முன் கதை சுருக்கம்... |
---|
ரொம்ப நாட்களுக்கு பிறகு ரவியை பார்க்கப்போகும் excitement மற்றும் தயக்கத்துடன் வரும் அவினாஷ் ரவியின் நிலைமையை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். விபத்து காரணமாக கோமா நிலைக்கு போன ரவியை அவினாஷின் நினைவுகள் உயிருடன் வைத்திருக்கிறது என்று தெரிந்து நெகிழ்கிறான். ரவி மீண்டு வரும்வரை, அவனது அருகாமையை அனுபவித்தபடி, அவர்களோடு இருப்பதாக முடிவு செய்கிறான். |
அவினாஷ் ரவியின் கட்டிலில் மாறி உட்கார்ந்து ரவியின் கையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டான். ரவியின் முகத்தில் லேசான புன்னகை.
“எப்படிடா இருக்கே?” வார்த்தைகள் குழறலாக வந்தாலும் ரவி கேட்பது அவினாஷுக்கு புரிந்தது. அவினாஷ் ரவியை கைய எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான் “உங்க நினைப்பாவே உயிரோட இருக்கேங்கண்ணா…”
“எங்கே இருக்கே? கல்யாணம் ஆயிடுச்சா?” ரவியின் ஆர்வம் அவன் கண்களில் வெளிப்பட்டது. அவினாஷ் தான் மும்பையிலிருந்து கனடா சேர்ந்த கதையையும் ரூபா தன்னை தேடிப்பிடித்ததையும் சுருக்கமாக சொல்லிமுடித்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ அவி! வயசாகும் போது தனியா இருக்குறது ரொம்ப கஷ்டம்… நான் சொல்றது மனசளவுலயும் தான்… மிட்டு இருக்குறது எனக்கு ஆறுதலா இருந்துச்சு… ஆனா இப்போ ரூபாவுக்கு கோவில் கட்டி கும்பிடனும் போல இருக்கு…”
“ம்ம்…”
“நல்லா இருந்தப்போ எனக்கு அவளோட குறைங்க தான் பெருசா கண்ணுல பட்டு உறுத்திக்கிட்டே இருந்துச்சு… ஆனா என்னை இந்த நிலைமையிலே பராமரிக்கிறதுக்காக அவ தன்னந்தனியா அல்லாடும் போது எனக்கு அவ தெய்வம் மாதிரி தோனுறா… எனக்கு இப்போ மனசுல ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் தோணுது… நான் சீக்கிரம் உடம்பு தேறி வேலைக்கு போய் அவளை திரும்பவும் ராணி மாதிரி வீட்டுல உட்கார வைக்கனும்…”
“சீக்கிரம் நடக்கும்ண்ணா…” அவினாஷ் ரவியை கையை எடுத்து முத்தமிட்டான். ரவியை அப்படியே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவன் எழுந்து ரவியின் முகத்துக்கு அருகே சென்று ரவியின் உதட்டை கவ்வப்போக, ரவி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டான். அவிணாஷுக்கு அது பயங்கர ஏமாற்றமாக இருந்தது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
“இது ஹாஸ்பிடல் அவி! யாராச்சும் பார்த்துட்டு ரூபா காதுக்கு போச்சுன்னா அவ மனசு கஷ்டப்படும்” – ரவி மிகவும் apologetic-ஆன குரலில் சொன்னான். ஆனால் ரவி சொல்வது பொய் என்று உணர்வதற்கு அவினாஷுக்கு கொஞ்சம் அறிவு இருந்தது.
“அண்ணா… இந்த நிமிஷம் திரும்ப கிடைக்காதான்னு நான் இத்தனை வருஷமா அழுதுகிட்டே இருந்தேங்கண்ணா… என் மனசு கஷ்டப்படும்னு உங்களுக்கு தோணலையா?” அவினாஷுக்கு வார்த்தைகள் உதடு வரைக்கும் வந்துவிட, அவன் கஷ்டப்பட்டு வார்த்தைகளை விழுங்கினான். அவினாஷ் ரவியின் மார்பில் தன் பாரம் அவனை அழுத்தாதபடிக்கு சாய்ந்துக்கொண்டான். ரவி அவினாஷின் தலையை கோதிவிட்டது அவினாஷே எதிர்பாராதது.
