முன் கதை சுருக்கம்... |
---|
விக்கியின் roommate குணால் தான் இரு bisexual என்றும், விக்கியுடன் sex வைத்துக்கொள்ளலாமா என்று விக்கியின் சுன்னியை தடவுகிறான். ஆனால் விக்கி அவனது physical advancement-ஐ நிராகரிக்கிறான். பக்கத்து வீட்டில் இருந்து அருந்ததி பதறி அடித்துக்கொண்டு விக்கியை அழைக்கிறார். நரேன் மாரடைப்பு வந்து collapse ஆகிவிட்டதை பார்த்து விக்கியும் குணாலும் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்செல்கின்றனர். ஏன் நரேனுக்கு நெஞ்சுவலி வந்தது? இத்துடன் விக்கியை பிரிகிறாரா? |
MICU வாசலில் இருந்து “நரேன் patient-ஐ visit பண்ண யாராவது இருக்கீங்களா?” என்ற குரல் கேட்டு ஹரீஷ் அவசரம் அவசரமாக குரல் கொடுத்த nurse-ஐ நோக்கி ஒடினான். அவள் கடமையில் கண்ணாக செக்யூரிட்டி பக்கம் கண் காட்ட, அவர் ஹரீஷ் apron, scarf மற்றும் gloves அணிந்தபிறகே உள்ளே அனுப்பினார்.
நரேன் மெல்ல மெல்ல கண்ணை திறந்தபோது ceiling lights-ன் வெளிச்சமும், மருந்துகளின் தாக்கமும் அவரது பார்வை திறனை வெகுவாக மழுங்கடித்திருந்தது. அவரை நோக்கி ஒரு உருவம் நடந்துவருவது தெரிந்தது. அது நெருங்கி வர வர அது இளைஞனின் உருவம் என்று பிடிபட்டது.
“விக்கி! வந்துட்டியா?” நரேனின் குரல் குழறியது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
ஹரீஷ் நரேனின் அருகில் உட்கார்ந்து அவரது கையை மென்மையாக பிடித்துக்கொண்டு “அப்பா! நான் ஹரீஷ்… விக்கி இப்போ தான் வீட்டுக்கு போறான்… இப்போ எப்படி அப்பா feel பண்றீங்க?”
“பரவாயில்லை… அசதியா இருக்கு… எப்போ வந்தே?”
நர்ஸ் வந்து ஹரீஷின் தோளை தொட்டார். “சார்! அவங்களை ரொம்ப பேச விடாதீங்க… Patient கண் முழிச்சுட்டாங்கன்னு உங்களை சும்மா பாக்குறதுக்காக தான் சொல்லிவிட்டோம்… நீங்க அவங்களை rest எடுக்க வச்சிட்டு வெளியே wait பண்ணுங்க”
ஹரீஷ் நரேனை ஏக்கமாக பார்த்தபடி வெளியேறினான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நரேன் கண் விழித்தபோது அவர் முகம் ஓரளவுக்கு தெளிவாக இருந்தது. கண்ணை திறக்காமலேயே முனகினார் “விக்கி!…”
“அப்பா! விக்கி இந்நேரத்துக்கு வீட்டுல இருந்து கிளம்பியிருப்பான்…. ஏதாச்சும் வேணுமாம்ப்பா?”
“பீரோவுல ஒரு சீல்டு கவர் இருக்கு எடுத்துட்டு வர சொல்றியா?” குழறலாக நரேன் பேச முயற்சித்தார்.
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாங்கப்பா… இப்போ எதுக்கு?” ஹரீஷ் பதறினான்.
“விக்கியை எடுத்துட்டு வர சொல்லேன்…”
சரிங்கப்பா….” ஹரீஷ் விக்கியை அழைத்தபோது அவன் பாதிவழியில் இருப்பதாக சொன்னான். நரேன் சொன்னதை அவனுக்கு செய்துவிட, விக்கி திரும்பவும் வீட்டுக்கு போய் எடுத்துவருவதாக சொல்லி அழைப்பை துண்டித்தான்.
“ஏங்கப்பா இப்போ? என்ன அவசரம்? எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாமே….” ஹரீஷ் கிட்டத்தட்ட அழுதான்.
“எனக்கு பயமா இருக்கு… ஒருவேளை நான் வீட்டுக்கு வரமுடியாம போச்சுன்னா…” பக்கத்தில் இருந்த monitor-ல் இதயத்துடிப்பு சீராக இல்லாததை காட்ட, நர்ஸ் பதறினாள். ஹரீஷ் வெளியேற்றப்பட்டான்.
“மாமாவுக்கு எப்படி இருக்கு?” விக்னேஷ் பதற்றத்தோடு ஹரீஷை நெருங்க, அவன் கையில் இருந்த அரக்கினால் சீல் வைக்கப்பட்ட துணி பாக்கெட் ஹரீஷின் கண்ணில் பட்டது.
“இதுல என்ன இருக்குன்னு தெரியுமா விக்கி? அப்பா எதுக்கு இப்போ இதை எடுத்துட்டு வர சொல்லனும்?”
