Daddy Hunt – A cute love story

சேல்ஸ் மீட்டிங்கில் சேர்ந்தபோது…

அருண் அந்த கம்பெனியின் தலைமை அலுவலகத்தில் விற்பனை மேலாளரின் தனி உதவியாளராக சேர்ந்தான். மாநிலம் முழுதும் உள்ள நரகங்களின் விற்பனை அலுவலர்கள் மாலை வீட்டுக்கு செல்லும் முன்பு தங்கள் அன்றைய விற்பனை கணக்குகளை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அப்புறம் அருண் அந்த எண்களை எல்லாம் தொகுத்து ரிபோர்ட் அடித்து அடுத்த நாள் காலை மேலாளர்கள் வந்தவுடன் இந்த ரிபோர்ட்டை பார்த்துவிட்டு அதன் அடிப்படையில் மீட்டிங் போட்டு விற்பனையில் ஏற்பட்ட சுணக்கங்களையும், வழிமுறைகளையும் ஆய்வு செய்வார்கள். அதனால் அருணுடைய உண்மையான வேலையே மாலை 6:30 மணிக்கு தான் தொடங்கும். சில சமயம் மற்ற ஊர்களில் இருந்து விற்பனை அறிக்கை வர தாமதமானால் இரவு 10:00 மணி வரை கூட ஆஃபீஸில் வேலை செய்யவேண்டி இருக்கும். அப்படி தான் அன்றும் அருண் கோவையிலிருந்து வரவேண்டிய அறிக்கைக்காக காத்திருந்தான். 7:30 மணி வரை பொறுத்துவிட்டு, விற்பனை பிரதிகளின் தொடர்பு எண்கள் கொண்ட எக்ஸல் ஷீட்டை திறந்து கோவை விற்பனை பிரதிநிதி ராஜேஷின் எண்ணை தேடினான். தன்னுடைய எக்ஸ்டென்ஷனிலிருந்து ராஜேஷுக்கு அழைத்தபோது ரிங் ஆகிக்கொண்டே இருந்தது தவிர பதிலில்லை. அருண் செம கடுப்பாகிவிட்டு, மீண்டும் 8:00 மணிக்கு அழைத்தபோது ராஜேஷ் லைனில் கிடைத்தான்.

“சாரி ஜி! ஒரு சின்ன விபத்து… நீங்க முன்னாடி கூப்பிடப்போ நான் க்ளினிக்-ல இருந்தேன்.. அதனால எடுக்க முடியலை. உங்க ரிபோர்ட்டுக்கு தேவையான் ஃபிகர்ஸை அடிக்க சொல்லி இங்கே பிரவுசிங் செண்டரோட ஜாப் டைப்பிங்க்-ல குடுத்திருக்கேன். இன்னும் 15 நிமிஷத்துல அனுப்பிடுவாங்க” என்று சொன்னான்.

அருணுக்கு அவன் பேசியது விற்பனை பிரதிநிதிகளின் வழக்கமான் பொய் போல தோன்றியது. ஆனாலும் எரிச்சலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “சரி… காத்துட்டு இருக்கேன்” என்று சம்பிரதாயமாக சொல்லிவிட்டு வைத்தான். அதே போல அடுத்த கால் மணி நேரத்தில் விற்பனை எண்கள் வந்துவிட, அருண் ரிப்போர்ட் தயார் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப 10:00 மணி ஆனது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அடுத்த நாள் நன்பகலில் அருணின் மேலாளர் அவனை அழைத்து, கோவையில் உள்ள விற்பனை பிரதிநிதிக்கு விபத்து ஏற்பட்டிருப்பதால் சில நாட்கள் வேலைக்கு வரமாட்டான் என்றும், அதுவரை மற்றொரு உதவியாளர் அனுப்புவார் என்றும், அந்த உதவியாளர் வேலைக்கு புதுசு என்பதால் அருண் எதிர்பார்க்கும் மாதிரி ஃபிகர்கள் இல்லை என்றால் அருணையே சரி செய்து ரிப்போர்ட் அடிக்க சொன்னார். அருணுக்கு உண்மை சொன்னவன் மீது சந்தேகப்பட்டுவிட்டோமே என்று குற்றவுணர்ச்சி தோன்றியது. அடுத்தடுத்த நாட்களில் அவனுக்கு கிடைத்த அறிக்கைகள் எல்லாம் அதை தொகுத்தவர்களின் முதிர்ச்சியின்மையை காட்டியது. ராஜேஷ் எவ்வளவு மெனக்கெட்டு தனக்கு “அப்படியே உபயோகிக்க”க்கூடிய ரிப்போர்ட்டை அனுப்பிவந்திருக்கிறான் என்று தோன்றியபோது ராஜேஷ் மீது மதிப்பு தோன்றியது.

