முன் கதை சுருக்கம்... |
---|
ஒரு காதலர் தினத்தன்று விக்கி நரேனுக்கு மோதிரம் மாட்டி அவரை தன்னுடைய வாழ்க்கை துணையாக வருமாறு propose செய்கிறான். அவனது காதலின் தீவிரத்தை கண்டு நரேன் அதை diffuse செய்ய முயற்சிக்கிறார். ஆனாலும் நரேன் விக்கி தன் காதலில் தீவிரமாக இருப்பதை கண்டு அவனை தன் வயதுக்கு ஏற்ற துணையை தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். காதலர்களிடையே இடைவெளி உருவாகிறது. அவர்களுடைய நெருக்கம் எல்லாம் அவ்வளவு தானா? |
வெள்ளிகிழமை இரவு… அருந்ததி வழக்கம் போல மாத்திரை போட்டுக்கொண்டு தூங்கப்போய்விட, ஹால் Smart TV-யில் Netflix-ல் “Sacred Games Season 2” வை பார்த்துக்கொண்டிருந்தார்கள் நரேனும், விக்னேஷும். இருவருமே sofa-வில் உட்கார்ந்துக்கொண்டு, Tea table-ல் உரசியபடி கால்களை நீட்டிக்கொண்டிருக்க, விக்னேஷ் நரேனின் மார்பில் சாய்ந்துக்கொண்டிருந்தான். நரேன் அவன் தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டு அவனை அன்போடு அரவணைத்திருந்தார். “விக்கி… நாளைக்கு உனக்கு பகல்ல எதுவும் வேலை இருக்கா?”
விக்னேஷ் டிவி-யை பார்த்தபடி பதில் சொன்னான் – “இல்லைங்க மாமா… அப்படியே இருந்தாலும் நீங்க கூப்பிட்டா எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்துட மாட்டேனா?”
நரேன் சிரித்தார். “அதுக்கில்லடா… உனக்கு appointments எதுவும் இருந்துச்சுன்னா நான் என்னோட நேரத்தை உன்னோட availability-க்கு ஏத்தமாதிரி schedule பண்ணிக்குவேன்… அதுக்காக தான் கேட்டேன்.”.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“இல்லைங்க மாமா! எனக்கு எதுவும் plans இல்லை…”
“ஓ.கே டியர்! நாளைக்கு காலையிலே நாம பஜார்-க்கு போகலாம்…”
“என்ன வாங்கனும் மாமா? இப்போ எல்லாமே Online-ல ஆர்டர் பண்ணிட்டா வீட்டுக்கே வந்துடப்போகுது… அங்கே parking கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாச்சே….”
“இல்லை விக்கி! எனக்கு பொருளை நேர்ல பார்த்து வாங்குறது தான் confortable-ஆ இருக்கு… Online-ல ஆர்டர் பண்ணிட்டு அப்புறம் குவாலிட்டி சரியா இல்லைன்னா Returns, Refunds-ன்னு அது தனி அலைச்சல்… நீ சொல்ற மாதிரி பார்க்கிங்க் பிரச்சனை ரொம்ப தொந்தரவு தான்… அதனால தான் காலையிலேயே கடைங்க திறக்கறப்போவே போயிட்டு வந்துடலாம்னு சொல்றேன்”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“சரிங்க மாமா… போகலாம். எத்தனை மணிக்குன்னு சொல்லுங்க நான் ரெடியா இருக்கேன்”
நரேன் விக்னேஷின் தோளை சுற்றி போட்டிருந்த கையால் அவனது உள்ளங்கையை கோர்த்துக்கொண்டு திரும்பி அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தார்.
நரேனின் proposal-ஐ நரேன் ஏற்றுக்கொள்ளாததற்கு பிறகு இருவரிடையே ஒரு சொல்லமுடியாத அசௌகரியம் நிலவுவதை இருவராலுமே உணரமுடிந்தது. ஆனால் அதே சமயம் ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிந்து இருப்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அதனால் ஒன்றாக ஒட்டிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் அதிகம் பேசிக்கொள்ளாதபடிக்கு அமைதியாக இருந்தார்கள். முழு சீசனையும் ஒன்றாக Binge watching என்னும் ஒட்டுமொத்தமாக பார்த்துவிடலாம் என்று ஆரம்பித்திருந்தாலும், அதன் Season 1 போல சுவாரசியமாக இல்லததால், பாதிக்கு மேலே அலுப்பும், களைப்பும் கண்ணை அழுத்தியதால் இருவருமே நிறுத்திவிட்டு தூங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
நரேன் டிவி-ஐ நிறுத்திவிட, விக்னேஷ் “மாமா! காலையிலே பார்க்கலாம்” என்றபடி எழுந்தான்.
“இங்கேயே என் கூட படுத்துக்கோயேன் விக்கி…”
“இல்லைங்க மாமா… நான் காலையிலே வர்றேன்” என்று திடமாக பதிலளித்த பிறகும் அவனை நிறுத்த முயற்சிப்பதில் பலனில்லை என்று நரேன் விக்னேஷின் உதட்டை கவ்விப்பிடித்து நீண்ட முத்தம் ஒன்றை வைத்தார். விக்னேஷ் பதில் ஆக்கிரமிப்பு எல்லாம் செய்யாமல் அமைதியாக இருந்தான். நரேன் வாயை எடுத்ததும் விக்னேஷ் எழுந்து “குட் நைட் மாமா!” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
Roshan Bags-ல் மாமா பெரிய சைஸ், சிறிய மற்றும் Hand luggage suitcase-கள் என set-ஆக தேடிக்கொண்டிருந்தார். அவ்வப்போது கடை வாசலை பார்த்துக்கொண்டிருந்தவர் mobile phone-ஐ எடுத்து அழைக்கப்போகும்போது வாசலை பார்த்தவுடன் முகமலர்ச்சியோடு phone-ஐ Shorts packet-ல் வைத்துவிட்டு தான் இங்கே இருப்பதாக கையை தூக்கி சைகை காட்டினார். ஒரு 22-23 வயது பையன் நரேனை நோக்கி சிரிப்போடு வந்தான். வந்து நரேனிடம் கைகுலுக்கினான்.
