முன் கதை சுருக்கம்... |
---|
Gay ஆக இருப்பதில் தவறில்லை. ஆனால் ஒரு Closet Gay ஆக இருப்பவன் sexually aggressive gay-களின் சமுதாயத்தில் acceptance-ஐ தேடுவது தவறு என்று பாடம் கற்றுக்கொண்டு என் குடும்பம் முக்கியம் என்று "திருந்தி" வாழ முயற்சிக்கிறேன். அப்போது பார்த்து தீபா வந்து என் பழைய வாழ்க்கையை மீண்டும் கிளறிவிட்டு போகிறாள். நான் என்ன தான் செய்ய? அசோக் என்ன ஆனான் என்று கேட்க நினைத்தாலும் அதை வெளிப்படையாக கேட்க மனசில்லை. எனக்கு பதில் கிடைக்குமா? |

முதலில் நான் அது அசோக் தானா என்று உறுதிபடுத்திக்கொள்ள அவர்களை உற்றுப்பார்த்தபடி நின்றேன். அது அசோக் என்று உறுதியானதும் பின்னர் அவர்களது கவனத்தை ஈர்த்துவிடக்கூடாது என்று சத்தம் வராமல் அங்கிருந்து நகர்ந்தேன். ஆனாலும் என் பார்வையும் கவனமும் அவர்கள் மீதே இருந்தது. அசோக் தன் DSL Camera-ல் தூரத்தில் இருந்த எதையோ படம் பிடித்தான். பின்னர் viewfinder-ல் அவனது ‘ஆளி’டம் காட்ட, அவனும் ஆர்வத்துடன் அசோக் எடுத்த படத்தை பார்த்துக்கொண்டிருந்தான். படம் நன்றாக இருந்தது போல… அவன் நிமிர்ந்து அசோக்கை காதலுடன் பார்த்தான். எதிர்பார்த்தது போலவே அவர்களிடையே மீண்டும் ஒரு french kiss பரிமாறப்பட்டது. நான் பொறாமையுடன் அங்கிருந்து நகராமல் வெந்துக்கொண்டிருந்தேன். இருவரும் நெருக்கமாக கைவிரல்களை கோர்த்துக்கொண்டு வேறொரு இடத்துக்கு நகர்ந்தார்கள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
புதிதாக அவனை பார்ப்பது போல முகபாவத்தை மாற்றிக்கொள்ள முயற்சிக்க, அசோக் அதைப்பற்றி கவலையில்லாமல் என்னை நெருங்கினான். “What a pleasant surprise Karthi… நான் மட்டும் ஏதோ intuition-ல திரும்பலைன்னா உங்களை miss பண்ணியிருப்பேன்…” அசோக் சிரித்தபடி என் தோளில் கை போட்டான்.
“ஹாங்… எப்படி இருக்கே அசோக்? திடீர்னு சொல்லாம போயிட்டீங்க… நல்லவேளை இப்போவாச்சும் என்னை பார்த்ததும் ஞாபகம் வந்துச்சே…” என்று சொல்லிவிட்டு கொஞ்ச தூரத்தில் எங்களை பார்த்தபடி நின்றிருந்த அவனை பார்வையாலேயே “யாரது? Special friend-ஆ?” என்று நக்கலாக கேட்டேன். அசோக் கடுப்பாவான் என்று எதிர்பார்த்த எனக்கு அவனது reaction மேலும் குழப்பத்தை கொடுத்தது.

“ரோகித்… இது கார்த்தி! என்னோட good friend” என்று என்னை அறிமுகம் செய்தான். ரோகித் “நீங்க பேசிட்டு இருங்க… நான் கொஞ்சம் photos எடுத்துட்டு வந்துடுறேன் baby….” என்று அசோக்கின் கன்னத்தை தடவிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
“கார்த்தி! தீபா உங்களை பார்த்ததை சொன்னா….” என்றபோது நான் மீண்டும் திடுக்கிட்டேன். “புருஷன் பொண்டாட்டி விவாகரத்து பண்ணிகலாம்… ஆனா parents எப்படி divorce பண்ணிக்கமுடியும்? நாங்க ரெண்டு பேரும் ஸ்வேதா குட்டியை co-parenting பண்ணிட்டு இருக்கோம்… அந்த வகையிலே கிட்டத்தட்ட தினமும் ரெண்டு பேரும் பேசிக்கிறோம்…” நான் திருதிருவென்று முழிக்க, “நானும் தீபாவும் அப்போ கல்யாணத்துல இருந்ததை விட இப்ப ரொம்ப close-ஆ இருக்கோம்… நல்ல friends-ஆ” அசோக் சிரித்தான்.
“முன்னாடி ஏதோ ஒரு பொய் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன்… அதனால என் மனசுலயும் நிறைய திருட்டுத்தனமும், நடவடிக்கையிலே தப்பு தண்டாவும் இருந்துச்சு… இப்போ நான் என் மனசுக்கு உண்மையா இருக்கேன்… ரொம்ப தெளிவா இருக்கேன்…” என்றபடி திரும்பி ரோகித் இருந்த பக்கத்தை பார்த்தான். “ரோகித்தும் என்னை மாதிரி தான்… divorcee. அவன் பொண்டாட்டி அவன் குழந்தையோட custody-ஐ கூட குடுக்கலை. அதனால அவனும் ஸ்வேதாவை பார்க்குறப்போ அவன் பொண்ணை பார்க்குற மாதிரி இருக்கும்… நாங்க legally கல்யாணம் பண்ணிக்கிட்டோம்… என் சார்பா சாட்சி கையெழுத்து போட்டது தீபாவும், பாலாஜியும் தான்.” அசோக் பேச பேச அவன் முகத்தில் பரவசம் பிரவாகமாக பொங்கியது.

