Sugar Daddy 06. I Love You

Sugar Daddy 06. I Love You

இது Sugar Daddy தொடர்கதையின் 6-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
தான் கோபத்தில் அருந்ததிக்கு அனுப்பிய WhatsApp message-ஐ அவர் பார்க்கும் முன்பே நரேன் அதை அழித்துவிட்டதாக சொல்ல, குற்ற உணர்ச்சியில் இருக்கும் விக்குக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. நரேன் தனக்கு விக்கி மீது கோபம் இல்லை என்றும், இந்த இடைவெளியில் தான் விக்கியை ரொம்ப miss செய்ததாக சொல்ல, அன்று இரவு முழுக்க இருவரும் passionate ஆக make up sex செய்கிறார்கள். இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் பைத்தியமாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். அருந்ததியின் நிலைமை என்ன ஆகிறது?

நரேந்திரன் குளித்துவிட்டு அவரது வழக்கமான உடையான bath robe-ஐ சுற்றிக்கொண்டு TV Remote Control-ஐ எடுத்துக்கொண்டு Sofa-வில் சரிந்து எதிரில் இருந்த Tea Table மீது கால்களை போட்டுக்கொண்டு பார்க்க ஏதாவது உருப்படியான நிகழ்ச்சிகள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார். இன்று மாலை வழக்கத்தை விட அதிக போக்குவரத்து நெரிசல் என்றால் இன்றைய பொழுதும் அதற்கு குறைவில்லாமல் அலைச்சலாக இருந்தது. புத்துணர்ச்சிக்காக குளித்துவிட்டு டி.வி போட்டால் TV Channels அனைத்திலும் காதல் காதல் என்று பினாத்திக்கொண்டிருந்தார்கள். உலகத்தில் இவ்வளது காதல் உண்மையாக இருந்தால் உலகமே அமைதிப்பூங்காவாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டு சிரித்தார். அவரது எண்ண ஓட்டத்தை தடுக்கும் வகையில் நரேனின் mobile phone சிணுங்கலோடு மெலிதாக அதிர்ந்தது. எடுத்து அழைப்பாளர் பெயரை பார்த்ததும் நரேனின் முகத்தில் சந்தோஷ புன்னகை… அழைத்தது நமது காதல் கதாநாயகன் – விக்னேஷ்.

“ஹாய் டா…” நரேனின் குரல் தானாகவே கொஞ்சலும் குழைவோடும் மாறியது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த அந்த சிறு ஊடல் தவிர இவர்களது உறவில் ஒரு கணம் கூட சுருதி விலகவே இல்லை. நாளுக்கு நாள் நரேன் மற்றும் விக்னேஷ் இடையே நெருக்கம் வலுப்பெற்றுக்கொண்டே இருந்தது. எவரும் உணரும் முன்பே விக்னேஷ் நரேன் வீட்டின் மற்றும் வாழ்க்கையின் அங்கமாக மாறிப்போனான். நரேனின் வீட்டு சாவிகளின் duplicate ஒன்று விக்னேஷின் சாவிக்கொத்தில் சேர்ந்துவிட்டது என்றால் நீங்களே புரிந்துக்கொள்ளலாம்.

“மாமா… வீட்டுக்கு வந்துட்டீங்களா?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“வந்து ஒரு குளியல் கூட போட்டாச்சுடா சின்ன பையா…”

“ஆண்ட்டி என்ன பண்றாங்க?”

“ஆண்ட்டி பக்கத்து வீட்டு கிருத்திகா கூட அரட்டை அடிச்சிட்டு இருக்கா…. ஆண்ட்டியை கூப்பிடனுமா?”

“இல்ல இல்ல…. நீங்க நம்ம apartment-ஓட car parking வரைக்கும் வரமுடியுமா? உடனே…”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

சமுதாயமும் சுற்றத்தோரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் openly gay-ஆக Come Out செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

“ஏண்டா? ஏதாச்சும் பிரச்சனையா?” நரேனின் குரலில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

“ஐயோ மாமா… Chill Bro!!!… இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீங்க பார்க்கிங்க்ல இருக்கீங்க… என்னை ஏமாத்திடாதீங்க…” விக்னேஷ் நரேன் அடுத்து பதில் சொல்லவோ இல்லை choices-ஓ கொடுக்காமல் அழைப்பை துண்டித்தான். நரேன் நொடியில் Shorts-ம், TShirt-மாக கிளம்பினார்.

Car Parking-ல் இவர்களது Slot-கள் பக்கத்தில் எல்லா Slotsகளும் நிரப்பப்பட்டிருந்ததால் Parking lot-ல் ஆள் நடமாட்டம் இல்லை. நரேன் தூரத்தில் இருந்து விக்னேஷை பார்த்து கையசைத்தபோது அவன் கண்களில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்தபோது நரேனுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஓட்டமும் நடையுமாக தாவிச்சென்று அவனை இறுக்க கட்டிக்கொண்டார். விக்னேஷின் கைகள் பின்புறமாக கட்டப்படிருந்ததை நரேன் கவனிக்கவில்லை.

நரேன் “என்னடா?” என்று கேட்டபோது விக்னேஷ் பின்பக்கம் மறைத்து வைத்திருந்த சிவப்பு ஹார்ட்டின் பலூனை நரேனிடம் நீட்டி “Happy Valentines Day மாமா….” என்றான்.

நரேன் அவனது ‘இதயத்’தை வாங்கிக்கொண்டதும், விக்னேஷ் அவரது இரண்டு கன்னங்களையும் தன் கைகளால் எடுத்து நரேனின் உதட்டில் அழுத்தமாக, ஆழமாக ஒரு நீண்ட முத்ததை வைத்தான்.

“I Love You மாமா..”

