்க்கிறான். அதில் வருவது போல தானும் தன் தன்பாலீர்ப்பை துணிச்சலாக ஏற்றிருந்தால் ஓரளவுக்கு நிம்மதியாக இருந்திருக்கலாமே என்று பெருமூச்சு விடுகிறான். Flashback-ல் பார்த்திபன் தனக்கு lecturer ஆக வந்த நவீனிடம் காதல் / காம வயப்பட்டு விரகதாபத்தில் தவித்தது நினைவுக்கு வருகிறது.

பார்த்திபன் தன் laptop-ல் presentation-ஐ கடைசி நிமிட மாறுதல்களை செய்தபடி, திரையில் இருந்து கண்ணெடுக்காமல் “Everybody assemble in the conference room without delay… client is the stickler for punctuality” என்று coffee break-க்காக கலைந்து செல்லும் சக ஊழியர்களிடம் சொல்ல, “OK பார்த்தி” என்று நொடியில் காணாமல் போனார்கள். அஷ்வின் தன் workstation-ஐ organise செய்துக் கொண்டிருக்கிறான். இன்று அஷ்வின் மீண்டும் project-ல் இணைந்த பிறகு நடத்தப்போகும் meeting-ல், அதை client team-க்கு அறிவிக்க, அஷ்வினை (மறு)அறிமுகம் செய்வதற்காக, revised project charter-ஐ தெளிவுபடுத்த நடத்தப்படும் meeting. அதனால் பார்த்திபன் கொஞ்சம் படபடப்பாக presentation-ஐ review செய்துக் கொண்டிருந்தான். அஷ்வின் எழுந்து வந்து பார்த்திபனின் தோளில் கை வைத்து குணிந்து அவனுடைய presentation slides-ஐ பார்த்திவிட்டு “Looks fine… மனப்பாடம் பண்ணினது போதும் பார்த்தி!” என்று சிரிக்க, பார்த்திபன் மனதில் மெல்லிய ஆசுவாசம் படர்ந்தது.

அந்த conference room-ன் நீள்செவ்வக table-ல், project team member-கள் சுற்றிலும் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க, Hi-definition camera-ல் participants-கள் இரண்டு பக்கமும் தெரிந்தனர். வழக்கமான ஆரம்ப பேச்சுகளுக்கு பிறகு பார்த்திபன் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அஷ்வினை காட்டி “We have got Mr. Ashwin Kumar re-inducted into the project.. Ashwin had already…” என்று அறிமுகம் செய்துக்கொண்டிருக்க, பின் பக்கத்தில் இருந்து “Team-ல ஏற்கனவே பசங்களும் பொண்ணுங்களும் சமமா இருக்காங்க. புது member வந்தா பசங்க count அதிகமாகுமா இல்லை பொண்ணுங்க domination ஆகுமான்னு eager-ஆ wait பண்ணிட்டு இருந்தா, சாமர்த்தியமா gender bias இல்லாம, இரண்டுத்துலயும் வகைபடாத ஒன்னை சேர்த்து balance பண்ணிட்டாங்க…” என்ற முனுமுனுப்பு கேட்டு பார்த்திபன் கோபத்துடன் திரும்பினான். அதற்குள் எதிர்பக்கத்தில் “பார்த்திபன்! What happened? All OK?” என்று கேள்வி வர, பார்த்திபன் சட்டென்று தன் composure-ஐ regain செய்து, இயல்பாக meeting-ஐ முன்னெடுத்து சென்றான்.

Meeting முடிந்தது. அதற்குள் சிலர் கலைந்து conference room-ல் இருந்து வெளியேற முயற்சித்தனர். “Can I ask you all to stay back?” பார்த்திபனின் குரலில் கடுமை தெரிந்தது. “Meeting-ல அஷ்வினை induct பண்ணினப்போ யார் அந்த gender balance-ன்னு disparaging comment அடிச்சது?” என்று கேட்ட போது அறைக்குள் மயான அமைதி பரவியது. தன்னுடைய பெயர் எடுக்கப்படுவதை பார்த்த அஷ்வின் குழப்பமாக பார்த்திபனை பார்த்தான். ஆனால் பார்த்திபன் கோபமாக குழுமியிருந்த தன் team members-களை பார்த்தபடி நின்றான். பார்த்திபன் “இப்போ நீங்களா முன்வராம நான் Meeting recording-ல இருந்து identify பண்ணினா, பின்விளைவுகள் மோசமா இருக்கும்…” என்று கர்ஜிக்க கூட்டத்தில் இருந்து தருண் தயக்கமாக முன்னால் வந்தான். அஷ்வின் முதல் நாளே தன் பெயரால் நடக்கும் களேபரத்தை கண்ணில் கலவரத்துடன் பார்த்தான்.

