| முன் கதை சுருக்கம்... |
|---|
| சொக்கத்தங்கமான என் அர்ணாபை சந்தேகப்பட்டு நான் முன்பின் தெரியாத ஒருத்தனுடன் quickie sex செய்துவிட்ட குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன். என் Petrol Station-ல் நடந்த கொள்ளை முயற்சியால் என் வேலைக்கே ஆபத்து வந்து மயிரிழையில் தப்பிக்கிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நள்ளிரவில் என்னை சும்மா பார்த்துவிட்டு போக வந்த அர்ணாபின் வருகை என் குற்ற உணர்ச்சியை அதிகமாக்குகிறது. |
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...
நேரமாக ஆக என் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் 1-2 நிமிடத்தில் அர்ணாப் குளியலறையில் இருந்து வராவிட்டால் நானே குளியலறை கதவை தட்டி “போயிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நான் பொறுமையிழந்து கதவை தட்டப்போக, அதற்கு அவசியப்படாமல் அர்ணாப் இடுப்பில் துண்டுடன் வெளியே வந்தான். அந்த பதற்றத்திலும் அவன் மதமதர்ப்பான உடம்பில் டாலடித்த நீர்த்துளிகளையும், சோப் வாசனையையும் ரசித்தபடி நான் அவனை கட்டிப்பிடிக்க நெருங்கினேன். ஆனால் அர்ணாப் என் நெஞ்சில் கை வைத்து என்னை நெருங்கவிடாமல் நகர்த்தினான். இதை எதிர்பாராத நான் குழப்பமாக நின்றுக்கொண்டிருக்க, அர்ணாப் “கார்த்தி! உன் கிட்டே கொஞ்சம் பேசனும்” என்று சொல்ல, நான் அதிர்ந்தேன்.பொதுவாக அர்ணாப் என்னை பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவன் “பிரணயி” என்று கூப்பிடும் போதெல்லாம் எனக்கு ஏதோ மெல்லிய தென்றல் வருடுவது போல இதமாக இருக்கும். ஆனால் அர்ணாப் இன்று “கார்த்தி” என்று அழைத்த போது எனக்கு ஏதோ திகிலாக இருந்தது. நாங்கள் நண்பர்களாக இருந்தபோது கார்த்தி என்று அழைத்தாலும், என்று நாங்கள் காதலர்கள் ஆனோமோ அன்று முதல் அவன் என்னை ‘பிரணயி’ என்று மட்டுமே அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். அப்படியென்றால் நான் காதலன் நிலையில் இருந்து அந்நியனாக downgrade ஆகிவிட்டேனோ என்று பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை இந்த முடிவெடுத்துவிட்டு தான் கடைசி தடவையாக என்னை பார்க்க நடு இரவில் நான் வேலை பார்க்கும் Petrol Station-க்கு வந்தானா? ஆனாலும் நான் வெளிக்காட்டிக்கொள்ளாமல் “அர்ணாப் பாபு! எனக்கு Train-க்கு நேரம் ஆகுது… நாம காலையில பேசலாமா?” என்று குரலில் வேண்டுமென்றே பதற்றத்தை கூட்டிக்கொண்டேன்.
அர்ணாப் “I wish… ஆனா காலையிலே வர்றப்போ நீ ராத்திரி முழுக்க தூக்கம் இல்லாம அடிச்சு போட்ட மாதிரி களைப்பா வர்றே. அப்போ நான் Office-க்கு கிளம்பிடுறேன். அதனால உனக்கு late ஆனாலும் பரவாயில்லைன்னு இப்போவே பேசிடுறது தான் better-ன்னு உன்னை hold up பண்ண வேண்டியதா ஆயிடுச்சு… I’m sorry for that. அது மட்டுமில்லாம இப்போ பேசினா உனக்கு அதை பத்தி யோசனை பண்ண ராத்திரி முழுக்க நேரம் கிடைக்கும்ல? பத்து பதினோரு மணிக்கு மேலே உனக்கும் வேலை கம்மியா தான் இருக்கும். நான் சொல்றதை நல்லா analyse பண்ணு” என்று நேரே தன் laptop bag-ல் இருந்து இரண்டு folder-களை எடுத்து நீட்டினான்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
அர்ணாப் என் கால்கள் நடுவே முட்டிப்போட்டு உட்கார்ந்தான். உரிமையோடு என் இரு முட்டிகளிலும் கை வைத்து, அவன் என் கண்ணை ஊடுருவி பார்த்த போது எனக்கு அதன் தீர்க்கத்தை தாங்கும் சக்தி இல்லை. அதனால் நான் அவன் பார்வையை நேராக பார்க்காமல் தவிர்த்தேன். என்றாவது ஒரு நாள் இப்படி இறுக்கமான சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு உரையாடல் வரும் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. கடந்த ஆறேழு மாதங்களாக நானும் அர்ணாபும் ஒன்றாக இருக்கும் நேரங்கள் நிமிடங்களில் சுருங்கிவிட்டதை நான் கவனித்தாலும் I didn’t see this coming.
வேலை பளுவாலும், என் கவனக்குறைவால் இப்போது மீளமுடியாத சுழலில் சிக்கிக்கொண்டது போல தவிக்கிறேன். ஆரம்பத்தில் நாங்கள் எங்களுக்கு கிடைக்கும் அந்த குறைவான நேரத்தை, இருவரும் tried to make them to the most என்றாலும், மிக விரைவில் ஒரே கூரைக்கு அடியில் இரு அந்நியர்கள் ஆகிப்போனதையும் உணர முடிந்தது. ஆனால் பொறுமையின் சிகரமான அர்ணாபுக்கும் ஒரு எல்லை இருக்கும் என்பதை நான் ஏன் உணர மறந்தேன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவனது நிதானத்தை, அழகான பொறுமையை நான் taken for granted ஆக கடந்துவிட்டேனோ?அர்ணாப் கம்பீரமான குரலில் “கார்த்தி! நான் ஆசைப்பட்டு வந்த வாழ்க்கை இது இல்லை. சூழ்நிலைகளுக்கேற்ப நம்மள மாத்திக்கனும்னு நினைச்சாலும் என்னால என்னோட கனவுகளை, எதுக்காக இங்கே வந்தோமோ அந்த core intentions – அதை விட்டுத்தர முடியலை. சூழ்நிலைக்கு ஏற்ப நான் மாற்றிக்க முயற்சிக்கிறேன்.. ஆனா நீ இந்த மாற்றத்துக்கு எளிதா adopt ஆகிட்டதையும் தாண்டி நாம ஏன் குடும்பத்தை விட்டுட்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தோம்ங்குறதையே மறந்துட்டே போல… இங்கேயே இப்படி உன் கூடவே இருந்தா ஒருவேளை நான் உன்னை வெறுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். அதனால நான் என் காதலை காப்பாத்த கடைசி முயற்சியா இங்கே உன் கிட்டே பேசிட்டு இருக்கேன். பக்கத்துல இருந்து உன்னை வெறுக்குறதை விட நான் தூரமா போனாலும் I’ll keep loving you…” என்று சொன்னபோது அவன் குரலில் இருந்த வலி அப்பட்டமாக தெரிந்தது. மூச்சுக்கு மூச்சு எப்போதும் அவன் சொல்லும் “நம் காதல்” இன்று “என் காதல்” ஆகியிருக்கிறது.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|