“ஹா! ஹா!… இதெல்லாம் நீ சொல்லி தான் எனக்கு தெரியனுமா விக்கி?”

விக்னேஷ் நரேஷின் கன்னத்தில் இருந்து கையை எடுக்காமல் நரேனின் நெற்றியோடு தன் நெற்றியை உரசியபடி சொன்னான் – “மாமா.. இன்னைக்கு உலகமே காதலர் தினத்தை கொண்டாடிட்டு இருக்கு, நான் உங்க கிட்டே கொஞ்சாம என் கட்டை வேகுமா…?”

“I Love You a lot விக்கி…” இப்போது விக்கிக்கு கிஸ்ஸடிப்பது நரேனின் முறையானது.

“மாமா… கண்ண மூடுங்களேன்” விக்ணேஷ் குழந்தை போல துள்ளினான்.

“என்னடா?”

“ப்ளீஸ் மாமா… திரும்ப கேள்வி கேட்காதீங்க… கண்ண மூடுங்க” நரேன் சிரிப்போடு தன் கண்களை மூடிக்கொண்டார்.

“இப்போ கண்ணை திறங்க..” விக்னேஷின் குரல் கேட்டு கண்ணை திறந்தபோது எதிரில் அவன் இல்லை. பார்வையை தாழ்த்தியபோது விக்னேஷ் நரேனின் எதிரில் முட்டிப்போட்டு அவரை நோக்கி ஒரு மோதிர டப்பாவை நீட்டிக்கொண்டிருந்தான்.

“மாமா! உங்களோட பார்ட்னரா என்னை ஏத்துக்குவீங்களா?” அவன் கண்களில் சந்தோஷம், ஏக்கம், பரிதவிப்பு என பல உணர்ச்சிக்குவியல்களின் கலவையாக இருந்தது.

“விக்கி! முதல்ல எழுந்திரு… என்ன இது விளையாட்டு?”

“மொதல்ல எனக்கு பதில் சொல்லுங்க…”

“நீ இப்பவே என்னோட வாழ்க்கையிலே ஒரு பாகம் தானடா… இன்னும் என்ன சொல்லனும்?”

“இன்னைக்கு காதலர் தினம் மாமா… நமக்குள்ளே சொல்லிக்கவேண்டிய அவசியம் இல்லாம இருந்தாலும் என்னோட காதலை பகிரங்கமா சொல்லனும் போல தோணுச்சு… ப்ளீஸ்! நான் உங்களுக்கு இந்த மோதிரத்தை போட்டுவிடட்டுமா?”

“விக்கி….” கொஞ்ச நேரத்துக்கு முன்பு நரேனின் முகத்தில் தெரிந்த உற்சாகம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. அந்த இடத்தை குழப்பம் ஆக்கிரமித்துவிட்டதன் அடையாளமாக அவரது நெற்றியில் சுருக்கங்கள் தோன்றியிருந்தன.

நரேன் விக்னேஷ் நீட்டிய மோதிர டப்பாவை பார்த்தார். அதில் NV, VN என்று ரசனையாக டிசைன் செய்யப்பட்ட இரண்டு மோதிரங்கள் இருந்தன. நிச்சயம் பையன் தன்னுடைய சேமிப்பு முழுவதையும் இதற்காக கறைத்திருப்பான் என்று தோன்றியது. இருப்பினும் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை குறைப்பதற்காக நரேன் விக்னேஷின் காருக்குள்ளே எட்டிப்பார்த்தார்.

“என்ன மாமா பாக்குறீங்க?” விக்னேஷ் குழப்பமடைந்தான்.

“இல்லை… இது மாதிரி எத்தனை packages வச்சிருக்கேன்னு… உன்னோட partners எல்லாருக்கும் குடுத்துட்டியா?”

“யாருங்க மாமா என் partners?”

“உன்னோட PlanetRomeo காதலர்கள்…”

“மாமா! நான் என்னோட profile-ஐ delete பண்ணி மாசக்கணக்காகுது… நான் misbehave பண்ணினதுக்கப்புறம் patchup பண்ணினோம் இல்லை… அப்போவே நான் delete பண்ணிட்டேன்… ஏன்னா நான் அப்பவே உங்க மேல love ஆயிட்டேன்… எனக்கு இனிமேல் வாழ்க்கையிலே ஒரே ஒரு partner/spouse தான்.. அது நீங்க மட்டும் தான்… ப்ளீஸ் மாமா! என் love proposal-ஐ ஏத்துக்கோங்க…” விக்ணேஷ் விட்டால் அழுதுவிடுவான் போல இருந்தது.

நரேன் ஒரு மோதிரத்தை எடுத்து விக்னேஷின் விரலில் மாட்டிவிட்டு அந்த கையை எடுத்து தன் உதட்டில் பதித்துக்கொண்டு சொன்னார் – “விக்கி! நீ என்ன பண்றேன்னு உனக்கு புரியுதா? நான் வாழ்ந்து முடிச்சவன்… நீ இனிமே தான் வாழனும்… நீ என்னோட வாழ்க்கையிலே அருந்ததி, ஹரீஷ் மாதிரி ரொம்ப முக்கியமானவன். ஆனா உன் வாழ்க்கையிலே என்னை exclusive partner-ஆ வச்சிக்கிட்டு உன்னால சந்தோஷமா வாழமுடியாது. பச்சையா சொன்னா நான் என்னான்னு உன் வாழ்க்கையிலே இருக்கமுடியும்? நீ கல்யாணம் பண்ணிக்கனும், புள்ள குட்டிங்க பெத்துக்கனும்…. நீ பார்க்க வேண்டியது, செய்யவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு… உனக்கு தான் துணை நிற்பேன் விக்கி…. ஆனா ஒரு well wisher-ஆ மட்டும் தான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top