முன் கதை சுருக்கம்... |
---|
நரேன் தான் mentor செய்யும் பிரகாஷுடன் தனக்கு ஏற்கனவே உடலுறவு இருப்பதை விக்கிக்கு தெரிவிக்கிறார். தான் பிரகாஷுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்வதையும், அதற்கு கைம்மாறாக அவர்களிடையே செக்ஸ் உறவும் இருப்பதால் தான் ஒரு Sugar Daddy என்று விக்கியிடம் சொல்கிறார். தன்னால் அதிகபட்சமாக விக்கியின் Sugar Daddy ஆக மட்டுமே இருக்கமுடியும் என்றும் காதலனாக மாறமுடியாது என்று தெளிவுபடுத்துகிறார். ஆனால் நரேன் தன்னிடம் இருந்து விலக எடுக்கு ஒவ்வொரு முயற்சியும் விக்கிக்கு அவர் மீது இன்னும் கூடுதல் காதலை ஏற்படுத்துகிறது. இனி என்ன செய்வது? |
அடுத்த நாள் காலை விக்னேஷ் கண் விழித்தபோது நரேனும் அவன் அப்பாவும் ஹாலில் பேசிக்கொண்டிருப்பதையும், அருந்ததி ஆண்ட்டி அவர்களுக்கு காஃபி பரிமாறியிருப்பதையும் யூகிக்கமுடிந்தது. விக்னேஷ் முகம் கழுவிவிட்டு சோம்பல் முறித்தபடி ஹாலுக்கு வர நரேனின் முகத்தில் சந்தோஷ மின்னலடித்தது.
“குட்மார்னிங்க் விக்கி…. ஏன் சீக்கிரம் எழுந்துட்டே?” – நரேனின் கேள்வி இயல்பானதா இல்லை கேலியானதா என்று விக்னேஷின் அப்பாவுக்கு புரியவில்லை.
“என்ன விக்னேஷ்… இப்படியா தூங்குவே?” விக்னேஷ் அப்பா கோபித்துக்கொள்ள, நரேன் குறுக்கிட்டு “விடுங்க சார்! விக்கி எங்க வீட்டுல ஒருத்தன்… அவன் வீட்டுல எப்படி இருப்பானோ அப்படியே இருக்கட்டும்…” நரேன் சொல்லிமுடிக்கும் முன்பு “தேங்க்ஸ் மாமா!” என்றபடி நரேனை ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து அவருடைய தோளில் சாய்ந்துக்கொண்டான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
விக்னேஷ் அப்பா “விக்கி! சீக்கிரம் கிளம்பு…” என்று விக்கிக்கு ஆணையிட்டுவிட்டு, நரேன் பக்கம் திரும்பி “நரேன்… விக்கியை நான் வெளியே அழைச்சிட்டு போகனும்… நாங்க கிளம்புறோம்” என்று host செய்யப்பட்டதுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
நரேன் ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தாலும், அவரது கவனம் பக்கத்து வீட்டு கதவிலேயே இருந்தது. திடீரென்று விக்னேஷின் அப்பாவின் வருகையில் நிச்சயம் agenda எதுவும் இல்லாமல் இருக்காது. நரேனுக்கு விக்னேஷுடனான உறவு பற்றி இன்னும் தடுமாற்றமான நிலையிலேயே இருந்தார். அவரை பொறுத்தவரை விக்னேஷ் Sugar Boy இல்லை… “எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்” என்பது போல விக்னேஷின் திடமான காதல் நரேனின் பிடிவாதத்தை மெல்ல மெல்ல அசைத்திருந்தது. ஒருவகையில் விக்னேஷும் தன்னையொத்த வயதில் இருந்திருந்தால் கள்ள உறவு என்று இருந்தாலும் பரவாயில்லை என்று விக்னேஷின் காதலை ஏற்றுக்கொண்டிருந்திருப்பார். ஆனால் தனக்கும் விக்னேஷுக்கும் இடையே உள்ள 25 வருட வயது வித்தியாசம் தான் உறுத்தலாக இருந்தது. விக்னேஷ் தன்னை அவனுடைய கணவன் நிலையில் பாவித்துக்கொள்வது நரேனுக்கு ஒருபக்கம் பரவசமாக இருந்தாலும் மறுபக்கம் பயமாக இருந்தது. நரேனுக்கும் அந்த உறவுமுறையில் வாழ இருப்பது பிடித்திருந்தாலும், அவனுக்கு வாழ்வதற்கு இன்னும் வயது இருக்கிறது. தனக்கு ஏதானும் ஆனால் விக்னேஷ் மீண்டும் தனிமரம் ஆகும் சூழ்நிலை வரும். அதனால் விக்னேஷிடம் இருந்து விலகமுடியாமலும் ஏற்றுக்கொள்ளமுடியாமலும் திண்டாட்டத்தில் இருந்தார்.
