Sugar Daddy 06. I Love You

Sugar Daddy 06. I Love You

No referring post found.

இது Sugar Daddy தொடர்கதையின் 6-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
தான் கோபத்தில் அருந்ததிக்கு அனுப்பிய WhatsApp message-ஐ அவர் பார்க்கும் முன்பே நரேன் அதை அழித்துவிட்டதாக சொல்ல, குற்ற உணர்ச்சியில் இருக்கும் விக்குக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. நரேன் தனக்கு விக்கி மீது கோபம் இல்லை என்றும், இந்த இடைவெளியில் தான் விக்கியை ரொம்ப miss செய்ததாக சொல்ல, அன்று இரவு முழுக்க இருவரும் passionate ஆக make up sex செய்கிறார்கள். இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் பைத்தியமாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். அருந்ததியின் நிலைமை என்ன ஆகிறது?

“விக்கி! அன்னைக்கு நாம patchup ஆனதுக்கு அப்புறம் நீ என் மேலே லவ் ஆயிட்டேன்னு சொன்னே… நீ அனுப்புன messages-ஆல எங்க வீட்டுல எந்த பிரச்சனையும் ஏற்படலைன்னு தெரிஞ்சதுக்கப்புறம் நீ உன்னோட குற்றஉணர்ச்சியிலே இருந்து விடுபட்டதால வந்த excitement-ஐ நீ காதல்னு தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டியோன்னு தோணுது… நான் திரும்பவும் சொல்றேன்… நீ வாழவேண்டியது, பார்க்கவேண்டியது, செய்யவேண்டியது வாழ்க்கையிலே இன்னும் நிறைய இருக்கு… உன் வாழ்க்கையை இந்த கிழவனோட போட்டு முடக்கிடாத…”

விக்னேஷுக்கும் பொறுமை இழந்துக்கொண்டிருப்பதை அவன் நெறித்த புருவங்கள் சொன்னது. “மாமா! நான் உங்களுக்கு வெறும் sex toy-ஆ? உங்களாலேயும் ஒரு சின்ன பையனை மடக்கி ஓக்க முடியுங்குற Ego Trip-ல நீங்க cross பண்ணின milestones-ல ஒன்னா நான்?” விக்னேஷ் வெடித்தான்.

நரேன் பதறிப்போனார். “விக்கி! watch your words… உன்னோட வார்த்தைகள் நான் உன் மேலே வச்சிருக்குர அன்பை கொச்சைப்படுத்துறேன்னு ஞாபகப்படுத்துறேன்…” நரேன் நிதானமாகவும், வார்த்தைகளில் அழுத்தமும் தீர்க்கமாகவும் சொன்னார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

“பின்னே என்ன மாமா வயசு வாழ்க்கைன்னு டயலாக் பேசிக்கிட்டு? வயசை பார்த்தா காதல் வரும்? எனக்கு உங்களை பிடிச்சுது.. படுத்தேன், காதலை சொன்னேன்…. நீங்க கூட தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் PlanetRomeo lovers-க்கு குடுக்க இன்னும் நிறைய packages வச்சிருக்கேனான்னு நான் உங்களுக்கு முன்னாடி நிறைய பேர் கூட படுத்திருக்கேன்னு குத்திக்காட்டி மறைமுகமா என் காதலை அசிங்கப்படுத்துனீங்க… ஏன் மாமா… நான் உங்க கிட்டே fresh piece-ஆ வரலைங்குறதா இங்க பிரச்சனை?” விக்னேஷின் கோபமான குரல் அந்த ஆளில்லாத car parking-ல் மூலைக்கு மூலை எதிரொலித்தது.

நரேன் கையெடுத்து கும்பிட்டார் “சாரி விக்கி! நான் உன்னை அவமானப்படுத்தனும்னு சொல்லலை… நான் வேற எதையும் mean பண்ணலை! என்னை மன்னிச்சுக்கோ… இந்த விஷயத்துல sex-ஐ கொண்டுவரவேண்டிய அவசியமே இல்லை” விக்னேஷ் பதறிப்போய் அவரது கைகளை பிடித்துக்கொண்டு “மாமா! அப்படியெல்லாம் சொல்லாதீங்க” அழ ஆரம்பித்தான்.

“விக்கி! நான் உன்னை வெறும் காம இச்சைகளுக்காக பயன்படுத்திக்கலை… நீ என் வாழ்க்கையிலே புது dimension குடுத்திருக்கே… என்னை reinvent பண்ண வச்சிருக்கே… நீ என் வாழ்க்கையிலே புது ரத்தம் பாய்ச்சினதுக்கு பதிலா நான் உன்னோட வாழ்க்கையை இந்த வயசான கிழவன் கூட முடக்கிப்போட்டுட கூடாதுங்குற கவலையால தான் உன்னோட proposal-ஐ ஏத்துக்கமாட்டேங்குறேன்… I am already in my 50s… இன்னும் 5-10 வருஷத்துல நான் செத்துப்போயிட்டா நீ உன் வாழ்க்கையை திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கவேண்டி இருக்கும்னு சொல்றேன்… அப்போ உன்னோட இளமை கடந்து போனதால உனக்கேத்த துணை கிடைக்காம தனியா அல்லாட வேண்டியிருக்கும்… அது தான் காரணமே தவிர, நீ என்னோட அன்பை opportunist-ன்னு தப்பா புரிஞ்சுக்காதே” நரேன் கிட்டத்தட்ட கெஞ்சினார்.

