| முன் கதை சுருக்கம்... |
|---|
| நானும் அர்ணாபும் புதுமண தம்பதிகள் போல எங்கள் தனிமையை தேன் நிலவாக கொண்டாடுகிறோம். எனக்கு அர்ணாபின் குடும்ப பின்னணியை தெரிந்து கொள்வதை விட அவன் கன்னி கழிந்த அனுபவத்தை கேட்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது. அர்ணாப் வெட்கத்துடன் தன் முதல் அனுபவத்தை சொல்ல, நான் அவனது வெட்கத்தை கண்டு வியக்கிறேன். அவன் குடும்பத்தை சந்திக்க போகிறோம். திரையில் பார்த்த காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் drama-வுடன் அர்ணாபின் குடும்பத்துடன் என் முதல் சந்திப்பு நடக்கிறது. |
ஆனால் ருத்ரதாண்டவம் ஆடும் அவர் மத்தியஸ்தம் செய்த பெரியவருக்கு மட்டுமே அடங்கினார். அர்ணாப் அவரிடம் “நான் என்ன மத்தவங்களுக்கு துரோகம் பண்ணி உலகத்துல நடிக்கனும்ன்னா அப்பா எதிர்பார்க்குறார். அவர் சொல்ற மாதிரி நான் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளோட ஆசை, எதிர்பார்ப்பையும் ஏமாத்துறது, மெல்ல மெல்ல உயிரோட கொல்றதுக்கு சமம் இல்லை… டெல்லியில டாக்டர் பிரியா வேதி அவ புருஷன் ஒரு gay-ன்னு தெரிஞ்சும் சேர்ந்து வாழ முயற்சி பண்ணி கடைசியில தற்கொலை பண்ணிக்கிட்ட செய்தியை நியூஸ்ல பார்த்தோம் இல்லை? என்னை நம்பி வர்ற பொண்ணுக்கு அப்படி ஒரு நிலைமை வரனுமா? இல்லை என் தங்கச்சிக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சா நான் சந்தோஷமா இருப்பேனா? நான் உண்மையா இருக்க நினைக்கிறது ஏன் உங்க எல்லாருக்கும் தப்பா தெரியுது?” என்று சொல்லி முடிக்கும்போது அவன் அழ ஆரம்பித்திருந்தான். அந்த சமயத்தில் என் அர்ணாப் பேசுவது எதுவும் அப்போது புரியவில்லை என்றாலும் எனக்கு எழுந்து சென்று அவனை கட்டியணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் போல இருந்தது. ஆனாலும் நான் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த பெரியவர் அர்ணாப் சொன்னதை இன்னும் தன்மையான வார்த்தையில் அர்ணாபின் தந்தையிடம் விளக்க, அவர் கோபம் குறையவில்லை என்றாலும் கொஞ்சம் தணிந்தார். “அவன் அவனோட இஷ்டப்படி எங்களுக்கு கண் காணாம எங்கேயோ சந்தோஷமா வாழட்டும்… எனக்கு ஆட்சேபனை இல்லைன்னாலும் அவன் கூட ஒட்டோ உறவோ வேண்டாம். ஏன்னா அவன் கூட தொடர்புல இருந்தா என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையாது” என்று அவர் சொன்னபோது அர்ணாப் முகத்தில் ஒரு ஆசுவாசம் தெரிந்தது. அவன் பெரியவரின் காதில் குசுகுசுக்க, அவர் அர்ணாபை சென்று அமருமாறு சொல்லிவிட்டு, அர்ணாபின் தந்தையிடம் “இன்னைக்கு அவன் வாழ்க்கையில ஒரு நல்ல இடத்துல இருக்கான்… ஆனா அவனை அந்த நிலைமைக்கு கொண்டு போக நீ சுமந்திட்டிருக்கும் பாரம் அவனுக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. நீ மகன்ங்குற உரிமையை அவனுக்கு தரலைன்னாலும், தன் குற்ற உணர்ச்சியை தீர்க்குறதுக்காகவாச்சும் அவனுக்காக நீ பட்ட கடன் சுமையை ஏத்துக்குறேன்னு பிடிவாதமா இருக்கான். நாய் வித்த காசு குறைக்காது. அது மாதிரி உன் பையன் உலகத்துக்கு வேற மாதிரியா இருந்தாலும் bank-லயும், நகைக்கடையிலயும் அவன் குடுக்குற காசுக்கு எந்த வித்தியாசம் இல்லை…”| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