ஒருவேளை திடீரென்று தன்னை எதிர்பார்க்காததால் ரவி மிகவும் formal-ஆக இருக்கிறான், அது அடுத்த சில தினங்களில் மீண்டும் பழையபடி நெருக்கம் ஆவான் என்று எதிர்பார்த்த அவினாஷுக்கு மெல்ல மெல்ல ஏமாற்றங்கள் அணிவகுத்தன. ரவி பக்கத்தில் ரூபா இருக்கும் சமயங்களில் மட்டும் தன்னோடு நன்றாக பேசுவதும், மற்ற நேரங்களில் தன்னை hold back செய்துக்கொள்வதும் அவினாஷுக்கு கண்கூடாக தெரிந்தது. பழைய ரவியை எதிர்பார்த்த அவனுக்கு இது வேறு யாரோ என்பது போல இருந்தது. ஆனால் ரூபா தன்னிடம் மிகவும் இயல்பாக, சொந்த சகோதரனை போல நடத்தியது அவினாஷுக்கு அவன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல நிம்மதியாக இருந்தது.
அவ்வப்போது சமீர் தன்னை அழைத்து பேசிக்கொண்டிருந்தது இங்கே நடப்பதை தெரிந்து கொள்வதற்காகவா இல்லை தான் சந்தோஷமாக இருப்பதை உறுதி செய்துக்கொள்வதற்காகவா என்று அவினாஷுக்கு புரியவில்லை. இருந்தாலும் சமீரோடு பேசும்போது எல்லாம் தன் மனதில் இருப்பவற்றை கொட்டுவதற்கு ஒருவன் இருக்கிறானே என்ற ஆசுவாசம் கிடைத்தது. அவனது கவனத்தை கலைப்பது போல அறைக்கதவு தட்டப்பட, அவினாஷ் திரும்பியபோது வாசலில் ஒரு நர்ஸ் நின்றுக்கொண்டிருந்தாள்.
“சார்! மேடம் இல்லைங்களா?”
“இல்லைங்களே… என்ன விஷயம் சொல்லுங்க?”
அந்த நர்ஸ் கொஞ்சம் தயங்கினாள்.
“பரவாயில்ல சிஸ்டர்… என்ன விஷயம் சொல்லுங்க”
இன்னும் கொஞ்ச நேரம் தயங்கியவள் பின்பு தொண்டையை செருமிக்கொண்டு சொன்னாள் – “Accounts department-ல இருந்து சொல்ல சொன்னாங்க… Outstanding Bill கொஞ்சம் நிறைய due-வா இருக்குதாம். கொஞ்சமாச்சும் pay பண்ணிட சொன்னாங்க…”
“நீங்க வாங்க சிஸ்டர்…” அவினாஷ் விருட்டென்று முன்னால் நடக்க, அந்த சின்ன பெண் அவனோடு ஓட்டமும் நடையுமாக வந்தாள். Accounts room-க்கு சென்று அங்கேயிருந்த Admin cleark-டம் அவினாஷ் தன் Credit Card-ஐ நீட்டி “எவ்வளவு outstanding balance இருக்கோ எல்லாத்தையும் முடிச்சிடுங்க… அப்புறம் advance-ஆ ஒரு லட்சம் எடுத்துக்கோங்க…” என்று சொன்னதும் அந்த கிளார்க் பெண்ணுக்கு தலை கால் புரியவில்லை. தேய்த்து receipt கொடுத்ததும் அவினாஷ் அறைக்கு வந்தான்.
இரவு… ரவியை தூங்க வைத்துவிட்டு வீட்டுக்கு வரும்போது மிட்டு தூங்கி வழிந்துக்கொண்டிருந்தாள். அவினாஷ் அவளை தன் மடியில் போட்டுக்கொண்டு ஆட்டோவில் வந்தபோது ரூபா தன் அவ்வப்போது தன் Handbag-ஐ பதற்றத்தோடு பிடித்துப் பார்த்துக்கொண்டாள். அவளிடம் ஏதோ ஒரு படபடப்பு தெரிந்தது.
அவினாஷ் மிட்டுவை கட்டிலில் கிடத்திவிட்டு முகம் கழுவிவிட்டு ஹாலுக்கு வர, ரூபா தன் Handbag-ல் இருந்து கற்றை கற்றையாக பணத்தை எடுத்து டீப்பாயில் வைத்தாள்.
