முன் கதை சுருக்கம்... |
---|
நானும் அர்ணாபும் புதுமண தம்பதிகள் போல எங்கள் தனிமையை தேன் நிலவாக கொண்டாடுகிறோம். எனக்கு அர்ணாபின் குடும்ப பின்னணியை தெரிந்து கொள்வதை விட அவன் கன்னி கழிந்த அனுபவத்தை கேட்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது. அர்ணாப் வெட்கத்துடன் தன் முதல் அனுபவத்தை சொல்ல, நான் அவனது வெட்கத்தை கண்டு வியக்கிறேன். அவன் குடும்பத்தை சந்திக்க போகிறோம். திரையில் பார்த்த காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் drama-வுடன் அர்ணாபின் குடும்பத்துடன் என் முதல் சந்திப்பு நடக்கிறது. |
அந்த A/C Sleeper Bus-ல் இரவு முழுக்க பயணம் செய்தது களைப்பை கொடுத்ததோ இல்லையோ, எனக்கு என்னவனின் homophobic பெற்றோர்களை பார்க்கப்போகிறேன் என்பது என் நெஞ்சில் பாரத்தை ஏற்றியிருந்தது. பஸ் புறப்படும் நொடி வரைக்கும் அர்ணாப் என்னிடம் “இப்போ கூட ஒன்னும் குறையலை… உனக்கு இஷ்டம் இல்லைன்னா நாம பஸ்ல இருந்து இறங்கிடலாம்” என்று சுதந்திரம் கொடுத்திருந்தாலும் ஏதோ ஒரு வைராக்கியத்தில் நான் “இல்லை… எனக்கு உன் வீட்டு மனுஷங்களை பார்த்தா தான் உன்னை முழுசா ஏத்துக்க முடியும்” என்று வசனம் எல்லாம் பேசிவிட்டேன். பஸ் பயணம் முழுக்க என் மனது திக் திக்கென்று அடித்துக்கொண்டதை உணர்ந்த அர்ணாப் என் கைவிரல்களை இறுக்க கோர்த்துக்கொண்டதால் நான் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தேன். கிட்டத்தட்ட முழு பயணத்திலும் நாங்கள் ஒருவரை ஒருவர் முகம் பார்த்தபடி ஒருக்களித்து படுத்த நிலையில் அவ்வப்போது கிஸ்ஸடித்துக்கொண்டு தூங்காமல் ராய்கஞ்ச் வந்து சேர்ந்த பிறகு தான் என் கண்களை தூக்கம் அழுத்த ஆரம்பித்தது.
என் அர்ணாப் “நீ அவ்வளவு எல்லாம் யோசிக்காதே பிரணயி (my love)… இங்கே இருந்து 6 மணி நேரம் தான் Darjeeling-க்கு. நாம டார்ஜிலிங்க் போய் ஒரு honeymoon கொண்டாடிட்டு flight பிடிச்சு கொல்கத்தா போயிடலாம்…” என்று மேலும் தூபம் போட்டான். நான் பொய்க்கோபத்தோடு புருவம் நெறிக்க, அர்ணாப் “நீ என் வீட்டு ஆளுங்களை பார்க்க ஆசைப்படுறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.. ஆனா அவங்க உன்னை அவமானப்படுத்தி, அது நம்ம love-ஐ பாதிச்சிடுமோங்குற பயம் தான்…” என்று என் கைவிரல்களை கோர்த்துக்கொண்டான். நான் அவன் கைவிரல்களை இழுத்து மென்மையாக முத்தமிட்டேன். “நீ என் கூட இருக்குறதுக்காக மொத்த உலகமுமே என்னை கழுவி கழுவி ஊத்தினாலும் நான் அதையெல்லாம் கண்டுக்கமாட்டேன். கவலைபடாதே… நம்மள புரிஞ்சுக்க ஒருத்தராவது இருப்பாங்க…” என்று நகர்ந்து அவன் மடியில் தலைவைத்து படுத்தேன்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
நாங்கள் ஆட்டோ பிடித்து 12 கி.மீ தூரத்தில் ஹேம்டாபாத்-ல் இருக்கும் அர்ணாப்பின் வீட்டுக்கு போனபோது மாலை மஞ்சள் வெயிலாக மாற ஆரம்பித்திருந்தது. ஹேம்டாபாத் கிராமமென்றோ இல்லை டவுனோ என்று வகைப்படுத்தமுடியாத இரண்டும் கெட்டானாக இருந்தது. ஊரின் எல்லையில், அர்ணாப்பின் வீடு இருக்கும் ஒதுக்குப்புறமான தெருவுக்குள் நுழைந்த பிறகு தான் அவன் எப்படிப்பட்ட சூழலில் இருந்து இன்று உலகம் சுற்றும் நிலைக்கு வந்திருக்கும் உயரம் புரிந்தது. ஒரு வீட்டின் வாசலில் சாக்குகளின் மறைவில் சில கோழிக்குஞ்சுகள் சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. அர்ணாப் என்னை எதிர்பார்க்காமல் சென்று அந்த வீட்டின் மரக்கதவை தட்டினான். “மா… அரணாப் ஏகானே…” என்று குரல் கொடுக்க, உள்ளே ஏற்பட்ட சலசலப்பை என்னால் தெருவில் இருந்தே உணரமுடிந்தது.