பார்த்திபன் தருணை பார்த்து “தருண்! நீ இப்போ அஷ்வினை பத்தி சொன்ன sexual slur-க்கு, சட்டப்படி disciplanary action எடுக்கலாம் தெரியுமா? நம்ம HR Policy-ல் page 82, clause-34.1-படி, இங்கே வேலை பாக்குற ஒருத்தர் தன்னோட co-worker-களோட sexual orientation பத்தியோ இல்லை அவங்களோட modesty-ஐ offend பண்ற மாதிரி நடந்துக்குறது – அது வாய்மொழியா சொல்றது, இல்லை email, cartoon அல்லது written format-ல இருந்தாலும் அது மன்னிக்கப்படாத குற்றம், அதற்கான தண்டனை வேலையை விட்டு நீக்குறது வரைக்கும் போகலாம்னு தெளிவா இருக்குல்ல?” என்று கண்டிப்பாக கேட்க, தருண் முகத்தில் லேசாக வியர்வை முத்துகள் அரும்ப தொடங்கின. நிலைமை விபரீதம் ஆகும் முன்பு அஷ்வின் உள்ளே குதிக்க முடிவு செய்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

அஷ்வின் கனிவாக “பார்த்தி! ஏன் இப்படி work up ஆகுறீங்க? அவர் என்னோட பெயரை நேரடியா சொல்லலையே… அப்புறம் ஏன் இதை ஒரு issue ஆக்குறீங்க?” என்று சொல்ல, பார்த்திபன் அஷ்வின் same side goal போட்ட கடுப்பில் அவனை முறைத்தான். அஷ்வின் பார்த்திபனை மேலும் பேச விடாமல் “பார்த்தி! ஒருவேளை அவர் என் பேரை நேரடியா சொல்லி குறிப்பிட்டாலும், எனக்கு அது எல்லாம் பொருட்டே இல்லை. அவரோட manly definition-க்கு நான் fit ஆகாம இருக்கலாம். ஆனா my life is not his business… அவரோட validation-ஐயும் நான் எதிர்பார்க்கலை… ப்ளீஸ்! இதை இந்த நாலு சுவற்றுக்குள்ளாற முடிச்சிடுங்க… ஏன்னா நாம எல்லாரும் தினமும் முகம் பார்த்துக்கனும், ஒன்னா வேலை செய்யனும். இந்த ஒரு comment நம்ம workplace-ல கசப்பான உணர்வை படர விட்டுட கூடாது” என்று வேண்டிக்கொண்டான். பார்த்திபன் கோபம் இப்போது அஷ்வின் பக்கம் திரும்பியது.

பார்த்திபன் லேசாக செருமிவிட்டு அஷ்வினை பார்த்து “அஷ்வின்! நீங்க இதை call out பண்ணாதது உங்களோட பெருந்தன்மைன்னோ இல்லை non-confrontational nature-ன்னு காண்பிக்கிறீங்களோன்னு தெரியலை. ஆனா ஒரு leader-ஆ என்னுடைய team members-களோட நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பெடுத்துக்கனும். நாளைக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்தா HR முதல்ல என் கிட்ட தான் கேட்பாங்க… So நீங்க உங்க magnonimity-ஐ காட்டுறதா நினைச்சுக்கிட்டு இந்த மாதிரி toxic behaviours-ஐ வேலை இடத்துல encourage பண்ணாதீங்க…” என்று அவனுக்கும் ஒரு கொட்டு வைத்துவிட்டு, மற்றவர்கள் அனைவரையும் பார்த்து “எல்லாரும் உங்க desk-க்கு போயிட்டு, கொஞ்ச நேரம் எடுத்து இந்த HR Policy-ஐ படிச்சிட்டு, எப்படி நடந்துக்கனும்னு முடிவு பண்ணிக்கோங்க” என்று சபையை கலைத்தான்.

Coffee break… தூரத்தில் வானத்தை வெறித்து பார்த்தபடி காஃபியை உறிஞ்சிக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு, சில வாரங்களுக்கு முன்பு தான் project-ல் இருந்து விரட்டிய அஷ்வினுக்காக, இன்று அவனுடைய உருவகேலி செய்தவன் மீது தான் கோபப்பட்டதை நினைத்து ஒரு வகையில் ஆச்சரியமாக இருந்தது. இது அஷ்வின் மீது உருவாகும் அன்பின் வெளிப்பாடா இல்லை தன்னிடம் இருக்கும் குற்ற உணர்ச்சியின் மீதமா என்று புரியாமல் குழம்பினான். ஆனால் அதே சமயம் அஷ்வின் இந்த பிரச்சனையில் கழுவும் நீரில் நழுவும் மீனாக நடந்துக்கொண்டது பார்த்திபனை கோபப்படுத்திய அதே அளவுக்கு வலியும் கொடுத்தது. தன் அருகில் நிழலாடியதை பார்த்து தலை நிமிர்த்திய பார்த்திபன், காஃபி கோப்பையும் கையுமாக தன் அருகில் வந்து உட்கார்ந்த அஷ்வினை acknowledge செய்ய மறுத்தான்.