ஒரு நாள் மாலை மனசு கேட்காமல் அருண் ராஜேஷின் மொபைலுக்கு அழைத்தான். ராஜேஷ் தான் எடுத்தான்… எடுத்த எடுப்பிலேயே “சார்! ரிப்போர்ட் எல்லாம் சரியா கிடைக்குதா? நான் அந்த புது பையன் கிட்டே அப்பப்போ செக் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான்.

அருண் “ராஜேஷ்… நான் ஆஃபீஸ் விஷயமா உங்களை கூப்பிடலை.. உங்களுக்கு உடம்புக்கு எப்படி இருக்குன்னு விசாரிக்க தான் கூப்பிட்டேன். நீங்க அன்னைக்கு கடைசியா பேசினப்போ நீங்க உங்க தப்பை சமாளிக்கிறீங்கன்னு நினைச்சுட்டேன்… எனக்கு இன்னும் உறுத்தலாவே இருக்கு… மன்னிச்சிடுங்க” என்றான்.

ராஜேஷ் “ஐயோ.. என்னங்க சார் இது! ஃப்ரீயா விடுங்க” என்று சொன்னான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கு கதை படிக்கவரும் மற்ற நண்பர்களை தொடர்புகொள்ள விரும்புவீர்களா?

View Results

Loading ... Loading ...

பின்னர் தினமும் அருண் ராஜேஷை அழைத்து அவன் உடல்நலத்தை விசாரித்தான்… நாளடைவில் தினசரி அழைப்புகள் தினமும் இரு முறை அழைப்புகளாக மாறின… பின்னர் தினமும் தவறாமல் “குட் மார்னிங்” மற்றும் “குட் நைட்” குறும்செய்திகளோடு இருவரின் நாட்களும் ஆரம்பித்து முடிந்தன. ராஜேஷுக்கு பூர்வீகமே கோவை தான் என்றும், அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்றும் கல்யாணம் ஆகவில்லை, தன் தாய் தந்தையோடு இருக்கிறான், அவன் குடும்பம் நடுத்தர குடும்பம், ராஜேஷுக்கு சில வருடங்கள் கழித்து சொந்தமாக ஏஜன்ஸி எடுத்து நடத்தவேண்டும் என்கிற ஆசை உண்டு, ராஜேஷுக்கு இன்னும் காதலி/கள் இல்லை, கல்யாணத்தில் பெரிய ஈடுபாடு இல்லை என்றும் தெரிந்துக்கொண்டான். ஒருவரை பற்றி ஆசை கூடும்போது அவர்களை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வமும் கூடும்.. இப்போது அருணுக்கு ராஜேஷ் மீது ஆர்வம் கூடியது..

ராஜேஷ் தினமும் தெருத்தெருவாக சுற்றவேண்டிய வேலை என்பதால் நினைத்தபோது அருணால் கூப்பிடமுடிவதில்லை. ராஜேஷும் தானாக கூப்பிடுவதில்லை… வேலை காரணமாக இருக்கலாம் என்று அருண் சமாதானப்படுத்திக்கொண்டான். ஆனால் இரவு 10:00 மணிக்கு மேல் அருண் கூப்பிடும்போது குறைந்தது ஒரு மணி நேரமாவது இருவரும் அன்று நடந்தது அனைத்தையும் பேசுவார்கள். ஆரம்பத்தில் ஆஃபீஸ் கிசுகிசுக்களில் ஆரம்பித்த அவர்கள் பேச்சு, பின்னர் நாளடைவில் சினிமா, அரசியல், வாழ்க்கைமுறைகள், கற்பு என எல்லாவற்றையும் பேச ஆரம்பித்தது. இருவரும் கிட்டத்தட்ட ஒரே பக்கமே ஆதரிப்பது போல இருக்கும்.