அர்ணாப் மற்றும் அவன் அம்மாவின் உரையாடலில் தன்னிச்சையாக சத்தமும் இரைச்சலும் கூடிவிட, இதற்குள் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து சில தலைகள் எட்டிப்பார்த்தன, சிலர் வந்து அர்ணாப் வீட்டு வாசலில் குழுமினார்கள். அவர்களுடைய பார்வைகள் அப்படியே என் பக்கமும் திரும்பின. நான் ஏதோ zoo கூண்டில் இருக்கும் மிருகம் போல கூனிக்குறுகி நிற்க, கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒருவர் வந்து அர்ணாப்பின் அம்மாவிடம் என்னை காட்டி என்னவோ சொன்னார். அர்ணாப் பதற்றத்துடன் வந்து என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கதவருகே வந்தான். மத்தியஸ்தம் செய்த அந்த நபர் அர்ணாப்பிடம் என்னை காட்டி “உள்ளே அழைத்து போக” சொன்னார் போல… அர்ணாப் என் கையை இறுக்க கோர்த்துக்கொண்டு வீட்டுக்குள் அழைத்துப்போனான். கொல்கத்தாவில் நடந்தது போல இனிமையாக இல்லாமல் நான் என் ‘நிஜமான’ புகுந்த வீட்டுக்குள் நுழைவது பயங்கர dramatic event-ஆக மாறிப்போனது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
அர்ணாப் அப்பாவின் ஆவேசம் கொஞ்சம் தணிந்த பிறகு, சூழ்நிலை பார்த்து அர்ணாப்பின் அம்மாவும் தங்கையும் ஒரு அலுமினிய தட்டில் தேநீர் மற்றும் அரிசியுடன் தேங்காய் கலந்த உருண்டையும் வைத்து கொடுத்தார்கள். அவர்களை பார்த்ததும் ஏனோ எனக்குள் காரணமே இல்லாத பரிவு தோன்றியது. ஒருவேளை கோபக்கார அர்ணாபின் அப்பாவிடம் அவன் அம்மா பயந்து நடுங்குகிறார்களோ என்று நானே உருவாக்கிக்கொண்ட theory-யும் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்கும் மேல் அவர்களுடைய பரிதாபமான தோற்றத்தை விட, என் அர்ணாப்பை பெற்று எனக்கு கொடுத்தவர் என்ற நன்றியுணர்ச்சி தான் மேலோங்கி இருந்தது. நான் குணிந்து அவர் பாதத்தை தொட்டு வணங்க, அவர் எப்படி react செய்வது என்று தெரியாமல் தடுமாறுவது தெரிந்தது. அர்ணாப் என்னிடம் உருண்டையை காட்டி “இது பப்பா பிட்டா… கிராமத்து பலகாரம்” என்று சொன்னபோது “டேய்! உனக்கு இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்பு கேட்குது” என்று அவனை இடிக்க தோன்றியது.