P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்

P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்

இது Paying Guest தொடர்கதையின் 16-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
சமீர் அவினாஷிடம் அவன் தன் love proposal-ஐ ஏற்க மறுப்பதற்கு காரணம் ரவியின் நினைவில் இருந்து இன்னும் move on ஆகாததே என்று தெளிவுபடுத்துகிறான். அவினாஷுக்கு சமீர் சொல்வதில் உண்மை இருப்பதாக உணர்ந்தாலும், தான் சமீரின் காதலை ஏற்றுக்கொண்டால் அது ரவி மீது வைத்துள்ள காதலுக்கு துரோகம் செய்வதாக இருக்கும் என்று தவிக்கிறான்.

ரூபா ஸ்டூலை இழுத்துப்போட்டு அடாலி மேலே இருந்து காலி சூட்கேஸை இழுக்க முயற்சி செய்துக்கொண்டிருக்க, ரவி அவளை கெஞ்சாத குறையாக தடுக்க முயற்சித்தான். ஆனாலும் ரூபா வெறி கொண்டவள் போல மேலே இருந்த சூட்கேஸை இழுத்து balance தடுமாறி கீழே விழப்போக, ரவி அவளை பிடித்து நிறுத்தினான்.

“ரூபாம்மா… சொல்றதை கேளு. நீ நினைக்கிற மாதிரி இங்கே எதுவும் தப்பா நடக்கலை. நம்பு”

“அப்போ என் கண்ணால பார்த்ததை எல்லாம் பொய்யின்னு சொல்றீங்களா?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“நீ என்ன பார்த்தே… மிட்டு மாதிரி அவனும் எனக்கு செல்லம் தான்டி… அவன் திடீர்னு கிளம்பறதை பார்த்து உணர்ச்சிவசப்படு அவனை கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்தேன்… உன் முன்னாடியே அவன் என்னை எத்தனை தடவை கட்டிப்பிடிச்சிருக்கான்… நான் அவனுக்கு எத்தனை நாள் சோறூட்டி விட்டிருக்கேன்… அப்போல்லாம் உனக்கு…”

ரூபா தன் wardrobe-ல் இருந்து துணிகளை இழுத்து suitcase-ல் துறுத்திக்கொண்டே இடைமறித்தாள்.”அப்போ நான் கேணச்சியாட்டும் உங்களை நம்பிட்டு இருந்திருக்கேன். இப்போ தானே எல்லாம் தெளிவா புரியுது”

“ரூபா…” ரவி இயலாமையோடு அவளை கட்டிப்பிடித்து தடுக்க முயற்சிக்க, ரூபா இன்னும் பலத்தோடு அவன் பிடியிலிருந்து திமிர, வாசலில் கேட்ட மிட்டுவின் அழுகை சத்தம் கேட்டு இருவரும் விலகினார்கள்.

“ரூபா…” இது பக்கத்து வீட்டு ரத்னா அக்காவின் குரல்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay நண்பருக்கு personal message-ஆ நினைச்சிட்டு, ஒரு romantic message-ஐ அவரும் இருக்குற WhatsApp group-க்கு தவறுதலா அனுப்பி சமாளிச்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

ரூபா தன் அழுகை முகத்தை புடவை தலைப்பால் துடைத்தபடியே “வர்றேங்க்கா…” என்றபடி குரல் கொடுத்தபடி முகம் கழுவ Bathroom-க்குள் நுழைந்தாள். ரவி துண்டை எடுத்து தன் மார்பை மூடியபடி வெளியே சென்று ரத்னாவை உள்ளே வர செய்தான். ரத்னாவின் கையில் இருந்த மிட்டுவை வாங்கி தூக்கிக்கொண்டு ஹாலுக்குள் நடக்க, ரூபா முகம் துடைத்தபடி ஹாலுக்கு வந்தாள். முகம் கழுவி துடைத்திருந்தாலும் அவள் அழுதிருப்பதை ரூபாவின் வீங்கிய கன்னங்களும், சிவந்த கண்களும் அப்பட்டமாக காட்டியது.

“ரூபா… வீட்ல எதுவும் பிரச்சனையா?”

“அக்கா….” ரூபா தடுமாற, “வீட்டுக்கு வீடு வாசப்படி தான்மா… ஆனா நம்ம பிரச்சனையிலே குழந்தைங்க மனசு பாதிச்சிட்ட கூடாது… பார்த்து பத்திரமா நடத்துக்கோங்க” என்றபடி ரவியின் அணைப்பில் இருந்த மிட்டுவை தடவிக்கொடுத்த படி சொன்னார்.