“ஏன் லேட் பிரகாஷ்? பஸ் கிடைக்கலையா?”
“ஆமாங்க சார்! Hostel Mess-ல breakfast-க்கு லேட்டாயிடுச்சு… Cascading effect மாதிரி அப்படியே அது வரிசையா எல்லாத்தையும் delay ஆக்கிடுச்சு… நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”
“இல்லை…. ஹாங்! அறிமுகப்படுத்த மறந்துட்டேன்… விக்கி! இது பிரகாஷ்… MIT-ல M.Tech student… final year.. பிரகாஷ்! இது விக்கி… என் dearest friend” விக்னேஷும் பிரகாஷும் பரஸ்பரம் சம்பிரதாயமாக கைகுலுக்கிக்கொண்டார்கள்.
பிரகாஷுக்காக Travel Suitcase set வாங்குவதற்காக தான் நரேன் வந்திருக்கிறார் என்று விக்னேஷுக்கு புரிந்தது. அது மட்டுமில்லாமல் பிரகாஷுக்கு நிறைய shopping செய்தார்கள். பிரகாஷ் Arizona University-ல் Ph.D படிக்கப்போவதாகவும், அந்த பயணத்திற்காக தான் இந்த purchases என்றும் அவனுக்கு புரிந்தது. நரேன் எந்த இடத்திலும் கணக்கு பார்க்காமல் காசை தண்ணீராக செலவழித்து தரமான பொருட்களாக வாங்கியதை பார்த்ததும் விக்னேஷுக்கு நரேனுக்கும் பிரகாஷுக்கும் இடையே உள்ள நெருக்கம் புரிந்தது.
Shopping முடியும்போது மதியத்தை நெருங்கிக்கொண்டிருந்ததால் lunch-க்காக shopping mall-ன் food court-க்கு மூவரும் சாப்பிட சென்றார்கள். விக்னேஷுக்கு தான் ஏன் இவர்கள் கூட அலையவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு இவனது presence-ஐ இருவருமே கண்டுக்கொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியில் Metro Station-ன் parking lot-ல் வண்டியை நிறுத்திவிட்டு வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு station படியேறினார்கள். நரேனும் பிரகாஷும் கைகள் கோர்த்துக்கொண்டதை விக்னேஷ் கவனித்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்! உங்க உதவியை எங்க குடும்பம் தலைமுறைக்கும் மறக்காது”
“பிரகாஷ்! நீ போறது படிக்க… அதை நல்லபடியா பண்ணு… மத்ததெல்லாம் நல்லபடியா நடக்கும். ஹரீஷுக்கு நீ வர்றதை inform பண்ணிட்டேன். போனதும் அவனுக்கு formal-அ call பண்ணி பேசிடு.. அப்புறம் ஏதாச்சும் உதவி வேணும்னா தயங்காம அவன் கிட்டே கேளு…”
“சரிங்க சார்!”
“உன்னோட flight எத்தனை மணிக்கு?”
“நாளை மறுநாள் midnight… 03:30-க்கு சார்”
“சரி! நான் உன்னை ஏர்போர்ட்டுக்கு டிராப் பண்ண வர்றேன்”
“உங்களை வருத்திக்க வேண்டாம் சார்! நான் 12:00 மணிக்கு அங்கே இருக்கனும்… நீங்க எனக்காக செஞ்ச உதவிங்களுக்கு எல்லாம் நான் எப்படி கைம்மாறு செய்யப்போறேன்னு தெரியலை…” பிரகாஷ் கண் கலங்க, நரேன் அவனை கட்டியணைத்தார். பிரகாஷ் அவரது கன்னத்தில் முத்தம் வைத்து அப்படியே அவரது உதட்டில் முத்தம் வைக்க நெருங்க, நிமிர்ந்து விக்னேஷ்-ஐ பார்த்து தயங்கினான்.
“பரவாயில்லை பிரகாஷ்… விக்கியும் gay தான்… அவன் இந்த love-ஐ புரிஞ்சுக்குவான்” நரேன் பிரகாஷின் உதட்டை கவ்வி நீண்ட முத்தம் ஒன்றை வைக்க, அவன் கண்ணை துடைத்துக்கொண்டு லேசான விசும்பலோடு escalator-ல் மெல்ல மெல்ல பார்வையில் இருந்து மறைந்தான்.
விக்னேஷுக்கு தான் எதற்காக அழைத்துவரப்பட்டோம் என்று புரிந்தது. காரில் போகும்போது இருவரும் மற்றவர்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள் என்று காத்திருந்ததால் காருக்குள்ளே கனத்த மௌனம் நிலவியது.
“நான் அவனோட Sugar Daddy” – நரேன் தான் முதலில் மௌனத்தை கலைத்தார்.
“ஹேங்…” விக்னேஷ் விழிக்க, நரேன் “எனக்கு பிரகாஷுக்கும் நடுவில இருக்குற உறவை சொன்னேன்… நான் அவனோட Sugar Daddy, அவன் எனக்கு Sugar Boy”