ஒரு நாள் அருணிடம் ராஜேஷ் தான் அடுத்த நாள் திருப்பூர் செல்வதாகவும், அருணின் சைஸ் சொன்னால் அவனுக்கேற்ற உடைகள் எடுத்துவருவதாக சொன்னான்.

அருண் உடனே “சாதாரணமா 6 இஞ்சு… வளர்ந்தா 8 இஞ்சு” என்று சொன்னான்.

அடுத்த பக்கம் திடீரென்று மௌனம். ராஜேஷ் “நான் சட்டை சைஸ் கேட்டேன்” என்றான்.

அதற்கு அருண் “அப்படி தெளிவா கேட்கனும்…” என்று சொல்லி சிரிக்க, ராஜேஷ் “என் கிட்டே யாரும் வேற சைஸ் எல்லாம் சொன்னது இல்லை..” என்று பட்டென்று சொன்னான்.

அருணுக்கு முகம் வாடிப்போனது. வாண்டடா போய் சிக்கிக்கிட்டோமே என்றும், ராஜேஷ் தவறாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என்று வருந்தினான்.

பின்னர் கொஞ்ச நேரம் இருவரும் பொதுவாக பேசிவிட்டு ஃபோனை வைக்கும் போது ராஜேஷ சொன்னான் “என்னோடதை நான் இன்னும் அளந்ததில்லை… வேணும்னா நாம பாக்கும்போது நீயே என் சைஸை அளந்து சொல்லு… குட் நைட்” என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்ய, அன்றைய “குட் நைட்” தூக்கமில்லா இரவாக கழிந்தது அருணுக்கு.

அடுத்த நாள் அலுவலகம் சென்றபோது அவன் மேலாளர் இன்னும் இரண்டு வாரத்தில் நாடு முழுவதிலும் இருந்து எல்லா விற்பனை பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் கூட்டம் நடத்த நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பை அருணிடம் கொடுப்பதாகவும் சொன்னார். அருணுக்கு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் உள்ள கடின உழைப்பைவிட, அதில் பங்குகொள்ள ராஜேஷ் வருவான் என்ற சந்தோஷம் தான் அதிகம் இருந்தது. அந்த உற்சாகத்திலேயே பம்பரமாக சுற்றி சுற்றி வேலை பார்த்தான்.

அவ்வப்போது ராஜேஷ் வருகிறானா? என்று அவனிடம் கேட்டபடியே இருந்தான். ராஜேஷிடம் நீ எப்போ திரும்பிப்போவாய் என்று கேட்டான். அதற்கு அன்றிரவே தன்னுடைய கோவை மேலாளருடன் திரும்பவேண்டியிருக்கும் என்று சொன்னான். அருணுக்கு ராஜேஷுடன் செலவழிக்கும் நேரம் ரொம்ப குறைவாக இருப்பதாக தோன்றியது.

கடைசியில் அந்த நாளும் வந்தது… அருண் தன்னிடம் இருப்பதிலேயே நல்ல உடையை அணிந்துக்கொண்டு, காலையிலேயே அலுவலகத்துக்கு சென்றான். மீட்டிங் ரூமின் புரொஜெக்டரிலிருந்து, எல்லாருடைய டேபிளில் வைக்கவேண்டிய தண்ணீர் பாட்டில் வரை எல்லாத்தையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு அருண் தலையில் விடிந்திருந்தது. அருண் நின்று மூச்சுவிட முடியாத அளவுக்கு சுறுசுறுப்பாக வேலை பார்த்தான். மீட்டிங்கிற்கு வெளியூரிலிருந்து ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அருண் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் மறந்து “எந்திரன்” போல வேலை செய்துக்கொண்டிருந்தான்.

“ஹாய்!” என்ற குரல் கேட்டு மனிதனாக திரும்ப வந்தபோது, எதிரில் அவன் அழகான புன்னகையுடன் நின்றுக்கொண்டிருந்தான்.

“ராஜேஷ்???” என்று ஆச்சரியத்தில் கண்கள் விரிய அருண் அவனை நோக்கி கை நீட்டினான்.

“ஆமாம் ஜி… வந்தப்போவே பார்த்தேன்… நீங்க ரொம்ப பிஸியா இருந்தீங்க.. ஏதாவது உதவி வேணுமா?” என்று கேட்டபடி முழுக்கை சட்டையை முட்டிக்கு சுருட்டினான்.

