முன் கதை சுருக்கம்... |
---|
முதலில் ரவி Gay-யாக இருப்பானோ என்று சந்தேகப்படும் ரூபா, அது அவினாஷாக இருக்கும் என்று முடிவு செய்கிறாள். இது தெரியாமல் கூட்டமில்லாத திரையரங்கில் ரவியும் அவினாஷும் public sex வைத்து கடைசி அந்தோஷத்தை அனுபவிகிறார்கள். |
காலையில் அலாரம் சத்தம் கேட்டு ரவி அரைத்தூக்கத்தில் அதை Snooze செய்துவிட்டு மீண்டும் தன் தூக்கத்தை தொடர முயற்சித்தான். ராத்திரி கண் முழித்தது கண்ணை எரிச்சலூட்டினாலும் ஏனோ ரவிக்கு அதற்கு மேலே தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து மீண்டும் தூங்கப்பார்த்தான். தூக்கம் தூரமாக போயிருந்தது. ரவி mobile-ஐ எடுத்து பார்க்க, மணி 7:12 என காட்டியது. பக்கத்தில் ரூபாவும் படுத்திருந்தாள். வழக்கமாக இந்த சமயத்தில் ரூபா எழுந்து சமையலை ஆரம்பித்திருப்பாள் ஆனால் இன்று அப்படி செய்யாதது ரவிக்கு ஏதோ வித்தியாசமாக தோன்றியது. ரவி கண்ணை கசக்கியபடி எழுந்து காலைக்கடன் கழிப்பதற்காக toilet-க்கு நடக்க, ரூபா படுத்தவாறே குரல் கொடுத்தாள் – “இன்னைக்கு லீவு போட்டுடுங்க… கொஞ்சம் வேலை இருக்கு”. ரவி திடுக்கிட்டு திரும்பி ரூபாவிடம் வந்து “என்ன ஆச்சு?” என்றபடி அவளது நெற்றியிலும் கழுத்திலும் தன் பின்னங்கையை வைத்துப்பார்த்தான். உடம்பில் ஜுரம் எதுவும் இருப்பதற்கான அறிகுறி இல்லை.
ரூபாவிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. ஏதோ விஷயமாக தான் சொல்கிறாள் என்று புரிந்ததாலும் office-ல் இன்று முக்கியமான வேலை எதுவும் இல்லை என்பதாலும் அன்று விடுப்பு எடுக்க முடிவு செய்தான்.
“சரி! நான் sick leave போடுறேன். மிட்டுவுக்கும் அவினாஷுக்கும் lunch bag-ஐ pack பண்ணிடும்மா” ரவி கரிசனமாக சொன்னான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“மிட்டுவும் இன்னைக்கு வீட்டுல இருக்கட்டும்… அவி… அவன் எங்கேயோ சாப்பிட்டுக்கட்டும்” வெடுக்கென்று ரூபா சொன்னபோது இன்று ஏதோ கலவரம் இருக்கிறது என்று மட்டும் ரவிக்கு புரிந்தது.
ரவி அவினாஷின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே போய் தான் இன்று வரவில்லை என்று அலுவலகத்தில் சொல்லிவிடுமாறும், ரூபாவுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் சமைக்க முடியவில்லை என்று சொல்வதும் ரூபாவின் காதில் விழுந்தது.
“என்ன ஆச்சு அண்ணிக்கு… நான் பாக்கட்டுமா?” என்று பதற்றமாக அவினாஷ் கேட்டது ரூபாவை கொஞ்சம் கூட நெகிழவைக்கவில்லை. அவளுடைய கண்ணில் கோபமும், கிளம்பிய சூடான கண்ணீர் மெல்ல கன்னத்தில் வழிந்து தலையணையை நனைத்ததையும் ரூபா மறைக்க முயற்சிக்கவில்லை.
ரூபா Dining Table-ல் சாப்பாடு எடுத்து வைக்க, எதிர்பாராத leave கிடைத்த குஷியில் மிட்டு POGO Channel-ல் Chotta Bheem பார்த்துக்கொண்டிருந்தாள். ரூபாவாக விஷயத்தை ஆரம்பிக்கட்டும் என்று ரவி பொறுமை காத்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“சொல்லும்மா… என்ன விஷயம்? நீயா சொல்லுவேன்னு காத்திட்டுருக்கேன். எங்கேயாச்சும் வெளியே போகனுமா?”