மாலைவாக்கில் பக்கத்து வீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, நரேன் கொஞ்சம் பதற்றமானார். அவர் எதிர்பார்த்தது போலவே சில நிமிடங்கள் கழித்து தன் வீட்டு கதவு தட்டப்படுவதை கேட்டு எழுந்து சென்று கதவை திறந்தார். வாசலில் கண்கள் சிவந்த நிலையில் விக்னேஷின் அப்பாவும், பின்னால் தொங்கிய முகத்துடன் விக்னேஷும் நின்றிருக்க, நரேன் பதறிப்போனார்.
“உள்ளே வாங்க…” நரேன் நகர்ந்து வழிவிட்டு நிற்க, “இல்லைங்க சார்! நான் ஊருக்கு கிளம்புறேன். உங்க கிட்டே சொல்லிக்கனும்னு தோணுச்சு…” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் குரல் தேய்ந்து ஈனஸ்வரமாக ஒலித்தது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“அதெல்லாம் கிளம்பலாங்க… முதல்ல உள்ள வாங்க… டீ இல்லை காஃபி குடிச்சிட்டு போகலாம்” நரேன் விக்னேஷின் அப்பாவுடைய தோளை மென்மையாக பிடித்து இழுக்க, அவர் உள்ளே வந்தார். விக்னேஷ் அவருடைய travel bag-ஐ எடுத்துக்கொண்டு பின்னால் வந்தான்.
“அருந்ததி! நாம் எல்லாருக்கும் கொஞ்சம் காஃபி எடுத்துட்டு வர்றியா?” நரேன் சொல்லும் முன்பே அருந்ததி கிச்சனுக்குள் போய்விட, நரேன் விக்னேஷின் அப்பாவின் தோளில் கைவைத்து “என்ன விஷயங்க சார்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்ரு கேட்டார்.
சில starting problems-க்கு பிறகு விக்னேஷ் அப்பா மெதுவான குரலில் “விக்னேஷுக்கு வயசாயிட்டு போகுது… அதனால அவனுக்கு ஒரு கால்கட்டு போடனும்னு பேசிட்டு இருந்தோம்… தெரிஞ்ச வகையிலே ஒரு சம்பந்தம் வந்திருக்கு… அதை பத்தி பேசறதுக்கு தான் வந்தேன்”
“நல்ல விஷயம் தானே? அப்புறம் ஏன் கவலை படுறீங்க? பையன் ஏதாச்சும் முரண்டு பண்றானா?” அருந்ததி காஃபியை நீட்டியபடி கேட்க, வாங்கியபடி விக்னேஷின் அப்பா தர்மசங்கடமாக அவரையும் நரேனையும் பார்த்தார்.
“பரவாயில்லை சொல்லுங்க….” நரேன் சொல்ல, “என் பையன் உடம்புரீதியா அவன் தாம்பத்தியத்துக்கு லாயக்கில்லைன்னு என் தலையிலே குண்டை தூக்கி போடுறான்” என்று சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதார்.
நரேனுக்கும் அருந்ததிக்கும் சங்கடமாக போய்விட்டது. “சார்! இப்போ இருக்குற Advanced medical technology-ல எந்த பிரச்சனையா இருந்தாலும் சரிபண்ணிக்கலாம்… நீங்க கவலைபடாதீங்க… விக்கியை நான் நல்ல urologist கிட்டே கூட்டிட்டு போறேன்” நரேன் அவர் தோளில் கைபோட்டு ஆறுதல் சொன்னார்.
“காத்து பட்டாலேயே கர்ப்பமாக்குற ஆம்பளைங்க பரம்பரை எங்களுடையது…. இதுல இவனுக்கு இப்படி ஒரு நோயா-ன்னு எனக்கு விசனமா இருக்கு…” அவர் அழுகையை நிறுத்துவதாக இல்லை.
“சார்! நீங்க கவலைபடாம ஊருக்கு போங்க… நான் விக்கியை நல்ல specialist கிட்டே கூட்டிட்டு போறேன். நீங்க இதை பத்தி யோசிச்சு மனசை அலட்டிக்காதீங்க… விக்கி! அப்பாவை வண்டியேத்திட்டு திரும்ப நம்ம வீட்டுக்கு வந்துட்டு அப்புறம் உன் ரூமுக்கு போ”
“சரிங்க மாமா!” – விக்கி.
அவர்கள் இருவரும் கிளம்பியதும் நரேனின் குழப்பம் அதிகமானது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 10/06/2016
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2016/06/sugar-daddy-08-slow-and-steady.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|