“இல்லைங்க… நான் சமாளிச்சுக்குறேன்.. எல்லாம் முடிஞ்சுது..”

“ஆர் யூ ஸ்யூர்?”

“ம்ம்… உங்க மீட்டிங் ஆரம்பிக்கப்போகுது… கிளம்புங்க”

“ஓ.கே… அப்புறம் பாக்கலாம்”

அருணுக்கு ராஜேஷை சந்திச்சதில் மகிழ்ச்சியா இல்லை அதிர்ச்சியா என்று குழப்பமாக இருந்தது. இதுவரை அவனை நேரில் பார்க்காமலேயே ஒரு நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளும்போது கூடவே ராஜேஷை பற்றிய ஒரு உருவகமும் வளர்ந்துவந்தது. ராஜேஷின் குரலையும், அதிலிருந்த வாஞ்சையையும் கொண்டு அவனைப்பற்றிய ஒரு உருவத்தை மனதில் வரைந்துவைத்திருந்தான். ராஜேஷின் ஃபோட்டோவை வாட்ஸப்பில் டிபி-யாக பார்த்திருந்தாலும், அந்த அரையிருட்டில் கண்ணாடி அணிந்திருந்த கவர்ச்சியான முகத்துக்கு தன்னுடைய கற்பனையில் மீதம் உருவம் கொடுத்து அதன் மீது காதல் கொண்டிருந்தான். ராஜேஷ தன்னை முதன் முதலில் பார்க்கும்போது ஸ்லோ-மோஷனில் “அருண்ண்ண்ண்…” என்று கத்தியவாறு தன்னை வந்து கட்டிக்கொள்வான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ராஜேஷ் நேரில் பார்க்க படு சுமாராக, தான் எதிர்பார்த்தது போல நெருக்கம் காட்டாமல் மிக ஃபார்மலாக இருந்தான். அருணுக்கு ஒருவேளை தான் ராஜேஷை சந்திக்காமலேயே இருந்திருக்கலாமோ, தான் கற்பனையில் கொண்ட ராஜேஷின் உருவத்துடனேயே காலத்தை ஓட்டியிருக்கலாமோ என்றும் தோன்றியது. எப்போது இன்றைய பொழுது முடியும், எப்போது தான் தன் அறைக்கு சென்று கொஞ்ச நேரம் படுக்கையில் வெறுமனே விழவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான்.

மதிய நேரம் உணவுக்காக பிரேக் விடப்பட்டது. ராஜேஷ் தன்னுடன் வந்த மற்ற கோவை நகரத்து விற்பனை பிரதிநிதிகளுடனும், அவனது மேலாளருடனும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அவன் அருணின் பக்கம் திரும்ப கூட இல்லை. மாறாக ரொம்ப சிரித்து சிரித்து கலாட்டா செய்துக்கொண்டிருந்தான். அவனது சிரிப்பை பார்க்க பார்க்க அருணுக்கு என்னவோ கோபம் வந்தது. தன்னை பார்க்க கூட அவன் முயற்சி செய்யவில்லை என்று அவன் மீது எரிச்சலாக வந்தது. லஞ்ச் முடிந்து, அனைவரும் அவர்கள் இடத்துக்கு சென்று மீட்டிங்க்கை தொடர்ந்தனர். அருண் மெல்ல மெல்ல ராஜேஷை வெறுக்க காரணங்கள் தேடிக்கொண்டிருந்தான்.

மாலை 5 மணிக்கு மீட்டிங் முடிந்தது. அனைவரும் கிளம்ப தயாரானார்கள். அருண் மீட்டிங் ரூமிலிருந்து அனைவரும் வெளியே வந்தபிறகு மீட்டிங் ஹாலுக்குள் சென்றான். உடன் வந்திருந்த கிளீனர்களை கொண்டு எல்லா டேபிள்களிலும் இருந்த காலி வாட்டர் பாட்டில்களையும், ஸ்நாக் தட்டுகளையும் எடுத்துப்போகச்சொன்னான். போடியம்-ல் இருந்து மைக்கை எடுத்து, புரொஜெக்டர் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு பேக் செய்ய ஆரம்பித்தான். அப்போது மீட்டிங் ஹாலின் கதவு சாத்தப்பட்ட சத்தம் கேட்டது.

