| தலைப்பு | The Pass | ||||
| மொழி | English | ||||
| வெளியான வருடம் | 2016 | ||||
| வகை | Feature film | ||||
| எங்கு பார்க்கலாம்? | YouTube | ||||
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் | ||||
| நடிகர்கள் | Russel Tovey (Jason), Arinzé Kene (Ade), Lyndsey (Lisa McGrillis), Nico Mirallegro (Bellboy) | ||||
| இயக்குனர் | Ben A. Williams | ||||
| கதைச்சுருக்கம் | |||||
I hate porn that starts off fucking... I need to know why they are fucking சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே... The Pass – தங்களை லட்சோப லட்சம் மக்கள் ஆராதிக்கிறார்கள் என்று தெரியும் போது அந்த தனிமனிதர்களுக்கு – நடிகர்/விளையாட்டு வீரர்/அரசியல்வாதி தங்களது public image-ஐ காப்பாற்றவேண்டும் என்பதே கூடுதல் அழுத்தம் தான். பொதுவெளியில் என்ன அணியவேண்டும், என்ன வார்த்தைகள் பேசவேண்டும், யாரோடு associate செய்யவேண்டும், whom to be seen with என்று ஒவ்வொரு நடவடிக்கையும் பார்த்து பார்த்து செதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர்களுக்கு தங்களுடைய sexual orientation ‘வித்தியாசமாக’ இருந்தால் அதை பொதுவெளியில் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அதை வெளிக்காட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்கள் மீது எவ்வளவு pressure போடும்? அப்படிப்பட்ட அழுத்தத்தில் வசிக்கும் ஒரு பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரனின் கதை தான் இந்த “The Pass”. காட்சி ஒன்று:- காட்சி இரண்டு:- காட்சி மூன்று:- ஜேசன் பத்து வருடங்களுக்கு பிறகு தன்னை அழைத்ததன் காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும், பழைய நண்பனை பார்க்க ஆர்வத்துடன் வருகிறான். ஆனால் ஜேசன் அவனை சாதிக்காதவன், ஏழை, faggot என்று கேலி செய்து கடுப்படிக்கிறான். அது பத்தாது என்று தன் விசிறியாக இருக்கும் hotel bellboy கூட சேர்ந்து ஏடேவை மேலும் வெறியேற்றுகிறான். ஜேசனின் தீவிர விசிறியான Bellboy ஜேசனுடைய Sex video-வை தன் girlfriend உடன் சேர்ந்து பார்த்துக்கொண்டே கஜகஜா செய்ததாக சொல்கிறான். மனம் நொந்து போய் ஏடே வெளியேற தயாராக, ஜேசன் bellboy-ஐ விரட்டி, அறைக்கதவை தாழிட்டுவிட்டு ஏடேவை தன் வீட்டில் வந்து வசிக்குமாறு அழைக்கிறான். இதை எதிர்பார்க்காததால் முதலில் அதிர்ச்சி அடையும் ஏடே தான் பத்து வருடங்களுக்கு முன்பு மேட்சுக்கு முந்தின இரவில் ஜேசன் தன்னை கிஸ்ஸடித்த நொடியில் இருந்து ஜேசன் மீது காதல் கொண்டதாக confess செய்கிறான். அடுத்த நாள் match-ல் ஜேசன் வேண்டுமென்றே பந்தை ‘pass’ பண்ணாமல் தானே goal அடித்து Star of the match பெயரை தட்டிச்சென்றதை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவனுக்காக சந்தோஷப்பட்டதாக கூறுகிறான்.