அசோக் இன்னும் தொடர்ந்தான் “எனக்கு இந்த குற்ற உணர்ச்சியிலே இருந்து வெளியே வர ரொம்ப நாளாச்சு… அந்த Guilty baggage-ஐ இறக்கி வைக்க தீபாவும் பாலாஜியும் தான் help பண்ணினாங்க…” என்றபோது எனக்கு திக்கென்று இருந்தது. அது அசோக்குக்கும் தெரிந்தது போல “இல்லை…. நம்ம விஷயம் தீபாவுக்கு தெரியாது. கடைசியா என் வீட்டுல வச்சு பார்த்ததுல அவளுக்கு உங்க மேலே லேசா சந்தேகம் வந்துச்சு… ஆனா நான் அவ கவனத்தை வேற பக்கம் திருப்பிட்டேன். நீங்களா எதுவும் பேச்சுவாக்குல உளறி வச்சுடாதீங்க… நானுமே அதை மறந்துட்டேன்.” என்றபோது எனக்கு ஆசுவாசத்தில் நீண்ட பெருமுச்சு வெளிப்பட்டது.

எங்கள் கார் Highway-ல் வேகமாக சீறிப்பாய, பின் சீட்டில் என் பெண்களும், முன் சீட்டில் ரோகிணியும் உட்கார்ந்திருந்தார்கள். அசோக் என்னிடம் mobile number கேட்கவில்லை… தன் mobile number-ஐயும் கொடுக்கவில்லை. அதனால் அவனுக்கு மீண்டும் என்னை தொடர்பு கொள்ளும் எண்ணம் இல்லை என்பது எனக்கு லேசாக வலித்தாலும், அவன் என்னை போல தன் sexuality-ஐ மறைக்கவேண்டிய அவசியமில்லாமல் ‘உண்மையாக’ வாழ்கிறானே… அவனாவது சந்தோஷமாக வாழட்டும் என்று அவனுக்காக பிரார்த்தித்தேன். எனக்கு மனைவி, மகள் நிறைந்த குடும்பம் வேண்டுமா இல்லை எனது “sexuality/மனசாட்சிக்கு உண்மையாக இருப்பதா” என்று வரும்போது நான் குடும்பத்தை தேர்ந்தெடுக்கிறேன். அசோக் அவன் தனக்கு உண்மையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து இருக்கிறான்… அவ்வளவு தான் வித்தியாசம். .

“பார்த்தா பாக்கட்டுமேடி… நான் என் பொண்டாட்டிக்கு தானே முத்தம் குடுக்குறேன்… நாளைக்கு அவளோட புருஷன் அவளுக்கு குடுக்கப்போறான்… அதுவரைக்கும் இதையெல்லாம் பார்த்து தெரிஞ்சுக்கட்டும்” – நான் சாலையை பார்த்தபடி வண்டி ஓட்டினேன். மீண்டும் ஒரு சீ-யுடன் ரோகிணி என்னை தோளில் அடித்தாள். பெண்ணிடம் ‘sex’ பற்றி பேசிவிட்டேனாம்… அசோக்குக்காக வைத்த வேண்டுதலோடு எனது குடும்பத்தின் நிம்மதி இப்போது போலவே எப்போதும் இருக்கவேண்டும் என்பதுயும் சேர்ந்துக்கொண்டது.
—முற்றும்—
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 27/02/2022
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2022/02/23.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
![]() |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|
![]() |
One of the finest story ending, really heart warming final episode with unexpected twists and turns. Thank you for the excellent story and your time for writing it Kadhal Karthik.
நன்றி K…. இந்த தொடர்கதையை படித்த ஒரே நபர் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். உங்கள் வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றி…