ஒருவேளை காற்றுக்கு தானாக மூடிக்கொண்டதோ இல்லை தட்டு மற்றும் வாட்டர் பாட்டில்கள் எடுப்பவர்கள் மீண்டும் வந்திருப்பார்கள் என்று நினைத்து அருண் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் பிஸியாக இருந்தான். அப்போது ஹாலின் மற்ற விளக்குகள் அணைக்கப்படுவதை கண்டு அருண் நிமிர்ந்து பார்க்க அங்கே ராஜேஷ் விளக்குகளை அணைத்துவிட்டு அருணை நோக்கி வந்தான். அருண் சுதாரிக்கும் முன்பாக ராஜேஷ் அருணை மூச்சு முட்டுமளவுக்கு இறுக்க கட்டியணைத்தான். அருணுக்கு ஒரு நிமிடம் குப்பென்று வியர்த்தது. தன்னை ராஜேஷிடமிருந்து விலக்கிக்கொள்ள பலவீனமாக முயற்சித்தான்.

“ராஜேஷ்… யாராச்சும் வந்துட போறங்க.. விடு” என்றான்.

ராஜேஷ் தன் நெற்றியை அருணின் நெற்றியோடு ஒட்டி அருணின் மூக்கோடு மூக்கை உரசியவாறே “அருண்… உன்னை பார்க்கனும்னு ஒரே ஒரு காரணத்துக்கு மட்டும் தான் நான் இந்த மீட்டிங்கிற்கு வந்தேன். நீ என்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்குவேன்னு கனவோட வந்தேன். ஆனா நீ பயங்கர பிஸியா இருந்தே.. அட்லீஸ்ட் லஞ்ச் சமயத்திலேயாச்சும் நீ என்னோட சாப்பிட வருவேன்னு எதிர்பார்த்தேன் ஆனா அதுவும் நடக்கலை…” என்று சொன்னான்.

அருண் இப்போது தன்னை காப்பாற்றிக்கொள்ள “நான் லஞ்சுல கவனிச்சேன்.. நீ பயங்கரமா சிரிச்சு சிரிச்சு பேசி கலாட்டா பண்ணிட்டிருந்தே… நான் தான் நீ என் கிட்டே வருவேன்னு காத்திருந்தேன்” என்றான்.

ராஜேஷ் “நான் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தது என்னோட உள்மனசுல இருக்குற ஏமாற்றத்தை மத்தவங்க கவனிச்சுட கூடாதுன்னு நான் போட்டுக்குட்ட முகமூடி…” என்றான்.

ராஜேஷ் மேலும் தொடர்ந்தான் “இப்போ கூட நான் போறதுக்கு முன்னாடி உன் கிட்டே நான் என்ன எதிர்பார்த்தேனோ அதை நானாச்சும் உன்கிட்டே சொல்லிடனும் செஞ்சிடனும்னு தான் என்னோட பேனா தொலைஞ்சிடுச்சு, தேடிட்டு வர்றேன்னு சொல்லிட்டு இப்படி ஹாலுக்கு வந்தேன்.. இங்கே தனியா இருக்குறப்ப நீ என்னை பார்த்ததும் தானா வந்து கட்டிப்பிடிச்சுக்குவேன்னு எதிர்பார்த்தேன்.. ஆனா நடக்கலை. வந்ததிலே இருந்து எனக்கு உன்னை ஒரு தடவையாச்சும் ஆசை தீர கட்டிக்கனும்னு தோணுச்சு… கட்டிக்கிட்டாச்சு.. அவ்ளோ தான்.. சரி! நான் கிளம்புறேன்” என்று ராஜேஷ் விலக பார்க்க, அருண் இன்னும் இறுக்கமாக ராஜேஷை கட்டிக்கொண்டான். “சாரி ராஜேஷ்…” என்று மெதுவாக அருணின் வாய் முனுமுனுத்தது. அது ராஜேஷுக்கும் கேட்டது.