ரூபா ரவியின் தட்டில் சுடச்சுட இட்லியை வைத்தபடி சொன்னாள் “நாம் வெளியே போகவேணாம். அவினாஷை வெளியே போக சொல்லுங்க..” ரவி அதிர்ச்சியில் உறைந்தான்.
லக்ஷ்மிபதி சித்தப்பா சொன்னது ரூபாவின் காதுகளில் ஒலித்தது. “இந்த விஷயத்தை கவனமா பார்த்து பக்குவமா handle பண்ணும்மா. முதல்ல நைசா அந்த பையனை வீட்டுல இருந்து வெளியே அனுப்பிடு. அந்த பையன் கிட்டே close- இருக்காருங்குறதுக்காக மாப்பிள்ளையும் அவன் கூட அப்படி இப்படி இருக்கனும்னு நாம முடிவு பண்ணிக்கவேண்டாம். ஒருவேளை மாப்பிள்ளை கிட்டே ஏதும் கோளாறு இருக்கும்னு தெரிஞ்சா அதை அப்புறம் சரி பண்ணிக்கலாம். முடிஞ்ச வரைக்கும் மாப்பிள்ளைக்கு அவனை அனுப்புறதுக்கான காரணம் தெரியவேணாம். இல்லைன்னா மாப்பிள்ளைக்கு ஆமாம்! நானும் அப்படி தான்னு சொல்றதுக்கு நாமளே ஒரு சந்தர்ப்பம் அமைச்சு குடுக்குற மாதிரி ஆயிடும்…”
“என்ன சொன்னே?… திரும்ப சொல்லு” ரவியின் கடுமையான குரல் ரூபாவின் நினைப்பை கலைத்தது.
“சித்தப்பா ஸ்வேதாவை இங்கே Institute of Fashion Designing-ல சேர்க்குறாராம். அதனால அவளுக்கு ரூம் வேணும்ல… அதனால சொன்னேன்” ரூபா சமாளிக்க முயற்சித்தாள்.
“சரி! அவ அவளோட classmates கூட college Hostel-ல இருந்தான்னா அவளும் college days-ஐ enjoy பண்ணுவாளே, friends கூட இருக்கும்போது அவளோட creativity, learning எல்லாம் better-ஆ இருக்குமே… அதை பத்தி நீங்க யோசிக்கலையா?”
“இல்லை… சித்தப்பாவுக்கு அவளை தனியா விட பயமா இருக்காம்” ரவி அவள் பதிலில் உள்ள கரிசனத்தை புரிந்துக்கொண்டான்.
சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் “அதுவும் சரி தான்…. ஆனா… ஹே! அவ காலேஜ் முடியுறதுக்கு இன்னும் 6-7 மாசம் இருக்கே. அதுவும் இல்லாம அவ BSc final year வேற… அவளை BSC degree-யை discontinue பண்ணிட்டு Fashion designing-ல சேர்குறீங்களா? அதுவும் final semester-ல படிப்பை நிறுத்திட்டு? நீங்க ரெண்டு பேரும் என் கிட்டே பொய் சொல்லலையே?” ரவி எதிர்கேள்வி கேட்டான்.
இதை ரூபா எதிர்பார்க்காமல் தடுமாறினாள் “அது..வந்து….”
“ரூபா! நீ என்னவோ மறைக்கிறே…. என்ன விஷயம்னு சொல்லு பேசிக்கலாம். அதை விட்டுட்டு இப்போ சட்டுன்னு அவினாஷை ஏன் வெளியே அனுப்புறத பத்தி யோசிக்கிறே?” ரவி ரூபாவின் கையை பிடித்து பக்கத்து chair-ல் உட்கார வைத்தான்.
“எதுவா இருந்தாலும் சரி! முதல்ல அந்த பையனை முதல்ல வெளியே போக சொல்லுங்க….” ரூபாவின் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது.