“அவி! நீ Hospital-ல accounts clerk கிட்டே கட்டினது. நாளைக்கு உன்னோட Bank account-ல Deposit பண்ணிக்கோ… பத்திரமா உள்ளே எடுத்து வை…” என்று அவன் பக்கம் நகர்த்தினாள்.
“அண்ணி! இப்போ என்ன அவசரம்? நான் கேட்டேனா?” என்றபோது அவள் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி இல்லாதிருப்பதை கவனித்தான். “ஏன் அண்ணி! என்னை மூனாம் மனுஷனாட்டம் பிரிச்சு பாக்குறிங்க? ரவியண்ணாவுக்கு நான் செய்ய கூடாதா?” பேசி முடிக்கையில் அவனையும் அறியாமல் கண்ணீர் வந்திருந்தது.
“அவி! நீ எனக்கு கூடப்பொறக்காத தம்பிடா… உன் கிட்டே எனக்கு இல்லத உரிமையா? எப்போ என் கிட்டே காசு இல்லையோ, அப்போ நான் உன் கிட்டே தயங்காம கேட்டு வாங்கிக்கிறேன். இப்போ இந்த பணத்தை எடுத்து வச்சுக்கோ..” ரூபா அவினாஷின் தோளில் செல்லமாக தட்டினாள்.
“உங்க தம்பி அண்ணாவுக்கு செலவு பண்ணக்கூடாதா? டேய் அவி.. இந்த பில்லை முழுசா கட்டுன்னு உத்தரவு போடுறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்குங்கண்ணி… சரி! கழுத்துல கிடந்த சங்கிலியை வித்தீங்களா இல்லை வச்சீங்களா? முதல்ல அதை திருப்பி வாங்கி போட்டுக்கிட்டு என் கிட்டே பேசுங்க…” அவினாஷ் சூடானான்.
“அவி! நீ எங்க life-ல, இந்த வீட்டுல ஒரு முக்கியமான ஆளு… இது மாதிரியான சங்கடமான தருணங்கள்ல நான் உன்னோட presence-ஐ தான் எதிர்பார்க்குறேன்… இப்படி cash present-ஐ இல்லை… திரும்பவும் சொல்றேன்.. நான் சொன்ன மாதிரி அவசியம்னு தோணுற அப்போ நான் உன் கிட்டே கட்டாயம் கேட்குறேன். இப்போ எடுத்து வை” ரூபா தன் நிலையில் பிடிவாதமாக நின்றாள்.
“சரி! போய் படுத்துக்கோ… காலையிலே திரும்ப ஓட ஆரம்பிக்கனும்… குட் நைட்” அவினாஷின் தலையை செல்லமாக தட்டிவிட்டு ரூபா தன் அறைக்குள் மறைந்தாள்.
அவினாஷ் அந்த வீட்டில் தன்னுடைய இருப்பை இப்போது தான் உணர்வதாக அறிந்தான். அவனுக்கு வாய் விட்டு உரக்க அழவேண்டும் போல இருந்தது. அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்.
அப்போது mobile phone சிணுங்க, எடுத்து பார்த்தால் சமீர் call screen-ல் சிரித்தபடி அழைத்துக்கொண்டிருந்தான்.
“ஹலோ…” – அவினாஷ்.
“ஹலோ..” எதிர்பக்கம் சமீர். அதை தொடர்ந்து மௌனம்.
“ஹலோ! சமீர்…” அவினாஷ் மீண்டும் பேச, எதிர்பக்கம் சமீர் “ஏண்டா அழுதுட்டு இருக்கே?” என்றான்.
“இல்லையே… நான் நல்லா இருக்கேன்”
“என் கிட்டே பொய் சொல்லாத… உன்னோட குரல்ல இருக்குற grief-ஐ உறுதிபடுத்திக்க தான் வேணும்னே connection-ல disurbance இருக்குற மாதிரி pause விட்டேன்… உண்மையை சொல்லு.. என்ன ஆச்சு?”
அவினாஷ் உடைந்து அழ ஆரம்பித்தான்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 21/09/2019
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2019/09/p-g-18.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
![]() |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|
![]() |