விக்னேஷ் தன் முகத்தை துடைத்துக்கொண்டு “மாமா! நீங்க என் அன்புக்கு அங்கீகாரம் குடுக்காட்டி என்ன… நான் என்னோட வகையிலே என் அன்பை சொல்லிடுறேன்… அதை ஏத்துக்குறதும் தூக்கி எறியுறதும் உங்க இஷ்டம்.. அதுக்காக நீங்க உங்க சாவு வரைக்கும் எல்லாம் யோசிக்காதீங்க… நீங்க நூறு வயசு வரைக்கும் சந்தோஷமா ஆரோக்கியமா இருக்கனுங்குறது தான் என் ஆசை, பிரார்த்தனை எல்லாம்… மாமா! சாவு யாருக்கும் எப்போவும் வரலாம்… நாளைக்கே நான் road-ஐ கடக்கும்போது அடிபட்டு சாகலாம்… அத நெனச்சு நான் யார் கூடவும் commit ஆகுறதுக்கு பயப்பட முடியுமா? I’ll be loving you always… till I breathe my last” என்று சொன்னபடி “VN” மோதிரத்தை எடுத்து நரேனின் மோதிரவிரலில் சரித்தான். மோதிரம் அவருக்கு அம்சமாக இருந்தது. விக்னேஷ் நரேனின் கையை எடுத்து முத்தமிட்டுவிட்டு, “சரிங்க மாமா! வீட்டுக்கு போகலாம்” காரிலிருந்து தன் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினான். நரேன் விக்னேஷின் கையை கோர்த்துக்கொண்டு elevator-க்கு நடந்தார்.

Just ஒரு கேள்வி...

கடையிலே product-ஐ explain பண்ற அழகான Salesman-ஐ சைட்டடிச்சுகிட்டு அவன் பேசி முடிச்சதும், அவன் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி கேட்டு வழிஞ்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“மாமா! உங்களுக்கு ஆண்ட்டி, ஹரீஷ்ன்னு ஒரு முழுசான குடும்பம் இருக்குறதால நான் நீங்க என்னை உலகத்துக்கு முன்னாடி இவன் என்னோட partner-ன்னு சொல்லனும்னு நான் ஆசைப்பட்லை.. எதிர்பார்க்கலை… ஆனா எனக்கு என்னோட sexual orientation என்னான்னு நல்லா தெரியுது. என் மனசாட்சிக்கு உண்மையான வாழ்க்கையை வாழ முயற்சி பண்றேன். எனக்கு உங்கள மாதிரி closet-ல இருந்து ரெட்டை வாழ்க்கை வாழமுடியாது. இப்படி சொன்னதால உங்களை குத்திக்காட்டுறேன்னு அர்த்தம் இல்லை… உங்க காலத்து சூழ்நிலை அப்படி… நான் இருக்குற சூழ்நிலை இப்படி…” Elevator-ன் கதவு திறந்துக்கொள்ள இருவரும் உள்ளே ஏறிக்கொண்டார்கள்.

விக்னேஷின் வாசலுக்கு வந்ததும் நரேன் “வா விக்கி! வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போகலாம்…” என்றார்.

“இல்லைங்க மாமா… எனக்கு பசிக்கல… அதுவுமில்லாம ஒரே அசதியா இருக்கு. போய் தூங்கனும்” என்று கண்ணில் துயரத்தை தேக்கிவைத்தபடி சோர்வாக சொல்ல, நரேன் கொஞ்ச நேரத்துக்கு முன்பு சந்தோஷமாக இருந்த சின்ன பையனின் உற்சாகத்தை தான் கொலை செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். அவரால் பேசவும் முடியவில்லை… அதே சமயம் விக்னேஷை தனியாக விடவும் மனதில்லை. அங்கேயே நின்றார்.

நரேன் Corridor floor-ல் நிறுவப்பட்டிருக்கும் CCTV பற்றிய கவலை இல்லாமல் விக்னேஷின் கன்னங்களை தன் இருகைகளாலும் எடுத்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தார். விக்னேஷ் கற்சிலை போல அசைவின்றி அப்படியே நின்றிருந்தான். அப்படியே அவன் நெற்றி, மூக்கு என மில்லிமீட்டர் மில்லிமீட்டராக முத்தமிட்டபடி இறங்கி விக்னேஷின் உதட்டில் அழுத்தமாக முத்தம் வைத்தார்.

“உன்னை காயப்படுத்தியிருக்கேன்னு தெரியுது விக்கி! என்னை மன்னிச்சிடு… இப்போதைக்கு அதை பத்தி யோசிக்காம நல்லா தூங்கு… ஒருவேளை தூக்கம் வரலைன்னா ராத்திரி எந்நேரம்னாலும் நம்ம வீட்டு கதவு உனக்காக எப்போதும் திறந்திருக்கும்… உனக்காக தூங்காம நானும்…”

விக்னேஷ் சோர்வாக அவன் flat-க்குள் சென்று மறையும் வரை நரேன் அங்கேயே corridor-ல் நின்றிருந்தார்.

இந்த Sugar Daddy இன்னும் தொடரும்...

இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 25/02/2016
* Read in Wattpad: https://orinakadhalkadhaigal.blogspot.com/2016/02/sugar-daddy-06-i-love-you.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 3 Votes 2

Your page rank:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top