“மாமாவுக்கு எப்பவுமே தான் போயிட்டா… தன்னோட காலம் தாண்டி… அப்படின்னு பயம் தான்… அந்த பயத்துல ஏதாச்சும் செஞ்சிருப்பாரு… அவருக்கு ஒன்னும் ஆகாது… என் intuition சொல்லுது… மாமா நூறு வயசு சந்தோஷமா இருப்பாரு..” விக்னேஷ் சொல்லும் போதே கண் கலங்க, ஹரீஷ் அவனை கட்டியணைத்து non verbal-ஆக ஆறுதல் சொன்னான்.
“நரேன் கண் முழிச்சிருக்காங்க… யாராச்சும் அவரை attend பண்றீங்களா?”
விக்னேஷும் ஹரீஷும் ஒன்றாக வர, “யாராச்சும் ஒருத்தர் போங்க” என்றதும் விக்னேஷ் ஹரீஷை போகச்சொல்லிவிட்டு மீண்டும் chairs-ஐ நோக்கி நடந்தான்.
“அப்பா! நீங்க கேட்ட கவர்..”
“ஓ! கொண்டுவந்துட்டியா? இதுல நான் உயில் எழுதி வச்சிருக்கேன். என்னோட சாவுக்கு அப்புறம் நாம இருக்குற வீட்டை அருந்ததி பேர்ல எழுதியிருக்கேன்… பேங்க்-ல இருக்குற Fixed deposit-ஐ அருந்ததிக்கும், savings account-ல இருக்குறத உன் பேருக்கும் எழுதி வச்சிருக்கேன். FD-லே இருந்து வர்ற intrest அவளுக்கு மாசாமாசம் கைசெலவுக்கு ஆகும். ஊர்ல இருக்குற கொஞ்சம் நிலம், ப்ளாட் எல்லாம் உன் பேர்ல எழுதியிருக்கேன்…. உன் பேர்ல இருந்தா அதை விக்க சவுகரியமா இருக்கும்.”
“எதுக்குப்பா இப்போ அதெல்லாம்…. உங்களுக்கு ஒன்னும் இல்லை… நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வருவீங்க….” ஹரீஷ் அழுதான்.
இல்லை ஹரீஷ்… எனக்கு இதுக்கு மேலே வாழறதுக்கு ஆசை இல்லை. ஆனா போறதுக்கு முன்னாடி என் மனசுல இத்தனை வருஷமா நான் பூட்டி வச்சிருந்த ரகசியத்தை சொல்லனும்… அது என் மனசை பாரமா அழுத்துது… சாகும் போது அதை இறக்கி வச்சிட்டு மனசு லேசா சாகனும்…”
“அப்பா… ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாதீங்க….” ஹரீஷ் விசும்பினான்.
இல்லை ஹரீஷ்… நம்ம சமுதாயத்துல செத்துப்போனவங்கள பத்தி தப்பா பேசறது நாகரீகம் இல்லைன்னு அவங்களை பத்தி வெளிப்படையா பேசமாட்டாங்க…. அதை advantage-ஆ எடுத்துக்கிட்டு நான் உன் கிட்டே மட்டும் சொல்றேன்…”
“எதுவா இருந்தாலும் நான் உங்களை தப்பா நினைக்கவே முடியாதுங்கப்பா…. நீங்க என்னோட அப்பா இல்லை… என்னோட Best friend forever” ஹரீஷ் நரேனின் கையை பிடித்துக்கொண்டான்.
ஹரீஷ்! I want to come out as gay… இந்த பாரம் என் நெஞ்சை அழுத்திக்கிட்டே இருக்கு. வாழும்போது தான் நான் எனக்கு உண்மையா இருக்கமுடியலை.. சாவுலயாச்சும் உண்மையா இருக்கேனே”
ஹரீஷ் அதிர்ச்சியில் வாயடைத்துப்போனான்.
ஹரீஷ்! அதுக்காக நான் stray பண்ணலை… என்னோட கல்யாணத்துக்கும், உங்க அம்மாவுக்கும் உண்மையா தான் இருந்தேன்… சமீபத்துல I found true love in someone…. ஒரே குழப்பமா இருக்கு” நரேன் தன் விரலில் ஹரீஷ் Valentines Day-க்கு அணிவித்த மோதிரத்தை விரலுயர்த்தி காட்டினார். ஹரீஷ் அவர் கையை மென்மையாக எடுத்து பார்த்தான் – VN என்று அழகாக பொறித்திருந்தது.
நரேனின் பக்கத்தில் இருந்த Heartbeat monitor வீல்வீலென்று கதற, staff nurse-ம், duty doctor-ம் பதறியடித்துக்கொண்டு ஓடிவர, நரேனின் கைகள் தளர்ந்து போக, அவரது தலை சரிந்தது.
Duty doctor “ஏன் சார் patient-ஐ அமைதியா வச்சுக்காம ஏதாச்சும் பேசி அவங்களை stress பண்ணிவிட்டுடுறிங்க?” எரிந்துவிழ, ஹரீஷ் பிரமை பிடித்தது போல அங்கிருந்து எழுந்து வெளியே நடந்தான்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 27/11/2017
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2017/11/sugar-daddy-11-coming-out.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
![]() |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|
![]() |