முன் கதை சுருக்கம்... |
---|
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நரேனும், விக்கியும் நெருக்கமாகிறார்கள், மற்றவர்கள் அறியாதபடிக்கு தங்களுக்கு பிடித்த sofa-வில் mid night-ல் உடலுறவு கொள்கிறார்கள். விக்கிக்கு அவன் தந்தை கல்யாண பேச்சை ஆரம்பிக்க, விக்கி லாவகமாக அதை தடுத்துவிடுகிறான். இதை அறிந்த நரேன் தான் விக்கியின் மணவாழ்க்கைக்கு குறுக்கே நிற்பதாக குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அதை நீக்க என்ன செய்தார்? |
அந்த அறைக்குள் சூரியவெளிச்சம் ரசனையாக ஒரு கோணத்தில் இருந்து விழுவது போல interior decoration செய்யப்பட்டிருந்தது. அது counselling செய்யும் psychiatrist-ன் பின்புறம் இருந்த ஆரஞ்சு நிற சுவற்றில் விழுவது போல அமைக்கப்பட்டிருந்ததால் அறைக்குள் ஒரு வித mystic quality படர்ந்திருந்தது. அவர் எதிரே இருந்த sofa-வில் நரேனும் விக்னேஷும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தார்கள்.
“விக்னேஷ்! உனக்கு வந்திருக்குறது Gerontophilia-ங்குற mental state… Geranto-ன்னா Greek மொழியில முதுமைன்னு அர்த்தம். phile-ன்ன காதல், ஈடுபாடுன்னு அர்த்தம். So Gerantophile-ன்னு உங்களை ஏன் சொன்னேன்னு புரியுதா? அது வந்திருக்குறவங்களுக்கு தன்னுடைய வயசுக்காரங்க மேலே ஈடுபாடு வராது… பொதுவா 60+ வயசுக்காரங்க மேலே வர்ற attraction-ஐ அப்படி சொல்லுவோம்..”
“சரிங்க டாக்டர்! அப்படி இருக்குற என்னால இந்த சமுதாயத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையே… நான் பாக்குற எல்லா வயசானவங்களையும் propose பண்றதோ இல்லை rape பண்றதோ இல்லையே! அப்புறம் என்ன கவலை?” – விக்னேஷ்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“தனி மனுஷனா உனக்கு பிரச்சனை இல்லை விக்னேஷ்! ஆனா நாம வகுத்திருக்குற சமுதாய கோட்பாடுக்குள்ள இது ஒரு பிறழ்வு. ஒருவேளை ஆழ்மனசுல உனக்கு உன்னோட அப்பா இந்த qualities-ஓட இருந்திருக்கனும்னு ஆசைப்பட்டிருக்கலாம். ஆனா அப்படி இல்லாத பட்சத்துல, நரேன் கிட்டே அதே குணங்கள பார்த்து அவர் மேலே உனக்கு ஈடுபாடு வந்து அது ஈர்ப்பா மாறியிருக்கலாம்… இல்லை உனக்கு வயசானா இப்படி தான் இருக்கனும்னு நெனச்சிருக்குற பிம்பத்தை நீ நரேந்திரன் கிட்டே பார்த்ததால் ஏற்பட்ட கவர்ச்சியா இருக்கலாம்… நீ உன்னோட ஆசையோட காரணத்தை கண்டுபிடிச்சுக்காம வெறுமனே attraction-ஐ love-ன்னு complicate பண்ணிக்காதே”
“OK Doctor! அப்படிப்பார்த்தா தன்பாலின ஈர்ப்பு கூட தான் இந்த சமுதாயகோட்பாட்டுக்கு எதிரானது. அதுக்காக Gay எல்லாம் சமுதாயத்தை கெடுக்குறாங்கன்னு சொல்வீங்களா?”
“அது வந்து… அது தனிமனித கருத்து சுதந்திரம். எதையும் சரி, தப்புன்னு சொல்ல எனக்கு உரிமையில்லை…” psychiatrist ஜகா வாங்கினார்.
“Doctor… நான் நரேன் மாமா மேலே விழுந்து பிராண்டலை… அவரோட சம்மதம் இல்லாம அவரை பலவந்தப்படுத்தலை… whatever happened between us is consensual. ரெண்டு பேருக்கும் சம்மதம் இருக்குற பட்சத்துல என்ன தப்பு? நான் சட்டப்படியும், பொருளாதார ரீதியாவும் யாரையும் சார்ந்திருக்காத, சுயமாக யோசிச்சு முடிவுகள் எடுக்கக்கூடிய சுதந்திரமான தனிமனுஷன். எனக்கு தேவை மாமாவோட சம்மதம் மட்டும் தான்… சமுதாயத்தோட அங்கீகாரம் இல்லை…”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
விக்னேஷின் பிடிவாதத்தை பார்த்து Psychiatrist ஒரு நிமிஷம் தலை சுற்றிப்போனார். “ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நிர்பந்தம் இல்லாம நேசிக்கிறதா சொல்றீங்க… அப்புறம் ஏன் இந்த counselling session-க்கு ஏற்பாடு பண்ணுனீங்க?”