ராஜேஷ் அருணின் தாடையை தன் இரு விரல்களால் நளினமாக தூக்கி, அவன் உதட்டில் மெலிதாக முத்தம் வைத்தான். பின்னர் ராஜேஷின் உதடுகள் அருணின் உதட்டை இதமாக ஒத்தடம் கொடுத்தவாறே ஆக்கிரமித்தது. அருணுக்கு ராஜேஷின் அந்த முத்தம் சொர்க்கத்தை விட இனிமையாக இருந்தது. இருவரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அந்த கண்ணீரில் அவர்கள் இருவரிடையே எல்லா தப்பர்த்தங்களும் சேர்ந்து உருவாக்கிய பனித்திரை கரைந்து இருவரின் உயிர்களும் ஒன்றாக கலந்துக்கொண்டிருந்தன. ராஜேஷ் முத்தமிட்டு முடிக்கும்போது, அருண் ராஜேஷை சுவற்றில் சாய்த்து அவனை தன் கால்களிடையே கொண்டுவந்து வெறித்தனமாக முத்தமிட ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் இருவரும் முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது இருவருக்கும் தெரியவில்லை… பின்னர் இருவருக்கும் சுயநினைவு வந்தபோது தாங்கள் ஆஃபீஸில் இருப்பதை உணர்ந்து, விலகி கைகள் மட்டும் கோர்த்துக்கொண்டனர்.

ராஜேஷ் அருணிடம் “எங்களுக்கு ராத்திரி 9 மணிக்கு சென்ட்ரல்ல டிரெயின்… நாம போறதுக்கு முன்னாடி ஒன்னா டின்னர் சாப்பிடலாமா?” என்று கேட்டான்.

அருண் ராஜேஷிடம் “எனக்கு உன்னை தான் சாப்பிடனும் போல இருக்குடா…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சின்னதாக உதட்டு முத்தம் வைத்தான்.

ராஜேஷ் அருணின் கைகளை கோர்த்துக்கொண்டு “இந்த வாரம் நீ கோயமுத்தூருக்கு வா! டின்னர் என்ன… மூணு வேளையும் உனக்கு விருந்து தான்” என்று கண்ணடித்தவாறே, அருணின் கன்னத்தில் இழைந்தான். ராஜேஷின் சிரிப்பில் அருண் அம்பேல்…

ராஜேஷ் “சரி வா… என்னோட ஆளுங்க என்னை தேடுறதுக்குள்ளே நாமளே போயிடுறது பெட்டர்…” என்று சொல்லிவிட்டு, அருணின் கையை பிடித்துக்கொண்டு ஹாலிலிருந்து வெளியே வந்தான். தன்னுடைய கோயமுத்தூர் டீமிடம் அருணை அறிமுகப்படுத்திவைத்தான். அப்போதிலிருந்து இரவு ரயிலேறும் வரை இருவரும் கோர்த்த கைகளை விலக்கவே இல்லை. அவர்களை வாழ்த்தும் விதமாக வானமும் மெல்ல தூறல் போட்டது… ரயில் நிலையத்தின் பிளாட்ஃபாரத்தில் மழை முத்தத்துடன் அருண் ராஜேஷை வழியனுப்பிவைத்தான். வார இறுதிக்கு இன்னும் 5 நாட்கள் இருந்தன என நினைக்கும்போது அருணுக்கு பெருமூச்சு வந்தது.

முதன் முதலாக சந்திக்கும் “ஆன்லைன்’ நட்புகளுக்கு தொடக்கத்தில் இந்த உறுத்தல்கள் ஏற்படுவது சகஜம் தான். அதை வெற்றிகரமாக தாண்டிவிட்டால் அந்த நட்பு காலத்துக்கும் நிற்கும். ஒருவரை பார்க்காம்லேயே அவர் மீது ஈர்ப்பு ஏற்படுவது சகஜம் என்றபோதும், இது போன்ற ஏமாற்றங்களை தவிர்க்க முடிந்த வரை எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது எவ்வளவு சீக்கிரம் நேரில் பார்க்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடவேண்டும். இனியும் அருண் மற்றும் ராஜேஷுடனான சந்திப்புகள் அடிக்கடி நேரில் உடல்ரீதியாக சந்திக்கவேண்டும் என்று இருவரும் முடிவு செய்திருப்பது அவர்கள் உறவு ஒரு நல்ல திசையை நோக்கி செல்வதற்கான அறிகுறியாக தெரிந்தது.

<--- முற்றும் --->

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 14/10/2012
Alternate Blogger URL: https://kasamusakathaigal.blogspot.com/2012/10/blog-post.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

Picture of the day
சேல்ஸ் மீட்டிங்கில் சேர்ந்தபோது…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top