உயிரில் கலந்த உறவே

சிறிய வயதில் எலியும் பூனையுமாக எதிரிகளாக திரிந்த நெருங்கிய உறவினர்களான ஜெய்யும் பிரபாகரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது எதிர்பாராமல் காதல் உருவாகிறது. நாளடைவில் ஒருவரி மற்றொருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் அவர்களிடையே சமுதாய கட்டமைப்பு வில்லனாக வர, எப்படி அவர்கள் அதை எதிர்கொள்கிறார்கள் என்ற கதை. இது கிட்டத்தட்ட எனது சொந்த வாழ்க்கை கதை என்று சொல்லலாம். அதோடு சில கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்ட தொடர்.

கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:
ஜெய்: ஜெய் சம்பத்
பிரபாகர்: ‘இனிகோ’ பிரபாகர்
அஞ்சலி: அஞ்சலி
ராஜி: ரெஜினா

ஜெய்யின் பெற்றோர்கள்: ‘ஆடுகளம்’ நரேன், ‘பசங்க’ சுஜாதா
பிரபாகரின் பெற்றோர்கள்: ஜெயபிரகாஷ் மற்றும் சாரதா

மொத்த அத்தியாயங்கள்: 25
நிலை: கதை முடிவுற்றது

உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?
தொடர்கதைகள்

உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?

“மாமா… அத்தை…. என்னை ஆசீர்வாதம் பண்னுங்க..” என்று சொல்லிகொண்டே பிரபாகர் தனசேகர் வனஜா தம்பதிகளின் காலில் விழுந்து வணங்க, அவர்கள் அவனது நெற்றியில் திருநீறு வைத்து “நல்லபடியா இரு” என்று புன்னகையோடு ஆசிர்வாதம் செய்தார்கள். இதை எல்லாம் கண்ணில் சந்தோஷம

உ.க.உறவே 12. மனசெல்லாம் நீயே தான்
தொடர்கதைகள்

உ.க.உறவே 12. மனசெல்லாம் நீயே தான்

பிரபாகருக்கு தூக்கம் கலைந்து முழுசாக கண் விழித்தபோது கட்டிலில் பக்கத்தில் ஜெய் இல்லை. அறைக்குள் நல்ல வெளிச்சம் பரவியிருந்தது மட்டுமல்லாமல் லேசாக உப்புசமும் ஆரம்பித்திருந்தது. அதனால் சூரியன் வந்து ரொம்ப நேரம் ஆகியிருக்கும் என்று தோன்றியது. கட்டிலில் இ

உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்
தொடர்கதைகள்

உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்

இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, ஹாலில் வட்டம் போட்டு உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். பிரபாகரும் அம்மாவும் வாக்கிங் கிளம்ப, ஜெய்யின் அப்பா தனசேகர் “இன்னைக்கு கட்டாயம் வாக்கிங் போகனுமா?” என்று கேட்டார். மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ஜெய் ச

உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்
தொடர்கதைகள்

உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்

பிரபாகர் வீட்டை விட்டு வெளியேறி இன்றோடு ஏழாவது நாள் முடிகிறது. ஜெய்க்கு ஆரம்பத்தில் பிரபாகர் மீது கோபம் இருந்தாலும், என்றாவது ஒரு நாள் அவனோடு சேர்ந்து வாழ்வோம் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் பிரபாகர் ஒரேயடியாக வெட்டிக்கொண்டு போனதில் முதலில் நிலை குல

உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?
தொடர்கதைகள்

உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?

தனசேகர் தன்னுடைய மொபைலின் -ஐ செய்துவிட்டு அதை மீண்டும் டேபிளின் மேலே வைத்தார். அவர் அந்த -ஐ வைத்து உரையாடலை ஆரம்பிக்கவேண்டும் என்று தான் நினைத்தாரே ஒழிய அதை குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சி எதுவும் செய்ய விரும்பவில்லை என்பதை அவரது உடல்மொழி சொன்னது. பிரபாகரு

உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை
தொடர்கதைகள்

உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை

இப்போது தனசேகர் ஜெய் மற்றும் பிரபாகரின் கண்களை பார்க்கமுடியாமல் சங்கடத்தோடு ஜன்னலுக்கு வெளியே -ல் வேகமாக போய்க்கொண்டிருந்த வாகனங்களை பார்த்தபடியே பேசினார். அவர் குரலில் ஒரு மெல்லிய பதற்றம் இருந்தது. “நம்ம சமூகத்தில தன்பால் ஈர்ப்புன்னு சொன்னா அவங்க எப

உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…
தொடர்கதைகள்

உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…

கார் ஹாரன் சத்தம் கேட்டு வனஜா எழுந்து வந்து வராண்டாவின் கதவை திறந்தபோது கார் காம்பவுண்டுக்குள் ஏற்கனவே வந்து, அதிலிருந்து ஜெய்யும் பிரபாகரும் ஆளுக்கொரு பக்கமாக இறங்கியிருந்தார்கள். வனஜாவுக்கு பிரபாகரின் கிட்டத்தட்ட பரதேசி கோலத்தை பார்த்ததும் அவன் மீத

உ.க.உறவே 18. யாரந்த “special friend”?
தொடர்கதைகள்

உ.க.உறவே 18. யாரந்த “special friend”?

“என்னடா இது புது பழக்கமா…. அவ்வளவு பசியாடா?” அம்மா தோசைக்கல்லில் தோசை சுட்டுக்கொண்டிருக்க, அடுப்பு திட்டில் ஜெய் உட்கார்ந்துக்கொண்டு கல்லில் இருந்து நேரடியாக எடுத்து தோசையை சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பொதுவாக ஜெய் டைனிங் டேபிளில் தோசை, மிள

உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்
தொடர்கதைகள்

உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்

“அம்மா இப்போ எல்லாம் பன்னீர் சோடா கிடைக்குதா?” – எல்லோரும் டைனிங் டேபிளில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இந்த ஜெய் கேள்வியை எழுப்பினான்.

“எங்கேடா… இப்போ எல்லாம் கோலி சோடாவை கண்ணுலயே பாக்க முடியலை… இதுல பன்னீர் சோடா எங்கே கிடைக்கப்போ

உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..
தொடர்கதைகள்

உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..

“ரெண்டு Iced Horchata Latte, ஒரு Cappuccino அப்புறம் ஒரு Frappe… ” பவ்யமாக ஆர்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெயிட்டரிடம் சொல்லிவிட்டு, எதிரில் இருந்த அஞ்சலியை பார்த்து “வேற எதுவும் சொல்லட்டுமா?” என்று ஜெய் கேட்டான்.

அஞ்சலி நறுக்கென்று பதில் சொ

Free Sitemap Generator
Scroll to Top