அஷ்வின் “என் மேலே கோபமா இருப்பீங்கன்னு தெரியும் பார்த்தி…” என்று பேச்சை ஆரம்பிக்க, பார்த்திபன் “எனக்கென்ன கோபம் அஷ்வின்? நான் நியாயமா கோபப்பட்டேன் ஆனா சம்பந்தப்பட்டவங்களே அதுக்கு கூட நிக்கலைங்குறப்போ கோபப்படுறதுல அர்த்தம் இல்லைன்னு புரியுது…” என்று விரக்தியாக சிரித்தான். அஷ்வின் “பார்த்தி! நீங்க தருணை கடிஞ்சு பேசினப்போ நான் பார்த்திபனே எனக்காக பேசுறார்ன்னு நெஞ்சை நிமிர்த்தி நின்னா அவனோட அடுத்த move என்னவா இருக்கும்? சும்மா வீம்புக்காகவாச்சும் – இவன் ஏன் அந்த உஸ்ஸுக்காக பரிஞ்சு பேசுறான்? ஒருவேளை ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதாவது கில்மா மேட்டர் இருக்குமோன்னு தோணிட்டு, அப்புறம் வேணும்னே அதையே அரசல் புரசலா வதந்தியா பரப்ப எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டான். பார்த்திபன் “அதுக்காக…?” என்று பதிலளிக்க, அஷ்வின் இடைமறித்தான்.

Just ஒரு கேள்வி...

இப்போது இந்த வலைமனையை mobile phone-ல் browse செய்யும்போது performance வித்தியாசம் தெரிகிறதா?

View Results

Loading ... Loading ...

அஷ்வின் ஒரு வாய் காஃபியை உறிஞ்சிவிட்டு “ஒன்னு கேட்கட்டுமா? நீங்க தைரியமா LGBTQ+ படம் பார்க்குறேன்னு வெளியே சொல்ல முடியுமா? சரி! “Boy Erased” பார்த்தேன்னு நம்ம team members நடுவுல சொல்ல முடியுமா?” என்று கேட்க, பார்த்திபன் தடுமாறினான். அஷ்வின் “பார்த்தி! நம்ம ஊர்ல porn films பார்க்குறேன்னு சொல்லிக்கிறதை பெருமையா நினைப்பாங்க, ஆனா LGBTQ+ படம் பார்க்க ஆர்வமா இருக்கேன்னு சொன்னா அப்படி சொல்றவங்களை மேலும் கீழும் பார்ப்பாங்க… இவன் ஏன் இதை பாக்குறான்? இவனும் ஒருவேளை homosexual-ஆ இருப்பானோன்னு சந்தேகப்படுவாங்க. நடுநிலையா ஒருத்தர் தன்பாலீர்ப்புக்கு ஆதரவா சொன்னா கூட அவங்களும் தன்பாலீர்ப்பினரா இருப்பாங்கலான்னு கிளப்பிவிடுவாங்க… அதனால தான் நடுநிலையா இருக்குற யாரும் இந்த LGBTQ+ சமூகத்துக்கு ஆதரவா கருத்து சொல்றது இல்லை…” என்று முடித்தான்.

பார்த்திபன் குழப்பமாக அஷ்வினை பார்க்க “நீங்க எனக்கு support பண்றேன்னு பேசி, உங்க மேலே அந்த doubtful முத்திரை விழுந்துடக்கூடாதுன்னு தான் நான் உங்களோட கருத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு விலகின மாதிரி நடிச்சேன்… ஆனா உண்மையிலேயே நீங்க எனக்காக பரிஞ்சு நின்னு தருண் மேலே பாய்ஞ்சப்போ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு… Thanks for standing my side…” என்று சொல்லி முடித்தபோது அஷ்வினின் குரல் தழுதழுத்தது. பார்த்திபன் அஷ்வினின் கை மீது தன் கையை வைக்க, அஷ்வின் சுற்றும் முற்றும் பார்த்தபடி லாவகமாக பார்த்திபனின் கையை விலக்கினான். அதை பார்த்திபனும் கவனித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top