“பாப்பா வெளியே அழுதுக்கிட்டே ரோட்டுக்கு ஓடிட்டிருந்தா… மாமா மாமான்னு ஒரே கூப்பாடு. பின்னாடி நீங்க யாராச்சும் இருக்கீங்களான்னு பார்த்தேன்… யாரும் இல்லை. அதனால தூக்கிட்டு வந்தேன்”

“அவினாஷ் வேற ரூமுக்கு போயிட்டான்…” ரவி ரத்னாவிடம் ஃப்ளாட்டான குரலில் வெறும் செய்தியாக சொன்னான்.

“ஆனா ரூபாவோட முகம் வேற ஏதோ நடந்திருக்குறதா சொல்லுதே… அது உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே இருக்குற விஷயம். பிரச்சனை எதுவா இருந்தாலும் புருஷன் பொண்டாட்டி விட்டுக்குடுத்து அனுசரிச்சு தான் போகனும். உங்களுக்காக இல்லைன்னாலும் குழந்தைக்காகவாச்சும் நீங்க கொஞ்சம் பணிஞ்சு தான் போகனும்…” ரத்னா அதற்கு மேல் எதுவும் பேச இல்லை என்பது போல எழுந்தார்.

“ரூபா… ராத்திரி சாப்பிடுறதுக்கு நீங்க எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. இருக்குற நிலைமையிலே நீ எதுவும் சமைக்க வேண்டாம்” என்று சொன்னபடி அவர் வெளியே போனதும் அந்த ஹாலில் மயான அமைதி நிலவியது.

ரூபாவின் பிடிவாதம் கொஞ்சம் பலவீனமாக இருக்கும் தருணத்தில் ரவி அவள் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து ரூபாவின் மடியில் தலை வைத்து “ரூபா… பனைமரத்துக்கு அடியிலே உட்கார்ந்து குடிக்கிறதால நான் கள்ளு குடிக்கிறேன்னு நினைக்கிறே… அப்படியெல்லாம் இல்லை. நம்பு! மிட்டு மேல சத்தியம்” ரவி ரூபாவை கொஞ்சினான். சில நிமிடங்கள் கழித்து ரவியின் கதறல் ஏற்கப்பட்டதற்கு அடையாளமாக ரூபா ரவியின் தலையை கோதினாள்.

“ரவி! என்னோட நம்பிக்கை இன்னைக்கு உடைஞ்சிருக்கு. அது திரும்ப ஒட்டனும்னா எனக்கும் சில உத்தரவாதங்கள் வேணும்…” ரூபா திடமாக பேசினாள்.

“என்னம்மா?” ரவி நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான்.

“ஒன்னு… இனிமே நீங்க அவன் மூஞ்சியிலே கூட முழிக்கக்கூடாது. அவனை உங்க team-ல இருந்து உடனே தூக்கிடனும். வேணும்னா திவாரி சார்-கிட்டே நான் பேசி அவனை வேற department-க்கு மாத்துறேன். அப்புறம்… Office-ல உங்களை என்னால கண்காணிச்சுட்டு இருக்கமுடியாது. அதனால நீங்க அவனை பார்க்க, பேச முயற்சிக்கலைன்னு எனக்கு நம்பிக்கை வர்றபடி நடந்துக்குறது உங்க கையில தான் இருக்கு. அப்படி அவன் கூட திரும்ப சகவாசம் வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுதுன்னா நான் மிட்டுவை தூக்கிட்டு மாயவரம் போகமாட்டேன்… மேலோகத்துக்கு தான் போவேன்.”

“அப்படியெல்லாம் சொல்லாத ரூபா…” ரவி ரூபாவின் வாயை பொத்தினான்.

ரூபா தன் mobile phone-ல் இருந்து WhatsApp screen-ஐ பார்த்துக்கொண்டிருக்கையில் அவள் அனுப்பிய செய்தி எதிர்ப்பக்கம் படிக்கப்பட்டதன் அடையாளமாக Grey double tick-ன் வண்ணங்கள் நீலமாக மாறியது. ரூபா அவினாஷின் பெயருக்கு அருகே இருந்த DP-ஐ click செய்ய, அது பெரிதாகி அவனது facial closeup முகத்தை காட்டியது. அவன் இன்னும் தன் எண்ணை Contacts-ல் இருந்து அழிக்கப்படாமல் சேமித்து வைத்திருப்பதால் தான் தன்னால் அவனது DP-ஐ பார்க்க முடிகிறது என்று புரிந்ததும் ரூபாவுக்கு ஏதோ ஒரு ஆசுவாசம் தோன்றியது. ரூபா அந்த DP-ல் இருந்த அவினாஷின் முகத்தை ஊன்றிப்பார்த்தாள். வயதோடு சேர்ந்து அவனது உருவமும் முதிர்ச்சி அடைந்திருந்தது. ஆனாலும் அவினாஷின் கண்களில் லேசான சோகம் இழையோடுவது போல தோன்றியது.