“நேத்து ராத்திரி சினிமாவுக்கு அனுப்புறப்போ கூட அவன் கிட்டே நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தே… என்ன நடந்துச்சு அதுக்கப்புறம்?”
ரூபா விசும்பியபடி சொன்னாள் – “சித்தப்பா அந்த பையனை பத்தி ஒரு விஷயம் கண்டுபிடிச்சு சொன்னார். நம்ம வீடு கொஞ்சம் கட்டுப்பெட்டியான வீடு. அதுவுமில்லாம ஒரு பொண்ண வேற பெத்து வச்சிருக்கோம்….”
ரவிக்கு லக்ஷ்மிபதி அவினாஷை பற்றி ஏதோ தப்பாக சொல்லியிருக்கிறார் என்றதும் கோபம் உச்சி மண்டைக்கு சுர்ரென்று ஏறியது. “அப்படி என்ன கண்டுபிடிச்சார் அவனை பத்தி…?”
“அதெல்லாம் கிடக்கட்டும்… அவன் எப்படியோ இருந்துட்டு போகட்டும். முதல்ல அவனை வெளியே அனுப்புங்க” ரூபா மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து நின்றாள்.
“சரிம்மா… அவனை வெளியே அனுப்புறதாவே வச்சுக்கோயேன். ஆனா அவனை திடுப்புன்னு காலி பண்ண சொன்னா அவன் எங்கே போவான்?” ரவி சாதுவாக பேசினான்.
“சித்தப்பா அவரோட Company Guest House-ல ஒரு வாரத்துக்கு இடம் வாங்கி தர்றதா சொல்லியிருக்கார். அவன் அங்கே இருந்து வேற accommodation பார்த்துக்கட்டும்…”
“அவனை எப்படியும் வெளியே துரத்தி ஆகனும்னு உங்க சித்தப்பாவுக்கு அப்படி அவன் மேல என்ன கோபம்? ஒருவேளை ஸ்வேதாவுக்கு அவன் set ஆகலைன்னா விட்டுடவேண்டியது தானே?”
“அவன் ஸ்வேதாவுக்கு மட்டும் இல்லை… எந்த பொண்ணுக்குமே set ஆகமாட்டான். அவன் ஒரு கருமம் புடிச்ச ஹோமோ…” கடைசி வார்த்தையை கேட்டதும் ரவிக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.
“ஏன்ன்ன்…. எப்படி சொல்றே?” ரவி கொஞ்சம் போல தடுமாறினான். ரூபா லக்ஷ்மிபதியின் Sherlock Holmes investigation வேலையை விலாவாரியாக சொன்னபோது ரவிக்கு தான் அவினாஷை மாட்டிவிட்டது தெரிந்தது. கடைசியாக தன்னிடம் Romeo-ல் பேச்சு கொடுத்தது அவள் சித்தப்பா தான் என்று அறிந்தபோது ரவி தான் வலிய போய் தூண்டிலில் மாட்டிக்கொண்டதை நினைத்து வெட்கமாக இருந்தது. பாவம்! அவினாஷ் தன் மீதிருந்த காதலால் அவன் பாட்டுக்கு அந்த Planet Romeo account-ஐ deactivate செய்துவிட்டு சந்தோஷமாக இருந்தான். ஆனால் நாம் தான் ஆர்வக்கோளாறாக அதை மீண்டும் வெளியே எடுத்து இப்போது அவனை பிரச்சனையில் இழுத்துவிட்டுவிட்டோமே என்று துடித்தான். அநியாயமாக தான் செய்த தவறுக்காக அவினாஷ் தண்டிக்கப்படுவதை ரவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவினாஷ் ரவியின் mobile phone-ல் install செய்யவிடாமல் தன்னை காப்பாற்றியிருக்கிறான் என்று உணர்ந்தபோது ரவியை குற்ற உணர்ச்சி பிய்த்து தின்றது. இப்போது அவினாஷை காப்பாற்ற வேண்டும் என்றால் ரூபாவின் காலில் விழுவதை தவிர வேறு வழியில்லை.