பெரியவர் அர்ணாபின் தந்தையின் தோளில் கை வைத்து தொடர்ந்தார் “நீ ஒரு நல்ல பையனை பெத்திருக்கே… சமுதாயத்து பார்வைக்கு அவன் வேற மாதிரி ஆனாலும் சராசரி மனுஷங்களை விட நல்லவனா இருக்கான்… உன்னோட கடன் எல்லாத்தையும் அடைச்சு அவன் அப்பாவுக்கு ஒரு நல்ல பையனாகவும், நம்ம வித்யாவை மேலே படிக்க வைக்கனும், அவளுக்கு விமரிசையா கல்யாணம் பண்ணனும்னு ஒரு அண்ணனாவும் இருக்கனும்னு ஆசைப்படுறான். நியாயமான ஆசை தான்… அதனால நீ அவன் கேட்குறதுக்கு ஒத்துக்கோ… அவன் மனசுக்கு புடிச்ச வாழ்க்கை துணையும் கிடைச்சாச்சு… இனிமேலாச்சும் அவன் அமைதியா சந்தோஷமா வாழட்டுமே. நீ அவனை இப்போ புரிஞ்சுக்கலைன்னாலும் எதிர்காலத்துல மெச்சுவே…” அர்ணாபின் தந்தை “நான் என்ன பண்ணனும்?” என்பது போல அவரை நிமிர்ந்து பார்க்க, அவர் “அர்ணாப் ஆசைப்படுற மாதிரி நிறுத்தி வைச்ச வித்யாவோட படிப்பை திரும்ப தொடரனும். அவ படிப்பு, கல்யாண செலவு எல்லாம் அர்ணாபோட பொறுப்பு… நீ அப்பாவா அவளோட junior college application-ல கையெழுத்து போடுறது, அவளுக்கு நல்ல வரன் பாக்குறதுன்னு உன் வேலையை பண்ணு. நீ bank-ல வாங்குன கடனை பத்தி கவலை படாம உனக்கு பிடிச்சபடி விவசாயத்தை ஆத்மார்த்தமா பண்ணு… அவ்வளவு தான் அவன் கேட்கிறது” என்று சுமுகமாக விஷயத்தை முடித்து வைத்தார்.
வெளியே இரவு நன்றாக இருட்ட தொடங்கியிருந்தது. அவர்கள் எங்களை அன்றிரவு அங்கேயே தங்க சொல்லியிருந்தால் நாங்கள் வசதி குறைவாக இருந்தாலும் அங்கே தூங்கலாம் என்று தான் இருந்தோம். ஆனால் எந்த ஒரு மனமாற்றத்துக்கும் காலம் தேவைப்படுமே. நாங்கள் மீண்டும் ராய்கஞ்சில் இருக்கும் எங்கள் ஹோட்டலுக்கு கிளம்பினோம். நாங்கள் அர்ணாப் வீட்டு தெருவில் நடக்கும் போது சிலபல கண்கள் எங்களை வெறித்து பார்த்தன. எனக்கு அர்ணாப்பின் கையை இறுக்கமாக கோர்த்துக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கும் போல தோன்றியது. அது அவன் மனதுக்கு தெரிந்ததோ என்னவோ நடுத்தெரு என்று கூட பார்க்காமல் தன் கைகளை என் தோளை சுற்றி போட்டுக்கொண்டு “இவன் என்னவன்” என்று கர்வமாக தலை நிமிர்ந்து நடப்பதை பார்த்து நான் தெம்பாக உணர்ந்தேன்.ஹேம்டாபாத்தில் மாலை கொஞ்சம் மந்தமாக தான் இருந்தது. சாராய கடையில் மட்டும் உழைக்கும் கூட்டம் தங்கள் களைப்பை போக்கிக்கொள்ள மொத்த சம்பாத்தியத்தையும் இழக்க தயாராக இருந்தது. அர்ணாப் “கொஞ்சம் பொறுத்துக்கோ… நாம ராய்கஞ்ச் போய் dinner சாப்பிடலாம்… இங்கே நல்ல கடைங்க இல்லை…” என்று என்னிடம் apologetic ஆக சொல்ல, நான் “பரவாயில்லை அர்ணாப் பாபு… உன் கூட உட்கார்ந்து சாப்பிடுறதுன்னா நான் எங்கேயும் வர தயாரா இருக்கேன்” என்று அவன் தோளில் என் மூக்கை இழைத்தேன். திடீரென்று எனக்கு அர்ணாப்பின் பழைய கதை நினைவுக்கு வர, நான் அவனிடம் “உங்க ஊர் குளத்து கரையிலே உட்கார்ந்து சாப்பிடுற மாதிரி இருக்குமா?” என்று கேட்க, அர்ணாப் “ஙே!” என்று விழித்தான். நான் “எனக்கு நீ college சமயத்துல கில்மா பண்ணுன இடத்தை பார்க்கனும்” என்று அவனிடம் கிசுகிசுக்க, அர்ணாப் வெட்கப்பட்டது உண்மையிலேயே பார்க்க மிக அழகாக இருந்தது.