“Counselling session-க்கு ஏற்பாடு பண்ணுனது நீங்க தானே மாமா? Please take this question” விக்னேஷ் நரேனை திரும்பி பார்த்தான்.
“Mr. நரேன்…. நீங்க சொல்லுங்க. உங்களுக்கு இந்த உறவுல குற்ற உணர்ச்சி இருக்கா? நீங்க விக்னேஷை அவர் கூட காலம் கழிக்கிற மாதிரி துணையா இருக்க விரும்பலையா?”
“Doctor… It’s complicated. குற்ற உணர்ச்சி இல்லை.. ஆனா எதிர்காலம் பற்றிய பயம் இருக்கு… I am madly in love with Viggi but I am looking beyond my age… In that aspect….” நரேன் தடுமாறினார்.
“மாமா! அது தான் I am madly in love with Viggi-ன்னு சொல்லிட்டீங்க இல்லை… அப்புறம் ஏன் அவங்க நேரத்தையும் வீணடிக்குறீங்க?” விக்னேஷிடம் சந்தோஷம் கொப்பளித்தது.
“Mr. நரேன்… உங்களோட தர்மசங்கடம் புரியுது… இது நீங்க முடிவெடுக்கவேண்டிய சமயம். விக்னேஷ் சொல்ற மாதிரி விஷயங்கள் consesual-ஆ இருக்குற பட்சத்துல adultery-ஏ தப்பு இல்லைன்னு Supreme Court சொன்னதுக்கப்புறம் நாம நம்ம சமுதாய கோட்பாடுகளை rethink பண்ணவேண்டிய அவசியத்துல தான் இருக்கோம்… எனக்கு உங்க மனசு நல்லா புரியுது… விக்னேஷ்-ஆ உங்களை வேண்டாம்னு என் மூலமா சொல்ல வைக்கனும்னு நினைச்சு தான் நீங்க அவரையும் இந்த counselling session-க்கு அழைச்சிட்டு வந்திருக்கீங்க… அவர் அவரோட முடிவுல திடமா இருக்கார். இப்போ ball is in your court. நீங்க விக்னேஷோட proposal-ஐ எந்த காரணங்களுக்காகவோ ஏத்துக்கமுடியாதுன்னு தோனுச்சுன்னா அதுக்கப்புறம் இழுத்துட்டு போறதுல பிரயோஜனமே இல்லை. வலிச்சாலும் பரவாயில்லைன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு முடிவை அமல்படுத்தனும்…”
நரேன் எதுவும் பேசாமல் மௌனமாக தரையை வெறித்து பார்த்தார். Psychiatrist அவரது எண்ண ஓட்டத்தை புரிந்தவராக விக்னேஷை பார்த்து “விக்னேஷ்! இது நீங்க அவர் முடிவெடுக்குறதுக்கு space கொடுக்கவேண்டிய சமயம். கொஞ்ச நாளுக்கு நீங்க அவரை தவிர்க்குறது நல்லது. முடிஞ்ச வரைக்கும் அவரை நேருக்கு நேர் சந்திக்காதீங்க… அனாவசியமான sweet nothing conversations-ஐ தவிர்த்திடுங்க… ரொம்ப அவசியப்பட்டால் messages-ஐ நீங்க அவரோட wife மூலமா convey பண்ணுங்க…”
விக்னேஷ் கோபத்தில் பல்லை கடிப்பது அவனுடைய தாடை இறுகுவதில் தெரிந்தது.
“Doctor! நீங்களே கேட்டு சொல்லுங்க… இப்போ அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போறது அவரோட space-ஐ encroach பண்றதுல வருமா இல்லை வயசான காலத்துல நீயே எக்கேடோ கெட்டு வீட்டுக்கு வந்து சேருன்னு விட்டுட்டு போறது தான் நான் குடுக்குற space-ஆ?”
Psychiatrist நரேனை தீர்க்கமாக பார்த்தார்.
“நான் விக்கி கூடவே வீட்டுக்கு போறேன் Doctor!… என் அருந்ததி, ஹரீஷுக்கு அப்புறம் இந்த உலகத்துல நான் காதலிக்கிற ஒரே ஜீவன் விக்கி மட்டும் தான்… அவன் தான் என்னோட கடைசி Love interest-ஆவும் இருப்பான்… I’ll love him to my death… ஆனா அவன் கேட்குற அங்கீகாரத்தை கொடுக்க முடியுமான்னு முடிவெடுக்க எனக்கு கொஞ்ச நாள்…” விக்கி கையை உயர்த்தி அவரை தடுத்தான் “இனிமே நீங்களா வந்து பேசுற வரைக்கும் நான் உங்களை தொந்தரவு பண்ணமாட்டேன் மாமா! இது என் சுயநலமில்லாத காதல் மேல சத்தியம்”
அதற்கு மேல் அந்த அறையில் குண்டூசி விழுந்தாலும் ஓசை கேட்குமளவுக்கு மௌனம் ஆக்கிரமித்தது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 14/11/2016
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2016/11/sugar-daddy-09-gerontophile.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|