“சே! சே! அப்படி எல்லாம் இருக்காது. அவன் இந்நேரத்துக்கு எல்லாம் அந்த நிகழ்ச்சியில் இருந்து மீண்டு வந்திருப்பான். எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருப்பான். நான் தான் இன்னும் அவன் சோகமாவே இருக்கனும்னு ஆசை படுறேன் போல…” தன்னை தானே தலையில் அடித்துக்கொண்டு mobile phone-ஐ table-ல் வைத்துவிட்டு எழுந்து நடந்தாள். ஜன்னல் கதவின் அருகே நின்று நகரத்தை பார்த்தாள். இன்னும் விடியவில்லை என்ற போதும் நகரம் லேசாக பரபரப்போடு படுக்கையில் புரண்டபடி விழிக்கும் குழந்தை போல நகர ஆரம்பித்திருந்தது. கடிகாரம் ஐந்து முறை அடித்து காலை ஐந்து மணி ஆகிவிட்டதை தெரிவித்தது. ரூபா கடிகாரத்தை நிமிருந்து பார்த்தாள்.

டேபிளின் மீதிருந்த ரூபாவின் mobile phone சிணுங்க, அதை எடுத்து பார்த்தவள் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை என்றாலும் நெஞ்சு கொஞ்சம் வேகமாக துடித்தது. அழைத்தது அவினாஷ்.

“ஹலோ அண்ணி… எப்படி இருக்கீங்க?” எதிர்பக்கம் அவினாஷின் குரலில் உற்சாக தொணித்தாலும், அதனடியில் ஒரு மெல்லிய இழையாக பயம் கலந்திருப்பதை ரூபாவால் உணர முடிந்தது.

“நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க?” ரூபாவின் குரலிலும் ஒரு குதூகலம்.

“ஹாங்… நீங்க… நான் எப்படி இருக்கேனாமா? என்ன அண்ணி இது மரியாதை எல்லாம் பலமா இருக்கு? டேய் அவினாஷுனு சொன்னா தான் மேற்படி பேசுவேன்” அவினாஷ் செல்லமாக கோபித்துக்கொண்டான்.

“அதுக்கு முன்னாடி நீ என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு அவி! அப்போ தான் நான் மேற்கொண்டு பேசுவேன். ஏன்னா நான் உனக்கு பண்ணினது அநியாயம். மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்குறேன் அவி! I am truly sorry for hurting you. Please accept my apologies” ரூபா கடைசி வார்த்தைகள் சொல்லும்போது லேசாக விசும்பினாள்.

“எப்போல இருந்து ஒரே வீட்டுகுள்ளாறயே இப்படி formal-ஆ பேச ஆரம்பிச்சோம்னு தெரியலை… சொல்லுங்க! ரவி அண்ணா எப்படி இருக்கார். நாலஞ்சு வருஷம் ஆகப்போகுது இல்லை? மனுஷன் உடம்புல weight போட்டிருக்காரா? மிட்டுவுக்கு தம்பி தங்கச்சி இருக்காங்களா? விட்டு வைக்கமாட்டாரே?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் அவி! நீ எப்போ இந்தியா வருவே?” ரூபா சட்டென்று விஷயத்துக்கு தாவினாள்.

“ஒரு plan-ம் இல்லைங்கண்ணி… அங்கே வந்து யாரை பார்க்க?”

“எங்களை பார்க்க வா அவி!”

“தோ… ஓடி வந்துடுவேன்…. ரவியண்ணா எப்படி இருக்கார்? பக்கத்துல இருக்காரா?”

“இல்லை அவி! தூங்கிட்டு இருக்கார். அவருக்கு surprise குடுக்கனும்னு உன்னை நான் எவ்வளவு நாளா தேடிட்டிருகேன் தெரியுமா? கிட்டத்தட்ட மூணு வருஷமா… அவர் உன்னை ரொம்ப மிஸ் பண்றார்டா. அவரே எதிர்பார்க்காம உன்னை அவர் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினா எப்படி இருக்கும்? நீ வர்றப்போ சொல்லு… அது வரைக்கும் அப்பப்போ எனக்கு call பண்ணிட்டிருடா…” கடைசியில் “ங்க” எல்லாம் கத்திரிக்கப்பட்டு “டா’ போட்டு அவினாஷ் மீது கோபம் இல்லை என்றும், மீண்டும் தன் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டதை நாசூக்காக தெரியப்படுத்தினாள். அவினாஷும் புரிந்துக்கொண்டான். கால் மணிநேர உரையாடலுக்கு பிறகு அழைப்புகள் பரஸ்பர மரியாதையோடு துண்டிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top