ஆனால் ஜேசன் வெற்றியின் போதையில் ஏடேவை ஏறெடுத்து கூட பார்க்காமல் தவிர்த்துவிட்டதால், ஏடே வலியுடன் ஊரை விட்டு மட்டுமல்லாது விளையாட்டு துறையில் இருந்தே ஒதுங்கிவிட்டதாக குமுறுகிறான். இவ்வளவு நேரம் தன்னை ஒரு flamboyant character ஆக காட்டிக்கொண்டிருந்த ஜேசன் அந்த தனி அறைக்குள் தன் வீம்பு, vanity, வெளியுலகத்துக்கு காண்பிக்கும் macho male பிம்பத்தை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு கண்ணில் நீர் தேங்க ஏடனிடம் “எனக்கு Closet-ல தனியா இருக்க கஷ்டமா இருக்கு… ப்ளீஸ் என்னோடு வந்துவிடு” என்று கெஞ்சுகிறான். கன்னங்களில் கண்ணீர் வழிய vulnerable நிலையில் emotionally naked ஆக நிற்கும் ஜேசன் மீது ஏடனுக்கு பரிதாபம் வருகிறது. ஆனால் ஏடே தனக்கு கேரியே போதும் என்று ஜேசனை நிராகரித்துவிட்டு போய்விடுகிறான். ஏடே போன பிறகு ஜேசன் அந்த இரவில் நடந்தது என்ன என்று மீண்டும் நினைவு கூர்கிறான். உண்மையில் ஏடேவின் மீது ஜேசன் தான் காதலுடன் படர்ந்திருக்கிறான். ஆனால் போட்டி என்று வரும்போது தன் காதலை பின்னுக்கு தள்ளிவிட்டு ஏடேவின் முதுகில் ஏறி வெற்றியை பறித்திருக்கிறான். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ளவும், அதன் காரணமாக கிடைத்த புகழை தன் homosexual orientation பாதித்துவிடக்கூடாது என்று Closet-க்குள் ஒளிந்துக்கொள்கிறான். கடைசியில் closet-க்குள் தனிமையில் புழுங்கி துணைக்கு ஏங்கி அழுவதாக முடிகிறது. இது முழுக்க முழுக்க ஜேசனாக நடிக்கும் Russel Tovey-யின் படம் தான். மனுஷன் 19 வயது மாணவனாக, 24 வயதில் பிரபலத்தின் புகழை தக்க வைத்துக்கொள்ள போராடும் இளைஞனாக, 29 வயதில் தனிமையில் வாடும் closet gay-வாக கலக்கி இருக்கிறார். நான் அசந்து போய் Russel Tovey-ஐ பற்றி மேலும் தேட, நிஜ வாழ்க்கையில் Russel Tovey ஒரு வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்தது. அதனால் தனக்கு வருவதெல்லாம் Gay வேடங்கள் என்பதால் அதிலேயே தன் career-ஐ உருவாக்கிக்கொண்டதாக Russel Tovey சொல்லியதை படிக்க நேர்ந்தது. Russel Tovey அளவுக்கு scope கிடைக்காவிட்டாலும் ஏடே-வாக வரும் Arinze Kene கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார். Russel Tovey-ஐ போலவே Arianze Kene-ம் வயதுக்கேற்ப தன் உடம்பை மாற்றிய physical transformation-ல் நம்மை ஈர்க்கிறார். அதிலும் ஜேசன் தன் காதலை மிதித்து அதன் மேலே வெற்றியை அடைந்ததை சொல்லும் போது அரின்ஸேவின் முகபாவங்கள் அவர் உள்ளுக்குள்ளே நிஜமான வலியுடன் பேசுவது போல இருந்தது. சமுதாயத்துக்காகவும், புகழுக்காகவும் தங்கள் பாலீர்ப்பை மறைத்து வாழும் gay-க்கள் மனதளவில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது இந்த “The Pass”. Sex காட்சிகளை எதிர்பார்த்து பார்க்க உட்கார்ந்தீர்கள் என்றால் நிச்சயம் ஏமாற்றம் தான்.இணைக்கப்பட்டுள்ள YouTube video-வில் “Settings” –> “CC” –> “English (Auto Generated)”-ஐ தேர்ந்தெடுக்கவும். * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
|
|||||
| முன்னோட்டம் | |||||
![]() |
|||||
| முழு நீள வீடியோ | |||||
![]() |
|||||





